மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.2.12

Short Story அரைப்படி அரிசியும் அடைக்கப்ப செட்டியாரும்!

  
அடியவன் எழுதி, ஒரு மாத இதழின் சென்ற மாத இதழில் (20.1.2012) வெளிவந்த சிறுகதை. நீங்களும் படித்து மகிழ, இன்று அதை வலை ஏற்றியுள்ளேன்.
அன்புடன்
வாத்தியார்


----------------------------------------------------------------------------------------------------------
சிறுகதை:  அரைப்படி அரிசியும் அடைக்கப்ப செட்டியாரும்!
---------------------------------------------------------------------------------------
                      செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்த கரைகள். எந்நேரமும் கரைகளைத் தொட்டு  ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர் நிறைந்த வாய்க்கால். வாய்க்காலை ஒட்டி இருபுறமும் கண்ணுக்கெட்டும் தூரம்வரை பச்சைப் பசேல் என்ற நெல் வயல்கள். வயல்களின் வரப்புக்களில் நெடிதுயர்ந்த தென்னை மரங்கள். வாய்க்காலை ஒட்டிய பகுதியில் ஒரு முருகன் கோவில். பார்க்க ரம்மியமாக இருந்தது அந்தச் சிறு கிராமம்.

    அந்தக் கிராமத்திற்கு ஒரு வேலையாக வந்த சாத்தப்ப செட்டியார், அவற்றை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லை. பேருந்தில் பயணித்த களைப்பு. அத்துடன் பசி. தன்னுடைய அந்தன நண்பர் வீட்டுக் கதவைத் தட்டினார்.

    நல்ல வரவேற்பு. அத்துடன் நல்ல சாப்பாட்டையும் பறிமாறினார்கள். சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு, தக்காளி ரசம், வாழைப்பூ உசிலி, உருளைக்கிழங்கு காரகறி. சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தவர்., முற்றத்துத் திண்ணையில் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டார்.

    எழுந்து பார்த்தபோது, இரவு மணி எட்டாகிவிட்டிருந்தது. பதறிவிட்டார்.

    பொய்க்கோபத்துடன் நண்பரைப் பார்த்துக்கேட்டார்:

    “என்னடா எழுப்பாமல் விட்டுவிட்டாய்? இத்தனை நேரம் தூங்கியிருக்கேனே?”

         "தூக்கம் என்பது ஒரு வரம். நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தீர் செட்டியார். அதானால்தான் எழுப்பவில்லை!”  

    பக்கத்து வீட்டிலிருந்து நாதஸ்வர ஓசை கேட்டது. மார்கழி மாதம். முகூர்த்தநாள் எதுவும் இல்லை. பின் எதற்கு நாதஸ்வர இசை? சின்ன கிராமம். சும்மா வாசித்தாலே போதும். கிராமம் முழுவதும் கேட்கும். ஆனால் ஒலிபரப்பி வைத்து ஒலி பரப்பிக்கொண்டிருந்தார்கள். இரவு நேரம் துவங்கிவிட்டதால் ஓசை அதிகமாகக் கேட்டது.

     “என்னைய்யா விஷேசம்?” செட்டியார், அய்யரிடம் குறுகுறுப்புடன் கேட்டார்.

     “அன்னதானம்” அந்தன நண்பர் பதிலுரைத்தார்.

     “இந்த இரவிலா?”

     “இல்லை. நாளை அதிகாலையில்!”

     அன்னதானம் என்றால் நல்ல காரியம்தானே என்று நினைத்த செட்டியார், தொடர்ந்து கேட்டார். “எத்தனை மூட்டை அரிசி?”

    “மூட்டையெல்லாம் கிடையாது. அரைப்படி அரிசி அன்னதானம். காலையில் மூன்று சாதுக்களுக்கு சாப்பாடு போடுவார்கள். அவ்வளவுதான்.”

    “அதற்கு எதற்கு மேளதாளம்? மேளகாரர்களுக்கு ஆகும் செலவில் ஒரு மூட்டை அரிசியாவது அன்னதானம் செய்யலாமே?”

     “மேளத்திற்கெல்லாம் செலவில்லை. அவர்களுடைய தோட்டத்தில் குடியிருப்பவர்கள். வருடத்திற்கு ஓரிரு தடவை கூப்பிடும்போது இலவசமாக வாசித்து விட்டுப் போவார்கள்”

     “அடி சக்கை,” என்று வியந்த செட்டியார் தொடர்ந்து கேட்டார், “ பந்தா பேர்வழிகளா?”

     “கஞ்சப்பேர்வழிகள். ஆனால் வீண் பெருமைக்கு ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு எங்களூரில் ஒரு பெயர் உண்டு தெரியுமா? அரைப்படி அரிசிக்காரர் வீடு என்று பெயர். அரைப்படி அரிசி அன்னதானம். விடியவிடிய மேளதாளம் என்பதின் சுருக்கம் அது!”

      “ ஆகா” என்று வியந்த செட்டியார் சிந்தனையில் ஆழ்ந்தார். தன் அண்ணன் அடைக்கப்ப செட்டியாரும் அதுபோன்ற குணமுடையவர்தானே - அவருக்கும் இந்தப் பெயர் கன கச்சிதமாக இருக்குமே என்று நினைத்தார். நினைத்ததோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அதுதான் அவருடைய அண்ணனின் போதாத நேரம். ஊருக்குத் திரும்பி வந்தவர், தன் பங்காளி நண்பர்கள் இருவரிடம் அதைச் சொல்ல, அது ஊர் முழுக்கப் பரவி, அவருடைய அண்ணன் அடைக்கப்ப செட்டியாருக்கும் அந்தப் பெயர், உண்டாகி வலுவாக நிலை கொண்டுவிட்டது.

    நம் நாயகருக்கு அடையாளப் பெயர் உண்டான கதையை விரிவாகச் சொல்லிவிட்டேன்.

    வாருங்கள் நம் நாயகருடைய வாழ்வில் நடந்த உண்மைக் கதையை இப்போது பார்ப்போம்!

                 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    அடைக்கப்ப செட்டியார் கோபத்துடன் இருந்தார். எப்போதும் இல்லாத கோபம். வீட்டிற்குள் நுழைந்து தன் செருப்பைக் கழற்றிய வேகத்திலேயே அது தெரிந்தது.

    அதைக் கவனித்த அவருடைய அன்பு மனைவி விசாலாட்சி ஆச்சி, அவரைச் சாந்தப்படுத்தும் முகமாகக் கேட்டார்கள்.

    “காஃபி சாப்பிடுகிறீர்களா? புதுப்பால் இருக்கிறது”

    புதுப்பாலைக் காய்ச்சி, டிக்காஷன் போட்டு கொதிக்கக் கொதிக்கக் கிடைக்கும் காஃபி என்றால் அண்ணன் கிறங்கிவிடுவார். ஆனால் இப்போது கிறங்கவில்லை.

    “புது விஷம் இருந்தால் கொடு. சாப்பிட்டுவிட்டு சிவனடிக்குப் போய்விடுகிறேன். நன்றி கெட்ட ஜனங்கள்”

    “யாரைச் சொல்கிறீர்கள்? எதற்கு இந்தக் கோபம்? இருக்கிற ரத்தக்கொதிப்பு பத்தாதா?”

    “நம்மூரில் இருக்கிற புதுப்பணக்காரர்களைத்தான் சொல்கிறேன். இடங்களின் விலைகள் ஏறியதில் கோடிக்கணக்கான பணத்தைத் தேற்றிவிட்டார்கள். தலை கால் புரியாமல் ஆடுகிறார்கள்”

    “அவர்கள் ஒரு பக்கம் ஆடினால், நீங்கள் ஒரு பக்கம் ஆடுங்கள். உங்கள் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு நான்கு பேர் கிடைக்காமலா போய்விடுவார் கள்?”

    “நேரம் காலம் தெரியாமல் விளையாட்டாகப் பேசாதே! என்னுடைய வருத்தம் உனக்கு எங்கே தெரியப் போகிறது?”

    “சொன்னால்தானே தெரியும்!”

    “இந்த ஊருக்கு எவ்வளவு செய்திருக்கிறேன் நான்? வங்கி வாசமே இல்லாத இந்த கிராமத்திற்கு எங்கள் வங்கிக் கிளையை நான் கொண்டு வரவில்லையா? ஆவின் பால் விற்பனை நிலையத்திற்கு ஏற்பாடு செய்யவில்லையா? பஞ்சாயத்து ஒன்றியத்துடன் போராடி, தெருவிற்குத் தெரு சாக்கடைகள் போட வைக்கவில்லையா? அரசிடம் எடுத்துச் சொல்லி ஆரம்பப் பள்ளியொன்றைக் கொண்டு வரவில்லையா? மக்கள் பயணிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வந்து போகும்படி பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யவில்லையா? இது மாதிரி நான் செய்த சேவைகளைப் பட்டியல் போட்டு போஸ்டர் அடித்தா ஒட்ட
முடியும்?”

    “எதற்குப் போஸ்டர்? நானூறு புள்ளிகள் இருக்கிற சின்ன ஊர்தானே இது. ஒரு செய்தியைக் காலையில் சொன்னால், சாயங்காலத்துக்குள் அத்தனை பேருக்கும் தெரிந்து விடுமே?”

    “பாதிப்பேர்கள் தன்னைப் போணிகள். பொது அக்கறை இல்லாதவர்கள்.....சொல்லி என்ன பிரயோசனம்?”

    “பிறகு எதற்கு கொதிப்போடு பேசுகிறீர்கள்? அடுத்தவர்களைக் குறை சொல்வதை நிறுத்துங்கள். முதலில் என்ன நடந்ததென்று சொல்லுங்கள்!”

    “நகரச்சிவன் கோவில் திருப்பணிக் கமிட்டியில் என்னைச் சேர்க்கவில்லை. தொலைகிறது என்று விட்டுவிட்டேன். திருப்பணி முடிந்து அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. விழா மலர் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். அதிலும் என்னைச் சேர்க்கவில்லை.”

     “அதற்காக சண்டை போடாதீர்கள். எதுவும் அதுவாக வரவேண்டும். நாம் கேட்டுப் பெறக் கூடாது. ஐந்துலட்சம், பத்துலட்சம் என்று நிதி கொடுத்தவர்களைத்தான் திருப்பணிக் கமிட்டியில் போட்டுள்ளார்கள். அதுபோல இதுக்கும் ஏதாவது காரணம் இருக்கும். நமக்கு உள்ள பெருமை போதும். எதையாவது கேட்டு இருக்கிற பெயரையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்”

         “அவர்களை உணரவைக்க வேண்டும்”

    “என்ன செய்யப்போகிறீர்கள்?”

     செட்டியார் தீர்க்கமாகச் சொன்னார், “பொறுத்திருந்து பார்!”

          &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    விசாலாட்சி அவர்கள் தீவிர சிவபக்தை. தோடுடைய செவியனை நான்கு காலமும் வணங்குபவர். ஆச்சியின் கணவர் அடைக்கப்ப செட்டியார், வங்கிப்பணியில், தங்களுடைய வாரணாசிக் கிளையில் மூன்று ஆண்டு காலம் பணி செய்த காலத்தில் ஆச்சிக்கு ஏற்பட்டது அந்தத் தீவிர பக்தி!

    பிறகு கர்நாடகா மாநிலத்தில், ஹூப்ளி நகரில், நான்காண்டு காலம் செட்டியார், வங்கியின் வட்ட மேலாளராகப் பணியாற்றிய காலத்தில் மேலும் அதி பக்தையானார். அங்கே இருக்கும் ராணி சென்னம்மாவின் சிலையைப் பார்த்துவிட்டுத் தானும், அந்த ராணியம்மாவைப்போலவே பட்டையாக விபூதி பூசிக் கொள்ளத் துவங்கிவிட்டார்.

    அங்கே விபூதி நம் ஊரைப் போல தூளாகக் கிடைக்காது. உருண்டை வெல்லம் போல கட்டியாக இருக்கும். கிலோக் கணக்கில் வாங்கி வைத்துக் கொள்வார். தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கெல்லாம் ஒரு கட்டியைப் பரிசாகக் கொடுத்தனுப்புவார். அங்கே உள்ள மக்களைக் காட்டி அவர்களைப்போல பூசிக்கொள்ளுங்கள் என்பார்.

     “காசியில் விஸ்வநாதன். சோலாப்பூரில் சித்தேஷ்வரன், ஹூப்ளியில் சந்திரமெளலீஸ்வரன் மதுரையில் சொக்கநாதன், எங்கள் ஊரில் சோமசுந்தரம் என்று பெயர்கள் மாறினாலும், எல்லா இடங்களிலும் நம் மனம் கவரும் ஈஸ்வரன்தான் இருக்கிறார்” என்பார் ஆச்சி

     அத்துடன் “எல்லாம் ஈசன் செயல்” என்பார். “சப்குச் ஈஷ்வர் ஹை” என்று இந்தியில் சொல்வார். “அன்னி சிவமயம்” என்று தெலுங்கில் சொல்வார் “Everything is Eshwara!” என்று ஆங்கிலத்தில் சொல்வார். அடிக்கடி சொல்வார். ஆச்சிக்கு நான்கு மொழிகள் சரளமாக வரும்.

     செட்டியாருக்கு அதற்கெல்லாம் நேரமிருக்காது. வங்கிப் பணியில் தன்னை மறந்து இருப்பார். சமயத்தில் மூழ்கிக் கிடப்பார்.

     ஆனால் பணி ஓய்வுபெற்ற பிறகு, அவர் தன்னுடைய செட்டி நாட்டு கிராமத்திற்கே வந்து விட்டார். சொந்தங்களைப் போற்ற வேண்டுமென்ற ஞானம் அவருக்கு உண்டாகிவிட்டது. அதற்குக் காரணம் அவருடைய மகனின் திருமணத்தின்போதும், அவருடைய மணிவிழாவின் போதும் நினைத்த அளவிற்கு மக்கள் வராமல் போய்விட்டார்கள். இவர் யார் வீட்டிற்கு வந்தார் என்ற ஏச்சுக்கள் வேறு! அதைப் போக்குவதற்காக கடந்த எட்டு ஆண்டுகளாக அண்ணன்
மண்ணின் மைந்தனாக தன் செட்டிநாட்டுக் கிராமத்தில்தான் வசிக்கின்றார்.

    ஆச்சியின் வற்புறுத்தலுக்காகத் தினமும் உள்ளூர் நகரச் சிவன் கோவிலுக்கு அவரும் சென்று வருவார். அதனால் ஏற்பட்ட ஈடுபாட்டில் அவரும் சிவபக்தராக மாறிவிட்டார், அப்படிப்பட்டவர் சொன்ன வார்த்தைகள் ஆச்சிக்கு வியப்பை உண்டாக்கியது.

    நாம் இருவரும் சிவன்கோவில் குடமுழுக்கின்போது இங்கே இருக்க வேண்டாம் என்றவர், சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் தங்களுடைய மகன் வீட்டிற்குப் போய்விடலாம் என்றார். கோவில் குட முழுக்கு முடிந்த பிறகு திரும்பி வருவோம் என்றார். ஆச்சிக்கு உடன்பாடு இல்லை.

    சற்றுக் கோபம் மேலிடச் சொன்னார். “என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் செய்கிறீர்களா? சில பேர் மேல் உள்ள கசப்பை இறைவனிடம் ஏன் காட்ட வேண்டும்? கோவில் குடமுழுக்கிற்கைத் தவிர்ப்பதற்காக ஊரை விட்டு ஏன் ஓட வேண்டும்?”

    “உனக்கு விருப்பமில்லை என்றால் நீ இங்கேயே இரு. என்னைப் போக வேண்டாம் என்று சொல்லாதே!”

    “பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நம் ஊர்க் கோவிலில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. அதைக் காணப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எத்தனையோ நகரத்தார்கள் தனியாளாக நின்று பல கோவில்களுக்குத் திருப்பணி செய்துள்ளார்கள். வரலாறு தெரியாதா உங்களுக்கு? உங்களைத் திருப்பணிக் குழுவில் சேர்க்கவில்லை என்பதால் வெறுப்பு அடையலாமா? ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று பலரும் கொடுக்க, ஒரு கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் வெறும் பத்தாயிரத்தைக் கொடுத்துவிட்டு, மூன்று பேர்களுக்கு இடமுள்ள குழுவில் உங்களையும் சேர்க்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? உங்களிடம் பணம் இல்லையா என்ன? நீங்கள் ஏன் ஐந்து லட்சம் அல்லது மூன்று லட்சமாவது கொடுத்திருக்கக்கூடாது? பணம் இருந்தால் மட்டும் போதுமா? பணத்தைக் கொடுக்க மனசு வேண்டும். அதுதான் முக்கியம். அந்த மனசு இருந்தால், இறைவனே உங்களுக்கு இடம் அளித்திருப்பான். அதை உணருங்கள்!”

    “நீ வியாக்கியானம் பேசாதே! வயதான காலத்தில் கையில் பணம் இருக்க வேண்டும். Money is security against death என்பார்கள். வயசான காலத்தில் ஏற்படும் அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க பணம் அவசியம்”

    “நீங்கள் நினைப்பதுபோல பணம் ஒன்றும் உங்களைக் காப்பாற்றாது. இறையருள் மட்டுமே உங்களைக் காப்பாற்றும். வயதான காலத்தில் வாதநோய் வந்தால் என்ன செய்வீர்கள்? எது உங்களைக் காப்பாற்றும்? வாதநோய் வந்தால் உங்கள் சோற்றையே நீங்கள் அள்ளித்திங்க முடியாது. அதை நீங்கள் உணருங்கள். எங்கள் அப்பச்சி வாத நோய் வந்து பட்ட சிரமத்தை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்”

    “விதிக்கப்பட்டு இருந்தால் வரும். விதிக்கப்பட்டுள்ளதற்குப் பெயர்தான் விதி. நீ சொல்வதற்காக நான் இருக்கப்போவதில்லை. என்னைக் குழப்பாதே!
மன ஆறுதலுக்காக நான் போகப்போகிறேன்”

    “பிறகு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்” என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னஆச்சி அத்துடன் நிறுத்திக்கொண்டு விட்டார்.

     என்ன ஆயிற்று? செட்டியார் குடமுழுக்கிறகு இருந்தாரா? அல்லது இல்லையா?

     இறைவனின் சித்தம் வேறுவிதமாக இருந்தது. அதுதான் நடந்தது!

                            ++++++++++++++++++++++++++++++++
  
     அன்று இரவே, காரைக்குடிக்குச் சென்று, சென்னைக்குச் செல்லும் தனியார் பேருந்தில் ஏறிய அடைக்கப்ப செட்டியார், திருமயத்தைக்கூடத் தாண்டவில்லை. பேருந்து விபத்தில் சிக்கிக் கொண்டுவிட்டது. பேருந்தின் முன் பகுதியில் இருந்த எட்டு பேர்களுக்கு சரியான அடி. முதல் இருக்கையில் இருந்த செட்டியார் விபத்தின் வேகத்தில் தூக்கி எறியப்பட்டதில், தடுப்புக் கதவையும் தாண்டி படிக்கட்டு அருகில் தடால் என்று விழுந்துவிட்டார். இரத்தக் காயம் எதுவுமில்லை. ஆனால் உடல் முழுக்க பலத்த அடி. ஊமைக் காயங்கள்.

    அடிபட்ட அனைவரையும், 108 அம்புலன்சில் ஏற்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். தகவல் தெரிந்த ஆச்சி தன் உறவினர்கள் சிலருடன் மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்தார்.

    தன் கணவருக்குப் பெரிய ஆபத்து ஒன்றுமில்லை என்று தெரிந்த ஆச்சி சற்று நிம்மதி அடைந்தார். தனியார் மருத்துவமனை ஒன்றில் மாற்றி சேர்க்கப்பெற்ற செட்டியாருக்கு பத்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஒரு மாதம் ஓய்வெடுங்கள் என்று சொல்லி, மருந்து மாத்திரைகளுடன் செட்டியாரைத் திருப்பி அனுப்பிவைத்தார்கள். தப்பித்தோமடா சாமி என்று
மனக்கலக்கம் நீங்கிய செட்டியாரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

    “என் தாலி பாக்கியமும், சோமசுந்தரக் கடவுளிடம் நான் கொண்டுள்ள பக்தியும்தான் உங்களைக் காப்பாற்றியது” என்ற ஆச்சியின் வார்த்தைகளுக்கு அவர் ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்து விட்டார். அதை உண்மை என்றும் உணர்ந்தார்.

                       ++++++++++++++++++++++++++++++++++++++++++++

         காலதேவனின் ஓட்டத்தில் நாற்பது நாட்கள் சென்றதே தெரியவில்லை. குடமுழுக்கு நாளும் வந்தது.

    யாகசாலை பூஜைகள் எல்லாம் முடிந்து. மகா பூர்ணாகுதியும், தீபாராதனையும் நடந்தது. பஞ்சவாத்தியங்கள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்கிட, ராஜகோபுரம், விமானம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சிவ கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். தொடர்ந்து மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. ஓதுவார்கள், சிவாச்சாரியார்கள், நகரத்தார்கள், நாட்டார்கள் என்று திரளான மக்கள் கலந்து கொள்ள குடமுழுக்கு சிறப்பாக நடந்து முடிந்தது.

    ஊருணிக் கரைக்கு எதிரில் இருந்த திடலில் பெரிய கொட்டகை போடப்பெற்று, வந்திருந்த மக்கள் அனைவருக்கும் காலை, மற்றும் மதிய உணவுகள் சிறப்பாக வழங்கப்பெற்றது.

    அன்று மாலை, கோவில் உள்ள அலங்கார மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திருப்பணிக் குழுவினர் மூவருடன், நம் நாயகர் அடைக்கப்ப செட்டியாருக்கும் சேர்த்து சிறப்பு செய்யப்பெற்றது. பொன்னாடை, மாலை, மற்றும் நினைவுப்பரிசு என்று கலகலக்க வைத்துவிட்டார்கள். திரளான மக்களின் கைகுலுக்கல் பாராட்டு வேறு.

    செட்டியார் ஆடிப்போய்விட்டார். நமக்கு ஏன் சிறப்பு செய்தார்கள் என்பது அவருக்குப் பிடிபடவில்லை. கண்கள் பனித்துவிட்டன.

    இத்தனை நாட்களாக வீட்டில் ஓய்வில் இருந்தவர், இன்று தானே கோவிலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். அதனால் நடந்தது எதுவும் அவருக்குத் தெரியாமல் போய்விட்டது.

    அவரைச் செல்ல விடாமல் திருப்பி ஊருக்கே கொண்டுவந்துவிட்ட சிவனின் மகிமையையும், சொற்ப காயங்களுடன் அவரைக் காப்பாற்றிய கருணையும், அதைவிட மேலாகத் தன் தாலிபாக்கியத்தைக் காப்பாற்றிய மேன்மையையும் எண்ணி எண்ணி, அதிசயித்த சாலா ஆச்சி அவர்கள், கோவிலின் நடப்பு நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். கோவில் குடமுழுக்கிற்கு தங்கள் வீட்டின் சார்பில் ஏதாவது செய்ய வேண்டும் என்னும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். அன்னதானச் செலவு  முழுவதையும், அத்துடன் 48 நாட்கள் நடைபெறவுள்ள மண்டல பூஜைக்கான பிரசாதச் செலவு முழுவதையும்
தான் ஏற்றுக்கொள்வதாகவும், எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார். உத்தேசமாகப் பத்து லட்சம் ஆகும் என்றார்கள். அன்றே ஒரே காசோலையில் அந்தப் பணத்தை ஆச்சி அவர்கள் கொடுத்துவிட்டார்கள். தன் கணவரின் பெயரில் அதை வரவு வைத்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்கள். நடந்து அதுதான்.

    அது ஆச்சியின் சொந்தப் பணம். தன் தாய்வீட்டிலிருந்து வந்த பணத்தை அவர் வங்கியில் சேமித்து வைத்திருந்தார். அதனால் யாரையும் கேட்காமல் அவரால் கொடுக்க முடிந்தது. தன் கணவர், மற்றும் மகனிடம்கூட அதை அவர் வெளிபடுத்தவில்லை.

    குட முழுக்கிற்கு அடுத்த நாள்தான் அடைக்கப்ப செட்டியாருக்கு அது தெரிய வந்தது. கண்கள் பனிக்க இருகரம் கூப்பித் தன் மனைவியை வணங்கினார். என்ன படித்து என்ன பயன்? உனக்குள்ள சிந்தனையும், பெருந்தன்மையும் எனக்கு இல்லாமல் போய்விட்டதே என்று சொல்லி வருந்தினார்.

    அதையெல்லாம் விடுங்கள் நம் நாயகருக்கு ஊரில் இப்போது என்ன பெயர் தெரியுமா?

    “அன்னதானச் செம்மல் அடைக்கப்ப செட்டியார்”   

    மேடை போடாமல், உள்ளூர் மக்களாக வழங்கிய பெயர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++                 
                      
வாழ்க வளமுடன்!

63 comments:

  1. நல்ல கதை, நன்றி ஐயா. உங்கள் கதைகளில் ஆச்சிகளே எப்பொழுதும் தங்கள் கணவர்களைவிட, அன்பும், பண்பும், அறிவும், பெருந்தன்மையும் உள்ளவர்களாக சித்தரிக்கபடுகிறார்கள், தாய்குலத்தின் சார்பில் அதற்கு நன்றிகள். :)))))))))))))) உங்கள் சமீபத்திய பயணங்கள் கதைக்கு பின்னணி அமைத்திருக்கிறது.
    "தன்னைப் போணிகள்"? கேள்விப் பட்டிராத சொற்பதம்.

    ReplyDelete
  2. வணக்கம் வாத்தியார் ஐயா!

    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதனை நிருபிக்கும் வகையில் கதையை அமைத்து உள்ளீர்கள் ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அன்புள்ள ஐயா அவர்களுக்கு:

    கதை = பாடம் = படம்
    இம்மூன்றும் ஒரே நேரத்தில் மனகண்ணில் ஓடிக்கொண்டு இருந்தது.


    எனக்கு பிடித்த கதபாத்திரம் : ஆச்சி தான்.
    உங்கள் எழுத்துக்குள் ஆண்டவன் ஒளி(ர்)ந்து கொண்டிருக்கிறான் .

    ஓம் சிவ சிவ ஓம் ...

    ReplyDelete
  4. உங்கள் எல்லா கதைகளிலுமே ஆச்சிகள்தான் சரியாகச் சிந்திப்பவர்களாகவும், செட்டியார்கள் கொஞ்சம் 'ஈகோ'பிடித்தவர்களாகவுமே இருக்கிறார்கள். அது ஏனோ? அப்புறம் செட்டியார்கள் திருந்த ஒரு விபத்தைச் சொல்கிறீர்கள். மேங்கோப்பு மேனாவிலேயும் விபத்து.

    "அரைப்படி அரிசிதானம், விடிய விடிய மேளதாளம்" என்ற சொல்லடைவுக்குக் கொடுத்த விளக்கக் கதை அருமை.'வடிக்கிறது ஒழக்கானாலும் முழக்கற‌து கடைவீதிக்குக் கேட்கும்' என்றும் இதே சொல்லடைவு புழங்குகிறது.

    பிராமண அகத்துச் சாப்பாட்டு விசேஷத்தை அடிக்கடி எடுத்துக் கூறுகிறீர்கள். 'மோர்க்குழம்பு, வாழைப்பூ பருப்பு உசிலி, உருளைக் காரக் கறி ரெடி'ன்னு போர்டு வைத்துக்கொண்டு காத்து இருக்கிறேன் வருவாரைத்தான் காணும். ஒரு அன்பர்கள் 'மீட்' ஏற்பாடு செய்யுங்கள். அசத்திவிடுவோம்.

    எளிமையான நடை. மனதை நெகிழவைக்கும் உரையாடல். எந்த பாவத்தில் பாத்திரங்கள் பேசுகின்றனவோ அதற்கேற்ற சரியான சொற்கள்.குழப்பமில்லாத‌
    நிகழ்ச்சித் தொகுப்பு.உங்கள் எழுத்துக்களில் இருந்து கற்க வேண்டியது இன்னும் அநேகம் உள்ளது ஐயா!

    நன்றி!
    பி கு: சொல்லடைவு படித்தவுடன் என் கவனம் அதன் மீது திரும்பிவிட்டது. மாணவர் மலருக்கு சொல்லடைவுகளின் ஒரு தொகுப்பினை அனுப்ப எண்ணியுள்ளேன்.

    ReplyDelete
  5. /////////Blogger sundari said...
    good story sir////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. ////////Blogger தேமொழி said...
    நல்ல கதை, நன்றி ஐயா. உங்கள் கதைகளில் ஆச்சிகளே எப்பொழுதும் தங்கள் கணவர்களைவிட, அன்பும், பண்பும், அறிவும், பெருந்தன்மையும் உள்ளவர்களாக சித்தரிக்கபடுகிறார்கள், தாய்குலத்தின் சார்பில் அதற்கு நன்றிகள். :)))))))))))))) உங்கள் சமீபத்திய பயணங்கள் கதைக்கு பின்னணி அமைத்திருக்கிறது.
    "தன்னைப் போணிகள்"? கேள்விப் பட்டிராத சொற்பதம்.////////

    “மாதராய்ப் பிறப்பற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்றார் பாரதியார். அதைவிடப் உயர்வாகப் பெண்களை வேறு எவராலும் சொல்ல முடியுமா என்ன? பெண்கள் அன்பும், பண்பும், அறிவும், பெருந்தன்மையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதை வலியுறுத்தித்தான் அடிக்கடி கதை எழுதுகிறேன். சில கதைகள் ஆண்களின் மேன்மையைக் குறித்தும் எழுதியுள்ளேன். உதாரணம் ‘எது சொத்து’ என்னும் கதை!

    தன்னைப் போணிகள் என்பது, தன்னை மட்டும் பேணுபவர்கள் (selfish people) என்பதன் வட்டார வழக்குச் (slang) சொல்.

    ReplyDelete
  7. /////Blogger kannan said...
    வணக்கம் வாத்தியார் ஐயா!
    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதனை நிருபிக்கும் வகையில் கதையை அமைத்து உள்ளீர்கள் ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி.//////

    நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  8. /////Blogger narayana said...
    அன்புள்ள ஐயா அவர்களுக்கு:
    கதை = பாடம் = படம்
    இம்மூன்றும் ஒரே நேரத்தில் மனகண்ணில் ஓடிக்கொண்டு இருந்தது.
    எனக்கு பிடித்த கதபாத்திரம் : ஆச்சி தான்.
    உங்கள் எழுத்துக்குள் ஆண்டவன் ஒளி(ர்)ந்து கொண்டிருக்கிறான் .
    ஓம் சிவ சிவ ஓம் .../////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  9. ///////Blogger kmr.krishnan said...
    உங்கள் எல்லா கதைகளிலுமே ஆச்சிகள்தான் சரியாகச் சிந்திப்பவர்களாகவும், செட்டியார்கள் கொஞ்சம் 'ஈகோ'பிடித்தவர்களாகவுமே இருக்கிறார்கள். அது ஏனோ? அப்புறம் செட்டியார்கள் திருந்த ஒரு விபத்தைச் சொல்கிறீர்கள். மேங்கோப்பு மேனாவிலேயும் விபத்து.///////

    எல்லாக் கதைகளிலும் என்று சொல்ல முடியாது. மேங்கோப்பு மேனாவில் விபத்தால் ஏற்பட்ட உடற்குறைபாடு, நாயகன் திருந்த உதவுகிறது என்றால், இந்தக் கதையில், ஏற்பட்ட சிறு விபத்து, நாயகன் ஊருக்குத் திரும்ப வழி செய்கிறது. அவ்வளவுதான். ஆச்சி குடமுழுக்கிற்குக் கொடுத்த பணம்தான் கதையின் உச்ச நிகழ்வு!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    //////"அரைப்படி அரிசிதானம், விடிய விடிய மேளதாளம்" என்ற சொல்லடைவுக்குக் கொடுத்த விளக்கக் கதை அருமை.'வடிக்கிறது ஒழக்கானாலும் முழக்கற‌து கடைவீதிக்குக் கேட்கும்' என்றும் இதே சொல்லடைவு புழங்குகிறது.
    பிராமண அகத்துச் சாப்பாட்டு விசேஷத்தை அடிக்கடி எடுத்துக் கூறுகிறீர்கள். 'மோர்க்குழம்பு, வாழைப்பூ பருப்பு உசிலி, உருளைக் காரக் கறி ரெடி'ன்னு போர்டு வைத்துக்கொண்டு காத்து இருக்கிறேன் வருவாரைத்தான் காணும். ஒரு அன்பர்கள் 'மீட்' ஏற்பாடு செய்யுங்கள். அசத்திவிடுவோம்.
    எளிமையான நடை. மனதை நெகிழவைக்கும் உரையாடல். எந்த பாவத்தில் பாத்திரங்கள் பேசுகின்றனவோ அதற்கேற்ற சரியான சொற்கள்.குழப்பமில்லாத‌
    நிகழ்ச்சித் தொகுப்பு.உங்கள் எழுத்துக்களில் இருந்து கற்க வேண்டியது இன்னும் அநேகம் உள்ளது ஐயா!
    நன்றி!
    பி கு: சொல்லடைவு படித்தவுடன் என் கவனம் அதன் மீது திரும்பிவிட்டது. மாணவர் மலருக்கு சொல்லடைவுகளின் ஒரு தொகுப்பினை அனுப்ப எண்ணியுள்ளேன்.///////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி. சொல்லடை தொகுப்பா? அனுப்புங்கள்.

    ReplyDelete
  10. மிக அருமையாக எழுதப்பட்டுள்ள கதை. அப்படியே செட்டிநாட்டு கிராமத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். செட்டிநாட்டு சிவன் கோயில்கள் சிலவற்றுக்கு நான் சென்றிருக்கிறேன். அவை எவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். எங்கு உண்மையான பக்தியும், ஈடுபாடும் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் ஈசன் நிலைகொண்டிருப்பான். செட்டியார் ஒன்றும் நாத்திகரல்ல. ஆனால் ஆச்சியின் அசைக்கமுடியாத நம்பிக்கையும் பக்தியும்தான் செட்டியாரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. நடந்த நிகழ்ச்சிகளுக்கு மூல காரணத்தை அறிந்த ஆச்சி, நிலையற்ற பணமோ, செல்வமோ பெரிதல்ல, செய்யும் புண்ணிய காரியங்களே நமக்கு மறுமைக்கு வழிகாட்டும் என்று உணர்ந்து, கணவர் பணத்தில் கைவைக்காமல், தன் பிறந்த வீட்டுப் பணத்தைக் கொடுத்து, புகுந்த வீட்டுக்கும் கணவருக்கும் பெரும் பேறு கிடைக்கச் செய்துவிட்டார். நகரத்தார் திருப்பணி செய்யாத சிவாலயங்கள் தமிழ் நாட்டில் எங்கும் கிடையாது என்பது நாடறிந்த உண்மை. இன்னமும் பக்தியும், இறையுணர்வும், பண்பாட்டுத் தொடர்வும் அந்தப் பகுதியில் நிலவுவதால்தான் "தென்னாடுடைய சிவனே" என்று அனைவராலும் போற்றப்படுகிறது.

    ReplyDelete
  11. நல்லக் கதை அதுவும் உண்மைக் கதை
    'தன்னைப் பேணிகளாக' இருப்பவர்களும்
    பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்று
    நினைப்பவர்களுக்கும் நல்லப் பாடங்களை
    சொல்லியும்... இறைவனின் அருளே உயர்வானது
    என்பதை உணர்ந்தால் மற்றதெல்லாம் சும்மா
    என்பதைப் புரிந்துக் கொள்ள செய்த
    ஆச்சியின் செயல் அருமை...
    நல்ல சிவ பக்தையல்லவா!

    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  12. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    அருமையான ஆக்கம்,மாங்கல்ய பாக்கியம் நன்கு செயல்பட்டுள்ளது. மிகவும்
    சிறப்பாக உள்ளது. நன்றி!

    ReplyDelete
  13. மனிதநேயமும் ஈகையும் நல்ல மனிதனுக்கு அடையாளம். ஆண் பெண் வேறுபாடு இல்லை. இதில் ஆச்சியார் அப்படி வருகிறார். குடும்பத்தில் ஆணை விட பெண் இந்த குணத்தை கையாண்டால், பெயரும் புகழும் அவரின் கணவன் மார்களுக்கே சென்றடையும் .இதை தான் நம் நாட்டு பெண்கள் விரும்புகிறார்கள்.கணவனின் கெட்ட குணத்தை மறைத்து சில நல்ல காரியங்கள் செய்து அது தன் கணவன் செய்தது என்று சொல்லி தங்களின் பெயரை மறைத்து கணவனுக்கு குடும்பத்தாரிடமும் உறவினர்கள் மத்தியிலும் ஊரிலும் பெயரும் மரியாதையும் பெற செய்கிறார்கள்.இது நம் மண்ணின் மகிமை.

    கதை வெளியிட்டு கதை எழுதவும் பாடம் நடத்துகிறிர்கள் நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  14. Good morning Sir,

    Very nice story. i will tell it to my children. they like your stories very much. i read past 4 months this site only. your blog always very intesting and very useful. thankyou sir for your great service.
    by
    chithrakamaraj

    ReplyDelete
  15. //////Blogger eswari sekar said...
    good story sir////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  16. ///////Blogger Thanjavooraan said...
    மிக அருமையாக எழுதப்பட்டுள்ள கதை. அப்படியே செட்டிநாட்டு கிராமத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். செட்டிநாட்டு சிவன் கோயில்கள் சிலவற்றுக்கு நான் சென்றிருக்கிறேன். அவை எவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். எங்கு உண்மையான பக்தியும், ஈடுபாடும் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் ஈசன் நிலைகொண்டிருப்பான். செட்டியார் ஒன்றும் நாத்திகரல்ல. ஆனால் ஆச்சியின் அசைக்கமுடியாத நம்பிக்கையும் பக்தியும்தான் செட்டியாரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. நடந்த நிகழ்ச்சிகளுக்கு மூல காரணத்தை அறிந்த ஆச்சி, நிலையற்ற பணமோ, செல்வமோ பெரிதல்ல, செய்யும் புண்ணிய காரியங்களே நமக்கு மறுமைக்கு வழிகாட்டும் என்று உணர்ந்து, கணவர் பணத்தில் கைவைக்காமல், தன் பிறந்த வீட்டுப் பணத்தைக் கொடுத்து, புகுந்த வீட்டுக்கும் கணவருக்கும் பெரும் பேறு கிடைக்கச் செய்துவிட்டார். நகரத்தார் திருப்பணி செய்யாத சிவாலயங்கள் தமிழ் நாட்டில் எங்கும் கிடையாது என்பது நாடறிந்த உண்மை. இன்னமும் பக்தியும், இறையுணர்வும், பண்பாட்டுத் தொடர்வும் அந்தப் பகுதியில் நிலவுவதால்தான் "தென்னாடுடைய சிவனே" என்று அனைவராலும் போற்றப்படுகிறது.//////

    உண்மைதான். நகரத்தார்கள் செய்த கோவில் திருப்பணிகளை முன்பு ஒருவர் அருமையாகத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டார். அவர் பெயர் சர்மா. ராஜா சர் அண்ணாமல செட்டியாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் அவர். கதையைப் பாராட்டி எழுதிய மேன்மைக்கு நன்றி கோபாலன் சார். எழுத்தாளனுக்குப் பாராட்டுக்கள்தான் ஊக்க மருந்து!

    ReplyDelete
  17. /////Blogger தமிழ் விரும்பி said...
    நல்லக் கதை அதுவும் உண்மைக் கதை 'தன்னைப் பேணிகளாக' இருப்பவர்களும் பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கும் நல்லப் பாடங்களை சொல்லியும்... இறைவனின் அருளே உயர்வானது என்பதை உணர்ந்தால் மற்றதெல்லாம் சும்மா என்பதைப் புரிந்துக் கொள்ள செய்த ஆச்சியின் செயல் அருமை... நல்ல சிவ பக்தையல்லவா!
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  18. //////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, அருமையான ஆக்கம்,மாங்கல்ய பாக்கியம் நன்கு செயல்பட்டுள்ளது. மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி!//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  19. //////Blogger thanusu said...
    மனிதநேயமும் ஈகையும் நல்ல மனிதனுக்கு அடையாளம். ஆண் பெண் வேறுபாடு இல்லை. இதில் ஆச்சியார் அப்படி வருகிறார். குடும்பத்தில் ஆணை விட பெண் இந்த குணத்தை கையாண்டால், பெயரும் புகழும் அவரின் கணவன் மார்களுக்கே சென்றடையும் .இதை தான் நம் நாட்டு பெண்கள் விரும்புகிறார்கள்.கணவனின் கெட்ட குணத்தை மறைத்து சில நல்ல காரியங்கள் செய்து அது தன் கணவன் செய்தது என்று சொல்லி தங்களின் பெயரை மறைத்து கணவனுக்கு குடும்பத்தாரிடமும் உறவினர்கள் மத்தியிலும் ஊரிலும் பெயரும் மரியாதையும் பெறச் செய்கிறார்கள்.இது நம் மண்ணின் மகிமை.
    கதை வெளியிட்டு கதை எழுதவும் பாடம் நடத்துகிறிர்கள் நன்றிகள் அய்யா./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனூர் ராசிக்காரரே!

    ReplyDelete
  20. //////Blogger chithrs said...
    Good morning Sir,
    Very nice story. i will tell it to my children. they like your stories very much. i read past 4 months this site only. your blog always very intesting and very useful. thankyou sir for your great service.
    by chithra kamaraj/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  21. ஐயா வணக்கம்,

    நிதர்சனமான உண்மை பணம் படைத்தவர்களிடம் மனம் இருப்பதில்லை.மனம் இருப்பவர்களிடம் பணம் இருப்பதில்லை.இது தான் இறைவனின் படைப்பின் ரகசியம்.சிலருக்குப் பூர்வபுண்ணியவசத்தால் இரண்டும் சிறப்பாக அமைந்துவிடுகிறது.அவர்களும் இறைவனின் திருப்பதம் பணிந்து மனமுவந்து பல திருப்பணிகள் செய்து வீடுபேற்றை அடைந்துவிடுகிறார்கள்.எல்லாம் நீங்கள் சொல்வதுபோல் அவனவன் வாங்கிவந்த வரம்.எங்கள் ஊரில் உள்ள அருள்மிகு மலைமருந்தீஸ்வரர் ஆலய மகாகும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடந்தேறியது.இறையுணர்வு மிக்க ஆன்மிக அன்பர்களின் அளித்த பொருள் உதவியினால் சுமார் 6 கோடி மதிப்பீட்டில் வெகுவிமரிசையாக கடந்த ஞாயிறன்று{29.01.2012} நடந்தது.

    ReplyDelete
  22. Dear Vaathiyar,

    We will get our baby on 7th FEB- Tuesday. Could you please give us the good time on that day?

    I see 4 Grahas are exalted and I request you to give us the right lagnam to avail most of the benefits of this.

    Please help.

    Thanks
    Saravanan

    ReplyDelete
  23. /////Blogger Sundar said...
    Ayya Nice story/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. /////Blogger S.M.Bala murugan said...
    Sir,
    Excellent story.
    Thanks - Bala///////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி பாலா!

    ReplyDelete
  25. /////Blogger Rajaram said...
    ஐயா வணக்கம்,
    நிதர்சனமான உண்மை பணம் படைத்தவர்களிடம் மனம் இருப்பதில்லை.மனம் இருப்பவர்களிடம் பணம் இருப்பதில்லை.இது தான் இறைவனின் படைப்பின் ரகசியம்.சிலருக்குப் பூர்வபுண்ணியவசத்தால் இரண்டும் சிறப்பாக அமைந்துவிடுகிறது.அவர்களும் இறைவனின் திருப்பதம் பணிந்து மனமுவந்து பல திருப்பணிகள் செய்து வீடுபேற்றை அடைந்துவிடுகிறார்கள்.எல்லாம் நீங்கள் சொல்வதுபோல் அவனவன் வாங்கிவந்த வரம்.எங்கள் ஊரில் உள்ள அருள்மிகு மலைமருந்தீஸ்வரர் ஆலய மகாகும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடந்தேறியது.இறையுணர்வு மிக்க ஆன்மிக அன்பர்களின் அளித்த பொருள் உதவியினால் சுமார் 6 கோடி மதிப்பீட்டில் வெகுவிமரிசையாக கடந்த ஞாயிறன்று{29.01.2012} நடந்தது.//////

    நல்லது. தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////Blogger Saravana said...
    Dear Vaathiyar,
    We will get our baby on 7th FEB- Tuesday. Could you please give us the good time on that day?
    I see 4 Grahas are exalted and I request you to give us the right lagnam to avail most of the benefits of this.
    Please help.
    Thanks
    Saravanan/////

    லக்கினத்தைத் தேர்வு செய்யலாம். நவாம்சத்திற்கு என்ன செய்வீர்கள்? லக்கினத்தில் உச்சமாக உள்ளவை நவாம்சத்தில் நீசமாகும் அபாயம் உள்ளது தெரியுமா?
    ஆகவே: Leave it to The Almighty! அவர் பார்த்துக்கொள்வார்! குழந்தை நல்லபடியாகப் பிறந்து, தாயும் சேயும் நலமாக இருப்பதற்கு மட்டும் இப்போது பிரார்த்தனை செய்யுங்கள்!

    ReplyDelete
  27. நல்லதொரு கதைப் பதிவிற்கு நன்றி ஐயா.

    கடந்த வாரத்தில் தான் ' பிரிவோம் சந்திப்போம்' திரைப்படம் பார்த்தோம். செட்டி நாட்டு பழக்க வழக்கங்களை அழகாக காட்டியிருந்தார் இயக்குனர் கரு.பழனியப்பன்.

    -Sathish K

    ReplyDelete
  28. வணக்கம் ஐயா,
    அருமையான கதை ஐயா...உண்மையில் விசாலாட்சியின் ஆச்சி போன்று பக்தியும்,பெருந்தன்மையும் கொண்டவர்களை இன்றைய காலக்கட்டத்தில் காண்பதற்கே அரிதாகிக் கொண்டே போகின்றது...சிறிய தொகையோ பெரிய தொகையோ இறைபணிக்காக கொடுப்பதற்கு "பணம்" தேவையில்லை "மனம்" மட்டுமிருந்தால் போதும் என்பதை சிவபெருமானும் அவரது பக்தையும் இங்கே உணர்த்தி விட்டார்கள்!!!
    //மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சிவ கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். தொடர்ந்து மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. ஓதுவார்கள், சிவாச்சாரியார்கள், நகரத்தார்கள், நாட்டார்கள் என்று திரளான மக்கள் கலந்து கொள்ள குடமுழுக்கு சிறப்பாக நடந்து முடிந்தது.//
    ஐயா,ஒரு சிறிய சந்தேகம் நகரத்தார்கள் என்றால் செட்டியார்கள் என்று நினைக்கின்றேன்...நாட்டார்கள் என்றால் நாடார்களை தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?காரைக்குடியில் நாடார்கள் அதிகம் வசிப்பது ஒரு புது தகவல்...

    ReplyDelete
  29. வணக்கம் ஐயா,

    கதை மிக அருமை, உங்களின் ஒவ்வொரு கதையிலும் கடைசியில் ஒரு டச்சிங் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்துவிடும்.

    ReplyDelete
  30. Good Story Sir. Its truth that God's grace only will save us that the earned money.

    To have that grace, we insist ourselves to do 'Dhanams' time to time.

    ReplyDelete
  31. Dear Vaathiyar,
    We will get our baby on 7th FEB- Tuesday. Could you please give us the good time on that day?
    I see 4 Grahas are exalted and I request you to give us the right lagnam to avail most of the benefits of this.
    Please help.
    Thanks
    Saravanan/////

    லக்கினத்தைத் தேர்வு செய்யலாம். நவாம்சத்திற்கு என்ன செய்வீர்கள்? லக்கினத்தில் உச்சமாக உள்ளவை நவாம்சத்தில் நீசமாகும் அபாயம் உள்ளது தெரியுமா?
    ஆகவே: Leave it to The Almighty! அவர் பார்த்துக்கொள்வார்! குழந்தை நல்லபடியாகப் பிறந்து, தாயும் சேயும் நலமாக இருப்பதற்கு மட்டும் இப்போது பிரார்த்தனை செய்யுங்கள்!
    ==================================
    Dear Sir,

    Sure sir. Will pray god for that. That is most important than all.

    Thanks for your Advise
    Saravanan -Coimbatore

    ReplyDelete
  32. Uma S umas1234@gmail.com
    Uma S
    to me
    கதை உங்கள் வழக்கமான சுவாரசியமான எழுத்து நடையில் இருந்தது.

    அவர் செய்த சிலவற்றை பட்டியல் போட்டிருந்தீர்கள், ஆரம்பப் பள்ளியோன்று கொண்டு வந்தது போன்ற சில செயல்கள். அவையெல்லாம் நல்ல செயல்கள் கணக்கில் வராதா? கோயிலுக்கு ஐந்து / பத்து லட்சம் கொடுப்பது மட்டும்தான் தர்மக்கணக்கில் வருமா?

    கர்நாடகத்தில் ஆச்சி இருந்திருந்தும் கன்னடம் தெரியாதா?

    S.உமா, தில்லி

    ReplyDelete
  33. கோவிலுக்கு செய்யும் நற்பணிகள் அதனால் எற்படும் புண்ணியம் பற்றி அருமையாக தங்களது நடையில் எழுதியுள்ள கதை மிகசிறப்பு

    நன்றிகள்.

    ReplyDelete
  34. /////Blogger Sathish K said...
    நல்லதொரு கதைப் பதிவிற்கு நன்றி ஐயா.
    கடந்த வாரத்தில் தான் ' பிரிவோம் சந்திப்போம்' திரைப்படம் பார்த்தோம். செட்டி நாட்டு பழக்க வழக்கங்களை அழகாக காட்டியிருந்தார் இயக்குனர் கரு.பழனியப்பன்.
    -Sathish K/////

    அந்த இயக்குனர் பழநியப்பன், அரசியல் பிரமுகர் பழ. கருப்பையாவிற்கு நெருங்கிய உறவு!

    ReplyDelete
  35. /////Blogger Sreenivasan said...
    nice :)/////

    Thanks!!!!!

    ReplyDelete
  36. /////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    அருமையான கதை ஐயா...உண்மையில் விசாலாட்சியின் ஆச்சி போன்று பக்தியும்,பெருந்தன்மையும் கொண்டவர்களை இன்றைய காலக்கட்டத்தில் காண்பதற்கே அரிதாகிக் கொண்டே போகின்றது...சிறிய தொகையோ பெரிய தொகையோ இறைபணிக்காக கொடுப்பதற்கு "பணம்" தேவையில்லை "மனம்" மட்டுமிருந்தால் போதும் என்பதை சிவபெருமானும் அவரது பக்தையும் இங்கே உணர்த்தி விட்டார்கள்!!!
    //மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சிவ கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். தொடர்ந்து மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. ஓதுவார்கள், சிவாச்சாரியார்கள், நகரத்தார்கள், நாட்டார்கள் என்று திரளான மக்கள் கலந்து கொள்ள குடமுழுக்கு சிறப்பாக நடந்து முடிந்தது.//
    ஐயா,ஒரு சிறிய சந்தேகம் நகரத்தார்கள் என்றால் செட்டியார்கள் என்று நினைக்கின்றேன்...நாட்டார்கள் என்றால் நாடார்களை தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?காரைக்குடியில் நாடார்கள் அதிகம் வசிப்பது ஒரு புது தகவல்.///////

    இல்லை. நகரத்தார் அல்லாத பெருமக்கள் அனைவரையும் நாட்டார்கள் என்று குறிப்பிடுவார்கள்.

    ReplyDelete
  37. /////Blogger arumuga nainar said...
    வணக்கம் ஐயா,
    கதை மிக அருமை, உங்களின் ஒவ்வொரு கதையிலும் கடைசியில் ஒரு டச்சிங். கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்துவிடும்.//////

    சிறுகதைக்கான இலக்கணம்:
    Start the story in the first line
    Do not allow the reader to go out from the story in such a way narrate the story
    Finish the story with a punch line
    நன்றி நைனா(ர்)

    ReplyDelete
  38. //////Blogger GAYATHRI said...
    Good Story Sir. Its truth that God's grace only will save us that the earned money.
    To have that grace, we insist ourselves to do 'Dhanams' time to time./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  39. /////Blogger Saravana said...
    Dear Vaathiyar,
    We will get our baby on 7th FEB- Tuesday. Could you please give us the good time on that day?
    I see 4 Grahas are exalted and I request you to give us the right lagnam to avail most of the benefits of this.
    Please help.
    Thanks
    Saravanan/////
    லக்கினத்தைத் தேர்வு செய்யலாம். நவாம்சத்திற்கு என்ன செய்வீர்கள்? லக்கினத்தில் உச்சமாக உள்ளவை நவாம்சத்தில் நீசமாகும் அபாயம் உள்ளது தெரியுமா?
    ஆகவே: Leave it to The Almighty! அவர் பார்த்துக்கொள்வார்! குழந்தை நல்லபடியாகப் பிறந்து, தாயும் சேயும் நலமாக இருப்பதற்கு மட்டும் இப்போது பிரார்த்தனை செய்யுங்கள்! ==================================
    Dear Sir,
    Sure sir. Will pray god for that. That is most important than all.
    Thanks for your Advise
    Saravanan -Coimbatore//////

    புரிந்துகொண்ட மேன்மைக்கு நன்றி சரவணன்!

    ReplyDelete
  40. //////Blogger SP.VR. SUBBAIYA said...
    Uma S umas1234@gmail.com
    Uma S
    to me
    கதை உங்கள் வழக்கமான சுவாரசியமான எழுத்து நடையில் இருந்தது.
    அவர் செய்த சிலவற்றை பட்டியல் போட்டிருந்தீர்கள், ஆரம்பப் பள்ளியோன்று கொண்டு வந்தது போன்ற சில செயல்கள். அவையெல்லாம் நல்ல செயல்கள் கணக்கில் வராதா? கோயிலுக்கு ஐந்து / பத்து லட்சம் கொடுப்பது மட்டும்தான் தர்மக்கணக்கில் வருமா?
    கர்நாடகத்தில் ஆச்சி இருந்திருந்தும் கன்னடம் தெரியாதா?
    S.உமா, தில்லி///////

    ஆச்சி தில்லியிலும் இருந்திருக்கிறார்கள், சவுத் ப்ளாக், கரோல் ஃபாக், நொய்டாவரை எல்லா இடங்களும் தெரியும். கதையின் நீளம் காரணமாக அதை எல்லாம் சொல்லவில்லை!

    ReplyDelete
  41. //நாட்டார்கள் என்றால் நாடார்களை தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?//

    ஒரு சில‌ கிராமங்களினை இணைத்து ஒரு பொதுப் பெயர் இருந்துள்ளது.

    கோநகர்நாடு, வளநாடு, உரத்தநாடு என்பது போல.

    கோநகர் நாட்டுக்குள் இருக்கும் ஒரு கிராமத்தின் பெயர் இருக்கும்.'நாடு' என்பது இப்போது கூறும் தாலுக்காவை ஒத்தது. 'நாட்டார்' என்பது இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதைக் கூறும்.அதில் எந்தக் கிராமம் என்பது பின்னால் வரும்.

    நாடார் என்பது நாடார் எப்பது போல சாதிபெயர் அல்ல. இடத்தின் பெயர்/அந்த இடத்தில் வாழும் மனிதர்களுக்கான குறியீடு.

    நாட்டார் இயல், நாட்டார் வழக்கு, நாட்டார் தீர்ப்பு, நாட்டார் முறை ....

    ReplyDelete
  42. வழக்கம் போல வாத்தியார் தனக்கே உரித்தான தனி நடையில் அமைந்த நல்ல கதை..
    எப்போதும் போல அன்னதானம் போன்ற விஷயங்களில் இருக்கிற காசையெல்லாம் இறக்கி விடாவிட்டால் அக்சிடென்ட் ஆகி பெரும் சேதம் ஏற்படும் என்றெல்லாம் பயமுறுத்தும் பழைய தந்திரம் இந்தக் கதையிலும் உபயோகப்படுத்தப் பட்டிருப்பது கொஞ்சம் கதையின் மற்ற நல்ல அம்சங்களைப் பாதிப்பதாக உணர்கிறேன்..

    'பாக்கேட்லே உள்ளதையெல்லாம் எடுத்து வெளியிலே வை..இல்லேன்னா ரத்தம் கக்கிச் சாவே..' என்ற மோடிமஸ்தானின் குரல்தான் ஞாபகத்துக்கு வருகிறது..

    ReplyDelete
  43. R.Srishobana asked a question.....
    ///ஐயா,ஒரு சிறிய சந்தேகம் நகரத்தார்கள் என்றால் செட்டியார்கள் என்று நினைக்கின்றேன்...நாட்டார்கள் என்றால் நாடார்களை தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?காரைக்குடியில் நாடார்கள் அதிகம் வசிப்பது ஒரு புது தகவல்.//////

    சகோதரியின் சந்தேகத்தை ஆசிரியர் ஐயா தெளிவு படுத்திவிட்டார். கதையில் வரும் நாட்டார்கள் என்பதற்கு செட்டிநாட்டு மொழியில் விளக்கம் அதுதான். ஆனால், சகோதரிக்கு இருக்கும் சந்தேகம் வேறாக இருக்குமென நினைக்கிறேன். நாடார்கள் வேறு. பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு அதிகமாகவும் இப்போது தமிழகம் மற்றும் வடநாட்டு நகரங்களில் பெரும் வர்த்தகர்களாக இருப்போர் நாடார்கள். நம் மரியாதைக்குரிய காமராஜ், நேசமணி, குமரி அனந்தன் ஆகியோர் இந்த இனம். நாட்டார்கள் என்பது முக்குலத்தோர் எனப்படும் கள்ளர், மறவர், அகமுடையர் இவர்களில் கள்ளர் எனும் இனத்தில் ஒரு பிரிவு. இது தஞ்சை மாவட்டத்தில் அதிகம். ந.மு.வேங்கடசாமி நாட்டார் போன்ற தலைசிறந்த தமிழறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். சொல் வழக்கில் நகரத்தார் பயன்படுத்தும்போது அவர்கள் பகுதியைச் சாராதவர்கள் நாட்டார். என்ன ஆசிரியர் ஐயா! என் விளக்கம் சரிதானே! சகோதரிக்கும் இதெல்லாம் தெரிந்திருக்கும். கதையில் வந்த அந்த சொல்லுக்குத்தான் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். என்றாலும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லி வைத்தேன். நன்றி.

    ReplyDelete
  44. /////Blogger முருகராஜன் said...
    கோவிலுக்கு செய்யும் நற்பணிகள் அதனால் எற்படும் புண்ணியம் பற்றி அருமையாக தங்களது நடையில் எழுதியுள்ள கதை மிகச்சிறப்பு
    நன்றிகள்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  45. /////Blogger minorwall said...
    வழக்கம் போல வாத்தியார் தனக்கே உரித்தான தனி நடையில் அமைந்த நல்ல கதை..
    எப்போதும் போல அன்னதானம் போன்ற விஷயங்களில் இருக்கிற காசையெல்லாம் இறக்கி விடாவிட்டால் அக்சிடென்ட் ஆகி பெரும் சேதம் ஏற்படும் என்றெல்லாம் பயமுறுத்தும் பழைய தந்திரம் இந்தக் கதையிலும் உபயோகப்படுத்தப் பட்டிருப்பது கொஞ்சம் கதையின் மற்ற நல்ல அம்சங்களைப் பாதிப்பதாக உணர்கிறேன்.
    'பாக்கேட்லே உள்ளதையெல்லாம் எடுத்து வெளியிலே வை..இல்லேன்னா ரத்தம் கக்கிச் சாவே..' என்ற மோடிமஸ்தானின் குரல்தான் ஞாபகத்துக்கு வருகிறது///////

    இறைவனைப் புறக்கணித்துவிட்டுப் போனவர், ஒரு சிறுவிபத்தின் மூலம், திரும்பவும் ஊருக்கே திரும்பி வந்து குடமுழுக்கில் கலந்துகொண்டார் என்பதுதான் கதையில் உள்ள செய்தி. பயமுறுத்தல் எல்லாம் கதையில் இல்லை! ஜப்பானுக்குப் போயும் மோடி மஸ்தானை நீங்கள் மறக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது மைனர்?

    ReplyDelete
  46. ////Blogger kmr.krishnan said...
    //நாட்டார்கள் என்றால் நாடார்களை தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?//
    ஒரு சில‌ கிராமங்களினை இணைத்து ஒரு பொதுப் பெயர் இருந்துள்ளது.
    கோநகர்நாடு, வளநாடு, உரத்தநாடு என்பது போல.
    கோநகர் நாட்டுக்குள் இருக்கும் ஒரு கிராமத்தின் பெயர் இருக்கும்.'நாடு' என்பது இப்போது கூறும் தாலுக்காவை ஒத்தது. 'நாட்டார்' என்பது இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதைக் கூறும்.அதில் எந்தக் கிராமம் என்பது பின்னால் வரும்.
    நாடார் என்பது நாடார் எப்பது போல சாதிபெயர் அல்ல. இடத்தின் பெயர்/அந்த இடத்தில் வாழும் மனிதர்களுக்கான குறியீடு.
    நாட்டார் இயல், நாட்டார் வழக்கு, நாட்டார் தீர்ப்பு, நாட்டார் முறை ....///////

    நன்றாக விளக்கம் சொல்லியுள்ளீர்கள். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  47. /////Blogger Thanjavooraan said...
    R.Srishobana asked a question.....
    ///ஐயா,ஒரு சிறிய சந்தேகம் நகரத்தார்கள் என்றால் செட்டியார்கள் என்று நினைக்கின்றேன்...நாட்டார்கள் என்றால் நாடார்களை தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?காரைக்குடியில் நாடார்கள் அதிகம் வசிப்பது ஒரு புது தகவல்.//////
    சகோதரியின் சந்தேகத்தை ஆசிரியர் ஐயா தெளிவு படுத்திவிட்டார். கதையில் வரும் நாட்டார்கள் என்பதற்கு செட்டிநாட்டு மொழியில் விளக்கம் அதுதான். ஆனால், சகோதரிக்கு இருக்கும் சந்தேகம் வேறாக இருக்குமென நினைக்கிறேன். நாடார்கள் வேறு. பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு அதிகமாகவும் இப்போது தமிழகம் மற்றும் வடநாட்டு நகரங்களில் பெரும் வர்த்தகர்களாக இருப்போர் நாடார்கள். நம் மரியாதைக்குரிய காமராஜ், நேசமணி, குமரி அனந்தன் ஆகியோர் இந்த இனம். நாட்டார்கள் என்பது முக்குலத்தோர் எனப்படும் கள்ளர், மறவர், அகமுடையர் இவர்களில் கள்ளர் எனும் இனத்தில் ஒரு பிரிவு. இது தஞ்சை மாவட்டத்தில் அதிகம். ந.மு.வேங்கடசாமி நாட்டார் போன்ற தலைசிறந்த தமிழறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். சொல் வழக்கில் நகரத்தார் பயன்படுத்தும்போது அவர்கள் பகுதியைச் சாராதவர்கள் நாட்டார். என்ன ஆசிரியர் ஐயா! என் விளக்கம் சரிதானே! சகோதரிக்கும் இதெல்லாம் தெரிந்திருக்கும். கதையில் வந்த அந்த சொல்லுக்குத்தான் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். என்றாலும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லி வைத்தேன். நன்றி.//////

    செட்டிநாட்டைப் பற்றி உங்களுக்குத் தெரியததா? நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  48. \\நாடார் என்பது நாடார் எப்பது போல சாதிபெயர் அல்ல. இடத்தின் பெயர்/அந்த இடத்தில் வாழும் மனிதர்களுக்கான குறியீடு.\\

    நான் இதுவரை அறிந்திடாத‌ வழங்கு சொல் என்பதால் தான் இந்த சந்தேகம்...என் சந்தேகத்தை தெளிவுபடுத்திய வாத்தியார் ஐயாவுக்கும்,kmrk அவர்களுக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  49. \\படுத்திவிட்டார். கதையில் வரும் நாட்டார்கள் என்பதற்கு செட்டிநாட்டு மொழியில் விளக்கம் அதுதான். ஆனால், சகோதரிக்கு இருக்கும் சந்தேகம் வேறாக இருக்குமென நினைக்கிறேன். நாடார்கள் வேறு. பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு அதிகமாகவும் இப்போது தமிழகம் மற்றும் வடநாட்டு நகரங்களில் பெரும் வர்த்தகர்களாக இருப்போர் நாடார்கள். நம் மரியாதைக்குரிய காமராஜ், நேசமணி, குமரி அனந்தன் ஆகியோர் இந்த இனம்.\\

    நன்றி ஐயா...என் சந்தேகத்திற்கு மிகவும் தெளிவான விளக்கத்தை தந்தமைக்கு மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  50. எண்ணங்களை எழுத்துக்களாக்கி
    எங்களையும் சிந்திக்க வைத்தது

    உண்மையை உணர்த்தும்படி
    உள்ளத்து உணர்வுகளை கொட்டி

    எழுபதைத் தாண்டி இன்னமும்
    எழுதி கொண்டிருக்கும் உமது விரலுக்கு

    பாராட்டுக்கள்..
    பாசமுடனே வழக்கமான அன்புடன்

    கதை படிக்கும் ஆர்வத்தை/பழக்ககத்தை
    கதைக்கும்படி செய்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  51. ///'மோர்க்குழம்பு, வாழைப்பூ பருப்பு உசிலி, உருளைக் காரக் கறி ரெடி'ன்னு போர்டு வைத்துக்கொண்டு காத்து இருக்கிறேன் ///
    ///வருவாரைத்தான் காணும். ஒரு அன்பர்கள் 'மீட்' ஏற்பாடு செய்யுங்கள். அசத்திவிடுவோம்.///

    இப்பவே சமைத்து காத்திருந்தால்
    அப்போ எங்களுக்கு பழைய சோறுதானா

    (சும்மா தாமஷூக்கு தோழரே..
    சுவைக்காக சொன்னதை வேறுவிதமாக கொள்ள வேண்டாம்,,

    உங்கள் அன்பும் விருந்தோம்பும் பண்பும் உணர்வும் அய்யர் நன்கு அறிவார்)

    மாசில்லா அன்பினை வழக்கம் போல்
    மடிநிறைய தந்து மகிழ்கின்றோம்

    ReplyDelete
  52. ///////Blogger R.Srishobana said...
    \\நாடார் என்பது நாடார் எப்பது போல சாதிபெயர் அல்ல. இடத்தின் பெயர்/அந்த இடத்தில் வாழும் மனிதர்களுக்கான குறியீடு.\\
    நான் இதுவரை அறிந்திடாத‌ வழங்கு சொல் என்பதால் தான் இந்த சந்தேகம்...என் சந்தேகத்தை தெளிவுபடுத்திய வாத்தியார் ஐயாவுக்கும்,kmrk அவர்களுக்கும் என் நன்றிகள்...//////

    சந்தேகத்தை தெளிவு படுத்த வேண்டியது. கதாசிரியரின் கடைமையல்லவா? அதற்கு எதற்கு நன்றி சகோதரி?

    ReplyDelete
  53. ///////Blogger R.Srishobana said...
    \\படுத்திவிட்டார். கதையில் வரும் நாட்டார்கள் என்பதற்கு செட்டிநாட்டு மொழியில் விளக்கம் அதுதான். ஆனால், சகோதரிக்கு இருக்கும் சந்தேகம் வேறாக இருக்குமென நினைக்கிறேன். நாடார்கள் வேறு. பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு அதிகமாகவும் இப்போது தமிழகம் மற்றும் வடநாட்டு நகரங்களில் பெரும் வர்த்தகர்களாக இருப்போர் நாடார்கள். நம் மரியாதைக்குரிய காமராஜ், நேசமணி, குமரி அனந்தன் ஆகியோர் இந்த இனம்.\\
    நன்றி ஐயா...என் சந்தேகத்திற்கு மிகவும் தெளிவான விளக்கத்தை தந்தமைக்கு மிக்க நன்றிகள்...//////

    தெளிவான, கூடுதலான விளக்கங்களை கே.முத்துராமகிருஷ்ணர் அளித்துள்ளார். ஆகவே இந்த நன்றியை அவர் எடுத்துக்கொள்ளட்டும்!

    ReplyDelete
  54. /////Blogger iyer said...
    எண்ணங்களை எழுத்துக்களாக்கி
    எங்களையும் சிந்திக்க வைத்தது
    உண்மையை உணர்த்தும்படி
    உள்ளத்து உணர்வுகளை கொட்டி
    எழுபதைத் தாண்டி இன்னமும்
    எழுதி கொண்டிருக்கும் உமது விரலுக்கு
    பாராட்டுக்கள்..
    பாசமுடனே வழக்கமான அன்புடன்
    கதை படிக்கும் ஆர்வத்தை/பழக்ககத்தை
    கதைக்கும்படி செய்தமைக்கு நன்றிகள்../////

    பத்து வயதைக் கூட்டி விட்டீர்களே! பூமியில் இருக்கும் காலமல்லவா குறைகிறது:-))))))
    என் மனதிற்கு எப்போதும் ஒரே வயதுதான். 25

    ReplyDelete
  55. ///////Blogger iyer said...
    ///'மோர்க்குழம்பு, வாழைப்பூ பருப்பு உசிலி, உருளைக் காரக் கறி ரெடி'ன்னு போர்டு வைத்துக்கொண்டு காத்து இருக்கிறேன் ///
    ///வருவாரைத்தான் காணும். ஒரு அன்பர்கள் 'மீட்' ஏற்பாடு செய்யுங்கள். அசத்திவிடுவோம்.///
    இப்பவே சமைத்து காத்திருந்தால்
    அப்போ எங்களுக்கு பழைய சோறுதானா?
    (சும்மா தாமஷூக்கு தோழரே.. சுவைக்காக சொன்னதை வேறுவிதமாக கொள்ள வேண்டாம்,,
    உங்கள் அன்பும் விருந்தோம்பும் பண்பும் உணர்வும் அய்யர் நன்கு அறிவார்)
    மாசில்லா அன்பினை வழக்கம் போல் மடிநிறைய தந்து மகிழ்கின்றோம்//////

    பழைய சோறு என்றாலும், கெட்டித் தயிர், மாங்காய் தொக்கு என்று சுவையாகக் கொடுப்பார். தயக்கம் வேண்டாம்.

    ReplyDelete
  56. /////////kmr.krishnan said...
    //நாட்டார்கள் என்றால் நாடார்களை தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?//

    ஒரு சில‌ கிராமங்களினை இணைத்து ஒரு பொதுப் பெயர் இருந்துள்ளது.

    கோநகர்நாடு, வளநாடு, உரத்தநாடு என்பது போல.

    கோநகர் நாட்டுக்குள் இருக்கும் ஒரு கிராமத்தின் பெயர் இருக்கும்.'நாடு' என்பது இப்போது கூறும் தாலுக்காவை ஒத்தது. 'நாட்டார்' என்பது இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதைக் கூறும்.அதில் எந்தக் கிராமம் என்பது பின்னால் வரும்.

    நாடார் என்பது நாடார் எப்பது போல சாதிபெயர் அல்ல. இடத்தின் பெயர்/அந்த இடத்தில் வாழும் மனிதர்களுக்கான குறியீடு.

    நாட்டார் இயல், நாட்டார் வழக்கு, நாட்டார் தீர்ப்பு, நாட்டார் முறை ....//////////

    கோபாலன் அய்யா மிகச் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறார்..இங்கே KMRKஅவர்கள் குறிப்பிட்ட உரத்தநாடு உண்மையில் 'ஒருத்திநாடு' என்ற பெயர்க்காரணம் உடையது..பின்னாளில் திரிந்து இப்படி ஆகிவிட்டது..KMRKஇந்தளவுக்கு திரித்திரிந்தலும் இன்னும் அது அந்த அளவுக்கு திரிந்திருக்கவில்லை.

    வழக்கிலே இப்போதும் ஒரத்தநாடு என்ற அளவிலேதான் உள்ளது..திரிந்ததைத் திரித்ததைக் திருத்தி வாசிக்கக் கோருகிறேன்..

    ReplyDelete
  57. ///////SP.VR. SUBBAIYA said...
    /////Blogger minorwall said...
    வழக்கம் போல வாத்தியார் தனக்கே உரித்தான தனி நடையில் அமைந்த நல்ல கதை..
    எப்போதும் போல அன்னதானம் போன்ற விஷயங்களில் இருக்கிற காசையெல்லாம் இறக்கி விடாவிட்டால் அக்சிடென்ட் ஆகி பெரும் சேதம் ஏற்படும் என்றெல்லாம் பயமுறுத்தும் பழைய தந்திரம் இந்தக் கதையிலும் உபயோகப்படுத்தப் பட்டிருப்பது கொஞ்சம் கதையின் மற்ற நல்ல அம்சங்களைப் பாதிப்பதாக உணர்கிறேன்.
    'பாக்கேட்லே உள்ளதையெல்லாம் எடுத்து வெளியிலே வை..இல்லேன்னா ரத்தம் கக்கிச் சாவே..' என்ற மோடிமஸ்தானின் குரல்தான் ஞாபகத்துக்கு வருகிறது///////

    இறைவனைப் புறக்கணித்துவிட்டுப் போனவர், ஒரு சிறுவிபத்தின் மூலம், திரும்பவும் ஊருக்கே திரும்பி வந்து குடமுழுக்கில் கலந்துகொண்டார் என்பதுதான் கதையில் உள்ள செய்தி. பயமுறுத்தல் எல்லாம் கதையில் இல்லை! ஜப்பானுக்குப் போயும் மோடி மஸ்தானை நீங்கள் மறக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது மைனர்?////////

    வார்த்தை ஜாலங்களைக் கடந்து படிக்கும் வாசகருக்கு என் கருத்தைப் பதிவு செய்வதுமட்டுமே எனது நோக்கம்..
    அந்தப்பணி நிறைவேறியது..
    அதற்கு வழிவிட்ட ஆசிரியரின் ஜனநாயக அணுகுமுறைக்கு நன்றி..

    ReplyDelete
  58. எழுபதைத் தாண்டி இன்னமும்
    எழுதி கொண்டிருக்கும் உமது விரலுக்கு
    பாராட்டுக்கள்..

    பத்து வயதைக் கூட்டி விட்டீர்களே! என் மனதிற்கு எப்போதும் ஒரே வயதுதான். 25

    எழுபதை தாண்டி
    என்பதனை உடல் வயதில் குறிப்பிட்டதா? இப்படியும் பாருங்களேன்

    1) எழுவது.. என்பது
    சிந்தனைகள் எழுவது
    அதனையும் தாண்டி உங்கள் எழுத்துக்க்ள் மிளிர்கின்றன..

    2) 70க்கும் மேல் கதைகள் எழுதி வெளியிட்டுள்ள உங்கள் விரல்களின் பெருமையை குறிக்க சொன்னது

    3) எழுபதை குறிக்கும் சங்க நூல்கள் சொல்லும் பதினெண்கீழ்கணக்கில் வருவது கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூவாதியார் என்னும் புலவர். தந்தருளிய ஐந்திணை எழுபது

    4) ஏர் எழுபது என்பது உழவை புகழ்ந்து கம்பர் பாடியதாக சொல்லப்படுவது

    5) எழுபதில் உள்ள எண்கள் 7 மற்றும் 0
    இதில் 7 என்ற எண்ணுக்குள்ள சிறப்பே எந்த எண்ணை 7ஆல் வகுத்தாலும் வரக் கூடிய விடை 142587 என்ற எண்கள் இடம் மாறி வரும் இதன் விளக்கம் தாங்கள் அறிந்ததே

    6) 7 என்ற எண்ணில் ஒரு படுக்கை கோட்டை தாங்கி நிற்கும் நிற்கும் கோடு போல சோர்ந்திருப்போரை தாங்கி நிற்கும் உமது எழுத்து.. (இது எந்த எண்ணிற்கும் இல்லாத சிறப்பு)

    7) எட்டுவதற்கு முன்னால் எழு என்பதை குறிப்பது போல் அமைந்துள்ள கிரமங்கள்..(அதாவது எட்டு என்ற எண்ணிற்கு முன்னால் ஏழு வருவது)
    வெற்றியை "எட்டு"வதற்கு முன்னால் முதலில் தோல்வியில் இருந்து "எழு"தல் வேண்டும் என சொல்லுவதாக அமைந்துள்ளது..

    ஏழைப்பற்றி சொல்வதால் இந்த
    ஏழுடன் நிறுத்திக் கொள்கிறோம்..

    (ஏழரை என்று யாராவது வந்துவிடபோகிறார்கள்..நாம் நேரத்தை சொன்னோம்)

    நீங்கள் குறிப்பிட்டுச் சொன்ன உங்ள மனதினளவு வயதில் 25ன் கூட்டுத் தொகையும் 7 தானே வாத்தியாரே

    வணக்கமும் வாழ்த்துக்களும் மற்றதை
    வகுப்பறையில் நீங்கள் சொல்லுங்கள்

    ReplyDelete
  59. நாட்டார் என்பது முக்குலத்தோரில் ஒரு குழுவை மட்டும் குறிப்பிடும் சொல் என்பதாகப் பின்னூட்டம் வந்துள்ளது.இன்றளவும் கிராமக் கூட்டமைப்பான 'நாடு'
    என்ற பெயரை பத்திரப் பதிவுகளில் எழுதி வருகிறார்கள். நாட்டார் என்ற சாதிக்குழு இருந்த்தாலும் அது ஒரு சிறு குழுவினை மட்டும் குறிப்பிடும் சொல் அல்ல என்பதை வலியுறுத்துகிறேன்.ஒரே பெயருடைய கிராமங்களுக்கு அதனுடன் எண் குறிப்பிடுவது ஆங்கிலேயர் புகுத்திய முறை.எடுத்துக்காட்டாக‌ கருங்குளம்‍=1, கருங்குளம்=2....நமது தமிழ் மரபு இந்த நாட்டினைச்சேர்ந்த கருங்குளம் என்று சொல்வது.நாட்டார் வழக்கு, நாட்டாமை என்பதெல்லாம் நாடு என்பதில் இருந்து வருபவை.country என்ற சொல் ஆங்கிலத்தில்
    கிராமம் சார்ந்த என்ற பொருளையும் கொடுப்பது போல, காந்தியத்தில் சுதேசி போல, நாட்டார் என்பது 'இந்த மண்ணைச் சார்ந்த'என்றே பொருள் படுகிறது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com