மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.9.21

Devotional: இன்று செவ்வாய்க் கிழமை- முருகப்பெருமானுக்கு உகந்த நாள்!


Devotional: இன்று செவ்வாய்க் கிழமை- முருகப்பெருமானுக்கு உகந்த நாள்!

அவரை வணங்குவோம்!!

சென்ற வாரம் முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தைப் பார்த்தோம்!

இந்த வாரம் அடுத்த படைவீடான திருச்செந்தூரைப் பார்த்து வணங்குவோம்!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். 

ஒருவருடைய ஜாதகத்தில் குருபலன் சரியாக இல்லையென்றால் அவர்களுக்கு திருமண தடை, குழந்தையின்மை, தொழிலில் முன்னேற்றம் இன்மை போன்ற பல தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும். 

இவ்வாறான தடைகள் நீங்கி, குரு பலன் கிடைக்க திருச்செந்தூர் முருகனை வணங்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

இவ்வாறான சிறப்பு மிக்க திருச்செந்தூர் கோவிலின் முக்கிய குறிப்புகள் பற்றி இப்பகுதியில் அறிந்து கொள்ளப் போகிறோம். 

அறுபடைவீடுகளில் திருச்செந்தூரை தவிர மற்ற 5 கோவில்களும் குன்றுகளின் மேல் அமைந்துள்ளன என அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் திருச்செந்தூர் கோவிலும் ஒரு சிறிய குன்றின் மீது தான் அமைந்துள்ளது. 

இதற்கு உதாரணமாக அங்குள்ள வள்ளி குகையினை ஒட்டி மணல் மேடுகள் இருப்பதைக் காண முடியும். இந்த மணல் குன்றுகளின் மீது தான் திருச்செந்தூர் கோவில் அமைந்துள்ளது. 

திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முருகரை மட்டுமே தரிசித்து வந்திருப்பார்கள். ஆனால் முருகனது கருவறைக்குப் பின்னால் முருகப்பெருமானே வழிபட்ட பஞ்சலிங்க சன்னதி உள்ளது. பஞ்சலிங்க சன்னதிக்கு சென்று பஞ்சலிங்கங்களை தொழுது விட்டு வந்தால் முருகப்பெருமானின் திருவருள் நிறைவாகக் கிடைக்கும். 

பொதுவாகவே கடற்கரைக்கு அருகில் இருக்கும் கட்டிடங்கள் எப்பொழுதும் கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமாகவே கட்டப்பட்டிருக்கும். ஆனால் திருச்செந்தூர் முருகர் கோவிலின் கருவறை கடல் மட்டத்தில் இருந்து 10 அடி தாழ்வாகவே அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கடற்பரப்பில் இருந்து 220 அடிகளுக்கு அருகாமையிலேயே இந்த கோவில் உள்ளது. 

எவ்வளவு பெரிய இயற்கை சீற்றங்கள் வந்த பொழுதும் இதுவரை எந்த ஒரு இயற்கை சீற்றமும் இந்த கோவிலை பாதித்ததில்லை. இதுவே முருகப்பெருமானின் மகிமையாகும்.

முருகப்பெருமானின் கோவிலுக்கு அருகில் இருக்கும் நாழிக்கிணறு எப்பொழுதும் வற்றாமல் நீர் சுரந்து கொண்டே இருக்கும் அதிசயமான ஒரு இடமாகும். கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இந்த கிணற்றில் மட்டும் குடிக்கும் அளவிற்கு நல்ல நீர் சுரப்பது அதிசயத்திலும் அதிசயம். முருகப்பெருமான் அவருடைய படை வீரர்களின் தாகத்தைத் தணிப்பதற்காக அம்பு எய்தி, ஒரு நீருற்றை ஏற்படுத்தினார். அதுவே இந்த நாழிக்கிணறாகும். 

திருச்செந்தூர் கோவிலை கட்டும் பொழுது அதற்கு பெரிதளவில் துணைபுரிந்த மூன்று அடியார்களின் சமாதி, முருகன் கோவிலுக்கு சிறிது தூரத்தில் உள்ளது. இந்த மூன்று அடியார்களின் சமாதியும் மூவர் சமாதி என்று அழைக்கப்படுகிறது. இவர்களை சென்று தொழுது வருவதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 

திருச்செந்தூர் முருகனின் மற்றுமொரு பெருமை என்னவென்றால் டச்சுக்காரர்கள் இந்தியாவில் இருந்த பொழுது முருகர் சிலையை கடத்தி அவர்களது நாட்டிற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்பொழுது கடலுக்கு நடுவே செல்லும் பொழுது அவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவிற்கு சூறாவளி அடிக்க தொடங்கியது. அப்பொழுது அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, முருகர் சிலையை கடலில் போட்ட பின்னரே சூறாவளி நின்றது. 

சில காலங்கள் கழித்து ஒரு பக்தரின் கனவில் தோன்றிய முருகன், தான் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி வெளியே எடுக்க சொன்னார். அப்படி கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலையும் திருச்செந்தூர் கோவிலினுள்ளே தான் இருக்கிறது. இவ்வாறு பல சிறப்பம்சங்கள் நிறைந்த திருச்செந்தூர் முருகனை மீண்டும் ஒருமுறை சந்திக்கச் சென்றால், இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு, தவறாமல் தொழுது விட்டு வாருங்கள்.

அன்புடன்
வாத்தியார்
==============================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com