மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.4.14

Astrology: இல்லை இல்லை நீ என எண்ண எண்ண வேதனை!

 
Astrology: இல்லை இல்லை நீ என எண்ண எண்ண வேதனை!

Quiz 50: புதிருக்கான விடை!

நேற்றையப் புதிரில் ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து அவருடைய குழந்தை பாக்கியத்திற்கான வீட்டை அலசச் சொல்லியிருந்தேன்.
வழக்கம்போல நிறையப் பேர்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி!

அந்த ஜாதகிக்கு, அவருடைய கர்ப்பப்பை கோளாறுகளால் குழந்தை பிறக்கவில்லை. அந்த ஜாதகிக்குக் குழந்தை இல்லை. அதுதான் சரியான விடை

ஜாதகத்தைப் பாருங்கள்

விருச்சிக லக்கின ஜாதகி.

லக்கினாதிபதி செவ்வாய் ஆறாம் வீட்டில். பாக்கியாதிபதி சந்திரனும் ஆறாம் வீட்டில் ஆறாம் வீடு கேடானது’
சுகஸ்தானத்தில் (4ல்)கேது

1.  ஐந்தாம் அதிபதி, சனியுடன் சேர்க்கை
2. ஐந்தாம் வீடு, பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு புறம் கேது, மறுபுறம் செவ்வாய்
3. ஒன்பதாம் வீட்டில் (பாக்கிய ஸ்தானத்தில்) எட்டாம் வீட்டுக்காரன் புதன் டென்ட் அடித்துக் குடியிருக்கிறான். அது பாக்கியங்களூக்குக் கேடானது.
4. அத்துடன் ஒன்பதாம் வீட்டின் மேல் செவ்வாயின் பார்வை.
5. ஒன்பதாம் வீடும் பாபகர்த்தாரி யோகத்தில். ஒருபுறம் சூரியன். இன்னொருபுறத்தில் ராகு

பெண்களுக்கு ஒன்பதாம் வீடு அதி முக்கியமானது. அது முழுதாகக் கெட்டிருக்கிறது. அத்துடன் ஐந்தாம் வீடும் கெட்டிருக்கிறது. பாபகர்த்தாரி யோகம் வலிமையானது. அதிக கேடுகளை விளைவிக்கக்கூடியது.

அக்காரணங்களால், ஜாதககிக்குக் கர்ப்பப்பையில் கோளாறு ஏற்பட்டு, அவளால் கருத்தரிக்க இயலாமல் போய்விட்டது. விளைவு: குழந்தை இல்லை

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------------
கலந்து கொண்ட 34 பேர்களில் 13 பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களில் சரியான விடையை எழுதிய அன்பர்களின்
பெயர்களைத் தொகுத்துக்கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது
வாழ்த்துக்கள். Better luck for them next time!
----------------------------------------------------------------------------------------
1
/////Blogger kmr.krishnan said...
    சனைச்சரன் நிற்பது பூராடம் மூன்றாம் பாதத்தில்.குரு பகவான் நிற்பது மூலம் இரண்டாம் பாததில். மாந்தி, சனியால் லக்கினமும், குருபகவானும்
பாப‌கர்த்தாரியில்ல் மாட்டிக்கொண்டனர். விருச்சிக லக்கினம் என்பதால் குருவே 5ம் இடத்து அதிபதி. அதிபதியும், காரகனுமான் குருபகவான்
அடிவாங்கிவிட்டார்.
    5ம் இடமும் செவ்வாய் கேதுவால் பாபகர்த்தாரியில் சிக்கிவிட்டது. 9க்கு உடைய
    சந்திரனும் 6ல் சென்று மறைந்துவிட்டார்.
    சுக்கிரன் அஸ்தங்கதம்,குருவக்கிரம்!
    அம்மையாருக்கு சந்தான பாக்கியம் இல்லை.
    Tuesday, April 08, 2014 5:14:00 AM///////
--------------------------------------------------------------------------------------
2
Blogger S Balaji said...
    ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் கிடையாது, காரணங்கள்:
    (1) லக்கிணாதிபதி ஆறாம் இடத்தில்.
    (2) ஐந்தாம் வீடு அதிபதி மற்றும் காரகன் (குரு) ஆட்சியுடன் இருந்தாலும் அந்த வீடு பாப கர்தாரி யோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
    (3) மேலும் குருவின் பார்வை அந்த வீட்டில் விழவில்லை.
    நன்றியுடன்
    ச. பாலாஜி.
    Tuesday, April 08, 2014 11:08:00 AM//////
-----------------------------------------------------------------------

/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    The lady does not have child.
    Because the 5th lord is with Saturn and aspected by 12th lord sukran.
    lagna lord in 6th and hence not supporting.
    9th lord chandran in 6th and not supporting.
    Thanking you sir.
    Tuesday, April 08, 2014 12:11:00 PM///////

-----------------------------------------------------------
4  
////Blogger SIVA said...
    அய்யா இவர் குழந்தை பாக்கியம் அற்றவர் அப்படி பிறந்தாலும் குறையுள்ள குழந்தையாக இருப்பின் பிழைத்திருக்கும் ., என் என்றால் ஐந்தாம்
அதிபதி குரு வக்கிரமடைந்து இரண்டாம் இடத்தில அதாவது தன்னுடைய வீட்டிற்கு பத்தாமிடத்தில் முன்றாமிட வக்கிர சனியுடன் . எட்டாமிட
கிரகங்களின் பார்வையுடன்
    Tuesday, April 08, 2014 4:29:00 PM/////
-------------------------------------------------------------

/////Blogger venkatesh r said...
    கொடுக்கப்பட்ட ஜாதக அம்மணிக்கு குழந்தை பிறந்திருக்க வாய்ப்பில்லை.
    விருச்சிக லக்னம்,மேஷ ராசி ஜாதகி.
    1.லக்னாதிபதி 6ல் பாக்யாதிபதி சந்திரனுடன் மறைந்து விட்டார்.
    2.ஜாதகிக்கு 24 வயதிற்கு மேல் வந்த ராகு தசையில் தாமத திருமணம் நடந்து இருக்கும். அதனால் பல்வேறு சிரம்த்தின் இடையில் தாம்பத்திய
ஜீவனம்.
    3.ஐந்தாம் பாவம் பாபகர்த்தாரியின் பிடியில்.
    4.ஐந்துக்கு அதிபதியும், குழந்தை பிறப்பிற்கு காரகானான குரு சனியுடன் 2ல் எனக்கு என்ன போச்சு என்று அமர்ந்து விட்டார்.
    5.5ம் பாவத்திற்கு எந்த சுபக் கிரக பார்வையும் இல்லை.
    6.உடல் காரகனான சூரியன், சனியின் நேர் பார்வையில் உள்ளார். அதனால் அவ்வப்போது சுகவீனமற்று இருந்திருப்பார்.
    அதனால் ஜாதகிக்கு குழந்தைகள் இல்லை.
    Tuesday, April 08, 2014 5:03:00 PM//////
-------------------------------------------------------------------
6
/////Blogger S.Namasu said...
    Dear sir:
    My Answer for Quiz no.50:-
     Jathakiku Kulanthai pakkiyam irrukka vaippu kuraivu.
    Reasons:
    1.5th house is in "pabakarthari" amaippil ullathu.
    2.Lakkana athipathi is in 6th house. Marivu shthanam porattamana valkkai(sasimangala yogam - not good in 6th house)
    3.5th house lord "Kuru" in 2nd house with, 3rd & 4th house lord "Sani" causes for delay.
    3."Manthi" is in 12th house, so "Ayana sayana" problems.
    4.("Sukkira" thasi till 18.3.18,"Suriya" thasi till 25.3.18 age) both lord are occupied in 8th house. BAD period.
    5.("Chanthira thasai" till 35.3.18, "Chevvai thasai" till 42.3.18 age) both lord are occupied in 6th house. BAD period.
    SUBAM.
    Tuesday, April 08, 2014 5:37:00 PM//////

--------------------------------------------------------------------------
7
//////Blogger vanikumaran said...
    குழந்தைக்கு 5ம் வீடு,அதிபதி,காரகன் குரு நிலைமை இவற்றில்
    1. 5ம் வீடு பாபக்கத்தாரி யோகதில்,
    அதிபதி மற்றும் காரகன் குரு 2ம் வீட்டில் ஆட்சியாகி உடன் 3ம் அதிபதி சனியால் கெட்டார்.
    2. 5க்கு 5ம் இடம் 9ம் பெண்களுக்கு குழந்தை பாக்கியத்தில் முக்கியம் என்பதால்,
    9ம் இடம் 8ம் அதிபதி புதனால் கெட்டது. 9ம் அதிபதி 6ம் மறைவு ஸ்தானத்தில் உடன் ஆட்சி பெற்ற 6ம் அதிபதி.
    ஸ்திர லக்னமான விருச்சிக லக்னத்திற்கு 9ம் அதிபதி சந்திரன் பாதகாதிபதியாகி போக ஸ்தானத்தினை விரையம் ஆக்கினார்.உடன் 6ம் அதிபதி செவ்வாய் பார்வை.
    யோகாதிபதி குரு சனியால் கெட்டார்
    3. மேலும் 12ல் அயன சயன போக ஸ்தானத்தில் மாந்தியும் சுகஸ்தானத்தில் கேதுவும் போக வாழ்வினை கெடுத்ததால்
    ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
    Tuesday, April 08, 2014 6:17:00 PM/////
---------------------------------------------------------------------
8
////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குருவே,
    இந்த ஜாதகிக்கு திருமணம்மாகிருக்க வாய்ப்பு இல்லை. காரணம் 7ம் இடத்திற்கும் களதிரதிர்க்கும் உரிய சுக்கிரன் 8இல் மறைவு உடன் சூரியன்
சேர்கை சனியின் நேரடி பார்வையில், குருவும் பார்க்கிறார் ஆனால் சனியுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார். அத்துடன் லக்னம், பூர்வ புண்ணிய
ஸ்தானம் & பாக்கிய ஸ்தானம் பாபகர்த்தாரி யோகத்தில் கூடவே நடந்த தசாக்களும் சாதகமாக இல்லை. கூடவே சுக ஸ்தானத்தில் கேது, அயன
சயன போக ஸ்தானத்தில் மாந்தி. இவற்றையும்மீறி திருமணம் நடந்திருந்தாலும் புத்திர பாக்கியம் இல்லை காரணம் 5ம் இட அதிபதியும் புத்திர காரகனுமாகிய குரு சனியின் சேர்கை மற்றும் சூரியனின் பார்வையில், சுக்கிரனும் பார்க்கிறார் ஆனால் சூரியனுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார்.
அத்துடன் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம் & பாக்கிய ஸ்தானம் பாபகர்த்தாரி யோகத்தில் அதுவும் அட்டமாதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில்.
குழந்தை பாக்கியத்திற்கு பெண்கள் ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் மிகவும் முக்கியம்.
    நன்றி
    செல்வம்
    Tuesday, April 08, 2014 6:33:00 PM//////
------------------------------------------------------------------
9
/////Blogger Raja Murugan said...
    அய்யா வணக்கம், லக்கினதிபதியும், பாக்கியதிபதியும், 6 ல் மறைந்துள்ளார்கள் எனவே ஜாதகர் வாழ்க்கை போராட்டமானது,
    6 ம் அதிபதி 6 ல் நோயுள்ளவர்.
    ஐந்தாம் அதிபதி குரு 2 ல் சனியுடன் 2 ல் சனி குடும்பம் பிரச்சனை அதிகம்.
    லக்கினாதிபதி,ஐந்து,ஒன்பதாம் ஆகிய அதிபதிகள் 6,8,12 ல் மறைந்தால் குழந்தை இல்லை.
    எந்த சுப கிரகங்களின் பார்வையும் ஐந்தாம் வீட்டின் மேல் இல்லை.
    ஐந்தாம் வீட்டின் பாக்கியாதிபதி செவ்வாய் 6 ல் மறைந்துள்ளார்.
    ஐந்தாம் வீட்டுக்கு ஐந்தாம் வீடு 6 ம் அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வையில் உள்ளது.
    அயன சயன பாக்கியம் மாந்தி மற்றும் செவ்வாயின் 7,8 பார்வையில்.
    எனவே ஜாதகருக்கு குழந்தை இல்லை.
    Tuesday, April 08, 2014 8:31:00 PM//////
-----------------------------------------------------------------
10
/////Blogger Ramkumar KG said...
    ஐந்தாம் இடம் பாபக்ார்த்தரி யோகத்தில் மற்றும் இந்தம் அதிபதி சனியுடன் சேர்ப்பு மற்றும் சூரியன் பார்க்கப்படுவதால் மற்றும் சுப பார்வை 5
மற்றும் 5ஆம் அதிபதி மேல் இல்லாததால் குழந்தை பாக்கியம் இல்லை.
    Tuesday, April 08, 2014 8:37:00 PM/////
--------------------------------------------------------------
11
///////Blogger dhana lakshmi said...
    Quiz-50
    குழந்தை இல்லை.
    புத்திர தோஷம் உள்ள ஜாதகம்.
சந்திரனக்கு 5ல் தீய கிரகம் இருந்தாலோ அல்லது 5ம் வீட்டீற்கு 2 பக்கம் தீய கிரகம் இருந்தாலோ
புத்திரதோஷம்.
    குருவும்,உடனிருக்கும் சனியும் வக்கிரமான நிலையில்,7ம் பார்வை உள்ள சுக்கிரன் அஸ்தங்கதமான நிலையில் மேலும் 2மிடத்தில் குருவுடன்
உள்ள வக்கிர சனி தடை ஏற்படித்திருக்கும்.
    Regards
    J.Dhanalakshmi
    Tuesday, April 08, 2014 11:37:00 PM//////
-----------------------------------------------------------------
12
Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    இன்றைய புதிருக்கான விடை: புத்திர பாக்கியம் இல்லாத,தடைஉள்ள ஜாதகம்.
    * விருச்சிக லக்னம்,மேச ராசி;லக்கினாதிபதி ஆட்சி பெற்று 6ல் மறைவு.
    *5க்குரிய புத்திர ஸ்தானதிபதியும் புத்திரகாரகனுமான குரு(வக்கிரம்} ஆட்சி பெற்று 3,4க்குரிய (5ம் ஸ்தானதிற்க்கு 12க்குரியவன்)வக்கிர சனியின்
சேர்க்கை யுடன் அமர்ந்து பலமிழந்தது.
    *இதை தவிர்த்து புத்திர ஸ்தானமானது பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. மேலும் லக்கினம் 3,7,9மற்றும்11ம் ஸ்தானங்கள் பாபகரத்தாரி
யோகத்தில் உள்ளது.
    *7க்குரிய சுக்கிரன் அஸ்தங்கமடைந்து 8ல் மறைவு,9க்குரிய பாக்கிய ஸ்தானா திபதியான சந்திரன் 6ல் மறைவு போன்றபலகீனமான நிலையில்
இருப்பதுடன் 5ம் இடத்தை சுபர் யாரேனும் பார்வை செய்யாது இருப்பதும்
    குறையே.
    சரியான விடையினை தெரிந்துகொள்ள ஆவல் ஐயா.
    நன்றி ல ரகுபதி
    Wednesday, April 09, 2014 12:43:00 AM/////
----------------------------------------------------
13
//////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.50:
    The Native doesn't have child.
    The Native has to struggle a lot in her life time.
    This is an example horoscope for worst one.
    Reason:
    1. Five houses are affected by Baba kathri yoga. (First,Fifth,Seventh, Ninth and Eleventh houses)
    2. Lagna lord, Bagyathipathi and yogathipathi are in hidden places (i.e. 6th and 8th house)
    3. All benefic planets are affected severely.
    4. Fourth house is affected by Kethu.
    5. Fifth house is under baba kathri yoga as well as fifth house lord Jupiter is clutched by Saturn.This is puthra karaga also. affected very worst.
    6. Seventh house is affected by baba kathiri yoga as well as this house lord is in Eighth house and getting saturn aspect.
    7. Ninth house lord is sitting in sixth house as well as this house affected by baba kathiri yoga.
    8. Eleveth house is affected by baba kathri yoga as well as this house lord sitting in eighth house.
    9. Mandhi is sitting in twelfth house and affects sexual life as well as getting sixth house lord aspects.
    10. Second house is affected by Saturn. Family life is in trouble.
    Very worst horoscope .... Oh god ....Save her.....
    With kind regards,
    Ravichandran M.//////

==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

  1. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    அம்மணி ஜாதகம் !!!..அய்யா ஜாதகம் இல்லை !!!..வாத்தியார் அய்யா அடிக்கடி சொல்லும் வார்த்தை குழைந்தை பேறுக்கு கூட்டு முயற்சி..!!!
    இருந்தாலும் இந்த அம்மனி ஜாதகம் பார்த்தல் போதும் ..குழைந்தை பேறு .வாய்ப்பு 100% இல்லை..

    எங்கள் ஊர் சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி அருள் பாலிக்கிறார்

    சைவ சித்தாந்த சபை அன்பர்கள் .திருக்கோவிலில் மழை வேண்டி வருண ஜெப ஹோமம் நடத்த ஏற்பாடு செய்தனர் . சுவாமி அன்பர்கள் சிரம பட வேண்டாம் என கருணை கொண்டு ஹோமம் ஆரம்பிக்கு முன்னரே இரண்டு நாளும் இடி மின்னலுடன் மழை கொடுத்து ரட்சித்தார்
    ...அதோடு விடாமல் ஊரில் இருக்கு பாதி இணைய இணைப்புகளை . புகை வரும் அளவு மின்னலை கொடுத்து ...???கொண்டாடி விட்டார் .
    புதிர் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை...!!!

    ReplyDelete
  2. பார்த்தவுடன் தாமத குழந்தை பாக்கியம் அல்லது குழந்தை பாக்கியம் மறுக்கப் பெற்ற ஜாதகமாக இருக்கும் என்று நினைத்தேன். இரண்டில் எது என்ற குழப்பத்தில் பிறகு பார்க்கலாம் என்று நினைத்து இதைப் பற்றி மறந்தே போனேன். வாத்தியார் சொன்னது போல் better luck next time. However astro rules for denied progeny noted.

    இவருடைய கணவரின் ஜாதகத்திலும் இது போன்ற விதிகள் இருந்திருக்கும். அதையும் சேர்த்துக் கொடுத்திருந்தால் இன்னும் சற்று தெளிவு பிறந்திருக்கும்.

    ReplyDelete
  3. என்ன அருமையானா அலசல்! வகுப்பறையில் மாணாக்கர்களின் பங்களிப்பு மதிப்பு சேர்க்கிறது.

    ReplyDelete
  4. புதிர் 50 ல் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் அடியேன் பெயரும் வந்துள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா! வாய்ப்பளிக்கும் தங்களுக்கு மிக்க வந்தனம்.
    kmrk1949@gmail.com

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com