மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.4.19

சந்தோஷம் கிடைக்கும் இடம்!!!!


சந்தோஷம் கிடைக்கும் இடம்!!!!

*வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன...*

 ஆனால்

 சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது?

அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா?

நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?...

இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் தான் .. “The way to happiness ”
என்ற புத்தகம்....

இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது.....

 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி,...

 இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள்....

 “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

“சந்தோஷத்தின் வழி’யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18.அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20.  அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது,அள்ளிக்கொடுங்கள். ஏனென்றால் நாம்  போகும்போது  சிறிதும்   அள்ளிச்செல்ல முடியாது

- *படித்ததில்* *பிடித்தது* .
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5 comments:

  1. Respected Sir,

    Happy morning... Nice post...Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. /////Blogger kmr.krishnan said...
    super Sir/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  3. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post...Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com