மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.2.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: மகிழ்ச்சி இல்லாத மனிதர்களும் மனுஷிகளும்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: மகிழ்ச்சி இல்லாத மனிதர்களும் மனுஷிகளும்!

Denial of happiness - மகிழ்ச்சி இல்லாத மனிதர்களும் மனுஷிகளும்!!!

நம் கிராமங்களில் சொல்வார்கள்: “நாயை வைக்கற்போரில் கட்டிவைத்தால், அதுவும் திங்காது. மற்ற ஜீவராசிகளையும் திங்கவிடாது!”

அதுபோல சில மனிதர்கள், மனுஷிகள் உள்ளார்கள். அவர்களும் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள்.. அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷமாக இருக்க விடமாட்டார்கள்.

எப்போதும் எதையோ பறி கொடுத்தவர்கள் போல இருப்பார்கள்.
உம்’ மென்று இருப்பார்கள். சிடு சிடுவென்று எரிந்து விழுவார்கள்.
யாரையும் பக்கத்தில் அண்டவிட மாட்டார்கள். எதையும் ரசிக்கும் மனப்பான்மை இருக்காது. எதிலும் positive thinking இருக்காது.

மொத்தத்தில் மகிழ்ச்சியை அறியாத அதிசயப் பிறவிகளாக இருப்பார்கள். தனிமை விரும்பிகளாக இருப்பார்கள்.

அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தால் என்ன ஆகும். பெண்ணாக இருந்தால், கணவனையும், ஆணாக இருந்தால் மனைவியையும் ஆட்டி
வைத்துவிடுவார்கள்.

அவர்களுடைய திருமணவாழ்வு மகிழ்ச்சியில்லாத திருமண வாழ்வாக இருக்கும்.

அதற்கு என்ன காரணம்?

எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
1. துலா லக்கின ஜாதகம். லக்கினத்தில் ராகு. அத்துடன் 6ம் அதிபதி குரு.
2. லக்கினாதிபதி சுக்கிரன் பகைவீட்டில், அதுவும் 12ஆம் அதிபதி புதனுடன் சேர்க்கை
3. லாபாதிபதி சூரியன் 12ல்
4. லக்கினத்தில் ராகு & 6ம் அதிபதி குரு. குணக்கேட்டைக் கொடுக்கும்
5. இரண்டாம் அதிபதி செவ்வாய், எட்டாம் வீட்டில் இருக்கிறார். சுபக்கிரகங்களின் பார்வையின்றி. எட்டாம் வீடு தீய வீடு. அத்துடன் சனியின்
பார்வை.

Second lord in the 8th will not give happiness 
from women to men and from men to women!

உங்கள் மொழியில் சொன்னால், எட்டாம் வீட்டில் அமரும் 2ஆம் அதிபதி பெண்ணால் ஏற்படும் மகிழ்ச்சியை ஆணுக்கும், ஆணால் ஏற்படும்
மகிழ்ச்சியைப் பெண்ணிற்கும் கொடுக்கமாட்டார்!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. கிட்டத்தட்ட இதே ஜாதகம் உள்ள ஒருவரை நான் அறிவேன். இதே துலா லக்கினம். லக்கினத்திலேயே ராகு. எட்டில் செவ்வாய்.7ல் கேது. சுக்கிரன் 12ம் அதிபதியுடன் கூடி 4ல் மகரத்தில்.4.5 அதிபதியும் யோககரகனுமான சனி 10ம் இடத்தில்.5ல் சூரியன். ஜாதகி பெண்.

    நல்ல வங்கி வேலை அமைந்தது.திருமணம் நடந்தது.ஆனால் திருமண வாழ்க்கையில் இன்பமில்லை. குழந்தைப்பேறு இல்லை.வேலை நிமித்தம் கணவன் ஒரு பக்கமும் மனைவி ஒரு பக்கமும் வாழும் நிலை.

    ReplyDelete
  2. Dear Sir, Mine is also like that. Dhanur lagna and Rasi. IInd Lord is in Kadaga Rasi with Sevvai...

    ReplyDelete
  3. ஐயா, நன்றி. பாதம் எளிதாக புரிந்தது.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,
    எனது சந்தேகம் புதன் பாக்கியதிபதியும் ஆயிற்றே பாக்யாதிபதி 11ல் நன்மைதானே? அத்துடன் பரிவர்தனையும் ஆகியுள்ளார். குரு லக்கினத்தில் இருந்தால் நல்லது என்று தங்கள் பாடத்தில் படித்துள்ளேன். 6ம் அதிபதியாக இருந்தாலும் சிறிது நன்மைகூட செய்யமாட்டாரா?
    நன்றி ஐயா

    ReplyDelete
  5. /////Blogger kmr.krishnan said...
    கிட்டத்தட்ட இதே ஜாதகம் உள்ள ஒருவரை நான் அறிவேன். இதே துலா லக்கினம். லக்கினத்திலேயே ராகு. எட்டில் செவ்வாய்.7ல் கேது. சுக்கிரன் 12ம் அதிபதியுடன் கூடி 4ல் மகரத்தில்.4.5 அதிபதியும் யோககரகனுமான சனி 10ம் இடத்தில்.5ல் சூரியன். ஜாதகி பெண்.
    நல்ல வங்கி வேலை அமைந்தது.திருமணம் நடந்தது.ஆனால் திருமண வாழ்க்கையில் இன்பமில்லை. குழந்தைப்பேறு இல்லை.வேலை நிமித்தம் கணவன் ஒரு பக்கமும் மனைவி ஒரு பக்கமும் வாழும் நிலை./////

    உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. /////Blogger MAHARAJAN said...
    Dear Sir, Mine is also like that. Dhanur lagna and Rasi. IInd Lord is in Kadaga Rasi with Sevvai...//////

    அப்படியா! தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger C Jeevanantham said...
    ஐயா, நன்றி. பாடம் எளிதாக புரிந்தது./////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  8. ////Blogger VM. Soosai Antony said...
    வணக்கம் ஐயா,
    எனது சந்தேகம் புதன் பாக்கியதிபதியும் ஆயிற்றே பாக்யாதிபதி 11ல் நன்மைதானே? அத்துடன் பரிவர்தனையும் ஆகியுள்ளார். குரு லக்கினத்தில் இருந்தால் நல்லது என்று தங்கள் பாடத்தில் படித்துள்ளேன். 6ம் அதிபதியாக இருந்தாலும் சிறிது நன்மைகூட செய்யமாட்டாரா?
    நன்றி ஐயா//////

    ஆறாம் அதிபதி வில்லன் என்று நிறையத் தடவை எழுதியுள்ளேனே சாமி! அத்துடன் இந்த ஜாதகத்திற்கு புதன் 12ற்கும் அதிபதி. லக்கினத்தில் 6ம் அதிபதி மற்றும் ராகு. அதையும் பாருங்கள். லக்கினம் கெட்டிருக்கிறது. நல்ல பலனை எப்படி அனுபவிக்க முடியும்?

    ReplyDelete
  9. வணக்கம் குருவே!
    இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்துள்ளேன் (ஆண்/பெண்).
    ஆனால் அவர்களின் ஜாதகப்பொருத்தம்
    இப்படிப்பட்டது என்பது அப்போது எனக்குத் தெரியாது!!!

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,2ம் அதிபதி 8ல் இருந்தாலே சிக்கல்.இந்த லக்னத்திற்க்கு 7ம் அதிபதியும் அவரே.ஆகையால் சிக்கலோ சிக்கல்.அலசல் சூப்பர்.நன்றி.

    ReplyDelete
  11. ///ஆறாம் அதிபதி வில்லன் என்று நிறையத் தடவை எழுதியுள்ளேனே சாமி! அத்துடன் இந்த ஜாதகத்திற்கு புதன் 12ற்கும் அதிபதி. லக்கினத்தில் 6ம் அதிபதி மற்றும் ராகு. அதையும் பாருங்கள். லக்கினம் கெட்டிருக்கிறது. நல்ல பலனை எப்படி அனுபவிக்க முடியும்?/////

    Dear sir,

    If the same 6th lord, is also the owner of some other good house, how we have to consider it.
    For example, for simma lagna, sani is both the owner of 6th & 7th house?

    ReplyDelete
  12. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்துள்ளேன் (ஆண்/பெண்).
    ஆனால் அவர்களின் ஜாதகப்பொருத்தம்
    இப்படிப்பட்டது என்பது அப்போது எனக்குத் தெரியாது!!!////

    அதனாலென்ன! இப்போது தெரிந்துகொண்டீர்கள் அல்லவா? அது போதும். நன்றி!!!!

    ReplyDelete
  13. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,2ம் அதிபதி 8ல் இருந்தாலே சிக்கல்.இந்த லக்னத்திற்க்கு 7ம் அதிபதியும் அவரே.ஆகையால் சிக்கலோ சிக்கல்.அலசல் சூப்பர்.நன்றி./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  14. //////Blogger Unknown said...
    ///ஆறாம் அதிபதி வில்லன் என்று நிறையத் தடவை எழுதியுள்ளேனே சாமி! அத்துடன் இந்த ஜாதகத்திற்கு புதன் 12ற்கும் அதிபதி. லக்கினத்தில் 6ம் அதிபதி மற்றும் ராகு. அதையும் பாருங்கள். லக்கினம் கெட்டிருக்கிறது. நல்ல பலனை எப்படி அனுபவிக்க முடியும்?/////
    Dear sir,
    If the same 6th lord, is also the owner of some other good house, how we have to consider it.
    For example, for simma lagna, sani is both the owner of 6th & 7th house?///////

    சிம்ம லக்கினத்திற்கு சனி பாவிதான்! ஆனால் 7ம் வீட்டிற்கு உரிய பலனை - மனைவியைக் கொடுக்க வேண்டியவனும் அவன்தான்!!!
    50/50 கணக்கு!!!

    ReplyDelete
  15. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    Very nice sir. Thank you./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com