Astrology - அவர் நாயகனா அல்லது வில்லனா?
செவ்வாயின் இரட்டை வேடம்.
ஒரு படத்தின் நாயகனுக்குப் படத்தில் இரட்டை வேடம் என்று வைத்துக்கொள்ளுங்கள். படத்தின் கதாநாயகனும் அவரே, வில்லனும் அவரே என்றால், எந்த வேடத்தில் அதிகமாகக் காட்சி கொடுப்பார்?
காட்சி கொடுப்பது முக்கியமில்லை. எந்த வேடத்தில், படத்தின் முடிவில் அவர் வெற்றி பெறுவார்? வில்லன் வேடமே வெற்றி பெற்றால் என்ன ஆகும்?
செவ்வாய்க்கு அந்த நிலைமை உண்டு!
விருச்சிக லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் லக்கினத்திற்கும் உரியவன், ஆறாம் வீடான மேஷத்திற்கும் உரியவன் அவன்.
ஆறாம் வீடு வில்லங்கமான வீடு என்பது நமக்குத் தெரியும். ஆகவே நாம் விருச்சிக லக்கினக்காரர்கள் என்றால் அதிகமாகக் கவலை கொள்வோம்.
செவ்வாய் ஜாதகத்தில் வலிமையுடன் இருந்தால், அதாவது உச்சம் பெற்றோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ இருந்தாலோ அல்லது அஷ்டகவர்க்க சுயபரல்களில் 5ம் அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலோ, ஜாதகனுக்கு மொத்தமாக நாயகன் வேலையை மட்டுமே செய்வார். தவறி வலிமையின்றி இருந்தால், அதாவது ஜாதகத்தில் நீசமடைந்து இருந்தாலும் அல்லது 6, 8, 12ஆம் வீடுகளில் இருந்தாலும் அல்லது அஷ்டகவர்க்கத்தில் 3 அல்லது அதற்குக் குறைவான பரல்களுடன் இருந்தாலும் நீமைகளையே செய்வார்.
எப்போது செய்வார்? தனது தசா புத்திகளில் செய்வார். அப்படிப்பட்ட நிலைமை உடைய ஜாதகர்கள், சம்பந்தப்பட்ட புத்திக் காலங்களில் எச்சரிக்கையாக இருப்பதுடன், இறைவழிபாட்டையும் மேற்கொள்வது நன்மை பயக்கும்
செவ்வாய்க்கு மேஷம்தான் மூலத்திரிகோண வீடாகும். ஆகவே அவர் வலிமையுடன் இருந்தால், லக்கினத்துடன் இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து இரட்டிப்பு நன்மைகளைச் செய்வார்.
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com