Short story: சிறுகதை: பராமரிப்பு நிதி - பகுதி 2
Maintenance Fund
(இக்கதையின் முதல் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டுப் பிறகு இங்கே வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)
சாமி வீட்டில், விளக்கிருந்த பகுதிக்குக் கீழே உள்ள தரையைத் தோண்டி, ஐந்து அடி ஆழம் வெட்டி எடுத்தவுடன் இரண்டு செப்புத் தவலைகள் கண்ணில் பட்டன என்று முன் அத்தியாயத்தில் எழுதியிருந்தேன் அல்லவா?
சற்று சிரமப்பட்டு மேலே தூக்கி வைத்த பிறகுதான் அவைகள் என்ன வென்று தெரிந்தன. அந்தக் காலத்துத் தவலைகள். ஒவ்வொன்றும் 30 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு இருக்கும். துணியை வைத்துத் துடைத்தவுடன், சொ.அ.சொ என்ற அவர்களுடைய வீட்டு விலாசம் இரண்டு தவலைகளிலும் பளிச்சிட்டது. மேலே மூடிகள் ஈயத்தால் பற்ற வைக்கப்பெற்று சீலிடப்பெற்றிருந்தன!
புதையல்தான் அவைகள் என்று உறுதியாகத் தெரிந்தது.
பழநியப்ப அண்ணன் எப்போதுமே பதற்றம் இல்லாமல் நிதானமாகச் செயல் படக்கூடியவர். சீனுக் கொத்தனாரை வைத்துக் கொண்டு அப்போதே அதைப் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தவர், தன் சின்னத்தம்பியிடம் சொல்லி அந்தத் தவலைகளை அடுத்து இருந்த அவனுடைய இரட்டை அறையில் வைத்துப் பூட்டச் சொல்லி, சாவியை வாங்கி வைத்துக் கொண்டதோடு, காலையில் அய்யா படத்திற்குப் பூஜை செய்து விட்டு அவற்றைப் பிரித்துப் பார்ப்போம், இப்போது நேரமாகிவிட்டது, வாருங்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டுப் படுப்போம், மற்றவற்றைக் காலையில் பார்ப்போம் என்று சொல்லிவிட்டார்.
”இது விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்,. உன் மனைவி மக்களிடம் கூட சொல்ல வேண்டாம்” என்று சீனுக் கொத்தனாரையும் எச்சரித்து அனுப்பி வைத்தார். தன் தம்பிகள் நால்வரிடமும் அதே விஷயத்தைச் சொல்லி எச்சரித்து வைத்தார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்குத் தன் தம்பிகள் நான்கு பேர்களையும் வைத்துக் கொண்டு, சற்றுக் கனமாக இருந்த ஒரு தவலையின் மூடியைத் திறந்து பார்த்தபோது, ஆச்சரியம், பரவசம், மகிழ்ச்சி என்று எல்லா உணர்வுகளும் ஒரு சேர அவர்களை அனைத்துக் கொண்டன.
அதன் உள்ளே ஒரு கெட்டிக் கழுத்திரு, ஒரு கெளரிசங்கம், ஏறாளமான தங்கக் காசுகள் மற்றும் இரண்டு ஓலைச்சுவடிகள் இருந்தன. அடுத்த தவலையையும் திறந்து பார்த்தார்கள். அதில் ஏறாளமான தங்கக் காசுகள் மட்டும் குவியலாக இருந்தது.
அத்தனை தங்கக் காசுகளுமே 5 அவுன்ஸ் மற்றும் 10 அவுன்ஸ் காசுகளாக இருந்தன. பெரிய அளவு காசுகளாக இருந்தன. தங்கக் காசுகளின் ஒரு பக்கம் அமெரிக்க சுதந்திர தேவியின் முகமும் மறுபக்கம் இரட்டைக் கழுகின் குறீயீடுகளும் பதிவாகியிருந்தன. 1900 ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டும் இருந்தது.
பொறுமையாக காசுகளைத் தரையில் கொட்டி எண்ணியபோது முதல் தவலையில் 750 காசுகளும் இரண்டாவது தவலையில் 500 காசுகளும் இருந்தன. மொத்தம் 1,250 தங்கக் காசுகள்.
பழநியப்ப அண்ணன் வங்கியில் பணி செய்தபோது, வங்கியின் தங்க நாணயப் பிரிவில் சில மாதங்கள் பணி செய்திருந்ததால், தங்கத்தைப் பற்றிய பூரண அறிவு அவருக்கு உண்டு. ஒரு அவுன்ஸ் என்பது இன்றைய எடை மாற்றில் 31 கிராமிற்குச் சமம். மொத்த காசுகளின் எண்ணிக்கையை மனதிற்குள் கணக்கிட்டுப் பார்த்தபோது அசந்துவிட்டார். பவுன் காசுகளாக 39 கிலோ தங்கமும், கழுத்திரு மற்றும் கெளரி சங்கத்தைக் கணக்கில் சேர்த்தால் சுமார் 40 கிலோ அளவிற்குத் தங்கம் இருந்தது. இன்றைய மதிப்பில் சுமார் 12 கோடி
ரூபாய் பெறுமானத்திற்கு அவைகள் இருந்தன.
(திரைப்பட நடிகை சினேகா கழுத்தில் அணிந்திருக்கும் ஆபரணம்தான் கழுத்திரு என்பது. கழுத்து உரு என்பது மருவி கழுத்திரு என்றாகி விட்டது. இதுதான் பாரம்பரியத் திருமாங்கல்யம். திருமணத்தன்று மணமகன், மணமகளூக்குக் கழுத்தில் கட்டுவார். அணிவிப்பார். தினசரி வழ்க்கையில் அதை அணிந்து கொள்வதில்லை. அதன் எடை அந்தக் காலங்களில் 100 பவுன் அல்லது 108 பவுன்கள் தங்கத்தில் செய்வார்கள். இப்போதும் பல செல்வந்தர் வீடுகளில் செய்கிறார்கள். இன்று கடுமையாக உயர்ந்துள்ள தங்கவிலையின் காரணமாக பல நடுத்தரக் குடும்பங்கள் இந்த நகையை 21 பவுன்கள் அல்லது 16 பவுன்களில் செய்கிறார்கள். உங்கள் தகவலுக்காக இந்தச் செய்தி)
அவற்றை அப்படியே அந்த அறையில் பத்திரப் படுத்திவிட்டு, ஓலைச் சுவடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்
ஓலைச் சுவடிகள் இரண்டில் ஒன்றை எடுத்துப் பார்த்தபோது, பாட்டையா காலத்தில் அவர் செய்த தான தர்மங்கள், செய்த இடங்கள், கோவில்கள் என்று செலவு தொகையுடன் விபரமாகக் குறிப்பிடப்பெற்றிருந்தது.
அதை வைத்து விட்டு, மற்றொரு ஓலைச் சுவடியைப் படித்தபோதுதான், புதையலைப் பற்றிய முழு விபரமும் தெரிய வந்தது.
கதையின் நீளம் கருதி அவற்றைச் சுருக்கமாகக் கொடுத்துள்ளேன்.
அந்த வீட்டைச் சொக்கலிங்கம் செட்டியார் 1895 ஆம் ஆண்டு கட்டத் துவங்கி 1898ஆம் ஆண்டு கட்டி முடித்து நிறைவு செய்தபோது மொத்தம் செலவான தொகை அறுபத்தி மூன்றாயிரம் ரூபாய் என்றும், வீட்டிற்குப் பாதுகாப்பு நிதியாக அதே அளவிற்கு, அதாவது அறுபத்தி மூன்றாயிரம் ரூபாய்களுக்கு
தங்கக்காசுகளாக வாங்கி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கெட்டிக் கழுத்திரும், கெளரிசங்கமும் தன்னுடைய தாயார் தகப்பனாரு
டையது என்றும் குறிப்பிட்டிருந்தார்.பின்னாளில் குடும்பத்திற்கு ஏதாவது நெருக்கடி அல்லது கஷ்டம் வந்தால் அதைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது என்றும் குறிப்பிட்டிருந்தார். புதையலைப் பற்றிய செய்தி யாருக்கும் தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, அதை சங்கேத மொழியில் எழுதி தன்னுடைய பெட்டியடிப் பெட்டியில் பிள்ளைகள்
ஜாதகங்களுடனும் மற்றும் தேவார, திருவாசக ஓலைச் சுவடிகளுடனும் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் குறிப்பிட்டிருந்த கால கட்டத்தில் ஒரு பவுனின் விலை பதின்மூன்று ரூபாய்தான். கொத்தனாருக்கு சம்பளம் நாளொன்றுக்கு நாலணா. அதாவது 25 காசுகள். சித்தாளுக்கு அதில் பாதிதான் சம்பளம். சுமார் 100 கிலோ கொண்ட அரிசி மூட்டையின் விலை ஆறு ரூபாய்கள் மட்டுமே. விலை வாசி அந்த அளவில்தான் இருந்தது. அதனால்தான் அத்தனை கிலோ தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பது சாத்தியமாயிற்று.
பாட்டையா தான் தர்மமாகச் செய்த பசுமடங்கள், நந்தவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டும் இல்லாமல், தான் கட்டிய வீட்டிற்கும், பராமரிப்பு, பாதுகாப்பு நிதி வைத்துவிட்டுப் போயிருப்பது அப்போதுதான் அவர்களுக்குத்
தெரிய வந்தது. அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தங்கக் காசுகளை 5 பகுதிகளாக்கி, ஒரு பகுதியை மட்டும் இங்கே நிறுத்திக் கொண்டு, மற்ற நான்கு பகுதிகளையும் தன் தம்பிகள் நான்கு பேர்களிடமும் கொடுத்து, உடனே புறப்பட்டுச் சென்று காரைக்குடியில் உள்ள லாக்கர்களில் வைத்துவிட்டு வரச் சொன்னார்.
வலிய வந்த அந்த செல்வத்தில், தாங்கள் ஒரு காசைக்கூட எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், பாட்டையாவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி, சிறிது சிறிதாக அந்தக் காசுகளை விற்று, அறக்கட்டளைக்குள் கொண்டுவந்துவிடலாம் என்றும் முடிவு செய்தார்கள். அத்துடன் நாற்பது அல்லது ஐம்பது லெட்ச ரூபாய் செலவு செய்து தங்கள் வீட்டை முழுமையாகப் புதிப்பித்து விடலாம் என்றும் முடிவு செய்தார்கள். அதுபோல அறக்கட்டளையின் மூலம் பல தர்ம காரியங்களைச் செய்வது என்றும் முடிவு
செய்தார்கள்
சீனுக் கொத்தனாரை சரிக்கட்டுவதற்கு, அவருக்கு ஐந்து அல்லது ஆறு லெட்ச ரூபாய் கொடுத்துவிடுவது என்றும் அதை, அவருடைய சின்ன மகளுக்கு திருமணம் பேசச் சொல்லி ,திருமணச் செலவிற்காகக் கொடுத்துவிடலாம் என்றும் முடிவு செய்தார்கள்.
பாட்டைய்யா பெரிய சிவ பக்தர். அவருடைய நினைவாக உள்ளூரில் உள்ள நகரச்சிவன் கோவிலுக்கு ஒரு பெருந்தொகையைத் தர்மாகக் கொடுப்பது என்றும் முடிவு செய்தார்கள்.
அதே வாரத்தில் இன்னொரு அதிசயமும் நடந்தது. பழநியப்ப அண்ணனின் மகன் சொக்கலிங்கம் அமெரிக்காவில் ஒரு மிகப் பெரிய கணினி மென் பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறான் என்று சொன்னேன் அல்லவா? அவன் இணைய இணைப்புள்ள செல்போன்களில், நாட்டு நடப்பு செய்திகளை அவ்வப்போது தன்னிச்சையாக இழுத்துக் கொடுக்கும் ஒரு மென்பொருளை வடிவமைக்க, அவன் வேலை பார்த்த நிறுவனமே, அதை ஒரு அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு விற்று அதில் கிடைத்த பெரும் தொகையில் ஒரு பகுதியை ஊக்கத் தொகையாக அவனுக்கு வழங்கியதாம். வழங்கிய தொகை 16 மில்லியன் டாலர்களாம். இந்திய மதிப்பில் சுமார் நூறு கோடி ரூபாய்களாம். எல்லா ஊடகங்களிலும் அச்செய்தி வெளியாக, இந்தியப் பத்திரிக்கைகளும் அவனுடைய படத்துடன் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன.
அடுத்த நாள் ஊர் முழுக்க அதே பேச்சாக இருந்தது.
அவன் தன் தந்தையாருக்கு தனது அலைபேசியின் மூலம் பேசி, மிக்க மகிழ்ச்சியுடன் அந்தச் செய்தியைச் சொன்னான்.அத்துடன், வீட்டைப் புதிப்பிக்க இருக்கும் தகவலையும், பாட்டைய்யா பெயரில் துவங்க
இருக்கும் அறக்கட்டளையைப் பற்றிய தகவலையும் கேட்டுவிட்டு, தன் பங்களிப்பாக ஒரு பெருந்தொகையைத் தர விரும்புவதாகவும் சொன்னான்.
அறக்கட்டளைக்கு அவன் கொடுத்த பணத்தின் மூலம், புதையல் செய்தி வெளிவராமல் அமுங்கிப் போய்விட்டது.
அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை.
எல்லா வேலைகளும் மளமளவென்று நடந்தன!
செய்தியைக் கேள்விப்பட்டு, இடக்கு செய்த மூன்று பேர் குடும்பங்களில் இருந்து, பெண்கள் வந்திருந்து, பராமரிப்பு வேலையில் தங்களையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லியதுடன், தங்கள் பங்கு அறைகளையும் திறந்து விட்டு பராமரிப்பு வேலைகளுக்கு ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள்.ஆறே மாதங்களில் வீடு பளபளத்தது. புதிதாய்க் கட்டிய வீடு போல் ஆகிவிட்டது.
நகரச் சிவன் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாயையும், நகரப் பள்ளிக் கூடத்திற்கு ஒரு கோடி ரூபாயையும் இவர்கள் நிதியாகக் கொடுக்க அதுவும் உள்ளூர் மக்களுக்கு பரபரப்பு மற்றும் மகிழ்ச்சி உரிய செய்தியானது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சொ.அ.சொ குடும்பத்தார்களுக்கு, உள்ளூர் நகரத்தார்களின் சார்பாக பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நகரச்சிவன் கோவிலின் முன் பகுதியில் இருந்த அலங்கார மண்டபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை பாராட்டுவிழா நடைபெற்றது.
பாராட்டுவிழாவில் கலந்து கொள்ள பழநியப்ப அண்ணனும், அவருடைய தம்பிகள் நான்கு பேரும் அங்கே சென்றபோது, அவர்கள் வீட்டைச் சேர்ந்த மற்ற மூன்று பேர்களும், அங்கே முன்பாகவே வந்து அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். கடைசித் தம்பி, பழநியப்ப அண்ணனின் காதில் கிசுகிசுத்தான்.
“என்ன அண்ணே, அவர்கள் மூன்று பேர்களும் வந்திருக்கிறார்கள்?”
பழநியப்ப அண்ணன் சுருக்கமாக ஒற்றை வரியில் பதில் சொன்னார்:
“கோவில் காரியக்காரர்களை விட்டு நான்தான் அவர்களைக் கூப்பிடச் சொன்னேன்”
“எதற்காக அண்ணே?”
“அவர்களும் சொ.அ.சொ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானே அப்பா! அதை மறுக்கமுடியுமா? குடும்பப் பெருமையில் அவர்களுக்கும் பங்கு உண்டல்லவா? அதை மறுப்பது எப்படித் தர்மமாகும்? எப்படி நியாயமாகும்? அதனால்தான் கூப்பிடச் சொன்னேன். நான் சொல்லியதாகச் சொல்லவும் சொன்னேன். அதனால்தான் வந்திருக்கிறார்கள். குடும்பப் பெருமை என்பது காசு பணத்தில் இல்லை. குடும்ப அங்கத்தினர்களின் ஒற்றுமையில்தான் அது இருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவதில்தான் இருக்கிறது. அதை உணர்ந்து அவர்கள் இனி நம்மோடு ஒற்றுமையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.”
பழநியப்ப அண்ணனின் நம்பிக்கை வீண் போகவில்லை.
அன்று நடந்த விழாவில் பழநியப்ப அண்ணனின் மூத்த அண்ணனுக்குத்தான் முதல் மரியாதை செய்யப்பெற்று மாலை அணிவிக்கப்பெற்றது. மற்றவர்களுக்கு வயது வரிசைப்படி அடுத்தடுத்து செய்யப்பெற்றது.
சொ.அ.சொ குடும்பத்தாரின் சார்பில் ஏற்புரையை மூத்த அண்ணன்தான் நல்கினார்.
“இத்தனை நாட்களாக என் வயதிற்கு உரிய பக்குவம் இன்றி, சித்தம் போக்கு சிவன் போக்கு என்று மனம்போனபடி இருந்துவிட்டேன். என் தம்பி பழநியப்பன்தான் என் கண்களைத் திறந்துவிட்டான். ஊர் மக்கள்
ஒன்றாகக் கூடி எங்கள் குடும்பத்தாரைக் கெளரவப் படுத்தும் விதமாக இத்தனை பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். நகரத்தார்களுக்குப் பல சிறப்புக்கள் உண்டு. தனித் தன்மையான பல குண நலன்கள் உண்டு. இறையுணர்வு, தர்ம சிந்தனை ஆகிய இரண்டும் அவற்றுள் முக்கியமானதாகும். இப்போது இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள் - குடும்ப ஒற்றுமைதான் அது! ஒற்றுமை உணர்வு இல்லாத மனிதனிடம் எத்தனை இறையுணர்வு இருந்தாலும் அது பயன்படாது. இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டார். சக மனிதனுடன், சக உடன் பிறப்புக்களுடன் ஒற்றுமை கொள்ளாத மனிதன், எப்படி இறைவனுடன் ஒன்ற முடியும்? எப்படி இறையடி சேரமுடியும்.....?
அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை. நா தழுதழுத்துவிட்டது. கண்கள் கலங்கி விட்டன!
அவருக்கு மட்டுமா? அவருடைய தம்பிகளின் கண்களும் பனித்துவிட்டன!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!