மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.2.17

சில உளவியல் உண்மைகள்!


சில உளவியல் உண்மைகள்!

1. அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!

 பேச்சு -  உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!!

3   மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் ..

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்..

5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். .

6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்...
அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்....

 7. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

 8. நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்..

9. குழந்தைகளோடு பேசும்போது,  அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். .

10. உங்கள் பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.. ...

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள்.  நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.
 யாரும் சொன்னாலும் ரசித்தாலும்...தான்....   நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள்.  ...  உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்... இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..
 
3. உங்களால் எது முடியாது... உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்..,   அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள்...  எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை... என்பதே உண்மை....
 
5. உங்களுக்கு எதுவும் தெரியாது.... எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்...  இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..
 
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்....  உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்....

7. அழும் போது தனியாக அழுங்கள்...  நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்...!!!
 கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்...
 
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,.  நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....

படித்தேன்; பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

 1. வணக்கம் குருவே!
  " உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,. நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.."..
  இன்றைய தங்கள் பதிவை மிகவும்
  ரசித்தேன்.. மிக அழகாக பின்னப்பட்டுள்ளது..

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா
  சிறப்பான தகவல் நன்றி
  மூர்த்தி

  ReplyDelete
 3. ////Blogger siva kumar said...
  உண்மை ஐயா நன்றி////

  நல்லது. நன்றி சிவகுமார்!

  ReplyDelete
 4. ///Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  " உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,. நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.."..
  இன்றைய தங்கள் பதிவை மிகவும் ரசித்தேன்.. மிக அழகாக பின்னப்பட்டுள்ளது..////

  நல்லது. நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 5. //////Blogger moorthy krishnan said...
  வணக்கம் ஐயா
  சிறப்பான தகவல் நன்றி
  மூர்த்தி///////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 6. /////Blogger kmr.krishnan said...
  good posting Sir./////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!


  ReplyDelete
 7. ////Blogger Prakash Kumar said...
  Excellent One Sir.
  Thank you/////

  நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. /////Blogger selvaspk said...
  Good post. Thanks for sharing//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 9. //////Blogger Kannan L R said...
  Iyya vanakkam
  Very nice Iyya
  Kannan//////

  ல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. வணக்கம் ஐயா,எனக்கு மிகவும் பிடித்த வரிகள் "உங்களால் எது முடியாது... உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்.., அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்". அத்துடன் ஓர் இணைப்பு"பிறக்கும்போதே எல்லோரும் கற்றுக் கொண்டு வருவதில்லை.அவர்களால் முடியும் போது,முயன்றால் நம்மால் ஏன் முடியாது". நன்றி.

  ReplyDelete
 11. நலம் தரும் நற்சிந்தனைகள்!
  வளம் தரும் நல்லறிவுரைகள்!!

  ReplyDelete
 12. ///////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,எனக்கு மிகவும் பிடித்த வரிகள் "உங்களால் எது முடியாது... உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்.., அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்". அத்துடன் ஓர் இணைப்பு"பிறக்கும்போதே எல்லோரும் கற்றுக் கொண்டு வருவதில்லை.அவர்களால் முடியும் போது,முயன்றால் நம்மால் ஏன் முடியாது". நன்றி.//////

  உண்மைதான்.பிடித்த வரிகளைத் தெரிவித்த மேன்மைக்கு நன்றி ஆதித்தன்!

  ReplyDelete
 13. /////Blogger J Murugan said...
  நலம் தரும் நற்சிந்தனைகள்!
  வளம் தரும் நல்லறிவுரைகள்!!///////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com