Devotional: தரணியைக் காத்தருளும் தவமணி
பக்தி மலர்
இன்றைய பக்தி மலரை 'சூலமங்கலம்' சகோதரிகள் பாடிய - 'சிவமணியால் வந்த தவமணி' என்ற பாடல் அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
சிவமணியால் வந்த தவமணி
(சிவமணியால் வந்த தவமணி ... அவன்தான்
சிங்காரத் தேமதுரத் தமிழ்மணி)
(சிவமணியால் வந்த ... )
செங்கமலம் பூமேலே தவழ்ந்த மணி
அன்னை சேர்த்தணைத்த பின்னால்
ஒன்று சேர்ந்த மணி
ஆறுமுகமான மணி ... அழகு தெய்வமணி
(சிவமணியால் வந்த ... )
கரந்தன்னில் வேல்பிடித்த வேலுமணி ... அவன்தான்
கருணை முகங்கள் கொண்ட அருள் மணி
தந்தைக்கு ப்ரணவம் சொன்ன குருமணி
அவன்தான் ...
தரணியைக் காத்தருளும் தனயன் சுப்ரமணி
தரணியைக் காத்தருளும் தனயன் சிவசுப்ரமணி
(சிவமணியால் வந்த ... )
சூரனை வெற்றிக்கொண்ட வீரமணி ... உலகை
சுற்றி வந்து தண்டு கொண்டு நிற்கும் ஞானமணி
ஒளவையை சோதித்து பார்த்த செல்வமணி
அவன்தான் ...
அருமறைகள் போற்றும் ... உலகின் கண்மணி
(சிவமணியால் வந்த ... )
இசையோடு கலந்திருக்கும் இசைமாமணி
இருமங்கையரை மணந்த கலைமாமணி
திருப்புகழ் பாடியப் புலவனை ... திருத்திய திருமணி
திருச்செந்தில் விசாக ... திருவிழாவின் ஷண்முகமணி
(சிவமணியால் வந்த ... )
சிவமணியால் வந்த தவமணி.
'சூலமங்கலம்' சகோதரிகள் - 'சிவமணியால் வந்த தவமணி'
------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

வணக்கம்
ReplyDeleteநல்ல அருமையான பக்தி மாலை.
இனிமையான குரலுடன் கேட்டு (youtube) ரசித்தேன்.
மிக்க நன்றி.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.
முருகா..
ReplyDeleteமுருகா..
நல்ல பக்தி மணம் கமழும் பாடல். இதன் ஒளி/ஒலி வடிவம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete