மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.2.12

Astrology எதற்கு(டா) 27 மனைவிகள்?

அருள்மிகும் அண்ணாமலையார்

Astrology எதற்கு(டா) 27 மனைவிகள்?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார் கவியரசர் கண்ணதாசன். சரி, மனைவி சரியாக அமைவிட்டால், ஏற்றபடி கிடைக்கா விட்டால், அது யார் கொடுத்த வரம்? அது அவ வரம். அவஸ்தை. அதற்கெல்லாம் யாராவது வரம் கொடுப்பார்களா? அப்படி இருந்தால், அது நாம் வாங்கி வந்த வரம். முன் ஜன்ம பூர்வ புண்ணியப்படி வாங்கிவந்த வரம். பிறக்கும்போதே வாங்கிவந்த வரம். முன் ஜன்மம், பூர்வ புண்ணியம், வாங்கிவந்த வரம ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் பதிவை விட்டு விலகவும். இது உங்களுக்கான பதிவு (Posting) அல்ல!
--------------------------------------------------------------------------
ஜாதகத்தில் வாங்கிவந்த வரம் - குறிப்பாக மனைவியைப் பற்றிய செய்திகள் தெரியுமா?

ஏன் தெரியாது? தெரியும்.

நாள் ஒன்றிற்கு 12 லக்கினங்கள். லக்கினத்திற்கு ஏழாம் வீட்டுக்காரன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் போய் டேரா போட்டு உட்கார்ந்து கொண்டாலும், அல்லது தன்னுடைய வீட்டிற்குப் பன்னிரெண்டில்
உட்கார்ந்து கொண்டாலும், நல்ல மனைவி அமைவது கடினம்.
அதுதான் முதல் விதி (First Rule) இன்னும் பல விதிகள் உள்ளன. அதைப்
பற்றி மேல் நிலைப் பாடத்தில் விரிவாக அலசுவோம்.

இப்போது ஒரு புள்ளி விவரம் தருகிறேன். நாள் ஒன்றிற்கு 12 லக்கினங்கள் என்பது தெரியுமல்லவா? அப்படி உள்ள 12 லக்கினங்களில், இரண்டு லக்கினக்காரகளுக்கு மேற்சொன்ன அமைப்பில் - டிஸ்க் சுழற்சியில் - இரண்டு லக்கினக்காரர்களுக்கு மட்டும் ஏழாம் வீட்டுக்காரன் "கட்டிங்" அடித்துவிட்டு, அந்த வீடுகளில் போய் படுத்துக்கொண்டு விடுவான். அதாவது 7th lord in the 12th place from lagna or 7th lord in the 12th place from his own house

சுருக்கமாகச் சொன்னால், 2/12 = 1/6, தினம் பிறக்கும் குழந்தைகளில் ஆறு பேர்களில் ஒருத்தருக்கு (That is one out of six) நல்ல மண வாழ்க்கை - அதாவது விரும்படியான மண வாழ்க்கை அமையாது. இதை நீங்கள் உங்கள் உறவினர்க்ள அல்லது நண்பர்கள் வட்டத்தில் சோதனை செய்து கொள்ளலாம்

அதுபற்றி பின்னால் (பிறகு ஒரு நாள்) விவரமாகப் பார்ப்போம்!
---------------------------------------------------------------------------------------
அது என்ன சார், ஒரு மனைவிக்கே திண்டாட்டமாக இருக்கும்போது, 27 மனைவிகளா?

ஆமாம், அது பற்றி நாளை பார்ப்போம். இன்று அதைவிட முக்கியமான வேலை உள்ளது. வேலை என்பதைவிட கடமை உள்ளது என்று சொல்லலாம்
--------------------------------------------------------------------------------------------
இன்று சிவராத்திரி

மிகவும் விஷேசமான தினம்

ஒவ்வொரும் தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று, சிவபெருமானை பிரார்த்தனை செய்ய வேண்டும். வருடத்திற்கு 13 தடவைகள் உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும்

365 வகுத்தல் 27 = 13.5 = இரண்டு ஆண்டுகளுக்குள் உங்களுக்கு 27 ஜன்ம நட்சத்திரங்கள் வரும்.

மாதம் ஒருமுறை தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று சிவனைப் பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள், குறைந்த அளவு சிவராத்தியன்றாவது சிவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

பிரார்த்தனைக்கான பாடல்:


நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!


வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!


ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

(இன்னும் வரிகள் உள்ளன.முழுப்பாடலையும் தேடிப்பிடித்துப் படியுங்கள்)

இது சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய உகந்த பாடல். மாணிக்கவாசகர் இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில் - செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைத்துள்ளார்! மந்திரம் ஓதுவதற்கு என்றே அப்படி!

வட இந்தியாவில் சிவராத்திரியை மக்கள் விஷேசமாகக் கொண்டாடுவார்கள். சிவராத்திரியைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு, கீழே உள்ள சுட்டியைப் பயன்படுத்திக் கிடைக்கும் செய்திகளைப் படித்து பாருங்கள்

http://en.wikipedia.org/wiki/Maha_Shivaratri

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
கீழே உள்ள படங்கள் நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திரு.கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் அனுப்பியுள்ளார்கள். உங்கள் பார்வைக்காக அவற்றை வலை ஏற்றியுள்ளேன்

பெருந்துறைப் பிராட்டியார் உடன் உறை சப்தரிஷீர்வரவர் - ஊற்சவ மூர்த்தியாக அலங்காரத்தில் வலம்வரும் காட்சிகள்! திருவாதிரை உற்சவத்தில் எடுக்கப்பெற்ற படங்கள்

1
2
3
4

----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

40 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு!
    சிவராத்திரியைப் பற்றிய
    அருமையான தகவல்களை படித்துப் பார்ப்பதற்கு ஏதுவாக
    சுட்டியை கொடுத்தமைக்கும், .
    மாணிக்கவாசகர் அருளியுள்ள சிவபுராணம் _நாங்களே படித்தாலும், குருவின் வழிகாட்டுதலில் இன்றைய தினத்தில் படிப்பது மிகவும் சிறப்பாகும்.அறிவுறுத்திய
    தங்களுக்கு மிகுந்த நன்றி!!
    திரு.கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் அனுப்பியுள்ள சப்தரிஷீர்வரவர் - ஊற்சவ மூர்த்தி தரிசனம் நன்றாக உள்ளது.அவருக்கு எமது நன்றிகள்.

    ReplyDelete
  2. 7ம் அதிபன் தன்வீட்டுக்கு 12ல் அமர்ந்துள்ளதும், சுக்கிரன் கேதுவுடன் இணைந்ததும், குரு பகைவீட்டில் மாந்தியுடன் அமைந்ததும், சந்திரனுக்கு7ல் சனியும் லக்கினத்திற்கு 8ல் சனியும் உள்ள பெண் வந்து 'லவ் மேரியேஜ்' பண்ணிக்கட்டுமா என்று கேட்டால் என்ன சொல்வது?ஆண்டவனே!

    சிவராத்திரி செய்தி நன்றாக உள்ளது. சிவ புராணத்தை ஒரு முறையாவது படிக்கச் செய்து விட்டீர்களே! அந்த அளவு புண்ணியாம்தான்.

    நான் அனுப்பிய படங்களை வெளியிட்டதற்கு நன்றி.

    நேற்று திருவையாறு கோவிலுக்கு தஞ்சாவூராருடன் சென்றேன். நேற்றும் இன்றும் நாளையும் நாட்டியாஞ்சலி நடக்கிறது.30 குழுக்களுக்கு மேல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் முதல் நாளில் இரண்டவது நிகழ்ச்சியில் நடந்த மோகினியாட்டம் பார்த்துவிட்டு கிறங்கிப்போய் லால்குடி நள்ளிரவில் திரும்பினேன்

    ReplyDelete
  3. அந்த 'சேப்பு' பாப்பாவின் ஆட்டத்திற்குப் பாட்டு மட்டும்தானா நான் பாட வேண்டும்.கூடச் சேர்ந்து நானும் ஆடினால் ஆகாதோ?

    பூனை பூனைதான். சிங்கம் சிங்கம் தான்.மனத்தளவில் சிங்கமாக இருந்தலும் உடல் பலமும் ஒத்துழைக்க வேண்டாமா?ஆடுகளுடன் சேர்ந்து வளர்ந்த சிங்கக்குட்டியின் கதையை ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.

    ReplyDelete
  4. ஈசனே எந்தையே என்னிலை யானுறுனிம்
    நேசனேநினை நினைக்கையில் சிந்தையில் தேனூறும்
    பூசனை வேறொன்றும் யான்புரியேன் -அல்லால்நின்
    தாசனாய் கமலப்பாதம் போற்றியே!

    போற்றிடு மனமே பொல்லா வினையறுக்கும்
    பொற் பாதம் தினமே.

    தினமும் யாதொரு கணமும் எந்தன்
    மனமும் நினைமறக்கவும் கூடுமோ?

    கூடலில் முக்கூடலில் தேடலில் -தேடுவோர்
    பாடலில் தித்திக்கும் அமுதே!

    அமுதே ஆருயிரே ஆலகாலம் உண்டே
    குமுதக் குவலயம் காத்தோனே!

    காப்பாய் கதிரொளி நிறைமதி நிமலா
    பா(ர்)ப்பாய் என்றே பணிந்தோமே.

    பணிந்தோம் நின்பாத மலர் -எனவே
    துணிந்தோம் நினைச்சேர தூயனே!

    தூயனே மாயையின் மணாளனே -எங்கள்
    நேயனே தடுத்தாள்வை தேவதேவனே!

    மகாசிவராத்திரியின் பதிவு...
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்,

    மனைதுணை ஜாதக அமைப்பைக்குறித்த முதல் விதி மிகவும் உபயோகமாக உள்ளது! வண்ணப்படங்களும் மிக நன்று!

    ReplyDelete
  6. பூஜ்ஜியத்திற்கு பிறகு என்ன..
    ப்பூ இவ்வளவு தான என எண்ணவேண்டாம்

    விளக்கமும் விவரமும்
    விரும்பினால் மட்டும் நாளை

    அதுவரையில்
    அன்பு வணக்கங்களுடன்

    ReplyDelete
  7. ///முன் ஜன்ம பூர்வ புண்ணியப்படி வாங்கிவந்த வரம். பிறக்கும்போதே வாங்கிவந்த வரம். முன் ஜன்மம், பூர்வ புண்ணியம், வாங்கிவந்த வரம ///

    எழுபதுகளில் திருமணம் செய்த தகவல்
    எண்ணத்தில்நிழலாடலையா..

    அவர்கள் அப்படித்தான்..
    அதை பெருமை கொண்டு இருக்கட்டுமே

    திருவாசகத் தேனை
    தெவிட்டாத தெள்ளமுதை

    சிந்திக்க தந்தமைக்கும்
    சிறப்பான படங்களை எடுத்தனுப்பிய

    லால்குடி அன்பரையும்
    அன்போடு வணங்குகிறோம்..

    ReplyDelete
  8. //// V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு!
    சிவராத்திரியைப் பற்றிய
    அருமையான தகவல்களை படித்துப் பார்ப்பதற்கு ஏதுவாக
    சுட்டியை கொடுத்தமைக்கும், .
    மாணிக்கவாசகர் அருளியுள்ள சிவபுராணம் _நாங்களே படித்தாலும், குருவின் வழிகாட்டுதலில் இன்றைய தினத்தில் படிப்பது மிகவும் சிறப்பாகும்.அறிவுறுத்திய
    தங்களுக்கு மிகுந்த நன்றி!!
    திரு.கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் அனுப்பியுள்ள சப்தரிஷீர்வரவர் - ஊற்சவ மூர்த்தி தரிசனம் நன்றாக உள்ளது.அவருக்கு எமது நன்றிகள்.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  9. /// kmr.krishnan said...
    7ம் அதிபன் தன்வீட்டுக்கு 12ல் அமர்ந்துள்ளதும், சுக்கிரன் கேதுவுடன் இணைந்ததும், குரு பகைவீட்டில் மாந்தியுடன் அமைந்ததும், சந்திரனுக்கு7ல் சனியும்

    லக்கினத்திற்கு 8ல் சனியும் உள்ள பெண் வந்து 'லவ் மேரியேஜ்' பண்ணிக்கட்டுமா என்று கேட்டால் என்ன சொல்வது?ஆண்டவனே!
    சிவராத்திரி செய்தி நன்றாக உள்ளது. சிவ புராணத்தை ஒரு முறையாவது படிக்கச் செய்து விட்டீர்களே! அந்த அளவு புண்ணியாம்தான்.
    நான் அனுப்பிய படங்களை வெளியிட்டதற்கு நன்றி.
    நேற்று திருவையாறு கோவிலுக்கு தஞ்சாவூராருடன் சென்றேன். நேற்றும் இன்றும் நாளையும் நாட்டியாஞ்சலி நடக்கிறது.30 குழுக்களுக்கு மேல் கலந்து

    கொள்ளும் நிகழ்ச்சியில் முதல் நாளில் இரண்டவது நிகழ்ச்சியில் நடந்த மோகினியாட்டம் பார்த்துவிட்டு கிறங்கிப்போய் லால்குடி நள்ளிரவில் திரும்பினேன்/////

    அரங்கில் கேன்டீன இருக்கிறதா? தஞ்சாவூராருக்குத் தெரியாமல அங்கே சென்று என்ன ஸ்பெஷல அயிட்டம் வெட்டினீர்கள்?

    ReplyDelete
  10. //// Ananthamurugan said...
    Migavum nantraga ullathu./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /// kmr.krishnan said...
    அந்த 'சேப்பு' பாப்பாவின் ஆட்டத்திற்குப் பாட்டு மட்டும்தானா நான் பாட வேண்டும்.கூடச் சேர்ந்து நானும் ஆடினால் ஆகாதோ? /////

    யார் வேண்டாமென்றது? நன்றாக ஆடுங்கள். மேலிடத்தில் உத்தரவு வாங்கியாச்சா?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////பூனை பூனைதான். சிங்கம் சிங்கம் தான்.மனத்தளவில் சிங்கமாக இருந்தாலும் உடல் பலமும் ஒத்துழைக்க வேண்டாமா?ஆடுகளுடன் சேர்ந்து வளர்ந்த
    சிங்கக்குட்டியின் கதையை ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.////

    பேட்டை தாதா வேலையையா செய்யப்போகிறோம், உடல் பலமெதற்கு?

    ReplyDelete
  12. //// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    ஈசனே எந்தையே என்னிலை யானுறுனிம்
    நேசனேநினை நினைக்கையில் சிந்தையில் தேனூறும்
    பூசனை வேறொன்றும் யான்புரியேன் -அல்லால்நின்
    தாசனாய் கமலப்பாதம் போற்றியே!
    போற்றிடு மனமே பொல்லா வினையறுக்கும்
    பொற் பாதம் தினமே.
    தினமும் யாதொரு கணமும் எந்தன்
    மனமும் நினைமறக்கவும் கூடுமோ?
    கூடலில் முக்கூடலில் தேடலில் -தேடுவோர்
    பாடலில் தித்திக்கும் அமுதே!
    அமுதே ஆருயிரே ஆலகாலம் உண்டே
    குமுதக் குவலயம் காத்தோனே!
    காப்பாய் கதிரொளி நிறைமதி நிமலா
    பா(ர்)ப்பாய் என்றே பணிந்தோமே.
    பணிந்தோம் நின்பாத மலர் -எனவே
    துணிந்தோம் நினைச்சேர தூயனே!
    தூயனே மாயையின் மணாளனே -எங்கள்
    நேயனே தடுத்தாள்வை தேவதேவனே!
    மகாசிவராத்திரியின் பதிவு...
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!////

    என்ன இன்றைக்கு ஆபீசிற்கு டும்மாவா? பதிலுக்குப் பதில் பாட்டெழுத நேரமேது?

    ReplyDelete
  13. //// ரமேஷ் வெங்கடபதி said...ஐயா வணக்கம்,
    மனைதுணை ஜாதக அமைப்பைக்குறித்த முதல் விதி மிகவும் உபயோகமாக உள்ளது! வண்ணப்படங்களும் மிக நன்று!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. //// அய்யர் said...
    பூஜ்ஜியத்திற்கு பிறகு என்ன..
    ப்பூ இவ்வளவு தான என எண்ணவேண்டாம்
    விளக்கமும் விவரமும்
    விரும்பினால் மட்டும் நாளை
    அதுவரையில்
    அன்பு வணக்கங்களுடன்/////

    15 தினங்களாக எங்களை சஸ்பென்சில் தொங்க விட்டிருக்கிறீர்கள். அது என்ன என்று தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமலா இருப்போம்? சீக்கிரம் சொல்லுங்கள்!

    ReplyDelete
  15. /// அய்யர் said...
    ///முன் ஜன்ம பூர்வ புண்ணியப்படி வாங்கிவந்த வரம். பிறக்கும்போதே வாங்கிவந்த வரம். முன் ஜன்மம், பூர்வ புண்ணியம், வாங்கிவந்த வரம ///
    எழுபதுகளில் திருமணம் செய்த தகவல்
    எண்ணத்தில்நிழலாடலையா..
    அவர்கள் அப்படித்தான்..
    அதை பெருமை கொண்டு இருக்கட்டுமே
    திருவாசகத் தேனை
    தெவிட்டாத தெள்ளமுதை
    சிந்திக்க தந்தமைக்கும்
    சிறப்பான படங்களை எடுத்தனுப்பிய
    லால்குடி அன்பரையும்
    அன்போடு வணங்குகிறோம்.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா,
    7ம் அதிபதி மறைந்தால் நல்ல வாழ்க்கை துணை அமைவது கடினம் என்பது பொது விதி...12ம் ஸ்தானத்தை விட 6,8ஆம் இடங்கள் மிகவும் மோசமான பலன்களை தரக்கூடிய ஸ்தானங்கள் ஆயிற்றே,இவற்றை ஏன் முதல் விதியில் சேர்க்கவில்லை?...ஆறில் ஒருவருக்கு இத்தகைய மோசமான அமைப்பு அமையும் என்பது புதிய தகவல்...நன்றி ஐயா...


    இனி ஒவ்வொரு ஜென்ம நட்சத்திரத்தன்றும் சிவபெருமானை நிச்சயம் பிரார்த்தனை செய்வேன் ஐயா...நமசிவாயமே...

    kmrk அவர்கள் "ஆருத்ரா தரிசனம்" படங்கள் பார்ப்பதற்கே "தெய்வீகம்"ஆக இருந்தது...நன்றி ஐயா...

    ReplyDelete
  17. படத்தில் உள்ள சிறுமியை பார்த்தால் "பாங்ரா" ஆடுவாள் போல...பஞ்சாபி பாடலுக்கு எங்கே போவது?!!!....


    தன்னம்பிக்கை தான் வாழ்வின் ஆதாரம்...நல்ல வாழ்க்கை தத்துவம்...அப்படி சொல்லு என் "பூனைக்குட்டி", இல்லை இல்லை..."சிங்கக் குட்டி"...

    ReplyDelete
  18. //அரங்கில் கேன்டீன இருக்கிறதா? தஞ்சாவூராருக்குத் தெரியாமல அங்கே சென்று என்ன ஸ்பெஷல அயிட்டம் வெட்டினீர்கள்?//

    திருவையாறு நாட்டியாஞ்சலி மட்டுமே மேடை அமைக்காமல் சிவபெருமான் சன்னிதியிலேயே நடை பெறுகிறது. எனவே கோவில் உள்ளே என்பதால் கேன்டீன் ஏற்பாடு எல்லாம் கிடையாது. 'ஊரில் கல்யாணம் மாரில சந்தனம்' என்பதெல்லாம் கிடையாது.அவாவா, அவாவா ஆத்தில சாப்பாடு. சிக்கனமாக செய்தே ஒரு லட்சம் செலவாகிறது. கைப்பிடிப்பு இல்லாமல் தஞ்சாவூரார் மீள்வதே பெரும்பாடு.

    ReplyDelete
  19. ஹா ஹா வந்துட்டோம்ல!

    அடுத்து சந்திரனின் நட்சதிரங்களுக்கான கோயில்கள், அதற்குத்தான் இந்த முன்னுரை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  20. பதிவிற்கு நன்றி ஐயா.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா யோக மையம் சென்றிருந்தோம் மஹாசிவராத்திரியன்று. கடுமையான பக்தர்கள் கூட்டம். இந்த முறை அருகில் உள்ள சிவாலயம் செல்லலாம்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  21. //ஹா ஹா வந்துட்டோம்ல!//

    நீங்க வில்லி சிரிப்புச் சிரித்தால் நாங்களும் வீரப்பா சிரிப்பு சிரிப்போம்ல?
    ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஹாஹா !

    என்ன அலுவலகத்திலேயே அனுமதி வாங்கியாச்சா? அல்லது தனியா 'சிஸ்டம்' வாங்கியாச்சா?

    மைனர் உஷார்! டெல்லி தர்பார் ஆரம்பிக்கிறதாம் ஓய்!

    ReplyDelete
  22. ////Uma said...
    ஹா ஹா வந்துட்டோம்ல////

    அய்யர் கவுன்ட் டவுன் பண்ணினது உங்க ரீ-என்ட்ரிக்குத்தானா? பூஜ்யம் முடிஞ்சதும் டாண்ணு வந்துகுதிச்சுட்டீங்களே?வரவு நல்வரவாகுக..

    ReplyDelete
  23. திருமணம் அமையாமல் போவதற்கு அல்லது திருமணம் நடந்து பிரிந்துப் போவதற்கு அதிகமாக 6,8,12 அதிபதிகள் அல்லது அதில் இருக்கும் கிரகங்கள் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வரிசையில் அடுத்ததாக வருபவர் 3ம் அதிபதி. இவற்றுள் எவர் திருமண வாழ்க்கையில் குறைவாக பிரச்சினை ஏற்படுத்துவார் என்று பார்ப்பது எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்ப்பதைப் போன்றது.

    இருப்பினும் பிரபல ஜோதிடர் K.N. Rao அவர்கள் தன்னுடைய Analyzing Horoscopes Through Modern Technique என்ற புத்தகத்தில் In the ending of any marriage the role of the 8th house or planet in the 8th is well known என்று சொல்லியிருக்கிறார். அவருடைய கருத்திற்கு யாம் தலை வணங்கியே ஆக வேண்டும். மற்றுக் கருத்து இல்லை.

    ReplyDelete
  24. தில்லி எதிர்கட்சி தலைவி அவர்களை இரு கரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன்.

    சந்திர பகவானுக்கு 27 மனைவிகள் என்று படித்திருக்கிறேன். எனது நட்சத்திரத்தின் அதி தேவதையும் அவர்தான்.

    ReplyDelete
  25. போன ஜூலை மூன்றாம் தேதி பகல் பன்னிரண்டு மணியளவில், சிதம்பரத்தில் கீழ வீதியில் பல்லக்கில் சென்ற சாமியை நான் படம் எடுக்க முயன்ற போது பல்லகில் சாமியுடன் சென்ற தீஷிதர் என்னை படம் எடுக்காதே எனத் தடுத்தார்.

    கோவிலுக்குள் படம் எடுப்பதுதான் தவறு. வீதியுலாவில் ஊற்சவ மூர்த்தியாக எல்லோருக்கும் காட்சி தர வரும் சாமியை ஏன் படம் எடுக்கக் கூடாது என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது என்று சொல்வதை நினைவூட்டியது. தான் எடுத்த படங்களை பகிர்ந்து கொண்ட KMRK ஐயாவிற்கு நன்றி.

    பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக ...உமாவிற்காக இந்த பாட்டு. ஆலாசியத்தின் கவிதை நன்றாக இருக்கிறது.

    ஆணுக்கோ பெண்ணுக்கோ வாழ்கையில் முன்னேறுவதற்கு பிச்சு பிடுங்களில்லாத குடும்ப வாழ்கை அவசியம். Otherwise it will be chronic disorder, trying an amputation certainly won't help. A loss is a loss with a lifelong impact. பக்க பலமாக உள்ள வாழ்கை துணையும், குடும்பமும் அமைந்துவிட்டால் மேலே உயர உயர போகாவிட்டாலும் வரும் துன்பங்களைப் போராடித் தாங்கிக்கொள்ள உறுதுணையாய் இருப்பார்கள். எல்லோருக்கும் இந்த வரம் அமைவதில்லை. அது அமைந்தவர்களுக்கோ அதன் மதிப்பும் தெரிவதில்லை.

    பாடத்திற்கு நன்றி ஐயா. சிவராத்திரி பற்றிய உங்கள் பதிவைப் படித்ததும் திருவிளையாடல் படத்தில் (சிவாஜி சாவித்திரி நடித்த அக்மார்க் ஒரிஜினல் படம்) சீர்காழியும் சுசீலாவும் பாடிய "சம்போ மாகாதேவா" பாடலை கேட்கத் தோன்றியது.


    யாராவது கேட்க விரும்பினால் இங்கே பார்க்கவும்:
    http://youtu.be/PLVc5so-jjM

    ReplyDelete
  26. //// R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    7ம் அதிபதி மறைந்தால் நல்ல வாழ்க்கை துணை அமைவது கடினம் என்பது பொது விதி...12ம் ஸ்தானத்தை விட 6,8ஆம் இடங்கள் மிகவும் மோசமான

    பலன்களை தரக்கூடிய ஸ்தானங்கள் ஆயிற்றே,இவற்றை ஏன் முதல் விதியில் சேர்க்கவில்லை?...ஆறில் ஒருவருக்கு இத்தகைய மோசமான அமைப்பு

    அமையும் என்பது புதிய தகவல்...நன்றி ஐயா...
    இனி ஒவ்வொரு ஜென்ம நட்சத்திரத்தன்றும் சிவபெருமானை நிச்சயம் பிரார்த்தனை செய்வேன் ஐயா...நமசிவாயமே...
    kmrk அவர்கள் "ஆருத்ரா தரிசனம்" படங்கள் பார்ப்பதற்கே "தெய்வீகம்"ஆக இருந்தது...நன்றி ஐயா.../////

    ந்ல்லது ஷோபனாஜி! பிரார்த்தனை பலனில் எனக்கும் ஒரு ஐநூறு கிராம் வாங்கிக்கொண்டு வாருங்கள்!:-))))

    ReplyDelete
  27. //// kmr.krishnan said...
    //அரங்கில் கேன்டீன இருக்கிறதா? தஞ்சாவூராருக்குத் தெரியாமல அங்கே சென்று என்ன ஸ்பெஷல அயிட்டம் வெட்டினீர்கள்?//
    திருவையாறு நாட்டியாஞ்சலி மட்டுமே மேடை அமைக்காமல் சிவபெருமான் சன்னிதியிலேயே நடை பெறுகிறது. எனவே கோவில் உள்ளே என்பதால் கேன்டீன்

    ஏற்பாடு எல்லாம் கிடையாது. 'ஊரில் கல்யாணம் மாரில சந்தனம்' என்பதெல்லாம் கிடையாது.அவாவா, அவாவா ஆத்தில சாப்பாடு. சிக்கனமாக செய்தே

    ஒரு லட்சம் செலவாகிறது. கைப்பிடிப்பு இல்லாமல் தஞ்சாவூரார் மீள்வதே பெரும்பாடு./////

    வாழ்க அவர் உள்ளம்! வளர்க அவரது தொண்டு!

    ReplyDelete
  28. //// Uma said...
    ஹா ஹா வந்துட்டோம்ல!
    அடுத்து சந்திரனின் நட்சதிரங்களுக்கான கோயில்கள், அதற்குத்தான் இந்த முன்னுரை என நினைக்கிறேன்./////

    மாமகளே மாமகளே வருக - உங்கள்
    வலது காலை எடுத்துவைத்து வருக!

    ReplyDelete
  29. //// Sathish K said...
    பதிவிற்கு நன்றி ஐயா.
    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா யோக மையம் சென்றிருந்தோம் மஹாசிவராத்திரியன்று. கடுமையான பக்தர்கள் கூட்டம். இந்த முறை அருகில் உள்ள

    சிவாலயம் செல்லலாம்.
    நன்றி ஐயா./////

    அப்படியே செய்யுங்கள் நண்பரே!

    ReplyDelete
  30. //// kmr.krishnan said...
    //ஹா ஹா வந்துட்டோம்ல!//
    நீங்க வில்லி சிரிப்புச் சிரித்தால் நாங்களும் வீரப்பா சிரிப்பு சிரிப்போம்ல?
    ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஹாஹா !
    என்ன அலுவலகத்திலேயே அனுமதி வாங்கியாச்சா? அல்லது தனியா 'சிஸ்டம்' வாங்கியாச்சா?
    மைனர் உஷார்! டெல்லி தர்பார் ஆரம்பிக்கிறதாம் ஓய்!/////

    ஐபேட் வாங்கிட்டாங்க! இனிமேல் தூள் கிளப்புவாங்க!

    ReplyDelete
  31. /// minorwall said...
    ////Uma said...
    ஹா ஹா வந்துட்டோம்ல////
    அய்யர் கவுன்ட் டவுன் பண்ணினது உங்க ரீ-என்ட்ரிக்குத்தானா? பூஜ்யம் முடிஞ்சதும் டாண்ணு வந்து குதிச்சுட்டீங்களே?வரவு நல்வரவாகுக..////

    அதுதான் அம்மணியோட ஸ்பெஷாலிட்டி! நானும் உங்களோடு சேர்ந்து வரவேற்கிறேன் மைனர்!

    ReplyDelete
  32. //// ananth said...
    திருமணம் அமையாமல் போவதற்கு அல்லது திருமணம் நடந்து பிரிந்துப் போவதற்கு அதிகமாக 6,8,12 அதிபதிகள் அல்லது அதில் இருக்கும் கிரகங்கள்காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வரிசையில் அடுத்ததாக வருபவர் 3ம் அதிபதி. இவற்றுள் எவர் திருமண வாழ்க்கையில் குறைவாக
    பிரச்சினை ஏற்படுத்துவார் என்று பார்ப்பது எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்ப்பதைப் போன்றது.
    இருப்பினும் பிரபல ஜோதிடர் K.N. Rao அவர்கள் தன்னுடைய Analyzing Horoscopes Through Modern Technique என்ற புத்தகத்தில் In the ending of
    any marriage the role of the 8th house or planet in the 8th is well known என்று சொல்லியிருக்கிறார். அவருடைய கருத்திற்கு யாம் தலை
    வணங்கியே ஆக வேண்டும். மற்றுக் கருத்து இல்லை./////

    அலசுவதற்கு மிகவும் சிரமமான வீடுகளில் இதுவும் ஒன்று. பல விதிகள், உபவிதிகள், அமைப்புக்கள் என்று பலவற்றையும் பார்க்க வேண்டும். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  33. //// ananth said...
    தில்லி எதிர்கட்சி தலைவி அவர்களை இரு கரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன்.
    சந்திர பகவானுக்கு 27 மனைவிகள் என்று படித்திருக்கிறேன். எனது நட்சத்திரத்தின் அதி தேவதையும் அவர்தான்./////

    அடடா, தில்லிக்கார அம்மாவிற்குத்தான் எத்தனை விதமான வரவேற்பு? நானும் வாத்தியார் வேலையை விட்டு விட்டு தில்லிக்குப் போய்விடலாமா என்று பார்க்கிறேன்!:-))))

    ReplyDelete
  34. //// தேமொழி said...
    போன ஜூலை மூன்றாம் தேதி பகல் பன்னிரண்டு மணியளவில், சிதம்பரத்தில் கீழ வீதியில் பல்லக்கில் சென்ற சாமியை நான் படம் எடுக்க முயன்ற போது பல்லகில் சாமியுடன் சென்ற தீஷிதர் என்னை படம் எடுக்காதே எனத் தடுத்தார்.
    கோவிலுக்குள் படம் எடுப்பதுதான் தவறு. வீதியுலாவில் ஊற்சவ மூர்த்தியாக எல்லோருக்கும் காட்சி தர வரும் சாமியை ஏன் படம் எடுக்கக் கூடாது என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது என்று சொல்வதை நினைவூட்டியது. தான் எடுத்த படங்களை பகிர்ந்து கொண்ட KMRK ஐயாவிற்கு நன்றி.
    பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக ...உமாவிற்காக இந்த பாட்டு. ஆலாசியத்தின் கவிதை நன்றாக இருக்கிறது.
    ஆணுக்கோ பெண்ணுக்கோ வாழ்கையில் முன்னேறுவதற்கு பிச்சு பிடுங்களில்லாத குடும்ப வாழ்கை அவசியம். Otherwise it will be chronic disorder, trying an amputation certainly won't help. A loss is a loss with a lifelong impact. பக்க பலமாக உள்ள வாழ்கை துணையும், குடும்பமும் அமைந்துவிட்டால் மேலே உயர உயர போகாவிட்டாலும் வரும் துன்பங்களைப் போராடித் தாங்கிக்கொள்ள உறுதுணையாய் இருப்பார்கள். எல்லோருக்கும் இந்த வரம் அமைவதில்லை. அது அமைந்தவர்களுக்கோ அதன் மதிப்பும் தெரிவதில்லை.
    பாடத்திற்கு நன்றி ஐயா. சிவராத்திரி பற்றிய உங்கள் பதிவைப் படித்ததும் திருவிளையாடல் படத்தில் (சிவாஜி சாவித்திரி நடித்த அக்மார்க் ஒரிஜினல் படம்) சீர்காழியும் சுசீலாவும் பாடிய "சம்போ மாகாதேவா" பாடலை கேட்கத் தோன்றியது.
    யாராவது கேட்க விரும்பினால் இங்கே பார்க்கவும்:
    http://youtu.be/PLVc5so-jjM////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி

    ReplyDelete
  35. என்ன அலுவலகத்திலேயே அனுமதி வாங்கியாச்சா? அல்லது தனியா 'சிஸ்டம்' வாங்கியாச்சா//
    ஐபேட் வாங்கிட்டாங்க!//

    அட நீங்க வேற சார்! நானாவது ஐபேட் வாங்கறதாவது. அலுவலகத்தில் முன்போல் திரும்ப ப்லாக்ஸ் திறக்கமுடிகிறது (நம்ம தலைவர் இப்போ வக்கிரமா சுற்றிக்கொண்டிருப்பதால் இது நடந்திருக்கிறது என நினைக்கிறேன்). திரும்ப அப்படி ஏதாவது ஆனால் வீட்டில் இணைய இணைப்பு கொடுக்கலாம்னு முடிவு செய்திருக்கிறேன்.

    ReplyDelete
  36. பூஜ்யம் முடிஞ்சதும் டாண்ணு வந்துகுதிச்சுட்டீங்களே?வரவு நல்வரவாகுக..//

    நன்றி! இந்த பேனர், கட் அவுட் இதெல்லாம் கிடையாதா?

    ReplyDelete
  37. தில்லி எதிர்கட்சி தலைவி அவர்களை இரு கரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன்.//

    ஹா ஹா, தங்கள் வரவேற்புக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  38. பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக ...உமாவிற்காக இந்த பாட்டு.//

    நன்றி தேமொழி!

    ReplyDelete
  39. மாமகளே மாமகளே வருக - உங்கள்
    வலது காலை எடுத்துவைத்து வருக!//

    ஹா ஹா, நன்றி சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com