மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.2.12

Cinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள்

 Cinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள்

குரல் வளம் மிக்கவர்கள் என்று சொல்லும்போது, பலரையும் சொல்லலாம். நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் என்று சொல்லும்போது, ஒரு சிலரைத்தான் குறிப்பிட முடியும்.

என் மனத்திரையில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் சிலருடைய குரல்களை இன்று பதிவிடுகிறேன்

1. முகமது ரஃபி, பின்னணிப் பாடகர்

24.12.1924 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் அமிர்த சரசரஸிற்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் பிறந்த இந்த மேதை. திரை இசைக்கு தனது 20ஆவது வயதில் அடியெடுத்து வைத்தார் (1944) 1949ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரை இந்தியத் திரை இசையில் இவரது கொடிதான் பறந்த்து. லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். எண்ணற்ற பாடல்களைப் பாடினார்

நமது வகுப்பறை மாணவி தேமொழியின் தோழி விக்கி காமாட்சியிடம் ரஃபியைப் பற்றிய எண்ணற்ற செய்திகள் உள்ளன. கேட்டு வாங்கிப் படித்து மகிழுங்கள்

எந்த ஸ்தாயில் வேண்டுமென்றாலும் அசத்தலாகப் பாடக்கூடியவர். எந்த உணர்வை வேண்டுமென்றாலும் நொடியில் தன் பாடல் மூலம் வெளிப்படுத்தக் கூடியவர். பிரபல பின்னணிப்பாடகர் கே.ஜே.ஜேசுதாசே நான் அவருடைய ஆத்மார்த்தமான ரசிகர் என்று சொல்லியுள்ளார். அதைவிட வேறு என்ன சான்றிதழ் வேண்டும்?

எடுத்துக்காட்டிற்கு ஒரு பாடலைக் கொடுத்துள்ளேன்:

பாடலும் படமும் ; Chahunga Mainh Tujhe / Film: Dosti (1964)


----------------------------------------------------------------------------------


அசத்தலான குரல் வளம் மிக்க நடிகர்கள் என்னும்போது சட்டென்று என் மனத்திரையில் நிற்பவர்கள் 3 பேர்கள். ஒருவரை இன்று பார்ப்போம். மற்றவர்களை அடுத்த் வாரம் பார்ப்போம்:

எம்.ஆர்.ராதா

மெட்ராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ண நாயுடு என்னும் பெயர் சுருக்கமாக எம்.ஆர்.ராதா என்றாகியது.

21.2.1907 ஆம் தேதியன்று திருச்சியில் பிறந்தவர். 72 ஆண்டு காலம் புகழோடு வாழ்ந்துள்ளார்.

6.11.1954ல் திரையுலகிற்கு வந்தவர் தன்னுடைய நடிப்பு மற்றும் குரல் வளம் மூலம் பலரது மனதிலும் இடம் பிடித்தார். அதற்கு முன் நாடக மேடைகளில் கொடிகட்டி பறந்தார். சுமார் 5,000ற்கும் மேற்பட்ட நாடக் நிகழ்ச்சிகளை பல ஊர்களில் அரங்கேற்றியுள்ளார்.

எடுத்துக்காட்டிற்கு ஒரு காட்சியைக் கொடுத்துள்ளேன்:

படம்: ரத்தக் கண்ணீர். (1954)



Our sincere thanks to persons who uploaded the video clippings

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

23 comments:

  1. இருபெரும் கலைஞர்களைப் பற்றியப் பதிவு...
    தாடையில் குழி இருக்கும் முகவெட்டு கொண்டவர்கள்
    (சில நேரங்களில் பெரிய விஷயம் இல்லாவிட்டாலும் கூட)
    பிரபலமானவர்களாக இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள்.
    பல பிரபலங்களுக்கு இருக்கிறதை கவனித்து இருக்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. பின்னவர் நமது ஹீரோக்களுடன்நிற்கும்
    மன்னவர்.. குரலும் நடிப்பும் தனி பாணி

    பட்டிணத்தார் என்ற படத்தில் இவர்
    படத்தில் பேசும் வசமும் நடிப்பும்நம்மை

    சிந்திக்க வைக்கும்..
    சிரிப்பினை சேர்த்து தரும் comedy villion

    முன்னவர் திரையிசை பாடகர்களில்
    முன்னவர்.. இவருக்கு

    பின்னவர் நம்மை சொக்க வைக்கும்
    AMR மற்றும் PBS

    இன்று இப்படி..
    நாளை எப்படி...

    வழக்கம் போல்
    வணக்கமும் வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  3. ர‌ஃபி சரி. அவரை நல்ல பாடல்கள் பாட வைத்த கல்யாண்ஜி ஆன்ந்த்ஜியை மறக்கலாமா?

    ReplyDelete
  4. "அடி காந்தா....."
    ======================
    மா..மா.. மாப்ளே.... மா மா மாப்ளே..."

    ReplyDelete
  5. சினிமா என்ற புதிய தலைப்பு.... பலருக்கும் ஆர்வமுள்ள பகுதியாக இருக்கும் என்பது நிச்சயம் ஐயா.
    பிடித்த குரல் வளம் உள்ள பாடகர்களும் நடிகர்களும் பகுதி நன்றாக உள்ளது. மேலும் பதிவுகள் மூலம் எனக்குத் தெரியாத பல தகவல்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
    குரலை மட்டும் கணக்கில் கொண்டால்....
    பின்னணி பாடுபவர்களில் எனக்குப் பிடித்தவர்கள் டி. எம். எஸ். மற்றும் பி. சுசீலா.
    திரைப் பட நடிகர்களில் ராஜேஷ் மற்றும் கே. ஆர். விஜயா.
    வானொலியில் இலங்கை அப்துல் ஹமீத் மற்றும் சிங்கை விமலா
    நானும் கவுண்ட் டொவ்னில் சேர்ந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  6. வீட்டில் எளிய‌ ஆங்கிலம் படித்துப் புரிந்து கொள்ளும் வயதில் சிறுவர் சிறுமியார் இருந்தால் அவர்களுக்கு நீங்கள் அறிமுகம் செய்ய வேண்டிய வலை தளம் இது. உலக இலக்கியங்களின் அறிமுகம். படிப்பதற்கு வசதியாக பெரிய எழுத்துக்க‌ளில். ஒரு சுற்று படித்தால் குழந்தைகளுக்கு இலக்கியங்களின் மீது பற்று உண்டாகிவிடும்.

    http://www.mainlesson.com

    ReplyDelete
  7. ஒரு காலத்தில் முகமது ரஃபி, கிஷோர்குமார், முகேஷ், லதா மங்கேஷ்கர், ஆஷா பான்ஸ்லே போன்றோருடைய இந்தி பாடல்கள் மட்டுமே தமிழக கல்லூரி இளைஞர்களிடம் பிரபலமாக இருந்து வந்தது. அந்த ஆதிக்கத்தைப் பின்னர் வந்த தமிழ்த் திரைப்பட இசை அமைப்பாளர்களும், பாடகர்களும் உடைத்தெரிந்து விட்டனர். எங்கும் எப்போதும் தமிழ்த் திரைப்படப் பாடல்களின் தாக்கம், இந்தி சினிமாவில் கூட ஏற்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தமிழ் நாட்டில் இந்தித் திரைப்படங்கள் திரையிடப்படுவது தடுக்கப்பட்டதும் அதற்கு ஒரு காரணம். கலைகளில் மொழி பேதம் பார்ப்பது சரியல்ல என்பது என் கருத்து. காலத்தால் அழியாத பல அற்புதமான பாடல்களைப் பாடியவர் முகமது ரஃபி. எம்.ஆர்.ராதாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவரது பாணியே தனி. அந்த 'ரத்தக்கண்ணீர்' வசனங்களைப் பேசாத இளைஞர்களே அப்போது இல்லை. அடீ! காந்தா! என்று தனது அடிக்குரலில் பேசிய வசனங்களும், போலி ஐரோப்பிய நாகரிகத்திற்கு அடிமையானவர்களின் மனோபாவத்தை அவர் அந்தப் படத்தில் மிக அழகாக எடுத்துக் காட்டியவர். பாகப்பிரிவினையில் சிங்கப்பூரானாக வந்து அவர் அசத்தியது எல்லாம் வரலாற்று முத்திரை பதித்தவை. நல்ல பதிவுகள்.

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்,
    நல்ல பதிவு ராதா அவர்கள் ஒரு சிறந்த முற்போக்குவாதி,இருப்பினும் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் அவர் மேல் நாட்டுக்கலாச்சாரத்தை உயர்வாகச் சொல்வது போல் சொல்லி இறுதியில் இந்தியக்கலாச்சாரத்தின் மேன்மையை அருமையாக உணர்த்தியிருப்பார்.

    ReplyDelete
  9. ///Blogger தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    இருபெரும் கலைஞர்களைப் பற்றியப் பதிவு...
    தாடையில் குழி இருக்கும் முகவெட்டு கொண்டவர்கள்
    (சில நேரங்களில் பெரிய விஷயம் இல்லாவிட்டாலும் கூட)
    பிரபலமானவர்களாக இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள்.
    பல பிரபலங்களுக்கு இருக்கிறதை கவனித்து இருக்கிறேன்.
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!////

    அதையெல்லாம் கூட கவனிக்கும் அள்விற்கு உங்களுக்கு நேரமும், ஆர்வமும் இருக்கிறது. பெரிய மேட்டர்தான்!

    ReplyDelete
  10. ////Blogger iyer said...
    (8+2)///

    (8+2) = 10 = ?

    ReplyDelete
  11. ////Blogger iyer said...
    பின்னவர் நமது ஹீரோக்களுடன்நிற்கும்
    மன்னவர்.. குரலும் நடிப்பும் தனி பாணி
    பட்டிணத்தார் என்ற படத்தில் இவர்
    படத்தில் பேசும் வசமும் நடிப்பும்நம்மை
    சிந்திக்க வைக்கும்..
    சிரிப்பினை சேர்த்து தரும் comedy villion
    முன்னவர் திரையிசை பாடகர்களில்
    முன்னவர்.. இவருக்கு
    பின்னவர் நம்மை சொக்க வைக்கும்
    AMR மற்றும் PBS
    இன்று இப்படி..
    நாளை எப்படி...
    வழக்கம் போல்
    வணக்கமும் வாழ்த்துக்களும்..///

    AMR என்றால் தெரியவில்லை விசுவநாதன்!

    ReplyDelete
  12. ////Blogger kmr.krishnan said...
    ர‌ஃபி சரி. அவரை நல்ல பாடல்கள் பாட வைத்த கல்யாண்ஜி ஆன்ந்த்ஜியை மறக்கலாமா?////

    யாரும் மறக்கவில்லை. இந்த வரிசையில் அவர்களும் வருவார்கள். பொறுத்திருங்கள் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. ////Blogger kmr.krishnan said...
    "அடி காந்தா....."
    ======================
    மா..மா.. மாப்ளே.... மா மா மாப்ளே..."////

    பலே பாண்டியா! பலே கிருஷ்ணா!

    ReplyDelete
  14. ////Blogger தேமொழி said...
    சினிமா என்ற புதிய தலைப்பு.... பலருக்கும் ஆர்வமுள்ள பகுதியாக இருக்கும் என்பது நிச்சயம் ஐயா.
    பிடித்த குரல் வளம் உள்ள பாடகர்களும் நடிகர்களும் பகுதி நன்றாக உள்ளது. மேலும் பதிவுகள் மூலம் எனக்குத் தெரியாத பல தகவல்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
    குரலை மட்டும் கணக்கில் கொண்டால்....
    பின்னணி பாடுபவர்களில் எனக்குப் பிடித்தவர்கள் டி. எம். எஸ். மற்றும் பி. சுசீலா.
    திரைப் பட நடிகர்களில் ராஜேஷ் மற்றும் கே. ஆர். விஜயா.
    வானொலியில் இலங்கை அப்துல் ஹமீத் மற்றும் சிங்கை விமலா
    நானும் கவுண்ட் டொவ்னில் சேர்ந்து கொள்ளலாமா?////

    லேடீஸ் ஆர் நாட் அல்வ்ட் இன் தெ கவுண்ட் டவுன். மென்மையான பெண் இனத்தார்க்கு அதில் இடமில்லை!

    ReplyDelete
  15. ////Blogger kmr.krishnan said...
    வீட்டில் எளிய‌ ஆங்கிலம் படித்துப் புரிந்து கொள்ளும் வயதில் சிறுவர் சிறுமியார் இருந்தால் அவர்களுக்கு நீங்கள் அறிமுகம் செய்ய வேண்டிய வலை தளம் இது. உலக இலக்கியங்களின் அறிமுகம். படிப்பதற்கு வசதியாக பெரிய எழுத்துக்க‌ளில். ஒரு சுற்று படித்தால் குழந்தைகளுக்கு இலக்கியங்களின் மீது பற்று உண்டாகிவிடும்.
    http://www.mainlesson.com////

    உங்கள் காலம் என்று நினைதீர்களா?

    ReplyDelete
  16. ///Blogger Thanjavooraan said...
    ஒரு காலத்தில் முகமது ரஃபி, கிஷோர்குமார், முகேஷ், லதா மங்கேஷ்கர், ஆஷா பான்ஸ்லே போன்றோருடைய இந்தி பாடல்கள் மட்டுமே தமிழக கல்லூரி இளைஞர்களிடம் பிரபலமாக இருந்து வந்தது. அந்த ஆதிக்கத்தைப் பின்னர் வந்த தமிழ்த் திரைப்பட இசை அமைப்பாளர்களும், பாடகர்களும் உடைத்தெரிந்து விட்டனர். எங்கும் எப்போதும் தமிழ்த் திரைப்படப் பாடல்களின் தாக்கம், இந்தி சினிமாவில் கூட ஏற்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தமிழ் நாட்டில் இந்தித் திரைப்படங்கள் திரையிடப்படுவது தடுக்கப்பட்டதும் அதற்கு ஒரு காரணம். கலைகளில் மொழி பேதம் பார்ப்பது சரியல்ல என்பது என் கருத்து. காலத்தால் அழியாத பல அற்புதமான பாடல்களைப் பாடியவர் முகமது ரஃபி. எம்.ஆர்.ராதாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவரது பாணியே தனி. அந்த 'ரத்தக்கண்ணீர்' வசனங்களைப் பேசாத இளைஞர்களே அப்போது இல்லை. அடீ! காந்தா! என்று தனது அடிக்குரலில் பேசிய வசனங்களும், போலி ஐரோப்பிய நாகரிகத்திற்கு அடிமையானவர்களின் மனோபாவத்தை அவர் அந்தப் படத்தில் மிக அழகாக எடுத்துக் காட்டியவர். பாகப்பிரிவினையில் சிங்கப்பூரானாக வந்து அவர் அசத்தியது எல்லாம் வரலாற்று முத்திரை பதித்தவை. நல்ல பதிவுகள்.///

    உங்களின் மன நிறைவான பாராட்டிற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  17. ஏ.எம்.ஆர். என்று ஐயர் குறிப்பிடுபவர் ஏ.எம்.ராஜா. அவரும் ஜிக்கியும் இணைந்து பாடிய பாடல்கள் 'கல்யாண பரிசு', இந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட 'அவன்' ஆகிய படங்களில் சிறப்பானவை. இவருடைய முதல் பாடல் ஜெமினியின் 'சம்சாரம்' படத்தில் வந்த 'சம்சாரம்...சம்சாரம், சகல தர்ம சாரம், சுக ஜீவன ஆதாரம்" எனத் தொடங்கும் பாடலாகும். இதில் தமிழ் சொற்களைத் தேடாதீர்கள். அப்போதெல்லாம் அப்படித்தான்.அவரது முடிவு துன்பம் தரக்கூடிய ஒரு சம்பவத்தில் ஏற்பட்டது. இசை நிகழ்ச்சி செய்யச் சென்ற இடத்தில், ஒரு நிலையத்தில் வண்டி நின்றபோது இவர் இறங்கி தண்ணீர் பிடிக்கச் சென்றார். அவர் திரும்புமுன் வண்டி புறப்பட்டுவிட்டது. ஓடிவந்து ஏறப்போனவர், தவறி விழுந்து, அடிபட்டு மாண்டு போனார். இவரது குரல் ஜெமினி கணேசனுக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது. ஒரு நல்ல இசைவாணரின் மறைவு சினிமா உலகத்துக்கு பெரு நஷ்டமாக ஆனது.

    ReplyDelete
  18. என் பின்னூட்டத்தில் "சம்சாரம்" படப்பாடலில் தமிழ் சொற்கள் காணவில்லை என்பதைக் குறிப்பிட்டேன். அந்தக் காலத்தில் அப்படித்தான் என்றும் சொன்னேன். எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் ஒன்று. அதைப் பாருங்கள்: "வதனமே சந்த்ர பிம்பமோ, மலர்ந்த சரோஜமோ" இதில் மலர்ந்த என்பதுதான் தமிழ்.

    ReplyDelete
  19. "பாட்டு பாடவா? பார்த்து பேசவா? பாடம் சொல்லவா? பறந்து செல்லவா?" என்று பாடிய AMR = ஏ. எம். ராஜா

    "ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மங்கை மகராசி" என்று பாடிய ஜிக்கியின் கணவர்.

    ReplyDelete
  20. பெரியவுங்க எல்லாம் எனக்குத் தெரியாத ஆளுங்களைப் பத்தி(MR ராதா தவிர) பேசிகிட்டு இருக்கீங்க..அதுனாலே நான் ஜூட் விட்டுக்குறேன்..

    ReplyDelete
  21. Guru vanakkam,

    Giants in their own trade. No words to express their talent.

    Ramadu.

    ReplyDelete
  22. AAha, Aalasiyam Sir, I too have the same
    தாடையில் குழி இருக்கும் முகவெட்டு கொண்டவர்கள் -

    Let me see, If I become a star oneday.

    RAMADU

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com