மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.6.14

Astrology: quiz.57: வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்!

 

Astrology: quiz.57: வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்!

Quiz No.57: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி ஐம்பத்தியேழு

4.6.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

ஜாதகர் வெளிநாடு சென்று, வேலையில் செர்ந்து பொருள் ஈட்ட நினைத்தார். அதற்கான முயற்சிகளையும் செய்தார். அவர் முயற்சி வெற்றி அடைந்ததா? அல்லது வெற்றி அடையவில்லையா? அடைந்தார் என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? அடையவில்லை என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.


அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

=================================== 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

  1. Respected Sir
    Here is my quick Analysis.

    9th lord is in laknam frineds house + 5th from 9th house.
    9th house has 39 parals and 11th house has 34 parals.

    Based on parals I can say he went abroad. Not sure if he saved any as sun is 2nd house. "Oottai Anda"?

    ReplyDelete
  2. 1. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு குறைவு
    2. லக்னாதிபதி சனி 4ல் நீசம்
    3. 10க்கு உடையவன் சுக்ரன் 12ல் மறைவு, மற்றும் மாந்தி தொடர்பு.
    4. சுக்ரன் பாபகர்த்தாரி யோகத்தில் (ராகு மற்றும் செவ்வாய் க்கு இடையில்)
    5. பொருள் ஈட்டும் முயற்சி வெற்றி பெற சாத்தியம் மிகவும் குறைவு.

    ReplyDelete
  3. வணக்கம். Quiz 57

    ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது.

    20.02.1971 ஆம் தேதி காலை 4.26.19 மணிக்கு அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகருக்கு மகர லக்கினம்.

    ராசியில் மகர லக்கினம் (6 பரல்), நவாம்சத்திலும் லக்கினம் மகரம். ஆகவே லக்கினம் வர்கோத்தமம்.

    மகர ராசியின் லக்கினாதிபதி சனி மேஷத்தில் நீசமாகி இருந்தாலும், நவாம்சத்தில் லக்கினாதிபதி சனி துலா ராசியில் உச்சம். அதுவும், நவாம்சத்தில் 10ம் வீட்டில்.

    9ம் வீட்டின் அதிபதி புதன் லக்கினத்தில். 9ம் வீட்டில் அஷ்ட்டவர்கத்தில் 39 பரல்கள் உள்ளன. வெளி நாடு செல்வதற்க்கு 9ம் வீடு நன்றாக இருக்க வேண்டும். இந்த ஜாதகருக்கு உள்ளது.

    4ம் வீட்டில் கர்மகாரகன் சனி இருந்தால் சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் உண்டு.

    10ம் வீட்டின் அதிபதி சுக்கிரன், 12ம் வீட்டில் இருந்தாலும் வெளி நாடு செல்லும் யோகம் உண்டு.

    சனியில் 7ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது.

    10ம் வீட்டின் அதிபதி சுக்கிரன், 12ம் வீட்டில் பாபகர்தாரி தோஷத்தில் இருந்தாலும், நவாம்சத்தில் சுக்கிரன் துலா ராசியில் சொந்த வீட்டில் 10ம் வீட்டில் உள்ளார்.

    ஜாதகரின் 32ம் வயதில் சுக்கிர தசை புதன் புக்தியில் வெளிநாடு சென்று இருப்பார்.

    சந்திரசேகரன் சூர்யநாராயணன்

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 57 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

    மகர லக்ன ஜாதகரான இவருக்கு லக்னாதிபதி 4ல் நீச்சம் மற்றும் சந்திரன் 11ல் நீச்சம். ஆனால் நீச்சம் பெற்ற ஸ்தானங்களின் அதிபதியான செவ்வாய் ஆட்சி பலம் பெற்றதினால் நீச்ச பங்கம் அடைந்து விட்டது. மேலும் குருவுடன் சேர்க்கை பெற்ற செவ்வாயும், சந்திரனும் முறையே சந்திர மங்கள யோகத்தையும் கஜகேசரி யோகத்தையும் கொடுக்கிறது.

    நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனத்தின் அதிபதிகள் சேர்க்கை பெற்று லாபஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும், அவைகளுக்கு குரு பார்வை கிடைப்பதாலும் ஜாதகர் வெளிநாடு சென்று பெரும் பொருள் ஈட்டி இருப்பார்.

    ReplyDelete
  5. ayya,

    ivar velinaadu sendrikka vaaippu illai.
    Kaarnam:
    1. Lagnathipathi Sani Neesam. Sani Sara Raasiyil irundhaalum, Lagnaathipathikku subar paarvai illai. Ivarukku 9,12 matrum 10m athipathiyin paarvai illai.
    2. 9,12 athipathigal Jala Raasiyil Irundhaalum orukkoruvar(9,12)paarvai serkai illai.
    3. 5 matrum 10m athipathiyaana sukkiran(yogakaran) maandhiyudan 12-il sikkiyullaar. Ivarukkum endha subar paarvaiyum illai. Kurippaaga, Lagnaathipathy, 9 matrum 12m athipathyin paarvai illai.

    Anbudan,

    Mu.Prakaash

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய ஐயா,

    புதிர் போட்டி 57க்கான கணிப்பு:-

    ஜாதகருக்கு வெளிநாடு செல்வதற்க்கான வாய்ப்பு இல்லை

    கரணங்கள்

    1) லக்கன அதிபதி மற்றும் தொழில் காரகன் "சனி" மேஷத்தில் நீசம் (4-கேந்திர இடமானாலும், மற்றும் தனது 10ம் பார்வை 1ம் இடம்மீது கொண்டிருந்தாலும் )

    2) 9ம் இடத்து அதிபதி "புதன் " லக்கனத்தில் "ராகுடன்" இருக்கிறார் மேலும் இவரது தசா 6:8:9 முதல் 23:8:9 வயது மட்டுமே. (புதன் சம கிரகம் - இவர் ராகுடன் சேர்ந்ததனால் கெட்டுவிட்டார்) மேலும் எந்த சுபகிரக பார்வையையும் பெறவில்லை.

    3) 9 மற்றும் 12ம் இடத்து அதிபதிகளின் தசா/புத்தி களில் வெளிநாடு செல்ல முடியும். ஆனால் இவருக்கு 12ம் இடத்து அதிபதி "குரு" தசை இளமை பருவத்தில் வரவில்லை.

    சுபம்.

    ReplyDelete
  7. மதிப்பிற்குரிய ஐயா,

    புதிர் எண்: 57 இற்கான பதில் !!!

    மேற்கூறிய ஜாதகர் மகர லக்கினத்தில் 19.02.1971 இல் அதிகாலை சுமார் ஒரு ஐந்து மணியளவில் பிறந்திருப்பார். லக்கினாதிபதி 4இல் நீசம் அடைந்தாலும் அம்சத்தில் உச்சத்தில் உள்ளதால் நீச்ச தன்மையை இழக்கிறார். நான்காம் வீடும், அதன் அதிபதி செவ்வாய் 11 இல் ஆட்சியில் உள்ளதாலும், கல்விக்கு உண்டான காரகர் புதன் லக்கினத்தில் 5 பரல்களுடன் உள்ளதால் ஜாதகர் கல்வியில் மேன்மை அடைந்திருப்பார். ஜீவனம்/ யோககரகர்/ தொழில் ஸ்தானாதிபதி சுக்கரன் 12 இல் மறைந்து மாந்தியுடன் இருப்பதால் படித்து முடித்த முதல் சில வருடங்கள் வேலை இல்லாமல்/ குறைந்த சம்பள வேலையில் இருந்திருப்பார். யோககாரகர் சுக்கரனின் தசா 31 ஆம் வயதில் தொடங்குகிறது. கல்யாணம் முடிந்து ஒரு இரண்டு ஆண்டுகள் கழித்து தனது 34 ஆம் வயதில் வெளிநாடு சென்று நல்ல வேலையில் சேர்ந்திருப்பார், செல்வங்கள், சுகங்களை கண்டிருப்பார். கஜகேசரி யோகம் அதற்கு துணை புரியும்.12 இல் மாந்தி உள்ளதால், சுக்கர திசை முடியும் முன் திடீர் பொருள் விரையம் ஏற்படும் நிலை உருவாகலாம். மொத்தத்தில் 32 வயதுக்கு மேல் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு !!!

    சிவச்சந்திரன்.பா.


    ReplyDelete
  8. வாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கம்.,

    இந்த ஜாதகரின் லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில், பத்தாம் அதிபதி பன்னிரண்டில் மறைந்திருப்பது அவர் பாபகர்த்தாரி (அம்ஷதிலும்) யோகத்தில் மாட்டிக்கொண்டிருப்பது மற்றும் மாந்தி அவருடன் இருப்பது., சூரியன் இரண்டில் இவர் அஸ்டமஷ்தான அதிபதி ., வெளிநாட்டு வேலை இவருக்கு மிகுந்த பிரச்சனைகளை தரும் ., தூர தேசத்தில் வசிக்கலாம்
    மேலும் ., ஒன்பதாம் அதிபன் ராகுவுடன் சேர்ந்து இருந்தாலும் அவருக்கு பிற நாடுகளின் மிது ஆர்வம் தூண்டப்படும் மேலும் நீசபங்கம் பெற்ற சனி பார்வை லக்கினத்தின் மீது லக்கினத்தில் உள்ள புதன் மீதும் இருப்பதாலும் லாபஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் தனஷ்தானத்தை பார்ப்பதால் , வெளிநாட்டு சம்பாத்தியம் வெற்றி என்றே சொல்லமுடியும்

    ReplyDelete
  9. Dear Sir,

    The given horoscope person 9th lord is in lagna with rahu, and 12th lord guru in 11th place., lagna lord in 4th place aspecting 12th place.12th house and 12th lord is for foreign trips. sukran placed in 12th.
    hence, the person went to foreign lands and he lived in foreign countries and earn money from foreign lands.

    C.Jeevanantham.

    ReplyDelete
  10. அய்யா,

    லக்னத்தில் புதன், ராகு. லக்னாதிபதி 4இல் . 10ஆம் அதிபதி 12இல் மாந்தியுடன். ஆனாலும் 1,4,10 இடம் சாரா ரசி ஆயிற்று. தசம ஸ்தானத்தை லக்னாதிபதி மற்றும் காரகர் சனியின் பார்வை. லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு , சந்திரன், கஜகேசரி , சந்திரமங்கள யோகங்கள். எனவே இவர் வெளிநாடு சென்று பெரும் பணம் ஈட்டுவார்.

    நன்றி.

    ReplyDelete
  11. இவருக்கு வெளி நாடு செல்லும் யோகம் இருக்க வாய்ப்பு கிடைத்து இருக்காது. பாக்கியாதிபதி லக்கினத்தில் ராகுவுடன் சேர்ந்த் அமர்ந்து இருப்பாதலும் சந்திரன் விரயாபதி உடன் இருபதாலும் சுகஸ்தானதில் சனீ இருப்பாதாழும் வாய்ப்பு இருந்து இருக்காது

    ReplyDelete
  12. ஐயா வணக்கம்,

    புதிர் எண் 57க்கான விடை:

    ஜாதகர் வெளிநாடு சென்று வேலை பார்த்து இருப்பார். அதற்கான காரணங்கள்:
    1. லக்னாதிபதி மற்றும் கர்ம‌ காரகனுமான சனி 4ல் நீசமானாலும் 10மிடத்தை தன் நேர் பார்வையிலும், லக்னத்திலுள்ள பாக்யாதிபதி புதன்+ராகு கூட்டணியை தன் 10ம் தனிப்பார்வையிலும் வைத்துள்ளார்.
    2. யோகாதிபதியும், 10மிட அதிபதியுமான சுக்கிரன் லக்னத்திற்கு 12ல் மாந்தியுடன் கை கோர்த்துள்ளார். ஆனால் லக்னாதிபதியான சனிக்கு திரிகோணத்தில் உள்ளார்.
    3. வெளி நாட்டு வாய்ப்புக்கான 9மிடத்திற்கு சுபர் பார்வையில்லை.ஆனால் அந்த குறையை அதன் அதிபதி புதன் லக்னத்தில் ராகுவுடன் அமர்ந்து நிவர்த்தி செய்து விட்டார்.
    4.இதற்கு ஜாதகரின் லாப ஸ்தானமான 11ல் அமர்ந்துள்ள குரு,செவ்வாய் மற்றும் சந்திரன் யோகங்களை கொடுத்து உதவியுள்ளனர்.

    ஆகவே ஜாதகர் வெளிநாடு சென்று வேலை செய்து பொருளீட்டும் தன் முயற்சியில் சிறிது தாமாதமாக "வெற்றி மேல் வெற்றி" பெற்றிருப்பார்.தங்களின் மேலான அலசலுக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  13. The native has not gone to foreign because of the followings:
    1 in fourth the saturan occupied
    2 three planets are in bathaga isthanam
    3 chandran seventh naive is debilitated
    4 fifth place sukran yogakaran for makaram lagnam is in 12th place

    for the above reasons native could not proceed to abroad.
    for foriegn travel 4th 7th 9th and 12 th are to be karaka places
    nellai padmanaban

    ReplyDelete
  14. இந்த ஜாதகருக்கு பத்தாம் அதிபதி பன்னிரணடாவது இடத்தில் இருந்ததால் இருக்கும் இடத்தினை விட்டு வெகுதூரம் சென்று வாசம் செய்தல் வேண்டும்.அது வெளிநாடாக இருக்கும் ஏனெனில் 12ல் எந்த ஒரு கிரஹம் இருந்தாலும் வெளிநாட்டு வாசம் கிடைக்கும்.

    லக்கினம் சரராசியானதால் வெளிநாட்டுப் பயணம் நிச்சயம்.

    லக்கினதிபதி சனைச்சரன் சரராசியில் உள்ளதால் சதாசஞ்சார யோகம் எனவே வெளிநாடு அடிக்கடி போய் போய் வந்திருப்பார்.

    நாடி சோதிட விதிகளின் படி ராகு குரு சந்திரன் தொட்ர்புள்ளவையாக இருந்தால் வெளிநாடு உண்டு. அந்தக் கணக்கின் படி அந்த மூன்று கிரஹங்களும் தொடர்பு
    உள்ளவையாக உள்ளன.

    9ம் அதிபதி புதன் லக்கினத்திலேயே நின்றது வெளிநாட்டுப்பயணத்திற்கு சாதகம்.

    எனவே வெளிநாடு சென்று சம்பாதித்தார்.

    இரண்டாம் அதிபதியும் லக்கினாதிபதியுமான சனைச்சரன் நீச பங்கம் அடைந்துள்ளார்.எழாம் அதிபதி சந்திரனும் நீச பங்கம் அடைந்துள்ளார்.

    30 வயதில் சுக்கிரதசா, எனவே வெளிநாட்டு வருமானம் உண்டு.
    கஜகேசரியோகம் உண்டு. லாபத்தில் தனகாரகன். எனவே வெளிநாடு சம்பாதித்து பொருள் சேர்த்தார்.
    ஆனால் உடல் நலக்குறைவால் அதிகம் செலவு செய்து சுகப்படவில்லை.

    ReplyDelete
  15. This is my first comment in classroom2007.

    1. The person is born on 19-Feb-1971 around 5.28 to 5.30am. Lagnam has 26 parals and 9th house has 30 parals.
    2.Lagnathipathi is in neecham.
    3.10th Lord and yogakarakan Sukran is weak as it is placed in 12th house.
    4. 9th house is aspected by lagnathipathi. 9th Lord Budhan is in 1st house.
    5. 11th lord - Chevvai in 11th house along with chandran and Guru. Chandran is in neecham and it is theipirai chandran.
    6. First house is aspected by Ketu and 9th Lord in 1st house is in conjunct with Rahu.

    With delay and struggles, the person would have travelled abroad and but may not have made much money.

    -Srinivasan

    ReplyDelete
  16. ஆசிரியருக்கு வணக்கம்,6 க்கும் 9 க்கும் அதிபதியான புதன் லக்கினத்தில் ராகுவுடன் கூட்டணியில் இருப்பதாலும், 9 ம் வீட்டுக்கு 8 ம் வீட்டில் தீய கிரகமான சனி உச்சம் பெற்று லக்கினத்தில் உள்ள 9 ம் அதிபதி புதனை 10 பார்வையால் பார்ப்பதாலும், 9 ம் வீட்டின் பக்கியதிபதி சுக்கிரன் 12 மறைந்ததலும் ஜாதகர் வெளிநாடு செல்ல வாய்ப்பில்லை. 9 ம் அதிபதி நல்ல நிலையில் இருந்து தீய கிரகத்தின் பார்வை பாராமல் இருந்தால் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும்.

    ReplyDelete
  17. ஐயா,
    மகர லக்னம். லக்னாதிபதி நீச்சம்.ஆனால் சர லக்னம். ஒன்பதாம் அதிபதி புதன்
    லக்னத்தில். பதினொன்றில் செவ்வாய் ஆட்சி. ஆகவே, வெளிநாடு சென்று பணம்
    சம்பாதிக்கும் யோகம் உள்ளவர்.
    அ.நடராஜன்

    ReplyDelete
  18. வெளிநாடு சென்று பொருள் ஈட்டும் யோகம் பற்றி நான் அதிகம் படித்ததில்லை. 9 மற்றும் 12 ஆகிய இரு வீடுகள் தான் இந்த விஷயத்தில் முக்கியம் என்று படித்திருக்கிறேன். அதை வைத்து இந்த புதிருக்கு விடையளிக்க முயற்சி செய்கிறேன். இந்த ஜாதகருக்கு இலக்கினாதிபதி நீசம். ஆனால் இலக்கினாதிபதியின் பார்வை இலக்கினத்தில் அமர்ந்திருக்கும் 9ம் வீட்டுக்காரரின் மேல் படுகிறது. 9ம் வீட்டுக்காரர் இருப்பது தனது வீட்டிற்கு 5ல், சர மற்றும் ஜலராசியான மகரத்தில். 12ம் வீட்டுக்கார குரு இருப்பது 12ம் வீட்டுக்கு 12ல், இலக்கினத்திற்கு 11ல். 10ம் வீட்டை இலக்கினாதிபதி தனது நேர் பார்வையில் வைத்திருக்கிறார். அதனால் இந்த ஜாதகருக்கு வெளிநாடு சென்று வேலை செய்யும் யோகம் உண்டு.

    ReplyDelete
  19. வணக்கம் குரு,

    இந்த ஜாதகருக்கு வெளி நாட்டுக்கு சென்று வேலை பார்க்கும் அல்லது அங்கேயே தங்கும் அமைப்பு உள்ளது. ஏனெனில் பத்தாமிடம் ஒரு சர ராசி ஆகும் மற்றும் பத்தாம் அதிபதி சுக்கிரன் லக்னத்திற்கு பன்னிரண்டில். ஆகவே இவர் கேது திசையிலோ அல்லது சுக்கிர திசையிலோ சென்றிருப்பார். எதை வைத்து கேதுவை சொன்னேன் என்றால் கேது இருப்பது ஏழாமிடம், அது ஒரு ஜல ராசி, வீடு கொடுத்த சந்திரன் இருப்பதும் ஒரு ஜல ராசி. அத்துடன் லக்னமும் இவருக்கு சர ராசி ஆகும்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  20. Respected Sir,

    My answer for our today's Quiz No.57:

    The native of the horoscope has not blessed to go foreign.

    Reasons:
    1. Lagna lord Saturn is debilitiated in Aries.
    2. Nineth house is not getting any benefic planets aspect.
    3. Though Nine house lord is sitting in Lagna, It is associated with Rahu and also affected by baba kathiri yoga. (between Sun and Mandhi). It's the main reason.
    4. Jupiter didn't aspect either ninth house lord or ninth house. It is the authority for overseas travelling.
    5. Yogakaraga as well as poorva puniyathipathi Venus is sitting in twelfth house from lagna along with Mandhi and is in baba kathiri yoga. It is not good sign.
    6. Second house is occupied by eighth house lord Sun. It is bad for self earning.

    Hence, All the above reasons, The native is not blessed to go abroad.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com