மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.6.14

வயதாகிவிட்டதா? இதைப் படியுங்கள்:

 
வயதாகிவிட்டதா? இதைப் படியுங்கள்:

64 வயதுதான் அவார்டட் (awarded) லைஃப்.
அதற்கு மேல் உள்ள வயது போனஸ் கணக்கில் வரும்!

இது என்னுடைய சொத்து, என்னுடைய வீடு என்று
எதையும் சுட்டிக் காட்டாதீர்கள். உங்களுக்கு
உரிமையானது என்று எதுவும் கிடையாது.
உங்கள் உடம்பே ஒரு வாடகை வீடு. அதை
ஒரு நாள் வலுக்கட்டாயமாக நீங்கள் காலி செய்து
விட்டுச் செல்ல வேண்டும். அதை மனதில் வையுங்கள்
இருக்கின்ற சொத்துக்களுக்கு அது எத்தனை கோடி
மதிப்புடையது என்றாலும், அதற்கு நீங்கள்
பாதுகாவலன் மட்டுமே! (yes, you are only a
custodian. You are not the owner for anything)


யாருக்கும் தன்னிச்சையாக யோசனைகள் எதையும்
சொல்லாதீர்கள். எவனும் கேட்கமாட்டான். waste of
time. எல்லோரும் அவனவன் தலைவிதிப்படிதான்
நடப்பான். உங்கள் யோசனைகள் எடுபடாது.

பழைய கதைகளைப் பேசாதீர்கள். அந்தக் காலத்தில்
ஒரணாவிற்கு இரண்டு இட்லிகள் விற்றது. பவுன்
அறுபது ரூபாய்க்கு விற்றது போன்ற செய்திகளைக்
கதையாக்கிச் சொல்லாதீர்கள். கேட்பதற்கு யாருக்கும்
நேரமோ, மனநிலையோ இல்லை என்பதுதான் உண்மை

உலகில் கடன் இல்லாதவனும், நோய் இல்லாதவனும்,
இருப்பது போதும் என்ற மனநிலை உடையவனும்தான்
பணக்காரன். மற்றவனெல்லாம் ஏழை!

யாரும் சொல்லி, உங்கள் பிறவி அமையவில்லை.
அதுபோல உங்களைக் கேட்டு யாரும் பிறக்கவில்லை
எல்லாப் பிறப்புக்களுமே தனித்தன்மையுடையது.
ஆகவே யார் மீதும் அதிகப் பாசம், அதிகக் காதல்
வைக்காதீர்கள். எதன் மீதும் அதிகப் பற்று வைக்காதீர்கள்
(No attachment on anybody or anything)

மரணத்திற்கு முன்னுரிமை, மூப்புரிமை, மேலும்
காப்புரிமை என்று எதுவும் கிடையாது
There is no priority and Seniority for death
நேரம் வரும்போது காலதேவன் போட்டுத் தள்ளி விட்டுப்
போய்க்கொண்டே இருப்பான்.

இங்கே இன்பம், துன்பம், சொத்து, சுகம், சொந்தம்
பந்தம், பதவி, பட்டம் எல்லாம் தற்காலியமானதே.
எதுவும் நிரந்தமானது இல்லை. (Nothing is permanent.
All are temporary)


உலகிலேயே மிகப் பெரிய பதவி சிவபதவி மட்டும்தான்.
ஆகவே அதை அடையப் பாடுபடுங்கள்.
இறைவன் மீது பற்று வையுங்கள்

அவன் பார்த்துக் கொள்வான் என்ற நிலை மட்டும்தான்
உங்களுக்கு நிம்மதியைத் தரும்!

Written by me for a magazine
SP.VR.Subbiah
---------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

36 comments:

  1. Respected Sir
    Good Post.
    I also wanted not to love something or some one so much till few years back (Guru + Kethu in 10th place). But God have differnt calculation!! he gave me a daughter :)..

    ReplyDelete
  2. 64ன்னா சொல்றீங்க?

    நான் அறுபதுன்னு அடிச்சுச் சொல்வேன்:-)))))

    ஒரு முழுவட்டம் வந்துடறோம் இல்லையா?

    அதுக்கு மேலே எல்லாமே போனஸ்தான்!

    பதிவு அருமை, வாத்தியார் ஐயா.

    ReplyDelete
  3. சரி ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அறுபது வயதிற்கு மேல் அரசியலில் அதிகாரத்திற்கு வந்து நாட்டின், நாட்டு மக்களின் தலைஎழுத்தை மாற்றும் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் ஆசிரியரே..

    ReplyDelete
  4. சிறு கதையை இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது.மூன்று நாட்களாக ஒரே வேலை.லால்குடியில் என் மூத்த பெண் வீடுகட்டி கிரஹப்பிரவேசம்1 ஜூன்'14
    ஞாயிறு அன்று நடந்தது. நாங்களும் உட‌ன் இருக்கும் படி பெரிய வீடாகக் கட்டியுள்ளார்கள். ஆண் வாரிசு இல்லாத எங்க‌ளுக்கு இந்த ஏற்பாடு கடைசி காலத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று விட்டு குடக்கூலிக்கு இருக்கும் எங்களுக்கு, மீண்டும் சொந்த இடத்தில் இருக்கும் வாய்ப்பு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டவனாக அருளியிருக்கிறார்.எல்லாம் அவன் அருள்.

    சென்ற 2013=14 குரு பெயர்ச்சியால் எங்கள் இல்லத்தில் அனைவருக்குமே
    நாலாம் இடத்தினை குருபார்த்தார்.அதனால்தான் என் மகளும் மாப்பிள்ளையும்
    சொத்து சேர்க்க கூடாது என்ற கொள்கையைக் கை விட்டு, வீடு கட்டினார்கள்.
    ஆக கோள்சாரமும் ஓரளவு வேலை செய்கின்றது. இந்த ஆண்டு அனைவருக்கும் ஐந்தாம் இடத்தினை உச்ச குரு தன் பார்வையில் வைப்பார்.
    திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் சந்தானம் இல்லாத என் மகளுக்கு அந்த பாக்கியத்தையும் பழனியப்பன் அருள வேண்டுகிறேன். நண்பர்களும் வேண்டிக்கொள்வார்களாக.

    முடி காணிக்கை என்பதைப்பற்றி நாத்திகர்கள் கேலி செய்வார்கள். அத‌ன் உட்பொருளை நன்கு உணர்த்தும் கதை. திருப்பதியில் கிடைக்கும் முடி காணிக்கை மூலம் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. தெலுங்கர்களில் ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் அனைவருமே முடி காணிக்கை அளிக்கிறார்கள்.விக் செவதில் இருந்து, புரோட்டின் மருந்து வரை முடியில் இருந்து கிடைக்கிறது. முடி ஏற்றுமதிப்பொருள்.
    நல்ல கதைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  5. என்னைப் போன்ற 'ஓல்டிஸ்'களுக்கு அளித்த நல்ல அறிவுரை.ஆனால் வயதான
    காலத்தில் பழைய நினைவுகள் மேல் எழுந்து வரும்.அதனை யாரிடமாவது பகிர மனம் விழைகிறது. இளைஞர்கள் சிறிது நேரம் ஒதுக்கி வயதானர்வகளிடம் பேச வேண்டும்.

    என் தந்தையார் காந்தி கால அரசியல் தொண்டர். அவருக்குச் சொல்ல நிறைய பொதுச் செய்தி உண்டு.நான் சனி,ஞாயிறு இரண்டு நாட்களும் இரவு ஏழு முதல் பத்து மணி வரை அவருடன் அமர்ந்து பழைய கதைகளைத் தூண்டித் துருவிக் கேட்பேன். மிகுந்த உற்சாகத்துடன் உரத்த குரலில் விவரிப்பார். காந்திஜியைப் பற்றி பல செய்திகளை புத்தகத்தில் படிக்காமல் தந்தையாரிடமிருந்தே கற்றேன்.

    ReplyDelete
  6. எதன் மீதும் அதிக பாசம் வைக்ககாமல் இருப்பது எவ்வளவு நல்லதோ அதே போல் எந்த ஒரு விஷயத்தையும் வலுக்கட்டாயமாக வெறுக்கக்கூடாது. அப்படி வெறுத்தால் அதை விதி நம் மீது அழுத்தி திணிக்கிறது. இதுவும் பலரின் அனுபவமாக இருக்கலாம்.

    ReplyDelete
  7. திருவாளர் வாத்தியார் அய்யாவிற்கு வணக்கம்.,

    நல்ல உடல்தகுதியும் , திடமான மனத்தகுதியும் உள்ள ஒருவன்தான் நீங்கள் சொன்ன கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியும் , தனது ஜாதக கோட்பாடுகளை மீறி ஒருவன் எவ்வாறு இந்த தகுதிகளை பெறமுடியும் . ...? என்பதற்கு உங்கள் கருத்துக்கள் வேண்டுகிறேன்...!!

    தாங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஒரு சித்தம் தெளிந்த ஒருவனால் மட்டுமே வெளிப்படுத்த மற்றும் செயல்படுத்த முடியும் என்பது எனது கருத்து. நன்மையையும் தீமையையும் ஒருவன் எதிர்நோக்காமல் இருந்தாலே அவன் பக்தி மார்கம் வந்துவிடுகிறான் .. (+) அல்லது (-) எதிர்பார்ப்பு எண்ணங்களே ஒருவரின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள காரண காரணிகளாகும் ., நாம் எந்த ஒரு இடத்திலும் எதிர்பார்ப்பு எண்ணங்களை குறைத்து , பக்தி என்னும் சுகத்தை பெற்றால் நமக்கு நமது செயல் வினைகளால் நிகழும் பாதிப்புகள் நம்மை ஒன்றும் செய்யாது.

    நான் படித்த தங்களது பதிவில் இந்த பதிவே இல்லை இந்த அறிவுரையே உங்களது அதிசிறந்த அனுபவத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது ....

    ReplyDelete
  8. Respected Sir,

    Happy morning...Nice post...

    Have a pleasant day.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  9. வணக்கம்,வாத்தியார்!//என் போன்றவர்களுக்கு அருமையான அறிவுரை.மூடிக்கிட்டு அவன் தாள் பணிந்து கிடந்து,போய் விடுவது மேல்!(MALE)

    ReplyDelete
  10. ஆசிரியர் அவர்களுக்கு, அருமையான அறிவுரைகள்.... ஒன்றே ஒன்றைத் தவிர மற்ற அனைத்திற்கும் உடன்படுகிறேன்... All are Temporary, இறைவனின் திருவடி தவிர... இது என் வார்த்தைகள் அல்ல.. பட்டினத்தாருடையது...

    ஊருஞ்சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
    பேருஞ்சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளும்
    சீருஞ்சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
    யாருஞ்சதமல்ல நின்தாள் சதங்கச்சியேகம்பனே.

    ReplyDelete
  11. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

    ஓடி ஓடி உழைத்து கோடிக்கணக்கில் செல்வத்தைச் சேர்த்தவருக்கும் - ஊழ் வகுத்த வகையால் அன்றி அவற்றை அனுபவிக்க முடியாது.

    - என்று அருளுகின்றார் ஐயன் திருவள்ளுவர்.

    அதைப் போலவே - பெரியவர்கள் எத்தனை விவரித்து நல்ல விஷயங்களைச் சொன்னாலும், அதைக் கேட்டு நடப்பதற்கு வரம் வாங்கி இருக்க வேண்டும்!..

    மனதில் நிறைகின்றது ஐயா - தங்களின் பதிவு!..

    ReplyDelete
  12. அய்யா வணக்கம்.

    எனக்கு இந்த பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.

    போட்டுத் தாக்கு.....ஏ...ஏ....போட்டுத் தாக்கு!
    சக்கைப் போடு.....னு....போட்டுத் தாக்கு!

    என்று போட்டுத் தாக்கி விட்டீர். என்னத்தை சொல்ல!

    இதுதான் நிஜம். அனைத்தும் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய அறிவுரைகள்!

    நன்றி.

    ReplyDelete
  13. சிறந்த வழிகாட்டல் பதிவு

    ReplyDelete
  14. அற்புதமான அறிவுரைகள். சத்தியமான சொற்கள்.

    ReplyDelete
  15. /////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Good Post.
    I also wanted not to love something or some one so much till few years back (Guru + Kethu in 10th place). But God have differnt calculation!! he gave me a daughter :)..//////

    உங்களுக்கு இன்னும் வயதாக வில்லையே! இது வயதானவர்களுக்கான பதிவு சாமி! இருந்தாலும் படித்துவிட்டு நல்ல பதிவு என்ற சொன்ன மேன்மைக்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  16. /////Blogger துளசி கோபால் said...
    64ன்னா சொல்றீங்க?
    நான் அறுபதுன்னு அடிச்சுச் சொல்வேன்:-)))))
    ஒரு முழுவட்டம் வந்துடறோம் இல்லையா?
    அதுக்கு மேலே எல்லாமே போனஸ்தான்!
    பதிவு அருமை, வாத்தியார் ஐயா.////

    வாங்க டீச்சர் அம்மா! உங்களுடைய மேலான பாராட்டிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி. எழுதுபவர்களுக்குப் பாராட்டுக்கள் என்பது ஊக்க மருந்து (Tonic). அது உங்களுக்குத் தெரியாததா என்ன?

    ReplyDelete
  17. /////Blogger Hari Krishna said...
    சரி ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அறுபது வயதிற்கு மேல் அரசியலில் அதிகாரத்திற்கு வந்து நாட்டின், நாட்டு மக்களின் தலைஎழுத்தை மாற்றும் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் ஆசிரியரே../////

    உத்தேசமாக ஆயிரத்திற்கு ஒருத்தர் என்ற கணக்கில்தான் அரசியலில் இருப்பார்கள். அவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவது வேஸ்ட்! மக்கள் அவ்வப்போது அவர்களுக்குத் தீர்ப்பெழுதி ஓரங்கட்டி விடுகிறார்களே! அது போதாதா?

    ReplyDelete
  18. ////Blogger kmr.krishnan said...
    சிறு கதையை இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது.மூன்று நாட்களாக ஒரே வேலை.லால்குடியில் என் மூத்த பெண் வீடுகட்டி
    கிரஹப்பிரவேசம்1 ஜூன்'14
    ஞாயிறு அன்று நடந்தது. நாங்களும் உடன் இருக்கும் படி பெரிய வீடாகக் கட்டியுள்ளார்கள். ஆண் வாரிசு இல்லாத எங்களுக்கு இந்த ஏற்பாடு
    கடைசி காலத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இருந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று விட்டு குடக்கூலிக்கு இருக்கும் எங்களுக்கு, மீண்டும்
    சொந்த இடத்தில் இருக்கும் வாய்ப்பு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டவனாக அருளியிருக்கிறார்.எல்லாம் அவன் அருள்.
    சென்ற 2013=14 குரு பெயர்ச்சியால் எங்கள் இல்லத்தில் அனைவருக்குமே
    நாலாம் இடத்தினை குருபார்த்தார்.அதனால்தான் என் மகளும் மாப்பிள்ளையும்
    சொத்து சேர்க்க கூடாது என்ற கொள்கையைக் கை விட்டு, வீடு கட்டினார்கள்.
    ஆக கோள்சாரமும் ஓரளவு வேலை செய்கின்றது. இந்த ஆண்டு அனைவருக்கும் ஐந்தாம் இடத்தினை உச்ச குரு தன் பார்வையில் வைப்பார்.
    திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் சந்தானம் இல்லாத என் மகளுக்கு அந்த பாக்கியத்தையும் பழனியப்பன் அருள வேண்டுகிறேன். நண்பர்களும்
    வேண்டிக்கொள்வார்களாக./////

    தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி. பல தொண்டுகளைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆகவே ஆண்டவன் அருள் உங்களுக்கு எப்போதுமே உண்டு
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////முடி காணிக்கை என்பதைப்பற்றி நாத்திகர்கள் கேலி செய்வார்கள். அதன் உட்பொருளை நன்கு உணர்த்தும் கதை. திருப்பதியில் கிடைக்கும்
    முடி காணிக்கை மூலம் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. தெலுங்கர்களில் ஆண் பெண் வேறுபாடு
    இல்லாமல் அனைவருமே முடி காணிக்கை அளிக்கிறார்கள்.விக் செய்வதில் இருந்து, புரோட்டின் மருந்து வரை முடியில் இருந்து கிடைக்கிறது. முடி
    ஏற்றுமதிப்பொருள்.
    நல்ல கதைக்கு நன்றி ஐயா!/////

    உங்களுடைய மேலான பாராட்டிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete

  19. /////Blogger kmr.krishnan said...
    என்னைப் போன்ற 'ஓல்டிஸ்'களுக்கு அளித்த நல்ல அறிவுரை.ஆனால் வயதான
    காலத்தில் பழைய நினைவுகள் மேல் எழுந்து வரும்.அதனை யாரிடமாவது பகிர மனம் விழைகிறது. இளைஞர்கள் சிறிது நேரம் ஒதுக்கி
    வயதானர்வகளிடம் பேச வேண்டும்.
    என் தந்தையார் காந்தி கால அரசியல் தொண்டர். அவருக்குச் சொல்ல நிறைய பொதுச் செய்தி உண்டு.நான் சனி,ஞாயிறு இரண்டு நாட்களும்
    இரவு ஏழு முதல் பத்து மணி வரை அவருடன் அமர்ந்து பழைய கதைகளைத் தூண்டித் துருவிக் கேட்பேன். மிகுந்த உற்சாகத்துடன் உரத்த குரலில்
    விவரிப்பார். காந்திஜியைப் பற்றி பல செய்திகளை புத்தகத்தில் படிக்காமல் தந்தையாரிடமிருந்தே கற்றேன்./////

    இளைஞர்களைப்பற்றிய உங்களின் எதிர்பார்ப்பு சரியானதல்ல. அவர்கள் அனைவரும் நம்மைவிட புத்திசாலிகள் என்பது என் அனுபவம். அதே
    நேரத்தில் அவர்கள் பெரியவர்களின் பேச்சை ‘ மொக்கை’ என்று ஒதுக்கி ஒதுங்கிவிடுவார்கள் என்பதும் என் அனுபவம்!

    ReplyDelete
  20. /////Blogger சரண் said...
    எதன் மீதும் அதிக பாசம் வைக்ககாமல் இருப்பது எவ்வளவு நல்லதோ அதே போல் எந்த ஒரு விஷயத்தையும் வலுக்கட்டாயமாக
    வெறுக்கக்கூடாது. அப்படி வெறுத்தால் அதை விதி நம் மீது அழுத்தி திணிக்கிறது. இதுவும் பலரின் அனுபவமாக இருக்கலாம்./////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சரண்!

    ReplyDelete
  21. Blogger SIVA said...
    திருவாளர் வாத்தியார் அய்யாவிற்கு வணக்கம்.,
    நல்ல உடல்தகுதியும் , திடமான மனத்தகுதியும் உள்ள ஒருவன்தான் நீங்கள் சொன்ன கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமுடியும் , தனது ஜாதக
    கோட்பாடுகளை மீறி ஒருவன் எவ்வாறு இந்த தகுதிகளை பெறமுடியும் . ...? என்பதற்கு உங்கள் கருத்துக்கள் வேண்டுகிறேன்...!!
    தாங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஒரு சித்தம் தெளிந்த ஒருவனால் மட்டுமே வெளிப்படுத்த மற்றும் செயல்படுத்த முடியும் என்பது
    எனது கருத்து. நன்மையையும் தீமையையும் ஒருவன் எதிர்நோக்காமல் இருந்தாலே அவன் பக்தி மார்கம் வந்துவிடுகிறான் .. (+) அல்லது (-)
    எதிர்பார்ப்பு எண்ணங்களே ஒருவரின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள காரண காரணிகளாகும் ., நாம் எந்த ஒரு இடத்திலும் எதிர்பார்ப்பு
    எண்ணங்களை குறைத்து , பக்தி என்னும் சுகத்தை பெற்றால் நமக்கு நமது செயல் வினைகளால் நிகழும் பாதிப்புகள் நம்மை ஒன்றும் செய்யாது.
    நான் படித்த தங்களது பதிவில் இந்த பதிவே இல்லை இந்த அறிவுரையே உங்களது அதிசிறந்த அனுபவத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது
    .../////

    அனுபவம் என்பது ஒரு சீப்பு - அது
    தலை வழுக்கையான பிறகே கிடைக்கும்”
    என்று கவியரசர் சொல்வார்.
    ஆனால் எனக்கு என் தலை வழுக்கையாகும் முன்பாகவே பல அனுபவங்கள் கிடைத்தன. அதற்கு நான் கற்றுணர்ந்த பல நூல்களும், அவற்றை
    என்னைப் படிக்கும்படி பணித்த பழநிஅப்பனுமேதான் காரணம். நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning...Nice post...
    Have a pleasant day.
    With kind regards,
    Ravichandran M.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. /////Blogger Subramaniam Yogarasa said...
    வணக்கம்,வாத்தியார்!//என் போன்றவர்களுக்கு அருமையான அறிவுரை.மூடிக்கிட்டு அவன் தாள் பணிந்து கிடந்து,போய் விடுவது மேல்!(MALE)////

    அருமை என்பது பதிவில் இல்லை. படிப்பவர்கள் அதை உணர்வதிலும் அதைக் கடைப் பிடிப்பதிலும்தான் உள்ளது. நன்றி யோகராசா!

    ReplyDelete
  24. ////Blogger மகேஸ்வரன் said...
    ஆசிரியர் அவர்களுக்கு, அருமையான அறிவுரைகள்.... ஒன்றே ஒன்றைத் தவிர மற்ற அனைத்திற்கும் உடன்படுகிறேன்... All are Temporary,
    இறைவனின் திருவடி தவிர... இது என் வார்த்தைகள் அல்ல.. பட்டினத்தாருடையது...
    ஊருஞ்சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
    பேருஞ்சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளும்
    சீருஞ்சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
    யாருஞ்சதமல்ல நின்தாள் சதங்கச்சியேகம்பனே./////

    சரணாகதி என்று உள்ளவர்களுக்கு இறைவனின் திருவடி நிரந்தமானதுதான். அதில் மாற்றுக்கருத்திற்கு இடம் ஏது?
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. /////Blogger துரை செல்வராஜூ said...
    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
    ஓடி ஓடி உழைத்து கோடிக்கணக்கில் செல்வத்தைச் சேர்த்தவருக்கும் - ஊழ் வகுத்த வகையால் அன்றி அவற்றை அனுபவிக்க முடியாது.
    - என்று அருளுகின்றார் ஐயன் திருவள்ளுவர்.
    அதைப் போலவே - பெரியவர்கள் எத்தனை விவரித்து நல்ல விஷயங்களைச் சொன்னாலும், அதைக் கேட்டு நடப்பதற்கு வரம் வாங்கி இருக்க
    வேண்டும்!..
    மனதில் நிறைகின்றது ஐயா - தங்களின் பதிவு!..////

    உங்கள் மனது நிறைந்ததை வெளிப்படுத்திய மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////Blogger venkatesh r said...
    அய்யா வணக்கம்.
    எனக்கு இந்த பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.
    போட்டுத் தாக்கு.....ஏ...ஏ....போட்டுத் தாக்கு!
    சக்கைப் போடு.....னு....போட்டுத் தாக்கு!
    என்று போட்டுத் தாக்கி விட்டீர். என்னத்தை சொல்ல!
    இதுதான் நிஜம். அனைத்தும் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய அறிவுரைகள்!
    நன்றி.//////

    உங்களுடைய மனம் உவந்த பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
    பொன்னெழுத்தில் பதிக்க வேண்டாம். அனைவரும் தங்களுடைய பொன்னான மனதில் பதித்துக்கொண்டால் போதும்.
    நம் மனதைவிட பொன் பெரிதா என்ன?

    ReplyDelete
  27. ////Blogger Jeevalingam Kasirajalingam said...
    சிறந்த வழிகாட்டல் பதிவு////

    எழுதியவை உங்கள் மனதைத் தொட்டவரைக்கும் மகிழ்ச்சிதான். அதுவே வழிகாட்டலாக அமைந்தால் கூடுதல் (மிக்க) மகிழ்ச்சி. நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. ////Blogger Kamala said...
    அற்புதமான அறிவுரைகள். சத்தியமான சொற்கள்.////

    சத்தியமான சொற்கள் என்று நீங்கள் பின்னூட்டத்தில் எழுதியது மனதை நெகிழவைத்துவிட்டது. மனதில் பட்டதைத்தான் எழுதினேன். அது
    வலிமையானது என்பதை உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். நன்றி சகோதரி!

    ReplyDelete
  29. /////Blogger kirukkal said...
    மிக அருமை !////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. வணக்கம் சுப்பையா சார். உங்கள் எழுத்து ஒவ்வொன்றும் மருந்தாக அமைந்தது. அறிவுரை சொல்வதை நிறுத்திக் கொள்கிறேன். மாமியார் 60க்கு மேலயே வாழ்க்கை போனஸ் தான் என்பார். அதை மனத்தில் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மிக நன்றி.சார்.

    ReplyDelete
  31. /////Blogger eswari sekar said...
    vanakamsir mukavum arputham/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  32. /////Blogger வல்லிசிம்ஹன் said...
    வணக்கம் சுப்பையா சார். உங்கள் எழுத்து ஒவ்வொன்றும் மருந்தாக அமைந்தது. அறிவுரை சொல்வதை நிறுத்திக் கொள்கிறேன். மாமியார் 60க்கு மேலயே வாழ்க்கை போனஸ் தான் என்பார். அதை மனத்தில் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மிக நன்றி.சார்./////

    உண்மைதான்.உங்கள் மாமியாரும் தன்னுடைய அனுபவத்தை வைத்து அப்படிச் சொல்லியிருப்பார். உங்களுடைய எண்ணப் பகிர்வுகளுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  33. முதுமை என்பது வரப்பிரசாதம்
    முக்கியமாக இளைஞர்களால்

    காசு கொடுத்தும் பெற முடியாத
    கண் போன்ற பொக்கிஷம்

    முதுமை இழிவானதல்ல
    முதுமை முழுமையை குறிக்கும்

    இளஞர்கள் விரும்புவது போல்
    இவர்கள் இருந்து விட்டால்

    முதுமை உடல் அளவில் தான்
    முகவரி மறைக்காத முகத்துடன்..

    காலம் தாழ்த்து வரும் பின்னுட்டம்
    கால் மாறி வருகிறது முதுமையால்

    ReplyDelete
  34. எங்களைப் போன்றோருக்கு நல்ல ஒரு அறிவூட்டல் சார். பின் பற்ற முயற்சிக்கிறேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com