புத்தக விமர்சனம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு!
நேர்த்தியான வடிவமைப்பு, அத்தனை பக்கங்களும் வண்ணங்களில், ஏராளமான தகவல்கள், வண்ணப் படங்கள், என்று புத்தகம் அருமையாக
இருக்கிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்!
கவிஞர் வைரமுத்துவின் வைரவரிகளிலான அணிந்துரை புத்தகத்திற்கு மேலும் அணி சேர்க்கிறது!
’ரஜினிகாந்த்’ தமிழ்நாட்டு ரேஷன்கார்டுகளில் எழுதப்படாத ஒரு குடும்பப் பெயர் என்று ரஜினிகாந்தின் பெருமையை ஒற்றைவரியில் சொல்லிவிடுகிறார்அவர். சுருங்கச் சொல்லி மனதைத் தொடும்படியாக எழுதுவதுதான் கவிஞர்களுக்கே உரிய சிறப்பு. மேலும் இப்படிக் குறிப்பிடுகிறார்:
”இந்தியாவின் ஒரு கலை அடையாளம். இந்தியாவிற்கு வெளியிலும் இந்தியத் திரைப்படக் குறியீடு.”
தினத்தந்தி நாளிதழின் வரலாற்றுச் சுவடுகள் பகுதியில் பல வாரங்கள் வெளிவந்து படித்தவர்கள் அனைவரையும் பரவசப்படுத்திய தொடர்
கட்டுரைகளின் தொகுப்புத்தான் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.
”என்னுடைய முழு வாழ்க்கையையும் சரியானபடி பிரதிபலிக்கும் விதத்தில் இந்த நூல் அமைந்துள்ளது” என்று ரஜினிகாந்த் அவர்களே பாராட்டியபடி
நூல் அமைந்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும்.
தினத்தந்தி நாளிதழின் இயக்குனர் திரு. சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களின் முன்னுரை நூலிற்கு மேலும் ஒரு அணியைச் சேர்க்கிறது
என்றால் அது மிகையல்ல!
101 அத்தியாயங்கள் உள்ள இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டால், தொடர்ந்து படிக்கும்படி விறுவிறுப்பான நடையில் உள்ளது.
ரஜினிகாந்த் அவர்களின் பெற்றோர்களான தந்தையார் திரு. நானோஜிராவ், தாயார் திருமதி.ராம்பாய் ஆகியவர்களைப் பற்றிய செய்தியுடன் துவங்கி,
அவருடைய இளமைக்கால வாழ்க்கை முதல் 10 அத்தியாயங்களில் சிறப்பாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளது. திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து அவர் படித்ததில் இருந்து, அங்கே அவர் இயக்குனர் திரு.பாலச்சந்தர் அவர்களின் கவனத்தைப் பெற்றதுவரையிலான காலகட்டமும் சுவையாக அலசப் பெற்றுள்ளது.
15.8.1975ஆம் தேதியன்று வெளிவந்த ரஜினிகாந்த் அவர்களின் முதல் படமான ‘அபூர்வ ராகங்களில்’ ஆரம்பித்து 23.5.2014 அன்று வெளியான கோச்சடையான் வரை மொத்தம் 157 படங்களைப் பற்றிய தகவல்கள் விரிவாக உள்ளன.
இதுவரை அவர் நடித்த படங்கள் வகைப்படுத்தப் பெற்றுள்ளன:
தமிழ் மொழியில் 107 படங்கள்.
கன்னடம் (15), தெலுங்கு (11) மலையாளம் (9) இந்தி (13) வங்காளம் (1) ஆங்கிலம் (1) என்று பிறமொழிகளில் அவர் நடித்த படங்கள் 50.
ஆக மொத்தம் உள்ள 157 படங்களுமே, வெளிவந்த தேதியுடன் பட்டியலிடப் பட்டிருக்கிறது.
அவரைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள், அவரை வைத்து 9 படங்களை இயக்கி உள்ளார்.
அவரை வைத்து மிக அதிகமான படங்களை இயக்கியவர் என்ற
பெருமையை இயக்குனர் திரு.SP. முத்துராமன் அவர்கள் பெறுகின்றார். மொத்தம் 25படங்கள். அவர்கள் இருவரைப் பற்றியும் உள்ள செய்திகள் வண்ணப் படங்களுடன் புத்தகத்தில் சிறப்பாகப் பதிவு
செய்யப்பெற்றுள்ளது.
தினத்தந்தி நாளிதழின் ஆஸ்தான ஜோதிடரான கவிஞர் திரு.சிவல்புரி சிங்காரம் அவர்கள், ராஜின்காந்தின் ஜாதகத்தை அலசிப்
பதிவிட்டிருக்கிறார். அதுவும் சிறப்பாக உள்ளது.
சுப வருடம் கார்த்திகை மாதம் 27ஆம் தேதி (12.12.1950) இரவு 11.45 மணிக்கு ரஜினிகாந்த் பிறந்துள்ளார். செவ்வாய்க்கிழமை. சிம்ம லக்கினம்.
திருவோண நட்சத்திரம். மகர ராசி. பிறந்த ஊர் குறிப்பிடப் படவில்லை. ரஜினிகாந்தின் தந்தையார் பெங்களூர் காவல்துறையில் பணி செய்து
கொண்டிருந்தார் என்பதை வைத்து பெங்களுர்தான் அவருடைய பிறந்த ஊர் என்று நாம் முடிவு செய்துகொள்ள வேண்டியதுதான்.
ராஜயோகம் பற்றிக் குறிப்பிடும்போது, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் - 12ஆம் இடத்து விரையச் சந்திரன் ஜாதகரின் ஆறாம் வீட்டில்
அமர்ந்து பெருத்த ராஜ யோகத்தைக் கொடுத்தான் என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
ராகு கொடிப் பிடிக்கும் காலசர்ப்ப தோஷ/யோக ஜாதகம். அதனால்தான் ரஜினிகாந்த் இளமைக் காலத்தில் பல சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.
பின்னால் அத்தனையும் யோகமாக மாற்றிக் கொடுத்திருக்கிறான் 7ல் இருந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கும் ராகு.
அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். ஆகவே காசு கொடுத்து வாங்கிப் படியுங்கள்
24.5.2014 சனிக்கிழமை மாலையில்தான் புத்தகம் கடைகளில் கிடைத்தது. புத்தகம் வெளிவந்தவுடனேயே நான் அதை வாங்கிப் படித்துவிட்டேன்.
நீங்களும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதற்கு நல்லதொரு விமர்சனம் எழுதி இன்று பதிவிட்டுள்ளேன்
நூலின் தலைப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு
விலை: ரூ.200:00
பக்கங்கள்: 400 (1/8 சைஸில்)
வெளியீடு: தந்தி பதிப்பகம்
86, ஈ.வி.கே சம்பத் சாலை
வேப்பேரி
சென்னை - 600 007
போன்: 044 - 2661 8661
மின்னஞ்சல்: support@dt.co.in
இணையதள முகவரி: WWW.dailythanthi.com
அச்சிட்டோர்: ஈகிள் பிரஸ்
சென்னை - 600 013
அன்புடன்
SP.VR.சுப்பையா
கோயம்புத்தூர்
=====================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வைரமுத்துவின் வரிகளில் வசீகரமும் உண்மையும் இருக்கிறது. வாங்கிப் படிக்க வேண்டும். நன்றி, அறிமுகத்துக்கு.
ReplyDeleteசிறந்த நூலறிமுகப் பகிர்வு
ReplyDeleteஐயா வணக்கம்.
ReplyDeleteசூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாறு : புத்தக விமர்சனம் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. நீங்களும் கூட அவரின் ஜாதக கணிப்பில் "12ம் வீட்டிற்குரிய சந்திரன் 6ல் அமர்ந்து விபரீத
ராஜ யோகத்தைத் தந்துள்ளது!" என்று எழுதியுள்ளீர். அதற்கான சுட்டி இதோ!
http://classroom2007.blogspot.in/2007/04/super-stars-horoscope.html
'ரஜினி' என்றால் 'இரவு' என்று பொருள். 'ரஜினி காந்த்' என்றால் 'இரவின் தலைவன்', அதாவது 'சந்திரன்' என்று பொருள்.இந்த பெயர் மாற்றம் அவருக்கு ஒரு மிகப்பெரிய யோகத்தை அதாவது வி.ரா.யோகத்தின் முழு செயல்பாட்டை கொடுத்து உள்ளது என்றால் மிகையாகாது. நன்றி.
ரஜனியின் அரசியல் பற்றி புத்தகம் ஏதாவது சொல்கிறதா ஐயா?
ReplyDelete///Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteவைரமுத்துவின் வரிகளில் வசீகரமும் உண்மையும் இருக்கிறது. வாங்கிப் படிக்க வேண்டும். நன்றி, அறிமுகத்துக்கு.////
நல்லது.வாங்கிப் படித்துவிட்டுச் சொல்லுங்கள் நண்பரே!
///Blogger Jeevalingam Kasirajalingam said...
ReplyDeleteசிறந்த நூலறிமுகப் பகிர்வு////
நல்லது.நன்றி நண்பரே!
////Blogger venkatesh r said...
ReplyDeleteஐயா வணக்கம்.
சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாறு : புத்தக விமர்சனம் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. நீங்களும் கூட அவரின் ஜாதக கணிப்பில் "12ம் வீட்டிற்குரிய சந்திரன் 6ல் அமர்ந்து விபரீத
ராஜ யோகத்தைத் தந்துள்ளது!" என்று எழுதியுள்ளீர். அதற்கான சுட்டி இதோ!
http://classroom2007.blogspot.in/2007/04/super-stars-horoscope.html
'ரஜினி' என்றால் 'இரவு' என்று பொருள். 'ரஜினி காந்த்' என்றால் 'இரவின் தலைவன்', அதாவது 'சந்திரன்' என்று பொருள்.இந்த பெயர் மாற்றம் அவருக்கு ஒரு மிகப்பெரிய யோகத்தை அதாவது வி.ரா.யோகத்தின் முழு செயல்பாட்டை கொடுத்து உள்ளது என்றால் மிகையாகாது. நன்றி./////
பழைய பதிவை நினைவு கூர்ந்து பின்னூட்டமிட்ட மேன்மைக்கு நன்றி நண்பரே!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteரஜனியின் அரசியல் பற்றி புத்தகம் ஏதாவது சொல்கிறதா ஐயா?///
அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை சுவாமி!
Ralph Waldo Emerson, the American theologian, philosopher, essayist, poet, immanentalist and transcendalist, said, "tell me what books one loves to read, and I will tell his character".
ReplyDelete