Astrology: Quiz: புதிர்: 25-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!
கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகர் சித்திரை நட்சத்திம், துலா லக்கினக்காரர். வெளிநாட்டு வேலைக்குச் செல்ல ஆசைப் பட்டார். ஜோதிடர்களைக் கேட்டபோது, அவருக்கு வெளிநாட்டு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார்கள். அவரும் அதன்படியே வெளிநாட்டு வேலை ஒன்று கிடைத்து, மகிழ்ச்சியோடு வெளிநாட்டிற்குச் சென்று விட்டார். அதற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!” என்று கேட்டிருந்தேன்.
பதில்: ஜாதருக்கு யோககாரகனான சனீஷ்வரன் லக்கினத்தில் இருந்து 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதோடு சந்திரனிலிருந்து 10ம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். அந்த சிறப்பு அவர்க்கு வெளிநாட்டு வேலையை வாங்கிக்கொடுத்தது. அத்துடன் சந்திரலக்கினத்திற்கு ஒன்பதாம் வீட்டுக்காரனான சுக்கிரன் 12ல் அமர்ந்திருப்பதோடு 10ம் அதிபதி புதனும் கூட்டாக உள்ளார். தசாநாதன் சனீஷ்வரன் பத்தில் இருப்பதும் சிறப்பாகும். இந்த அமைப்புக்களே அவருக்கு வெளிநாட்டு வேலையைப் பிடித்துக்கொடுத்தன!!!!!
அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,
இந்தப் புதிரில் 12 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
அடுத்த வாரம் 2-10-2020 வெள்ளிக்கிழமை அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
உங்களுடைய பின்னூட்டங்கள் பிரதி எடுக்க வரவில்லை! கூகுள் புதிய இண்டெர்பேஸ் உபயம் நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com