Astrology - பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் உள்ளனவா?
ஏன் இல்லாமல்? பெண்களுக்கென்று உடல் அமைப்பு, கால் அமைப்புக்கள் மாறுபடும்போது, ஜாதகத்தில் மட்டும் சில தனி அமைப்புக்கள் இல்லாமல் போகுமா என்ன?
அவை என்னென்ன?
விரிவாகக் குறைந்தது ஒரு பத்து பதிவுகளாவது எழுத வேண்டும். இங்கே எழுதினால் திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஆகவே மேல் நிலைப் பாடத்தில் எழுதலாம் என்றுள்ளேன்.
ஒரே ஒரு மேட்டரை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்
-----------------------------------------------------
கைம்பெண்’ நிலைமையைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?
கைம்பெண் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? கணவனை இழந்த பெண். விதவை. widow
அதாவது கணவனை இழக்கும் நிலை ஒரு பெண்ணுக்கு எவ்வாறு ஏற்படுகிறது?
கணவனை இழக்கும் பெண்ணின் மன பாதிப்புக்களையும், அவளுடைய வாழ்வில் ஏற்படும் சமூக, மற்றும் பொருளாதார பாதிப்புக்களையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். பதிவு திசை மாறிப்போய்விடும் என்பதாலும், இது பாப்கார்ன் பதிவு என்பதாலும் அதைப்பற்றி எழுதவில்லை. நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்
------------------------------------------------------
1. செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து, அது அவருக்குப் பகை வீடு என்னும் நிலைமை விதவையோகத்தைக் குறிக்கும்
2. அவ்வாறு ஏழில் அமர்ந்திருக்கும் கேதுவும் அதே காரியத்தைச் செய்யும்.
3. வலுவிழந்து, பாபகர்த்தாரி யோகத்துடன் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரனும் அந்த வேலையைச் செய்யும்
4. பிரசன்ன மார்க்கத்தை எழுதிய முனிவர் பெண்களுக்கு, சனிதான் கணவனுக்கான காரகன் என்கிறார். அத்துடன் பெண்ணின் ஜாதகத்தி சனீஷ்வரன் செவ்வாய் அல்லது கேதுவுடன் சேர்ந்து ஏழில் இருந்தால், பெண் சீக்கிரம் விதவையாகிவிடுவாள் என்கிறார்.
5. பெண்களின் ஜாதகத்தில் எட்டாம் வீடு மாங்கல்ய ஸ்தானம். அந்த ஸ்தானத்தை, அதாவது அந்த வீட்டை செவ்வாயோ அல்லது கேதுவோ பார்த்தால் பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம்.
இதெல்லாம் பொது விதி.
விதிவிலக்கு உண்டா?
உண்டு!
ஜாதகியின் இரண்டாம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்தால், அது அவளை விதவையாகாமல் காப்பாற்றிவிடும். அதுபோல மேற்கண்ட வீடுகளை குரு பகவான் தன்னுடைய நேரடிப் பார்வையில் வைத்திருந்தாலும், அந்த அமைப்பு ஜாதகியைக் காப்பாற்றும்
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com