மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.9.18

எதை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்?


எதை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்?

இந்தியா
ஒரே நாடு அல்ல
பல நாடுகளின்
கூட்டமைப்பு ..என்று

ஒரு சில பிரிவினைவாதிகளின்
குரல்
யாரும்
கண்டு கொள்ளாத போதும்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது !

ஒற்றை நாய்
குரைக்கும் போதே
விரட்டா விட்டால்
ஊரு நாய்களெல்லாம்
ஒன்று சேர்ந்து
ஊளையிடும்
அபாயம் நேரலாம் !

எனவே
தெளிவு படுத்தும் கடமை
தேச பக்தனின்
தோள்களில் !

மலையையும்
கடலையும்
காரணமாக்கிக்
காலம் படைத்த
*தீப கற்பம்* இது !

இந்த கற்பத்தில்தான்
உலகின் ஆன்மீகக் குழந்தை
அவதரித்தது !

ஆதியில்
இதனை
நாவலந் தீவென்றே
நானிலம் அறியும் !

துணைக் கண்டம்
என்று
புவியியலார்
புகழ்வதுண்டு !

தென்னாடுடைய சிவன்
இமயத்திலும்
இமவான் மகள்
குமரியிலும்
இடம் மாறி இருந்து
எல்லை வகுத்தனர் !

கயிலைப் பெருமான்
கல்யாணம் செய்தது
மதுரைப் பாண்டியன்
மகளை அல்லவா?

இதிகாசங்கள் இரண்டும்
பேசாத
இடங்களே இல்லை
இந்தியாவில் !

வடபுலத்து இராமன்
தென்கோடியில்
கட்டிய கோயில்
*இராமேஸ்வரம்* !

காந்தாரச் சகுனி முதல்
கடலோரப் பாண்டியன் வரை
பங்கெடுக்காதவர் யார்?
பாரதப் போரில் !

கங்கை நீரையும்
கயிலைக் கல்லையும்
கொண்டு வந்து தான்
பத்தினிக் கோட்டத்தைக்
கட்டி முடித்தான்
செங்குட்டுவன் !

ஆதி முதல்
தீர்த்த யாத்திரை
காசி - இராமேஸ்வரம்
என்பதாய்த் தானே
காணப்படுகிறது !

கயிலையில் புறப்பட்ட
அகத்தியருக்குத் தெரியும்
*பாரத எல்லை*
*நெல்லைக்கு அப்பால்*
*இல்லை* என்று !

அதனால்தான் பொதிகையைத் தாண்டி
போகவில்லை அவர் !

வடக்கே அவதரித்த
பரசுராமர்
அந்திமத்தில்
அமைதி கொண்டது
தென்னகத்துக் கேரளம் !

பாரதம் முழுவதையும்
பாதத்தால் அளந்த
கேரளத்துச் சங்கரர்
பீடம் ஏறியது
காஞ்சி நகர் !

கயிலை முனிவரே
மூலனாய் மாறி
மூவாயிரம் பாடலில்
திருமந்திரத்தைத்
திரட்டிக் கொடுத்தார் !

வடகயிலை
சுந்தரர்தான்
தென்னகத்தில்
தமிழ் வளர்த்தார் !

காரைக்கால் அம்மையும்
கரசேவை அப்பரும்
வடகயிலை சென்று
தென்தமிழில் பாடினர் !

கேரளத்துச் சேரலன்
கவிதைத் தொகுதியை
வெளியிட்ட இடம்
வடகயிலை என்பது
வருணன் தரும் செய்தி !

மெய்கண்டாருக்குச்
சித்தாந்தம் சொன்னவர்
வடகயிலை பரஞ்சோதி
என்பதே வரலாறு !

காசி மடத்தைக்
கட்டி ஆண்டவர்
கன்னித் தமிழ் நாட்டுக்
குமரகுருபரர் !

ஆண்டாள் மாலை
அழகு செய்யாமல்
திருப்பதியில்
திருவிழா ஏது ?

விவேகானந்தரின்
வேதாந்த அறிவு
அமெரிக்காவை
ஆட்டிப் படைத்தது
சேதுபதியின்
செலவில்தானே !

வடக்கே பிறந்து
தெற்கே புகுந்து
புதுவை மண்ணை
புனிமாக்கினார்
அரவிந்தர் !

ஆந்திராவின்
அற்புதமானார்
தமிழகம் தந்த
இராகவேந்தர் !

ஒருங்குடன் ஆண்ட
பரதன் பெயரால்
*பாரதம்* என்பதே
பழம் பெயராகும் !

இந்திய எல்லையை
எடுத்துக் காட்டும்
சங்க இலக்கியச்
சான்றுகள் பற்பல !

இட்டப் பொட்டும்
கட்டிய புடவையும்
*இந்தியப் பெண்* என
எடுத்துக் காட்டும் !

இந்தியா முழுவதும்
எல்லா வீட்டிலும்
யாராவது ஒருவருக்கு
வடமொழிப் பெயராய் !

*பாரத தேசம்*
*பழம் பெரும் தேசமாம்*
பாரதி புலவனும்
பாடி மகிழ்ந்தான் !

வடக்கே இருக்கும்
திரிவேணி சங்கமம்
தெற்கே வந்தால்
முக்கூடலாகும் !

எடுத்துக் காட்டுகளை
அடுக்கத் தொடங்கினால்
முடிவாய்ச் சொல்ல
முந்நூறு நாட்கள்
முழுமையாய்த் தேவை !

பெரிய தேசத்தில்
வேறுபாடுகள்
இருப்பதே இயற்கை !
*வேறுபாடுகளைக்*
*கூறுபடுத்தி*
*பிரிவினைப் பேசும்*
*பித்தர்கள் எத்தர்களாய்!*
விரல்களின் அளவு
வெவ்வேறாயினும்
*உள்ளங்கை*
*ஒன்றுதான்* என்பதை
உணர மறுக்கும்
குருடர்களுக்கு
விளக்கினாலும் விளங்காது !

*சோழநாடு*
*சேரநாடு*
*பாண்டியநாடு*
*கொங்குநாடு*
*நடுநாடு*
*ஆப்ப நாடு*
என்றெல்லாம்
பிரிந்து கிடந்த
தமிழ்நாடு
ஒரே மாநிலமாய்
உருப்பெற்றதற்குத்
தமிழ் மொழியே
அடிப்படை !

பல மாநிலங்களையும்
சேர்த்து
*பாரத நாடென*
பறை சாற்றுவதற்கு
ஆன்மீகப் பண்பாடே
அடிப்படை !

அழகான மாலையில்
பல பூக்கள் இருப்பதால்
அது
மாலையே இல்லை
தனித்தனிப் பூக்கள் தான்
என்று
அடம்பிடிப்போரிடம்
அகப்பட்டு விடாதீர் !

*பிரிவினை நோய்*
*பிடித்துக் கொள்ளும்* !!!

நாம் இந்தியர் என்பதில்
பெருமிதம் கொள்வோம்!
இணைந்தே இன்னும் பல
சாதனைகள் புரிவோம்!
வாழ்க பாரதம்!
வளர்க தமிழ்!
வந்தே மாதரம்!
ஜெய்ஹிந்த்!

நன்றி: 🚩🚩வாஞ்சிநாதன் ஹிந்து
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

 1. Good morning sir Very nice thanks sir vazhga valamudan

  ReplyDelete
 2. வணக்கம் குருவே!
  என்னமாய் சீரிப் பறக்குது வார்த்தைகள்!
  எல்லையிலா ஆனந்தம் கொண்டோம்!
  எங்கள் பாரதம் எங்கிலும ஒன்றே
  வேற்றுமைப் பேச்சை வேறுடன்
  அறுப்போம்,
  என்றும் நாங்கள் இணைந்தே
  வாழ்வோம்!
  எங்கள் வாத்தியார் இனிதே வாழ்க!

  ReplyDelete
 3. /////Blogger ஸ்ரீராம். said...
  ஜெய் ஹிந்த்.////

  வாழ்க! வளர்க! உங்களின் நாட்டுப்பற்று ஸ்ரீராம் !!!!!

  ReplyDelete
 4. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good morning sir Very nice thanks sir vazhga valamudan/////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம் !!!!

  ReplyDelete
 5. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  என்னமாய் சீரிப் பறக்குது வார்த்தைகள்!
  எல்லையிலா ஆனந்தம் கொண்டோம்!
  எங்கள் பாரதம் எங்கிலும ஒன்றே
  வேற்றுமைப் பேச்சை வேறுடன்
  அறுப்போம்,
  என்றும் நாங்கள் இணைந்தே
  வாழ்வோம்!
  எங்கள் வாத்தியார் இனிதே வாழ்க!//////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

  ReplyDelete
 6. ////Blogger kmr.krishnan said...
  Very true and inspiring Sir.///////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com