செவ்வாய்க்கிழமை என்ன செய்ய வேண்டும்?
பழநிமலை முருகன் ஸ்ரீபாலதண்டாயுதபாணி சிலையின் பெருமைகள்:
1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம்.
2.ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.
3.இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
4.அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
5.இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.
6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
7.தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.
8.அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
9.இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது வருடம்.
10.அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்குப்பின்தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார்.
11.இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.
12. 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.
13. இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.
14.அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.
15.போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
16.கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் ... சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.
17.தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகதலிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.
18.பழனியில் இரண்டு மரகதலிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.
திருவாவினன்குடி சிறக்கும் குருபரா குமரா குழந்தை வேலாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா
ஏழைபங்காளா பரமேஸ்வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா.
ஸ்ரீ பழநி மலை முருகப் பெருமானுக்கு அரகரா.. அரகரா.. அரகரா.. அரோகரா..
இன்று செவ்வாய்க்கிழமை. முருகனுக்கு உகந்தநாள். இன்று இருக்கும் இடத்தில் இருந்து முருகனை நினைத்து வழிபடுங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும்!
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Respected Sir,
ReplyDeleteHappy morning... Vetri Vel Muruganukku arokara...
Have a holy day.
With kind regards,
Ravi-avn
வணக்கம் குருவே!
ReplyDeleteபல அரிய தகவல்களை அள்ளித் தநதுள்ளீர்! பல, நான் கேள்விப்படாதவை.குறிப்பாக, மரகதலிஙகம் பற்றியது.அடுத்தமுறை பழனி செல்லுங்கால் பார்ப்பேன்!
தங்கள் வாக்குப்படி இன்று பழனி தண்டாயுதபாணியை மனதில் நிறுத்நி அவன் அருள் வேண்டுகிறேன்,ஐயா! இவ்வழி காட்டும் எங்களுக்கும் ஐயன் அருள் பாலிக்கட்டும் என வேண்டுகிறேன்.
அரஹர அரஹர அரஹரோஹரா!
ஐயா வணக்கம்
ReplyDeleteபழனி தண்டாயுதபாணி கோயில் மரகதலிங்கம் இருப்பது தெரிந்து கொண்டேன்
நன்றி
கண்ணன்
படிக்கும்போது பழனிக்கு வந்ததுபோல் ஒரு உணர்வு. ராஜ அலங்காரம் அருமை. நன்றி ஐயா.
ReplyDeleteவெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
முருகா சரணம்...
அன்பு குருவே!,
ReplyDeleteபழநி ஆண்டவர் பற்றிய பதிவுக்கு நன்றி!. பழநிக்கு நானும் இந்த ஆண்டு சென்று பாலதண்டாயுதபானியை சந்திக்க ஆசை.!
ஓம் முருகா சரணம்.! ஓம் சண்முகா சரணம்.! ஓம் சரவணபவ!!
Nice information
ReplyDeleteமுருகா...
ReplyDeleteமுருகா ...
இதே போல்
ReplyDeleteஇப்படி மூலிகைகளால்
அமைந்த இன்னொரு
ஆலயம் (சிவன் கோயில் )
கொடுங்குன்றம்....
இதை சைவர்கள்
பூலோக கைலாசரம் என்று சொல்வார்கள்...
பூத்து வரும் மூவினை பாவம் நீக்கும்
அதி
அற்புத திருத்தலம்..
மூன்று அடுக்கு
மலை மேல் இருக்கும்
திருத்தலம்
வாய்ப்பு கிடைத்தால்
சென்று வாருங்கள்
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Vetri Vel Muruganukku arokara...
Have a holy day.
With kind regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
பல அரிய தகவல்களை அள்ளித் தநதுள்ளீர்! பல, நான் கேள்விப்படாதவை.குறிப்பாக, மரகதலிஙகம் பற்றியது.அடுத்தமுறை பழனி செல்லுங்கால் பார்ப்பேன்!
தங்கள் வாக்குப்படி இன்று பழனி தண்டாயுதபாணியை மனதில் நிறுத்நி அவன் அருள் வேண்டுகிறேன்,ஐயா! இவ்வழி காட்டும் எங்களுக்கும் ஐயன் அருள் பாலிக்கட்டும் என வேண்டுகிறேன்.
அரஹர அரஹர அரஹரோஹரா!////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!
/////Blogger lrk said...
ReplyDeleteஐயா வணக்கம்
பழனி தண்டாயுதபாணி கோயில் மரகதலிங்கம் இருப்பது தெரிந்து கொண்டேன்
நன்றி
கண்ணன்////
மகிழ்ச்சி. நன்றி கண்ணன்!
////Blogger mohan said...
ReplyDeleteபடிக்கும்போது பழனிக்கு வந்ததுபோல் ஒரு உணர்வு. ராஜ அலங்காரம் அருமை. நன்றி ஐயா.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
முருகா சரணம்...///
உங்களின் உணர்வுகள் வாழ்க! நன்றி மோகன்!
/////Blogger Selvam R said...
ReplyDeleteஅன்பு குருவே!,
பழநி ஆண்டவர் பற்றிய பதிவுக்கு நன்றி!. பழநிக்கு நானும் இந்த ஆண்டு சென்று பாலதண்டாயுதபாணியை சந்திக்க ஆசை.!
ஓம் முருகா சரணம்.! ஓம் சண்முகா சரணம்.! ஓம் சரவணபவ!!////
ஆஹா....சென்று, தரிசித்து வாருங்கள். நன்றி செல்வம்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteNice information///
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா...
முருகா ...////
வருவாய்
அருள்வாய்
குகனே!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஇதே போல்
இப்படி மூலிகைகளால்
அமைந்த இன்னொரு
ஆலயம் (சிவன் கோயில் )
கொடுங்குன்றம்....
இதை சைவர்கள்
பூலோக கைலாசரம் என்று சொல்வார்கள்...
பூத்து வரும் மூவினை பாவம் நீக்கும்
அதி
அற்புத திருத்தலம்..
மூன்று அடுக்கு
மலை மேல் இருக்கும்
திருத்தலம்
வாய்ப்பு கிடைத்தால்
சென்று வாருங்கள் /////
அத்திருத்தலம் எந்த மாவட்டத்தில் இருக்கிறது என்பதைச் சொல்லவில்லையே நீங்கள்!
Arokara. Arokara.
ReplyDeleteஅறியாத அரிய பல விடயங்கள் அறிந்து கொண்டேன் நண்பரே மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteதேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
எம்பெருமான் முருகன் குறித்து நிறைய அறிந்து கொண்டேன் ஐயா...
ReplyDeleteவணக்கம் ஐயா,உங்கள் வாக்குப்படியே முருகனை நினைத்து வழிபட்டேன்.நன்றி.
ReplyDelete////Blogger Karthikraja K said...
ReplyDeleteArokara. Arokara./////
கந்தனுக்கு அரோகரா!
கடம்பனுக்கு அரோகரா!
கதிர்வேலனுக்கு அரோகரா!
////Blogger KILLERGEE Devakottai said...
ReplyDeleteஅறியாத அரிய பல விடயங்கள் அறிந்து கொண்டேன் நண்பரே மிக்க மகிழ்ச்சி
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி////
என்ன பெயரடா சாமி? பயமுறுத்துகிறீர்களே!
/////Blogger பரிவை சே.குமார் said...
ReplyDeleteஎம்பெருமான் முருகன் குறித்து நிறைய அறிந்து கொண்டேன் ஐயா...////
நல்லது. நன்றி நண்பரே!!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,உங்கள் வாக்குப்படியே முருகனை நினைத்து வழிபட்டேன்.நன்றி./////
எல்லாம் நல்லதே நடக்கும். நன்றி ஆதித்தன்!