மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.2.17

வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா - எது சரியானது?


வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா - எது சரியானது?

கீழே உள்ள கட்டுரை ஒரு பத்திரிக்கையில் வந்தது. உங்களின் தகவலுக்காக அதை அப்படியே கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------------------------------------------
அதிசாரம் எனப்படும் இந்த சனியின் நகர்வு திருக்கணிதப்படி மட்டுமே நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் இன்னும் விருச்சிக ராசியிலேயே ஜென்மச்சனியாக நிலை கொண்டிருக்கிறார்.

வாக்கியப் பஞ்சாங்கங்கள் பிழையானவை. கிரகங்களின் உண்மை இருப்பு நிலையை அவை சொல்லவில்லை என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். பொதுவாக அனைத்து பெயர்ச்சிகளிலும் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்களுக்கு இடையே வித்தியாசங்கள் உண்டு. இவற்றில் சனி விஷயத்தில் அதிகமான வித்தியாசங்கள் ஏற்படும்.

எந்தவிதமான பஞ்சாங்கமாக இருந்தாலும் அவற்றை வெளியிடுபவர்கள் கிரகங்களின் அருகில் போய் நின்று கொண்டு அதன் இயக்கத்தை கண்டுணர்ந்து குறிப்பது இல்லை. இதற்கென சில கூட்டல், கழித்தல் முறைகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு மூலச் சமன்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதை ஜோதிடப்படி சித்தாந்தம் என்று சொல்லுவோம்.

அதன்படி முந்தைய ஆண்டுகளில் சனி இந்த இடத்தில் இருந்தது, பூமி இங்கே இருந்தது. இந்த வருடம் சனி இவ்வளவு நகர்ந்திருக்கிறார், பூமி இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறது. எனவே சனி, பூமியில் இருந்து இவ்வளவு தூரம் இருக்கிறார் என்பதை மூலச் சமன்பாட்டின் தொடக்கத்தை வைத்து கணக்கீட்டு முறையிலேயே வாக்கிய, திருக்கணித, பஞ்சாங்க கர்த்தாக்கள் கிரக நிலையை அறிவிக்கிறார்கள்.

இதில் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஆதியில் ஏற்பட்ட சிறு வித்தியாசங்கள் திருத்தப்படாமல் கூடிக் கொண்டே போய், அதாவது நூற்றாண்டுகளுக்கு முன்பு நிமிடக் கணக்கில் ஆரம்பித்த ஒரு வித்தியாசம் இன்றைக்கு ஒவ்வொரு வருடமும் கூடிக் கொண்டே போய் நிமிடம், மணியாகி, மணி நாளாகி, நாட்கள் மாதங்கள் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

இவைதான் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகநிலைகள் மாறுபடுவதற்கான காரணம். சமன்பாடுகளின் மூலங்களில் மட்டுமே கிரக வித்தியாசத்தை திருத்த முடியும் என்பதால் இதை எப்படி நேர் செய்வது என்ற குழப்பத்தில் வாக்கியப் பஞ்சாங்கள் தெளிவற்ற ஒரு நிலையில் இருக்கின்றன.

சில ஜோதிடர்கள் வாக்கியம் ஞானிகள் அருளியது. திருக்கணித முறைகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. எனவே ஞானிகள் உருவாக்கிய வாக்கியத்தை மாற்றியமைப்பதற்கு யாருக்கும் அருகதை இல்லை என்று தவறாக நினைக்கிறார்கள்.

உண்மையில் வாக்கியத்தை விட திருக்கணிதமே காலத்தால் முற்பட்டது. திருக்கணிதமே பழமையானது. ஜோதிடத்தின் ஆதி பிதாமகர்களான ஆரியபட்டர் வராகமிகிரர் போன்ற ஞானிகள் உபதேசித்தது திருக்கணித முறையைத்தான்.

நமது வானவியல் சாஸ்திரத்தின் ஆதிஞானிகளில் ஒருவரான ஆரியபட்டர் தன்னுடைய பெருமைமிகு நூலான சூரியசித்தாந்தத்தின் முதல் ஸ்லோகத்திலேயே தான் பிரம்மாவின் வழித்தோன்றல் எனவும் இரண்டாவதில் மயன், நம்முடைய மேலான இந்துமதத்தின் ஆதிநாயகனான சிவம் எனும் சூரியனை நோக்கித் தவமிருந்து இந்த பிரபஞ்சத்தின் சூட்சுமங்களையும், சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். இந்த மயன்தான் மேற்குறிப்பிட்ட பிரபஞ்ச ரகசியங்களை நாரதர் உள்ளிட்ட ஏழு ரிஷிகளுக்கும் தெரியப் படுத்தினார் என்றும் ஆரியபட்டர் தெளிவாகச் சொல்கிறார்.

13-ம் நூற்றாண்டு வரை ஆரியபட்டரின் திருக்கணித முறையே நம்முடைய பாரதத்தில் இருந்து வந்தது. 13-ம் நூற்றாண்டுக்குப் பிறகே தவறான வாக்கிய முறை இங்கே கையாளப்பட்டது. ஆரியபட்டரை அடுத்து வந்தவரான வரருசி அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னுடைய வாக்கிய சித்தாந்தத்தை வெளியிட்டார். இந்த வாக்கியத்திலும் காலத்திற்கேற்ப மாறுதல்களை செய்து கொள்ளவும் சொன்னார்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் கிரக இருப்பில் ஏற்படும் மாறுதல்களை மாற்றிக் கொள்ள ஞானிகள் நம்மை அனுமதிக்கவே செய்திருக்கிறார்கள். ஆனால் வரருசியின் வாக்கிய சித்தாந்தம் அவ்வப்போது திருத்தப்படாமல் விடப்பட்டதால் இன்றைக்கு திருத்தவே முடியாத ஒரு தவறான நிலையில் வந்து நிற்கிறது.

விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திருக்கணிதப்படியான கிரக இருப்புகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால் நாசாவிற்கே விண்வெளி சமன்பாடுகளில் மூலக்கணிதங்களை அளித்தது திருக்கணித முறைகள்தான்.

வாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கும் உள்ள முரண்பாட்டை இன்னும் துல்லியமாக ஆராயப் போவோமேயானால், பூமி ஒரு வருடத்தில் சூரியனைச் சுற்றி வரும் நிரூபிக்கப்பட்ட துல்லியமான கால அளவான 365 நாட்கள், 6 மணி, 9 நிமிடம் என்பதை, வாக்கியங்களில் 3 நிமிடத்தை கூட்டி 365 நாட்கள், 6 மணி, 12 நிமிடம் என கணக்கிடுவதால் வித்தியாசம் வருகிறது.

தங்களுடைய கணிப்புகள் தவறுவதை உணர்ந்து வாக்கிய பஞ்சாங்க தயாரிப்பாளர்கள் தங்கள் முறையின் ஆதார கர்த்தரான வரருசியின் மூல முறையில் கணிப்பதை இப்போது கைவிட்டு விட்டனர். இது கிட்டத்தட்ட வாக்கிய முறை தவறு என்பதை ஒத்துக்கொண்டதற்கு சமம்தான்.

ஆனால் பலநாள் தவறை ஒரே முறையில் திருத்துவது எப்படி என்பதுதான் தற்போது பெரிய குழப்பத்தில் உள்ளது. இதுபோன்ற குழப்பங்களினால் சனிப்பெயர்ச்சி சில சமயம் இரண்டு பஞ்சாங்கங்களிலும் மூன்றரை மாத வித்தியாசம் வர ஆரம்பித்து விட்டது. எனவே அனைவரும் கிரக இருப்பின் உண்மையான நிலைமையை கூறுகின்ற திருக்கணித முறைக்கு மாறி அதனைக் கடைப்பிடிப்பது மட்டுமே இதற்கு ஒரு தீர்வாக இருக்கும்.

இந்த குழப்பங்களால் பாதிக்கப்படுவது ஜோதிடம் அறியாத பொதுமக்கள் தான். நட்சத்திர இறுதி நேரங்களில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு இரண்டு பஞ்சாங்கங்களும் வேறு வேறு நட்சத்திரத்தை சொல்லும் போது சாதாரண பொது மக்கள் ஜோதிடத்தையே குறை சொல்லும் நிலைமை ஏற்படுகிறது.

தவறான கணிப்பால் வாக்கிய பஞ்சாங்கப்படி சில நேரம் ஜாதகரின் லக்னமே மாறி விடுகிறது. இது சாஸ்திர துரோகம். இதை மாற்ற அனைத்து ஜோதிடர்களும் துல்லியமான கிரக இருப்பை சொல்லும் திருக்கணித பஞ்சாங்கங்களை மட்டுமே பின்பற்றுவது நல்லது.

மற்ற மாநிலங்களில் வாக்கியமா? திருக்கணிதமா? எது நடைமுறையில் உள்ளது?

கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் இருக்கும் வான சாஸ்திர நிபுணர்கள், பஞ்சாங்க கணிதர்கள் ஆந்திர மாநில திருப்பதியில் ஒன்று கூடி இனி இந்தியாவில் திருக்கணித அடிப்படையில் மட்டும்தான் பஞ்சாங்கங்களை வெளியிட வேண்டும். திருக்கணிதமே சரியானது மற்றும் துல்லியமானது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதையொட்டி இப்போது தமிழ்நாட்டை தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் திருக்கணித முறை மட்டுமே பின்பற்றப்படுகிறது. உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தவறு என்று தெரிந்தும் வாக்கிய பஞ்சாங்கங்கள் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நமது பக்கத்து மாநிலங்களான கேரளத்திலும், ஆந்திரத்திலும் கூட திருக்கணித முறைப்படிதான் கோவில் திருவிழாக்கள், ராகு-கேது, குரு, சனி ஆகிய பெயர்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தை கோவில்களில் பின்பற்றும் முறை தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது.

ஜன.27, 2017 மாலைமலரில் வெளியான கட்டுரை!

நமக்கு அறியத் தந்தவர் நமது வகுப்பறை மாணவரான ஆனந்தமுருகள்
பத்திரிக்கைக்கும், அறியத்தந்த மாணவருக்கும் நமது நன்றி உரித்தாகுக!
----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

 1. அனுபவத்தில் கண்டது, திருக்கணித பஞ்சாங்கமே சரி போல தோன்றுகிறது.

  ReplyDelete
 2. தெளிவான அருமையான
  விரிவான விளக்கம்
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அய்யா வணக்கம்.
  இந்த தைபூச திருநாளில் முருகப் பெருமானின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
  "செய்வன திருந்தச் செய்".
  பணக்காரர் ஒருவர் சிலை ஒன்றை வாங்க சிற்பியை அணுகினார். அப்போது, சிற்பி கோபுரத்தின் நான்காவது தளத்தில் வைப்பதற்காக அம்மன் சிலை வடித்துக் கொண்டிருந்தார். அந்த சிலையைப் போலவே, மற்றொரு அம்மன் சிலையும் அங்கிருந்ததைப் பணக்காரர் கவனித்தார்.

  “ஒரே கோபுரத்திற்கு 2 அம்மன் சிலைகள் செய்கிறீர்களே…ஏன்?” என்று கேட்டார் பணக்காரர்.

  “ஐயா! கவனக்குறைவால் முதலில் செய்த சிலை உடைந்து விட்டது. எனவே இன்னொன்றைச் செய்கிறேன்,” என்றார் சிற்பி.
  இந்தச் சிலையின் மூக்கில் சிறு கீறல் தானே விழுந்திருக்கிறது! நான்காவது கோபுரத்தில் வைக்கப்போகும் இதை யார் கவனிக்கப் போகிறார்கள். இதையே வைத்து விட வேண்டியது தானே!” என்றார் பணக்காரர்.

  அதற்கு சிற்பி, “மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் நான் இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், இது கண்ணில் பட்டு என் மனசாட்சி உறுத்துமே,” என்றார் சிற்பி.

  நீதி:

  எந்தத் தொழிலாயினும் அதை மனசாட்சிக்கு விரோதமின்றி திருப்தியுடன் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல! ஏமாற்றவும் கூடாது...
  காலத்தினால் நடநத தவறை சரி செய்து
  கொண்டால் நல்லதே. நன்றி.

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா,விளக்கம் நன்று.திருக்கணித த்திலும் ஒவ்வொரு மென்பொருளிலும் தசாசந்திப்பில் கிரகநிலைகள் மாறுகின்றனவே.
  நன்றி.

  ReplyDelete
 5. Good article Sir. Thank you for sharing. Previously once your goodself has written 'B V Raman follows Vakya pachangam.So better to follow vakay '

  ReplyDelete
 6. இது ஆதித்ய குருஜி எழுதிய கட்டுரை போல் தெரிகிறது. மிகவும் அருமையாக பல ஆர்டிகிள்ஸ் இவரது blog ல் share செய்து இருக்கிறார். முக்கியமாக இவை எல்லாரும் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் கட்டணம் எதுவும் இல்லாமல் தந்துள்ளார். இவற்றில் பல மாலை மலரில் வந்தாலும் அவற்றை தொகுத்து blog இல் வெளியிட்டுள்ளார்.

  http://adhithyaguruji.blogspot.com/
  http://www.adityaguruji.in/

  இது போன்ற மேலும் பல கட்டுரைகளை படிக்க விரும்புவோர்க்கு இவரது blog ஐ ஷேர் செய்கிறேன்

  நன்றி!

  ReplyDelete
 7. சோதிட நோக்கம் பலன் நடைபெற வேண்டும்.கணிதம் தவறலாம்.பலன்கள் தவறக்கூடாது. ஒன்றும் ஒன்றும் கணிதப்படி இரண்டு.வாக்கியப்படி அது மூன்று.

  ReplyDelete
 8. ////Blogger thozhar pandian said...
  அனுபவத்தில் கண்டது, திருக்கணித பஞ்சாங்கமே சரி போல தோன்றுகிறது./////

  உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி தோழரே!

  ReplyDelete
 9. ////Blogger Ramani S said...
  தெளிவான அருமையான
  விரிவான விளக்கம்
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்//////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 10. ///Blogger venkatesh r said...
  அய்யா வணக்கம்.
  இந்த தைபூச திருநாளில் முருகப் பெருமானின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
  "செய்வன திருந்தச் செய்".
  பணக்காரர் ஒருவர் சிலை ஒன்றை வாங்க சிற்பியை அணுகினார். அப்போது, சிற்பி கோபுரத்தின் நான்காவது தளத்தில் வைப்பதற்காக அம்மன் சிலை வடித்துக் கொண்டிருந்தார். அந்த சிலையைப் போலவே, மற்றொரு அம்மன் சிலையும் அங்கிருந்ததைப் பணக்காரர் கவனித்தார்.
  “ஒரே கோபுரத்திற்கு 2 அம்மன் சிலைகள் செய்கிறீர்களே…ஏன்?” என்று கேட்டார் பணக்காரர்.
  “ஐயா! கவனக்குறைவால் முதலில் செய்த சிலை உடைந்து விட்டது. எனவே இன்னொன்றைச் செய்கிறேன்,” என்றார் சிற்பி.
  இந்தச் சிலையின் மூக்கில் சிறு கீறல் தானே விழுந்திருக்கிறது! நான்காவது கோபுரத்தில் வைக்கப்போகும் இதை யார் கவனிக்கப் போகிறார்கள். இதையே வைத்து விட வேண்டியது தானே!” என்றார் பணக்காரர்.
  அதற்கு சிற்பி, “மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் நான் இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், இது கண்ணில் பட்டு என் மனசாட்சி உறுத்துமே,” என்றார் சிற்பி.
  நீதி:
  எந்தத் தொழிலாயினும் அதை மனசாட்சிக்கு விரோதமின்றி திருப்தியுடன் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல! ஏமாற்றவும் கூடாது...
  காலத்தினால் நடநத தவறை சரி செய்து
  கொண்டால் நல்லதே. நன்றி./////

  உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 11. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,விளக்கம் நன்று.திருக்கணிதத்திலும் ஒவ்வொரு மென்பொருளிலும் தசாசந்திப்பில் கிரகநிலைகள் மாறுகின்றனவே.
  நன்றி.//////

  தசா சந்திப்புப் பிறப்புக்களுக்கு இந்தச் சிரமம் தவிர்க்க முடியாதது நண்பரே!

  ReplyDelete
 12. ////Blogger kmr.krishnan said...
  Good article Sir. Thank you for sharing. Previously once your goodself has written 'B V Raman follows Vakya pachangam.So better to follow vakay//////

  அந்தக் காலத்தில் எனது ஜாதகத்தைக் கட்டணம் வாங்கிக் கொண்டு பி.வி.ராமன்தான் கணித்துக் கொடுத்தார். அது என் முன்னோர்கள் வீட்டில் எழுதி வைத்துள்ள ஜாதகத்துடன் ஒத்துப் போனது. '

  ReplyDelete
 13. ////Blogger வேப்பிலை said...
  Hats off!!
  Jr. Vaathiaar./////

  யாரைச் சொல்கிறீர்கள்?

  ReplyDelete
 14. ////OpenID guest2015 said...
  இது ஆதித்ய குருஜி எழுதிய கட்டுரை போல் தெரிகிறது. மிகவும் அருமையாக பல ஆர்டிகிள்ஸ் இவரது blog ல் share செய்து இருக்கிறார். முக்கியமாக இவை எல்லாரும் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் கட்டணம் எதுவும் இல்லாமல் தந்துள்ளார். இவற்றில் பல மாலை மலரில் வந்தாலும் அவற்றை தொகுத்து blog இல் வெளியிட்டுள்ளார்.
  http://adhithyaguruji.blogspot.com/
  http://www.adityaguruji.in/
  இது போன்ற மேலும் பல கட்டுரைகளை படிக்க விரும்புவோர்க்கு இவரது blog ஐ ஷேர் செய்கிறேன்
  நன்றி!/////

  நல்லது. மேலதிகத் தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 15. /////Blogger healthyworld said...
  சோதிட நோக்கம் பலன் நடைபெற வேண்டும்.கணிதம் தவறலாம்.பலன்கள் தவறக்கூடாது. ஒன்றும் ஒன்றும் கணிதப்படி இரண்டு.வாக்கியப்படி அது மூன்று.////

  உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com