மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.7.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.112: கேள்வி பிறந்தது இன்று!!!

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.112: கேள்வி பிறந்தது இன்று!!!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:



இது ஒரு அம்மணியின் ஜாதகம்.

ஜாதகியின் திருமண வாழ்க்கையைப் பற்றி உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.

உப கேள்விகள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் கேட்டால் நானே உங்களுக்குக் க்ளூ கொடுத்தது போலாகிவிடும். ஆகவே இன்று ஒரே ஒரு பிரதான கேள்வி மட்டும்தான். நீங்கள் பதிலை விலாவரியாக (write in detail) எழுதுங்கள்

சரியான விடை. 24-7-2016 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. ஜாதகி 19 நவம்பர் 1966 அன்று காலை 40 வினாடிக்குப்பிறந்தவர்.பிறந்த இடம்
    சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    1. 7ம் இடத்துக்குரியவன் சனி ஏழிலேயே இருப்பது தாமத்த திருமணதைக்
    குறிக்கிறது.சனி வக்கிரமும் அடைந்திருப்பது மணவாழ்க்கைக்கு இடைஞ்சல்.

    2.களத்திர‌காரகன் சுக்கிரன் சூரியனால் அஸ்தஙதம் அடைந்திருப்பது கேடு.ஆனால் உச்ச குரு சுக்கிரனைப் பார்ப்பது நன்மை.லக்கினாதிபதியான சூரியனுக்கும் குருபார்வை.இதுவும் நன்மை.

    3. குடும்ப ஸ்தானதிபதி புதன் கேதுவுடன் இணைந்தது சூரியனால் அஸ்தங்கதம் ஆனதும் நன்மையல்ல்.புதன் கேது சேர்க்கை காதல் திருமணத்தைக் குறிக்கிறது.

    4.களத்திரகாரகன் சுக்கிரனுக்கு செவ்வாய் பார்வை, சனியின் பார்வை,குருவின் பார்வை, சூரியனின் சம்பந்தம்.செவ்வாய் லக்கினத்திற்கு நன்மை செய்யும் யோககாரகர்,குரு 5, 8க்கு உடையவர், சூரியன் லக்கினாதிபதி, சனி 6, 7க்கு உடையவர்.எனவே லக்கினத்திற்கு நல்ல ஸ்தானங்களுக்கு உடையவர்களின் பார்வை சுக்கிரனுக்கு இருப்பதால் திருமண வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்.

    5, ராகுதசா முடிந்து குருதசா குரு புக்தியில் 31 வயதில் திருமணம் நடந்திருக்கும்.

    6. எட்டாம் இடம் சனி ராகுவால் சூழ்ந்திருப்பது மாங்க‌லயத்திற்கு நன்மையல்ல. ஆனால் 8ம் இடத்திற்கு உரியவனான குருவே உச்சமாக இருந்து
    எட்டாம் இடத்தினைப் பார்ப்பது மாங்க‌ல்யத்தைக் காக்கும்.குரு சுயமாக 6 பரல் கொண்டுள்ளார். எனவே பலமான குருதான்.

    7. கஜ கேசரி யோகம் உடைய‌வர். எனவே எந்த கஷ்டமும் நிவர்த்தியாகி விடும்.

    8. சச மஹாயோகம் உடையவர். சனி கேந்திரத்தில். எனவே மலைபோல் வந்த கஷ்டம் எல்லாம் பனி போல் மறைந்துவிடும்.

    புதிராக இருந்தலும் ஜாதகத்தின் எதிர்மறைகளைக் கூடியவரை கூறாமல் இருக்க முயற்சி செய்வது என் பண்பு.

    ReplyDelete
  2. அம்மணி 1966-நவம்பர் 18 நள்ளிரவில் (பிறந்த ஊரைப் பொறுத்து, அது 19-ஆம் தேதி ஆகவும் இருக்கலாம்) திருவோண தினத்தில் பிறந்தவர்.

    பத்து வயதில் வந்த ராஹு தசை நல்ல தசை. சுமார் 23 வயதில் சுக்கிர புத்தியில் காதல் திருமணம் (லக்னாதிபனுடன் சேர்ந்த களத்திர காரகனைப் பார்க்கும் செவ்வாயினால்). குரு பார்வையும் திருமணத்திற்கு உதவியது.

    ஆனால் ஏழில் நிற்கும் வக்கிர சனியும், அவரைப் பார்க்கும் செவ்வாயும் திருமண வாழ்வை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். இன்னொரு காரணம் மாங்கல்ய ஸ்தானாதிபதி பன்னிரண்டில் - உச்சமானாலும் - மறைந்துவிட்டது என்பதால்.

    ஏழாம் இடத்தில் இருக்கும் சனியை, இயற்கையில் பாவியான செவ்வாய் பார்ப்பதால் மறுமணத்திற்கு இடமுண்டு. லக்ன மாந்தியாலும், லக்னத்தில் அமர்ந்த செவ்வாயாலும் கோபமும் பிடிவாதமும் மிகுந்திருக்கும் - அது அவ்வப்போது திருமண வாழ்வில் பிரச்சினைகள் கொடுக்கும்.

    குடும்ப ஸ்தானாதிபதி மூன்றில் மறைவு. சுக ஸ்தானத்தில் சனியின் பார்வை - இவையெல்லாம் அமைதியான வாழ்விற்கு அனுகூலமாக இல்லை.

    ReplyDelete
  3. Quiz 112 Answer:
    Born on 19th Nov 1966
    Simma lagnam.
    Lagnathil Villan Mandi - Lady won’t give respect to anyone and will be dominant and arrogant.
    Lagnathipathi in 4th house (Kendra) – Sani parvai
    Yogathipathi Sevvai in lagnathil – Sani parvai
    Malefic in three Kendra (1st, 4th and 7th )
    7th lord Sani Vakram in Kendra in 7th house (Own house) with Sevvai parvai
    Kalathirakarakan Sukran Asthangam
    Kudumbasthanathipathi Budan Vakram and Rahu / Kethu pidiyil
    2nd house in papa karthari yogathil (Sevaai and Kethu)
    Guru Ucham but he is 8th and 5th lord and placed in 12th house. No use
    12th house owner Chandran (Mano karagan in 6th house)
    Saniyin 3rd paarvai on Rahu.
    Rahu dasa was from March 1977 to 1995 – The prime period of family life
    Lagna pakaivarkal Sani, Rahu spoiled the native’s character and spoiled the family life of the native. She would have had a miserable life. The next Guru dasa though given some relief would not helped much as Guru was in 12th house.
    As I am going outstation for the next two days have completed the above in a hurry with a hope that the above will be in order!
    Thanks,
    K R Ananthakrishnan - Chennai

    ReplyDelete

  4. அன்பு ஆசிரியரே,
    நான் உங்கள் மாணவனாக இந்த ஆண்டுல் தான் சேர்ந்தேன். குரு மகாதசா ஆரம்பத்த பின் நாட்டம் வந்தது என்று நினைக்கிறேன். இந்த குறைந்த ஜோதிட அறிவை வைத்து எனக்த தெரிந்தவை இங்கு குறிப்பிட்டுள்ளேன். தவறை திரித்தி முதல் மாணவனாக்குமாறு கை கூப்பி வேண்டுகிறேன்.. குருவே!

    என்னுடைய லக்னமும் சிம்மம். இவருக்கு, சிம்ம‌ லக்னத்தில் மாந்தி + செவ்வாய் ‍= செவ்வாய் ரத்ததிற்கு அதிபதி, சுறுசுறுப்பாக இருப்பவர்கள். ரத்தம் ஓட்டம் அதிகம் உள்ளதாலும், மாந்தி இருப்பதாலும் முன்கோபம் அடிக்கடி வரும். எதிரியை எரித்து விடுவது போல் எண்ணம் தோன்றும்.
    செவ்வாய் 4ம் அதிபதி , சூரியன் (லக்னாதிபதி) பரிவர்த்தனை, சிறந்த நிலபுலங்களுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் மாந்தி வில்லன் இருப்பதால், அம்மான்( தாய் மாமா)விடம் சன்டை அல்லது விரோதம். ஆனால் 4ம் இடத்தை பார்ப்பதால், தாய்க்கும், தாய் மாமனுக்கும் பாதிப்பு குறைவு. குரு திசா, புத்திகளில் நன்மை உண்டு. தாய் (சந்திரன்) மகரத்தில் சமம், ஆகையால் தாய்க்கு பிரச்சனை குறைவு தான்.

    களத்திர்கார்ன் (சுக்கிரனை) சூரியனிடம் அஸ்தமாகி விட்டார். ஆசிரியர் வேண்டுமென்றே பாகை கொடுக்க வில்லை. ஆனால் நவாம்சத்தில் இதன் விளக்கம் தெரிகிறது. சுக்கிரனுக்கும், சூரியனுக்கும் இடையே 6' பாகை தான். மேலும் களத்திரகா னை (சுக்கிரனை) சனி 10 பார்வையால் பார்க்கிறார். இது சந்நியாச யோகம். நவாம்சத்திலும் சனி சுக்கிரனை 3ம் பார்வை பார்க்கிறார். நவாம்சத்தில் கேது, குரு பார்வை. ஆண்மிகத்தில் ஈடுபாடு உண்டு. துரவரம் மேற்கொண்டு இருப்பார். ஆனால், முதலில் காதல் விழ்ந்துருப்பார் (நவாம்சத்திலும் ராசியிலும், செவ்வாய் சனி பார்வை). குரு, சந்திரன் பார்வை ‍ கெஜகேசரி யோகம் குரு மகா திசாவில். புதன் + கேது சேர்கை. மொத்ததில் இவர் ஆண்மிக அறிவு கொண்ட, புதழ் பெற்ற சந்நியாசி (ஆண்மிக குருவாக இருக்க வாய்ப்பு)

    9ல் ராகு தந்தைக்கு தோஷம், ஆனால் சூரியன் நட்பு வீட்டில், பாதிப்பு குறைவு. வெளி நாடு செல்லும் வாய்ப்பு அல்லது தொடர்பு இருக்கும்.

    சூரியன் சனி பார்க்கிறார் ‍= கண் பிரச்சனை, கண்ணாடி அணிந்திருப்பார்.

    புதிர்(ஜோதிட கோள்விக்கு) நன்றி! ஆசிரியரே!. நான் பரிட்சையில் தேறிவிட்டனா?

    மாணவன், பன்னீர்செல்வம்

    ReplyDelete
  5. ஜோதிடப் புதிர் எண்.112
    ஐயா,

    1. இவர் 19.11.1966 ல் பிறந்தவர்.
    2. சுக்கிரனை குரு பார்பதால் இவருக்கு திருமனம் ஆகி இருக்கும்.
    3. 5 ஆம் அதிபதி குரு உச்சம் மற்றும் குரு அமர்த இடம் 6 பரல்
    அதனால் குழந்தை இருக்கும்.
    4. லக்கனத்தில் செவ்வாய் மற்றும் மாந்தி இருப்பதாலும், லக்கனத்தை சனி
    பார்பதால் குணகேடான பெணணாக இருப்பார்

    மு.சாந்தி

    ReplyDelete
  6. QUIZ 112 வணக்கம்.
    19/11/1966 ஆம் ஆண்டு இரவு 12.05.24 மணிக்கு திருவோணம் நட்சத்திரத்தில் சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி. சிம்ம லக்கினம் (31 பரல்) , யோகக்காரர்கள் : சூரியன், குரு செவ்வாய் ராஜ யோகம் : செவ்வாய் லக்கினத்தில் இருந்தால் .
    இந்த ஜாதகத்த்தில் , குரு உச்சம் , சனி வக்கிரம் , புதன், வக்கிரம் , சுக்கிரன் அஸ்தங்கம் .

    சிம்ம லக்கினம் லக்கினத்தில் செவ்வாய் ராஜ யோகத்தை கொடுப்பவர் . சனியின் 7 ம் பார்வை லக்கினத்தின் மீதும் இருக்கிறது.லக்கினத்தில் மாந்தி இருப்பதால் மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது

    லக்கினாதிபதி சூரியன் (6 பரல்) 4ம் வீட்டில் கேந்திரத்தில் அமர்ந்து உச்சமான குருவின் 5ம் பார்வையில் உள்ளதால் ஜாதகிக்கு வாழ்க்கை செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

    சுக்கிரன் (6 பரல்) சூரியனுடன் சேர்ந்து 4 ம் வீட்டில் இருப்பதால் சுக்கிரன் அஸ்தங்கம் ஆகிவிட்டார். இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் பெரிய நன்மைகளைச் செய்ய மாட்டான்.

    7 ம் வீட்டில் சனி (1 பரல்) 6 ம் வீட்டு அதிபதி 7 ல் அமர்ந்தால்,தாய்வழி மாமா மகனையோ அல்லது தந்தை வழி அத்தை மகனையோ திருமணம் செய்துகொள்வார்.

    7 ல் சனி இருந்து, தீய பார்வைகள் பெற்றிருந்தால்,ஜாதகி விவாகரத்துப் பெற்றவளாக இருப்பாள் கணவன் இளம் வயதிலேயே இறந்து போயிருப்பான்.

    வாத்தியாரின் குறிப்பு : ஏழாம் வீட்டில் தீய கிரகம் அமர்ந்திருந்தாலும் அல்லது ஏழாம் வீட்டைத் தீய கிரகம் பார்த்தாலும் திருமணம் பிரிவில்தான் முடியும்.

    இந்த ஜாதகத்தில் 7 ல் சனி தீய கிரகம், மேலும், நவாம்சத்தில் மிதுன ராசியில் சந்திரனும், சனியும் சேர்ந்து இருப்பதால் புணர்ப்பு தோஷம். திருமணம் பிரிவில்தான் முடியும்.

    2 ம் வீட்டு அதிபதி புதன் 3 ம் வீட்டில் கேதுவுடன் கூட்டு , ராகுவின் 7 ம் பார்வை இருப்பதால் குடும்ப வாழ்க்கை அமையவில்லை

    ஜாதகிக்கு முக்கியமான பாக்கியஸ்தானத்தில் ராகு, சனியின் 3ம் பார்வை அதன் மீது , சனியின் 7 ம் பார்வை பாக்கியஸ்தான அதிபதி செவ்வாய்யின் மீது இருப்பதாலும் அம்மணிக்கு பாக்கியம் இல்லாமல் போய்விட்டது.

    5 ம் வீட்டு அதிபதி குரு 12 ல் மறைவுஸ்தானத்தில் அமர்ந்துவிட்டார் .அவர் பார்வை அந்த வீட்டின் மீதும் இல்லை . அதனால் குழந்தை பாக்கியமும் இல்லை.

    8 ம் வீட்டு அதிபதியும் குருவே ஆகையால் அவர் அந்த கடமையும் செய்தாக வேண்டும்

    இள வயதிலே 10 வயதில் செவ்வாய் தசை முடிந்து விடுகிறது. 10 முதல் 28 வயது வரை ராகு தசை . மிகவும் வாழ்க்கையில் கஷ்ட்டப்பட்டு இருப்பார்
    அடுத்து வந்த குரு தசையில் (28 முதல் 44 வயது வரை ) குரு தசை சுக்கிர புகுத்தியில் 37 வயதில் தாமதமான திருமணம் ஏற்பட்டது.

    குருவின் 5 ம் பார்வை லக்கினாதிபதியின் மீதும், சுக்கிரனின் மீதும், ராஜ யோக செவ்வாயின் 4 ம் பார்வை லக்கினாதிபதியின் மீதும் இருப்பதால், யோகாரர்கள் குரு, சூரியன், செவ்வாய் மூவரும் சேர்ந்து திருமணத்தை நடத்தி வைத்தார்கள். செவ்வாயும் சூரியனும் பரிவர்த்தனை . பரிவர்த்தனையான கிரகம் உச்சகிரகத்திற்கு சமானம். சனியின் 10 ம் பார்வை சூரியனின் மீது இருந்தாலும் உச்சமான குரு தன் பார்வை பலத்தால் சனியின் பார்வையை நிராகரித்து விட்டார்.

    குரு தசை சந்திர புக்தியில் திருமணம் பிரிவில் முடிந்தது . குருவின் 7 ம் பார்வை மர ராசியில் சந்திரனின் மீது அது சனியின் வீடு. நவாம்சத்தில் மிதுன ராசியில் சந்திரனும், சனியும் சேர்ந்து இருப்பதால் புணர்ப்பு தோஷம். திருமணம் பிரிவில்தான் முடியும்.

    மூன்றில் புதன் இருந்தால் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும்.இந்த அமைப்பின் மேல் ராகு அல்லது கேதுவின் பார்வை பட்டால், ஜாதகனுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம்உண்டு.

    5 ம் வீட்டு அதிபதி 12 ல் இருந்தால், எதிலும் பற்றின்மை உண்டாகும், வேதாந்தியாகிவிடுவார். பல இடங்களிலும் அலைந்து திரிபவர்.


    ReplyDelete
  7. Sir,
    Sanibagvan in seventh house, so late marriage is possible. Lagnathypathy and 9th house owner parivarthanai. So marriage life will be good.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,யோக காரன் செவ் லக்னத்தில்.யோக ஜாதகம்.உடன் மாந்தி.கோபம் மற்றும் பிடிவாதமானவர்.7ல் சனி ஆட்சி.7ம் இட சனிக்கு யோகாதிபதி செவ் பார்வை இருந்தாலும்,6,7ம்அதிபதி சனியின் 7ம்பார்வை லக்னத்திற்கும்,செவ்வாய்க்கும் இருப்பதால் யோகாதிபதி பலம் குறைந்துள்ளார்.இந்த ஜாதகத்தில் திருமணத்தை நடத்தி வைக்க அதிகாரமுள்ளவர்கள் முறையே,7ம் அதிபதி சனி,களத்திரகாரகன் சுக்கிரன்,2ம் அதிபதி புதன்,9ம் அதிபதி செவ் மற்றும் சந்திரன ஆவர்.இதில் சந்திரன் விரையாதிபதி மற்றும் குழந்தை பருவத்து தசா.அடுத்து வந்த சூரியதசாவிற்கும் அதிகாரம் இல்லை மற்றும் குழந்தை பருவம்.அடுத்து பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்த ராகு,செவ்வாய் வீட்டில் பகை பெறுகிறார்.இருந்தாலும் 7ம் அதிபதி சனி மற்றும் 2ம் அதிபதி புதன் பார்வை இருப்பதால் ராகு தசாவில் திருமணம் நடக்குமா என்றால்,7ல் அமர்ந்த சனி தாமத திருமணத்தை கொடுப்பதால் வாய்ப்பில்லை.அடுத்து வந்த குருதசாவிலும் அவருக்கு அதிகாரம் இல்லை மேலும் அவர் விரையத்தில் அமர்ந்துள்ளார்.அடுத்து வந்த 7ம் அதிபதி தசாவில் 44வயதிற்க்கு மேலானதால் திருமணம் நடக்க வாய்ப்பில்லை.நன்றி.

    ReplyDelete
  9. மதிப்பிர்குறிய சுப்பையா வாத்தியார் அவர்கலுக்கு,
    முதர்கண் என் வணக்கத்தை தெரிவுத்துக்கொள்றேன்,

    நான் தங்களது http://classroom2007.blogspot.in/ என்ற தளத்தை Google ல் சர்ச் செய்யும்போது கிடைத்தது அது நான் எதிபார்த்து கொண்டிருந்த ஜோதிடம் பாடம் அருமையாக உள்ளது. அதன் தொகுப்பு புத்தக வடிவில் உள்ளதா அதனை எங்கு நான் வாங்குவது மேலும் எனது ராசி,மிதுனம்,லக்கனம் மகரம், நட்டசத்திரம் மிருகஷிருசம் 4ம் பாதம், date of birth=11-09-1982 4.15p.m என்னால் ஜோதிடம் கற்க முடியுமா என்புத்திக்கு அது ஏறுமா இது இக்கலை நான் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். மேலும்
    ஒரு சங்கடமான கேள்வி எனது தந்தை சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் அவருக்கு ஜோதிடம் கொஞ்சம் தெரியும் அவர் முழுமையாக தெரிந்து கொள்ள முற்படவில்லை அதற்க்கு அவர் கூறிய காரணம் ஜோதிடம் பலன் சொல்பவர் குடும்பம் அவ்வளவு சிறப்பாக இருக்கது நொடிந்து காணப்படுவார்கள் என்பது அவர் பதில் இது உண்மையா

    உங்கள் பதிலுக்காக
    ஆவலுடன்

    G. Rajaraman
    கும்பகோணம்

    ReplyDelete
  10. ஆசிரியர் ஐயா, வணக்கம்.

    1) 19 நவம்பர் 1966, அதிகாலை 12.02 மணிக்குப் பிறந்தவர்.

    2) மகர ராசி, திருவோண நட்சத்திரம்.

    3) குடும்ப   ஸ்தானாதிபதியும் புத்திகாரனுமான புதன் 3ல் மறைவு.

    4) புத்திரகாரகன் குரு 12 ல் மறைவு.

    5) சனி லக்கனத்தையும், சுக்கிரனையும் 7 ஆம், 10 ஆம் பார்வையாக பார்க்கிறார்.

    6) களத்திர காரகன் சுக்கிரன் அஸ்தமனம். மேலும் செவ்வாயின் 4 ஆம் பார்வை வேறு.

    7) நவாம்சத்தில் புனர்வு தோசம்.

    8) உச்சம் பெற்ற குரு சந்திரனைப்பார்ப்பதால். , கஜகேசரி யோகம் உண்டு.

    9) எனவே குரு திசை , சனிபுத்தி, சுக்கிரன் அந்தரத்தில் 1998ல் திருமணம் நடந்திருக்கும்.

    10) ஏழில் சனி, கணவருக்கு ஆகாது.

    11) லக்கனத்தில்   செவ்வாய் இருப்பதால் அதீத   துணிச்சலும், தலைமை தாங்கும் பண்பும் இருக்கும்

    நன்றி. ஐயா.
    ந.மோகனசுந்தரம்
    திருநெல்வேலி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com