மலைமேல் இருக்கும் போலீஸ்காரர்!
பெட்டி போனால் என்ன? சாவி இருக்கிறது!
தந்தையும், பதினைந்து வயது மகனும் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் பயணிக்க வேண்டிய ரயில் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் அவகாசம் இருந்தது.
பையன் பொறுப்பில்லாதவன். விளயாட்டுப்பிள்ளை. அம்மா செல்லம். சொல்வதைக் கேட்கமாட்டான்.
ஆகவே, தந்தை தன்னுடைய டிராவல் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு, "டேய், முதல் பிளாட்பாரத்தில் ரயில்வே கேன்டீன் இருக்கிறது. போய்க் காப்பி சாப்பிட்டுவிட்டு, ரயிலில் சாப்பிடுவதற்கு ஏதாவது பார்த்து வாங்கிக்கொண்டு வருகிறேன். நீ இங்கேயே இரு. உன் சூட்கேசைப் பார்த்துக் கொள். எம்ப்டி சூட்கேஸ் மட்டுமே 1,500 ரூபாய் விலை. ஜாக்கிரதை!" என்று சொல்லிவிட்டுப் போனார்.
பையன் சுவாரசியமில்லாமல் மண்டையை அசைத்து அவரை அனுப்பி வைத்தான்.
++++++++++++++++++++++++++++++++++++
சென்றவர் அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார்
பையனையும் காணவில்லை அவனுடைய பெட்டியையும் காணவில்லை.
பதற்றமாகிவிட்டது.
அந்த பிளாட்பாரத்தின் வலதுபுறம் சற்றுத் தள்ளி ஒரு குளிர்பானக் கடை இருப்பதும், பையன் அங்கே நிற்பதும் தெரிந்தது.விரைந்தார். பையன் கண்களை மூடியவாறு பெப்சியை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தான்.
"டேய் ராசா, நான் வர்றதுக்குள்ளே என்னடா அவசரம்?"
"தாகமா இருந்துச்சு நைனா, அதான் பெப்சி குடிக்க வந்தேன்"
"பெட்டி எங்கேடா ராசா?"
"அதை நாம நின்ன இடத்துல வச்சுட்டுத்தான், இங்க வந்தேன்"
சட்டென்று தந்தையின் ப்ளட் பிரஷர் எகிறி விட்டது. காட்டுக் கத்தலாகக் கத்தினார்
"டேய் அறிவு கெட்டவனே, உன் மேம்போக்குத்தனத்துக்கு அளவே இல்லையா?"
"இப்ப என்ன ஆச்சுன்னு இப்படிக் கத்தறே நைனா?"
"பெட்டி அங்கே இல்லை. யாரோ லவட்டிக் கொண்டு போய் விட்டான். நான் நினைத்தபடியே ஆகிவிட்டது."
பையன் கூலாகச் சொன்னான்,"பெட்டியை எடுத்துக் கொண்டு போனவன் திரும்ப நம்மகிட்டதான் வருவான் நைனா "
"எப்படிடா அறிவுகெட்டவனே?"
"சாவி எங்கிட்டயில்ல இருக்கு!"
----------------------------------------------------------------
இணையத்தில் எழுதுகிற அத்தனை பேர்களின் நிலையும், அந்தப் பையனின் நிலைதான்.
அத்தனை பேர்களும் அப்பாவிகள். சாவி நம்மிடம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். அதாவது வலைப்பூ நம்மிடம், நம் பெயரில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.
எழுதும் ஆக்கங்கள் எல்லாம் எப்படி எப்படித் திருடப்படுகிறதோ, யாருக்குத் தெரியும்?
இணையத்தில் எழுதுபவர்களில் சகம்தான் சுயமாக எழுதுபவர்கள். மற்றவர்கள் எல்லாம் பிக்பாக்கெட் ஆசாமிகள். கத்திரிக்கோல் ஆசாமிகள். கொஞ்சம் அசந்தால் உங்கள் பர்சை மட்டுமல்ல, சட்டையையும் லவட்டிக் கொண்டு போய் விடுவார்கள். பதிவுகளைக் கட் & பேஸ்ட் செய்து தங்கள் வலைப்பூக்களில் தாங்கள் எழுதியதைப் போல பதிவிட்டுக் கொள்வார்கள்! அதைப் படிக்க ஒரு கூட்டம் சேராதா என்ற நைப்பாசைதான் வேறென்ன?
----------------------------------------------------------------
திருட்டைப் பற்றி நான் கவலைப் படவில்லை. படுவதில்லை. மலைமேல் இருக்கும் போலீஸ்காரர் (தமிழ்க் கடவுள்) அதை பார்த்துக் கொள்வார். அதற்குப் பெயர்தான் இறை நம்பிக்கை!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Sir,
ReplyDeleteNice story.
And regarding today's quote
'Politicians are like diapers, they should change often'
Here Change means We can use the old one or the new one (Fresh piece) ????
Thanks,
GS
//எழுதும் ஆக்கங்கள் எல்லாம் - எப்படி எப்படித் திருடப்படுகின்றதோ, யாருக்குத் தெரியும்?..//
ReplyDeleteஐயா.. சரியாகச் சொன்னீர்கள்.. அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வான்..
ஐயா,
ReplyDelete"Tirudanai parthu tirunthavittal tiruttai olika mudiyathu"
Veru onrum solluvatuku kidayathu.
உங்கள் வருத்தம் புரிகிறது ஐயா!
ReplyDeleteஜோதிட அறிவு அனைவருக்கும் பொது என்றாலும் அதனை சொல்லும் விதம்
அந்த அந்த ஜோதிடரின் தனித்திறமை.
தினத்தந்தி சோதிடர் ஐயா உயர்திரு சிவல்புரி சிங்காரம் அவர்களின் ராசிபலங்களினை மேலோட்டமாகப் படித்தால் எல்லா ராசிகளுக்கும் நன்மையையே சொல்லி இருப்பதாகத் தோன்றும். ஆனால் அவர் சொற்களை நுணுக்கமாகப் பார்த்தால் ராசிக்கு ராசி பலன் வேறுபடுவதை உணர முடியும்.
அவரது பாணியே தனி.
வகுப்பறையில் வெளியான என்னுடைய கட்டுரை ஒன்றை இங்கே அடிக்கடி வரும் நண்பர் காப்பி பேஸ்ட் செய்து வேறு ஒரு குழுமத்தில் வெளியிட்டுவிட்டார். நல்ல வேளையாக என் பெயருடனேயே வெளியிட்டார்.
இருந்தாலும் அந்த குழுமத்தில் என் கட்டுரை வெளியாவதில் எனக்கு உடன்பாடு இல்லை.'ஏன் இப்படிச் செய்தீர்கள்' என்று கேட்டுவிட்டு, 'வலதுபக்கம் க்ளிக் செய்வது வகுப்பறையில் தடை செய்யப்பட்டுள்ளதே;எப்படி காப்பி பேஸ்ட் செய்தீர்கள்' என்று கேட்டேன்.அடுத்த மின் அஞ்சலில் அந்த டெக்னிகல்
தந்திரத்தைச் சொன்னார். செய்து பார்த்தால் வகுப்பறையை காப்பி பேஸ்ட் செய்ய முடிந்தது.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். காப்பி பேஸ்ட் செய்துவிட்டு, யாராவது கேள்வி கேட்டால்,உடனே அழித்துவிடுவதாகவும் உறுதி மொழியுடன் மற்றவர்களின் ஆக்கத்தை வெளியிடுவார்கள்.
எல்லாம் பழனி ஆண்டவரிடம் விட்டு விடுங்கள் ஐயா!
இன்னுமா பிரச்சினை இருக்கிறது? :(
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDeleteவருந்த வேண்டாம் .நீங்கள் நம்புவது அப்பன் பழனி ஆண்டவனை .
இது போன்று தவறு செய்பவர்களை கவனிக்க வேண்டிய நேரத்தில் கவனிக்கும் விதமாக கவனிப்பான் ...
வேல் முருகனுக்கு அரோகரா ...
இறைவனாய்ப் பார்த்து இவர்களுக்கு ஏதும் கொடுத்தால் ஒழிய இப்படிப்பட்டவர்களைத் தடுக்க முடியாது. வலது பக்கம் க்ளிக் செய்யாமலேயெ copy & paste செய்ய keyboard shortcut key fuction இருக்கிறது. வேறு வழிகளும் இருக்கின்றன. நான் அதையெல்லாம் பயன் படுத்துவதில்லை. தேவையும் இல்லை.
ReplyDeleteஅய்யா திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது 100கு 100 உண்மை ..தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை...நாம் கட்டுப்படுத்த தான் முடியும் அதன் பிறகு கந்தனிடம் விட்டு விடுங்கள் அவன் பார்த்து கொள்வான்...திருடுபவர்கள் எல்லாம் சிறு சிறு ஒளி இல்லாத நஷ்சத்திரங்கள் மாதிரி ஆனால் நீங்களோ அவர்களுக்கு ஒளி தரும் சூர்யன் போல...எங்களுக்கு தெரியும் யார் சூரியன் என்று.... :) எல்லாம் புகழும் தங்களுக்கே சேரும் என்றும் ... அன்புடன் கார்த்திக் சேலம்...
ReplyDeleteபிளாக்கிலும் நிறைய கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன ஐயா...
ReplyDelete////உங்கள் பர்சை மட்டுமல்ல, சட்டையையும் லவட்டிக் கொண்டு போய் விடுவார்கள்.////
ReplyDeleteஇதயத்தை வெட்டி எடுக்க
இவர்கள் தயார் தான்
ரயில் நிலையத்தில் பெப்சி
ReplyDeleteவிற்பது தனியாக குடிக்க அல்ல
அதோடு கலந்து குடிக்க..(வாம்)
அதிகம்"குடி"ப்பவர்கள் ரயிலில் தான்
அரசும் அமைதி காக்கிறது
அவதி படுபவர்கள் நம்போன்ற
பயணிகள் தான்
பரிதாபத்துக்குரியவர்கள்
விமானத்திலோ கோப்பை
விட்டு குடிக்க தருகிறார்கள்
////Blogger KJ said...
ReplyDeleteSir,
Nice story.
And regarding today's quote
'Politicians are like diapers, they should change often'
Here Change means We can use the old one or the new one (Fresh piece) ????
Thanks,
GS////
அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!
////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDelete//எழுதும் ஆக்கங்கள் எல்லாம் - எப்படி எப்படித் திருடப்படுகின்றதோ, யாருக்குத் தெரியும்?..//
ஐயா.. சரியாகச் சொன்னீர்கள்.. அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வான்..///
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger Karthikraja K said...
ReplyDeleteஐயா,
"Tirudanai parthu tirunthavittal tiruttai olika mudiyathu"
Veru onrum solluvatuku kidayathu./////
உண்மைதான். நன்றி நண்பரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஉங்கள் வருத்தம் புரிகிறது ஐயா!
ஜோதிட அறிவு அனைவருக்கும் பொது என்றாலும் அதனை சொல்லும் விதம்
அந்த அந்த ஜோதிடரின் தனித்திறமை.
தினத்தந்தி சோதிடர் ஐயா உயர்திரு சிவல்புரி சிங்காரம் அவர்களின் ராசிபலங்களினை மேலோட்டமாகப் படித்தால் எல்லா ராசிகளுக்கும் நன்மையையே சொல்லி இருப்பதாகத் தோன்றும். ஆனால் அவர் சொற்களை நுணுக்கமாகப் பார்த்தால் ராசிக்கு ராசி பலன் வேறுபடுவதை உணர முடியும்.
அவரது பாணியே தனி.
வகுப்பறையில் வெளியான என்னுடைய கட்டுரை ஒன்றை இங்கே அடிக்கடி வரும் நண்பர் காப்பி பேஸ்ட் செய்து வேறு ஒரு குழுமத்தில் வெளியிட்டுவிட்டார். நல்ல வேளையாக என் பெயருடனேயே வெளியிட்டார்.
இருந்தாலும் அந்த குழுமத்தில் என் கட்டுரை வெளியாவதில் எனக்கு உடன்பாடு இல்லை.'ஏன் இப்படிச் செய்தீர்கள்' என்று கேட்டுவிட்டு, 'வலதுபக்கம் க்ளிக் செய்வது வகுப்பறையில் தடை செய்யப்பட்டுள்ளதே;எப்படி காப்பி பேஸ்ட் செய்தீர்கள்' என்று கேட்டேன்.அடுத்த மின் அஞ்சலில் அந்த டெக்னிகல்
தந்திரத்தைச் சொன்னார். செய்து பார்த்தால் வகுப்பறையை காப்பி பேஸ்ட் செய்ய முடிந்தது.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். காப்பி பேஸ்ட் செய்துவிட்டு, யாராவது கேள்வி கேட்டால்,உடனே அழித்துவிடுவதாகவும் உறுதி மொழியுடன் மற்றவர்களின் ஆக்கத்தை வெளியிடுவார்கள்.
எல்லாம் பழனி ஆண்டவரிடம் விட்டு விடுங்கள் ஐயா!/////
அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். உங்களின் அறிவுரைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Vasudevan Tirumurti said...
ReplyDeleteஇன்னுமா பிரச்சினை இருக்கிறது? :(/////
இப்போது அதிகமாகி விட்டது. அதுதான் பிரச்சினை!
///Blogger hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
வருந்த வேண்டாம் .நீங்கள் நம்புவது அப்பன் பழனி ஆண்டவனை .
இது போன்று தவறு செய்பவர்களை கவனிக்க வேண்டிய நேரத்தில் கவனிக்கும் விதமாக கவனிப்பான் ...
வேல் முருகனுக்கு அரோகரா .../////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger Kirupanandan A said...
ReplyDeleteஇறைவனாய்ப் பார்த்து இவர்களுக்கு ஏதும் கொடுத்தால் ஒழிய இப்படிப்பட்டவர்களைத் தடுக்க முடியாது. வலது பக்கம் க்ளிக் செய்யாமலேயெ copy & paste செய்ய keyboard shortcut key fuction இருக்கிறது. வேறு வழிகளும் இருக்கின்றன. நான் அதையெல்லாம் பயன் படுத்துவதில்லை. தேவையும் இல்லை.////
தொழில்நுட்பத்தோடு சேர்ந்து திருடர்களும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். வளரட்டும். எல்லாம் நன்மைக்கே!
/////Blogger KARTHICK SUBRAMANI said...
ReplyDeleteஅய்யா திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது 100கு 100 உண்மை ..தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை...நாம் கட்டுப்படுத்த தான் முடியும் அதன் பிறகு கந்தனிடம் விட்டு விடுங்கள் அவன் பார்த்து கொள்வான்...திருடுபவர்கள் எல்லாம் சிறு சிறு ஒளி இல்லாத நஷ்சத்திரங்கள் மாதிரி ஆனால் நீங்களோ அவர்களுக்கு ஒளி தரும் சூர்யன் போல...எங்களுக்கு தெரியும் யார் சூரியன் என்று.... :) எல்லாம் புகழும் தங்களுக்கே சேரும் என்றும் ... அன்புடன் கார்த்திக் சேலம்...////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
/////Blogger சே. குமார் said...
ReplyDeleteபிளாக்கிலும் நிறைய கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன ஐயா...//////
அவன் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிட வேண்டியதுதான்.
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteரயில் நிலையத்தில் பெப்சி
விற்பது தனியாக குடிக்க அல்ல
அதோடு கலந்து குடிக்க..(வாம்)
அதிகம்"குடி"ப்பவர்கள் ரயிலில் தான்
அரசும் அமைதி காக்கிறது
அவதி படுபவர்கள் நம்போன்ற
பயணிகள் தான்
பரிதாபத்துக்குரியவர்கள்
விமானத்திலோ கோப்பை
விட்டு குடிக்க தருகிறார்கள்////
கலிமுற்றுகிறது. அப்படித்தான் இருக்கும். நடக்கும். நாம் என்ன செய்ய முடியும்? வருந்துவதைத் தவிர?
ஐயா வணக்கம்.
ReplyDeleteநீங்கள் செய்வது பொதுநல தொண்டு இதனில் பெயர் என்ன புகழ் என்ன ஐயா தாங்கள் செய்யும் தர்ம தொண்டிற்கு கட்டாயம் பலன் உண்டு.
இதனை எந்த இறைவன் மேலும் நான் ஆணையிட்டு கூறவில்லை ஒரு அறிவியல் விதியை மையமாக வைத்து கூறுகின்றேன் ஆசானே .
தாங்கள் வணங்கும் தெய்வம் தங்களுக்கு அணைத்து வகையான ஆற்றலையும் தரட்டும் அய்யனே .
நன்றி .