Astrology பூணூலை மாற்றுகிற தினம் மட்டுமா அது?
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 9
அவிட்ட நட்சத்திரம்
கோரக்கர் என்னும் பெயரைக்கொண்ட சித்தர் ஆலயங்களுக்கு யாத்திரையாக வந்தபோது, இத்தலத்திற்கு வந்தாராம். வந்தவர் இங்கே உறையும்
சிவபெருமானைத் தரிசித்துவிட்டு, அருகில் இருந்த மடம் ஒன்றில் தங்கினாராம்.
அந்தக் காலத்தில் ஊருக்கு ஊர் மடங்களும், வீட்டுக்கு வீடு திண்ணைகளும் இருந்தன. வழிப்போக்கர்களும், பயணிகளும் இரவு நேரத்தில் தங்கிச் செல்வார்கள்.
அப்படி மடம் ஒன்றில் தங்கிசென்றபோது கோரக்கர் (என்ன பெயருடா சாமி) ஒரு சோதனைக்கு உள்ளானார். பல பக்தர்கள் முன்பே அங்கு தங்கியிருந்தனர்.
அவர்களோடு ஒரு ஓரமாகப் படுத்திருந்த கோரக்கர் அசதியில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவில் திடீரென விழித்தவருக்கு, அதிர்ச்சியாக இருந்தது. அருகில் ஒரு இளம் பெண் படுத்திருந்தாள். அத்துடன் அவளுடைய சேலைத்தலைப்பு விலகி, இவர் மேற்கிடந்தது. அப்பொழுதெல்லாம் ஒன்பது முளம் சேலை. பெண்கள் ரவிக்கை (Blouse) அணிவதில்லை. அதனால் இறுக்கி முடிந்துகொண்டுதான் படுப்பார்கள். அப்படி இருந்தும் எப்படி விழுந்தது என்று தெரியவில்லை.கோரக்கர் மிகவும் வருத்தமுற்றார்.
அதற்குப் பரிகாரமாக தன் கையை வெட்டிக் கொண்டு விட்டார். பிறகு அந்த மடத்திலேயே சில காலம் தங்கி, அங்குள்ள சந்திர புஷ்கரணியில் தினமும்
இருமுறை நீராடி, வெட்டுப்பட்ட கையோடு ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லித்தாயாரையும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவனார் அந்தச் சித்தருக்கு அருள்பாலித்தார். சித்தருக்கு மீண்டும் கை கிடைத்தது. கோரக்கரின் கை வெட்டுப்பட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு கோரக்கை என்ற பெயர் உண்டானது. தனது வெட்டுண்ட கையால் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பெற்றது. காலப்போக்கில் அது கொருக்கை என்று மாறி விட்டது.
பிரம்மாவிடம் இருந்த வேத நூற்சுவடிகளை அசுரரகள் திருடிக் கொண்டு போய்விட்டார்கள். மகாவிஷ்ணு மீட்டுக் கொடுத்தார். அந்த நிகழ்வால், பிரம்மாவினால் இயல்பாக இருக்க முடியவில்லை. படைப்புத் தொழிலையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. விஷ்ணுவின் ஆலோசனைப்படி, அவர் இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, பாதப்பிரதட்சணம் செய்து தினமும் சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நன்நாளில், சிவன் பிரம்மாவிற்கு ஞானம் (wisdom) கொடுத்தார். அதனால் பிரம்மா மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி முன்போலவே சிறப்பாகச் செயல் புரிந்தார். அதனால் இத்தலநாதன் பிரம்ம ஞானபுரீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார்.
இறைவன் இங்கே சுயம்பு மூர்த்தி. சிவனுக்கும் அம்பிகைக்கும் எதிரில் உள்ள இரண்டு நந்திகளும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
முந்திரிப்பருப்பு, நிலக்கடலை இரண்டையும் கலந்து மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது இங்கே நிலவும் நம்பிக்கை.
அருள்மிகு பிரம்ம ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை என்னும் கிராமத்தில், பட்டீஸ்வரம் என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ளது. அந்தப்
பட்டீஸ்வரம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. சுவாமியின் பெயர் பிரம்மஞானபுரீஸ்வரர். தாயாரின் பெயர், அதாவது அம்பிகையின் பெயர் புஷ்பவல்லி. கோவிலின் முன் உள்ள திருக்குளத்தின் பெயர்: சந்திர புஷ்கரிணி. 1000 ஆண்டுகட்கு முற்பட்ட புராதனக்கோவில். கோவிலின் நடை காலை 11 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். மகாசிவராத்திரியன்று திருவிழா நடைபெறும்.
மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டப்பெற்றுள்ளது.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் நீங்கிச் சுகமடைய இத்தல இறைவனை வழிபாடு செய்வது நல்லது. அத்துடன் கல்வியில் சிறக்க, திருமணத் தடைகள் நீங்க, குடும்ப ஒற்றுமை வளர இங்கு பிரார்த்தனை செய்வதும் நல்லது. அதாவது நன்மை பயக்கும்!
ஆவணிமாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று பெளர்ணமியும் சேர்ந்துகொள்ளும். அன்றைய தினம் இங்கே வந்து வழிபடுதல் மேன்மை உடையதாகும்
கோயில் மிகவும் சிதிலமடைந்துள்ளது. அவிட்ட நட்சத்திரக்காரர்கள் ஒன்று சேர்ந்து, இத்தலத்திற்கு திருப்பணி செய்வது நல்லது. அது புண்ணியக் கணக்கில் வரும்! பணத்தை மட்டும் சேர்க்காமல் கொஞ்சம் புண்ணியத்தையும் சேருங்களேன்!
+++++++++++++++++++++++++++
ஆவணி அவிட்ட நட்சத்திரம் பற்றிய மேலதிகத்தகவல்:
கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி
அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?
சோ நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற
சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது
உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது
பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம்
செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.
வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது.
அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.
கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது
எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?
சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான்
இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து
விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு
மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன்,
இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.
தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில், அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.
ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ,
ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது
எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே
அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர் களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.
நன்றி: திருவாளர் சோ.ராமசாமி அவர்கள் மற்றும் சோ அவர்களின் செய்திகளைத் தொகுத்தளித்த திருவாளர் அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்
அன்புடன்
வாத்தியார்
அடிக்குறிப்பு: மகிழ்ச்சியான செய்தி - வாத்தியார் வெளியூர்ப் பயணம். நாளை ஒருநாள் வகுப்பறைக்கு விடுமுறை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++வாழ்க வளமுடன்!
பாடத்திற்கு நன்றிகள் ஐயா!
ReplyDeleteபிரம்ம தேவனின் படம் அருமையாக உள்ளது...
சோ...
ReplyDeleteso...
Do we have Mr. Cho's horoscope for analysis. Can you publish your analysis as part of one of the blog.
ReplyDeleteஆஹா என் நட்சத்திரத்திற்கான கோவில். நன்றி ஐயா
ReplyDeleteஐயா, எனக்கும் அவிட்ட ஓரைதான். கோயில் பற்றிய தகவலுக்கு நன்றி.
ReplyDeleteகையை வெட்டிக் கொள்வது எல்லாம் தேவையில்லாதது.
சோவின் உறுதிமொழி பிரமாணம் பற்றிய பதில் சிந்திக்க வைப்பது.
The new trend ... wedding vow renewal ceremonies getting popular nowadays
ஆவணி அவிட்டம் ரிக், ய்ஜூர் வேதம் ஆகியவைகளுக்குத் தான் அவிட்ட நட்சத்திரத்தில் கொண்டாடுவது. என்னைப்போன்ற சாம வேதிகளுக்கு ஆவணி ஹஸ்தத்தில் கொண்டாட வேண்டும். பிள்ளையார் சதுர்த்தி அன்றோ அல்லது அதனை ஒட்டிய நாட்களிலோ வரும்.
ReplyDeleteஇசையுடன் சொல்வது சாம வேதம். வேதங்களில் நான் சாம வேதம் என்று பகவத்கீதையில் பகவானே சொல்லிவிட்டார்.
சிவ பெருமானுக்கு உகந்தது சாம வேதமே. சாமவேதப்பிரியர் சிவன்.ஆங்கிலத்தில் எழுதும்போது (Civan) என்று எழுத வேண்டுமாம். அது தான் அவருக்கு மதிப்பளிக்குமாம்.
அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
நட்சத்திரக் கோவில்களுக்கு அந்தந்த நட்சத்திரக்காரர்கள் செல்வது சிறப்பு. மற்றவர்கள் போனாலும் இறையருள் கிடைக்கும்.
கோவில் பற்றிய தகவல்களும், சோவின் விளக்கமும் நன்றாக உள்ளன. நன்றி
ஐயா!
கொருக்கை தலபுராணம் கேட்பது இப்போதுதான். ஆகவே சுவாரசியமாக இருந்தது. ஆவணி அவிட்டம் பற்றி 'சோ' அவர்களின் கருத்து "எங்கே பிராமணன்?" தொடரில் சொல்லப்பட்டது. கேள்வி பதில் என்பது பத்திரிகைகளில் வடக்கே 'மதர் இந்தியா' எனும் பத்திரிகையை நடத்தியவரும் (ஆசிரியர் பெயர் மறந்துவிட்டது), நம் கல்கண்டு தமிழ்வாணனும் பிரபலமானவர்கள். 'குமுதத்தில்' அரசு பதில்கள் சுவாரசியமாக இருந்தது. இப்போது 'சோ' அவர்களின் 'துக்ளக்' இதழில் வரும் கேள்வி பதில்கள் மிக நன்றாக இருக்கின்றது. சோ, நேரடியாக கேள்விக்கு பல நேரங்களில் சொல்வதில்லை. இடக்கு மடக்காக எதிர் கேள்வி கேட்பார். கேள்வி கேட்பவர்கள் திணறிப் போக வேண்டும். ஒவ்வோராண்டும் உறுதிமொழி எடுப்பதில் பகுத்தறிவு எங்கே போயிற்று, ஆண்டுதோறும் உபாகர்மா செய்வதில் மட்டும் அது தலையெடுக்குமா என்பது அவரது பாணி பதில். சரி! அது போகட்டும், நமது இதிகாசங்களான பாரதமும், இராமாயணமும் நம் மக்கள் பெரும்பாலோர் அறிந்த கதைகள்தான் எனினும் இராமாயண, பாரத கதைகள் சொல்கிறார்கள் என்றால் மக்கள் பெருமளவில் போய் கேட்பதன் காரணமும், சோவின் மேற்கண்ட பதிலையொட்டி அமைந்ததுதான். எது பகுத்தறிவு என்பதையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.
ReplyDeleteஅருமையான பதிவு.அச்சச்சோ !!
ReplyDeleteசோ எப்பப்வும் காமெடியன் போல்வரும் ஹீரோ.
காலை கடி:ஒய்வு பெற்ற ராமு தாத்தாவுக்கு தினமும் மூன்று வேலைகள்...காலைல் பேப்பர் படிக்கிறது,காபி குடிகிறது,பாத்ரூம்ல வழுக்கி விழுறது.(பாத்ரூம்ல வழுக்கி விழுறதும் ஒரு வேலையவே வச்சிருக்கிறார்.)
///////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteபாடத்திற்கு நன்றிகள் ஐயா!
பிரம்ம தேவனின் படம் அருமையாக உள்ளது...//////
உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!
///////Blogger iyer said...
ReplyDeleteசோ...
so...//////
ஓ....
yes
/////Blogger B Sudhakar. said...
ReplyDeleteDo we have Mr. Cho's horoscope for analysis. Can you publish your analysis as part of one of the blog.//////
அது கைவசம் இல்லை!
//////Blogger புதுகைத் தென்றல் said...
ReplyDeleteஆஹா என் நட்சத்திரத்திற்கான கோவில். நன்றி ஐயா/////
அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையில்கூட தங்கம் இருக்குமாம். உங்கள் வீட்டில் இருந்ததா?:-))))
//////Blogger தேமொழி said...
ReplyDeleteஐயா, எனக்கும் அவிட்ட ஓரைதான். கோயில் பற்றிய தகவலுக்கு நன்றி. கையை வெட்டிக் கொள்வது எல்லாம் தேவையில்லாதது.
சோவின் உறுதிமொழி பிரமாணம் பற்றிய பதில் சிந்திக்க வைப்பது.
The new trend ... wedding vow renewal ceremonies getting popular nowadays/////
ஓரையா? நட்சத்திரமா?
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஆவணி அவிட்டம் ரிக், ய்ஜூர் வேதம் ஆகியவைகளுக்குத் தான் அவிட்ட நட்சத்திரத்தில் கொண்டாடுவது. என்னைப்போன்ற சாம வேதிகளுக்கு ஆவணி
ஹஸ்தத்தில் கொண்டாட வேண்டும். பிள்ளையார் சதுர்த்தி அன்றோ அல்லது அதனை ஒட்டிய நாட்களிலோ வரும்.
இசையுடன் சொல்வது சாம வேதம். வேதங்களில் நான் சாம வேதம் என்று பகவத்கீதையில் பகவானே சொல்லிவிட்டார்.
சிவ பெருமானுக்கு உகந்தது சாம வேதமே. சாமவேதப்பிரியர் சிவன்.ஆங்கிலத்தில் எழுதும்போது (Civan) என்று எழுத வேண்டுமாம். அது தான் அவருக்கு
மதிப்பளிக்குமாம்.
அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
நட்சத்திரக் கோவில்களுக்கு அந்தந்த நட்சத்திரக்காரர்கள் செல்வது சிறப்பு. மற்றவர்கள் போனாலும் இறையருள் கிடைக்கும்.
கோவில் பற்றிய தகவல்களும், சோவின் விளக்கமும் நன்றாக உள்ளன. நன்றி
ஐயா!//////
சாம வேதம் வாழ்க! சாம வேத அன்பர்கள் வாழ்க! லால்குடி அன்பர்கள் வாழ்க!
//////Blogger Thanjavooraan said...
ReplyDeleteகொருக்கை தலபுராணம் கேட்பது இப்போதுதான். ஆகவே சுவாரசியமாக இருந்தது. ஆவணி அவிட்டம் பற்றி 'சோ' அவர்களின் கருத்து "எங்கே
பிராமணன்?" தொடரில் சொல்லப்பட்டது. கேள்வி பதில் என்பது பத்திரிகைகளில் வடக்கே 'மதர் இந்தியா' எனும் பத்திரிகையை நடத்தியவரும் (ஆசிரியர் பெயர்
மறந்துவிட்டது), நம் கல்கண்டு தமிழ்வாணனும் பிரபலமானவர்கள். 'குமுதத்தில்' அரசு பதில்கள் சுவாரசியமாக இருந்தது. இப்போது 'சோ' அவர்களின் 'துக்ளக்'
இதழில் வரும் கேள்வி பதில்கள் மிக நன்றாக இருக்கின்றது. சோ, நேரடியாக கேள்விக்கு பல நேரங்களில் சொல்வதில்லை. இடக்கு மடக்காக எதிர் கேள்வி
கேட்பார். கேள்வி கேட்பவர்கள் திணறிப் போக வேண்டும். ஒவ்வோராண்டும் உறுதிமொழி எடுப்பதில் பகுத்தறிவு எங்கே போயிற்று, ஆண்டுதோறும் உபாகர்மா
செய்வதில் மட்டும் அது தலையெடுக்குமா என்பது அவரது பாணி பதில். சரி! அது போகட்டும், நமது இதிகாசங்களான பாரதமும், இராமாயணமும் நம் மக்கள்
பெரும்பாலோர் அறிந்த கதைகள்தான் எனினும் இராமாயண, பாரத கதைகள் சொல்கிறார்கள் என்றால் மக்கள் பெருமளவில் போய் கேட்பதன் காரணமும்,
சோவின் மேற்கண்ட பதிலையொட்டி அமைந்ததுதான். எது பகுத்தறிவு என்பதையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.//////
அதைச் செய்ய ஆட்சியாளர்களுக்கு ஏது நேரம்? பொதுமக்களாகிய நாமே செய்துகொள்ள வேண்டியதுதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கோபாலன் சார்!
கேள்வி கேட்க ஆளில்லை என்று நினைப்போ?'என்ற பதப்பிரயோகம்
ReplyDeleteஎதையும் தட்டிக் கேட்க வேண்டும் என்கிறது.
ஆனால் திருப்பிக் கேட்டால் சங்கடமாகிறது.வாதமா? விவாதமா? மூட்டுவாதமா? கீல் வாதமா? என்றெல்லாம் கேள்வி பிறக்கிறது.
கேள்வி பிறந்தது அன்று.... நல்ல பதில் கிடைத்தது இன்று... என்று ஒரு பாடல் உண்டுதானே?
கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தர வேண்டியது சட்டம் இல்லைதான்.சோ வாட்?
அதை தேர்வு வினாத்தாளில் எழுதி வைத்தால் என்னாகும்?
ஆசிரியருக்குக் கடிதங்களும், கேள்விகளுமே ஒரு இலக்கியப் பணியாகச் செய்பவர்கள் உள்ளனர்.
கேட்டுத்தான் பழக்கம். பதில் சொல்லிப் பழக்கம் இல்லையென்றால் சரிதான் என்று ஒதுங்கிப் போக வேண்டியதுதான், தஞ்சாவூரார் மாதிரி.அதுதான் நமக்கு மரியாதை.
வணக்கம் ஐயா,
ReplyDeleteநல்ல தகவல்களுடன் கூடிய பதிவிற்கு நன்றிகள் ஐயா...சோ அவர்களின் கேள்வி பதில் விளக்கங்கள் நன்றாக இருந்தது...வேதங்களில் ஒவ்வொரு வேதங்களிலும் ஒவ்வொரு விதமாக சம்பிரதாயங்கள் கூறப்பட்டுள்ளதால் பெரும்பாலோருக்கு குழப்பமே மிஞ்சுகிறது...அதனால் சித்த பெருமக்களைப் போலவே இறைவனை மட்டுமே நினைத்திருந்தாலே அவருடைய அருள் கிடைக்கும் என்பது என் கருத்து...
/////Blogger Ananthamurugan said...
ReplyDeleteஅருமையான பதிவு.அச்சச்சோ !!
சோ எப்பவும் காமெடியன் போல்வரும் ஹீரோ./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteகேள்வி கேட்க ஆளில்லை என்று நினைப்போ?' என்ற பதப்பிரயோகம் எதையும் தட்டிக் கேட்க வேண்டும் என்கிறது.
ஆனால் திருப்பிக் கேட்டால் சங்கடமாகிறது.வாதமா? விவாதமா? மூட்டுவாதமா? கீல் வாதமா? என்றெல்லாம் கேள்வி பிறக்கிறது.
கேள்வி பிறந்தது அன்று.... நல்ல பதில் கிடைத்தது இன்று... என்று ஒரு பாடல் உண்டுதானே?
கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தர வேண்டியது சட்டம் இல்லைதான்.சோ வாட்?
அதை தேர்வு வினாத்தாளில் எழுதி வைத்தால் என்னாகும்?
ஆசிரியருக்குக் கடிதங்களும், கேள்விகளுமே ஒரு இலக்கியப் பணியாகச் செய்பவர்கள் உள்ளனர்.
கேட்டுத்தான் பழக்கம். பதில் சொல்லிப் பழக்கம் இல்லையென்றால் சரிதான் என்று ஒதுங்கிப் போக வேண்டியதுதான், தஞ்சாவூரார் மாதிரி.அதுதான் நமக்கு மரியாதை.///////
யாரைச் சொல்கிறீர்கள் சுவாமி? கேள்வி கேட்க ஆளில்லை என்று யார் சொன்னது? ஒன்றும் புரியவில்லையே!
//////Blogger R.Srishobana said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
நல்ல தகவல்களுடன் கூடிய பதிவிற்கு நன்றிகள் ஐயா...சோ அவர்களின் கேள்வி பதில் விளக்கங்கள் நன்றாக இருந்தது...வேதங்களில் ஒவ்வொரு வேதங்களிலும் ஒவ்வொரு விதமாக சம்பிரதாயங்கள் கூறப்பட்டுள்ளதால் பெரும்பாலோருக்கு குழப்பமே மிஞ்சுகிறது...அதனால் சித்த பெருமக்களைப் போலவே இறைவனை மட்டுமே நினைத்திருந்தாலே அவருடைய அருள் கிடைக்கும் என்பது என் கருத்து...//////
நீங்கள் சொல்வது சரிதான். நன்றி சகோதரி!
கரெக்ட்டான நேரத்திலே 'சோ' படம் போட்டு பதிவா?
ReplyDeleteஇனிமேலே துக்ளக் தர்பார்தானே?அதைத்தானே சொல்ல வர்றீங்க?
பெங்களூர் கோர்ட் ஜட்ஜ்மென்ட் வந்து எதாவுது சிக்கலாயிட்டல் ஒருவேளை அடுத்த தமிழக முதல்வர் 'சோ'தானாமே?
அதுக்காக இப்பத்திலேருந்தே
காக்கா பிடிச்சு பதிவெல்லாம் போடுறீங்களே சார்..
நீங்க கிரேட்..
அருமையான விளக்கம் .. சோவின் இந்த விளக்கம் அவரது கூர்மையான அறிவிற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதேபோல் மகாபாரதத்திற்கும் அவரது விளக்கம் பிரம்மிக்கவைக்கும். மகாபாரதத்தை தமிழில் துக்ளக்கில் வெளியிட்டுவிட்டு முடிவுரையாக அவர் எழுதியதை நம் வகுப்பறை சகோதரர்கள் அனைவரும் படிக்க நமது அறிவு மேலும் கூர்மையடையும் . புராணங்களில் சொல்லப்படும் பல விஷயங்களில் நமக்கு உண்டாகும் குழப்பங்கள் எளிதில் விலகும். சோவின் விளக்கங்கள் பல சமயங்களில் என்னை பிரம்மிக்க வைத்திருக்கிறது. ம்ம் ...ம்ம்.. இதெல்லாம் பிறவி ஞானம் ..நாம் அங்கலாய்த்து என்ன ஆகப்போகிறது.
ReplyDeleteநந்தகோபால்
சோவின் இந்த அறிவுபூர்வமான ஆராய்ச்சியின் சாயலை திரு மைனரிடமும் என்னால் காண முடிகிறது. மைனருக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteநந்தகோபால்
////Blogger minorwall said...
ReplyDeleteகரெக்ட்டான நேரத்திலே 'சோ' படம் போட்டு பதிவா?
இனிமேலே துக்ளக் தர்பார்தானே?அதைத்தானே சொல்ல வர்றீங்க?
பெங்களூர் கோர்ட் ஜட்ஜ்மென்ட் வந்து எதாவுது சிக்கலாயிட்டல் ஒருவேளை அடுத்த தமிழக முதல்வர் 'சோ'தானாமே?
அதுக்காக இப்பத்திலேருந்தே
காக்கா பிடிச்சு பதிவெல்லாம் போடுறீங்களே சார்..
நீங்க கிரேட்..////
சனீஷ்வரனையே பிடித்துவைத்திருக்கிறேன். எனக்கு எதற்கு காக்காய்கள் மைனர்?
/////Blogger G.Nandagopal said...
ReplyDeleteஅருமையான விளக்கம் .. சோவின் இந்த விளக்கம் அவரது கூர்மையான அறிவிற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதேபோல் மகாபாரதத்திற்கும் அவரது விளக்கம் பிரம்மிக்கவைக்கும். மகாபாரதத்தை தமிழில் துக்ளக்கில் வெளியிட்டுவிட்டு முடிவுரையாக அவர் எழுதியதை நம் வகுப்பறை சகோதரர்கள் அனைவரும் படிக்க நமது அறிவு மேலும் கூர்மையடையும் . புராணங்களில் சொல்லப்படும் பல விஷயங்களில் நமக்கு உண்டாகும் குழப்பங்கள் எளிதில் விலகும். சோவின் விளக்கங்கள் பல சமயங்களில் என்னை பிரம்மிக்க வைத்திருக்கிறது. ம்ம் ...ம்ம்.. இதெல்லாம் பிறவி ஞானம் ..நாம் அங்கலாய்த்து என்ன ஆகப்போகிறது.
நந்தகோபால்//////
ஆமாம். அவர் ஒரு பிறவி மேதை!
/////Blogger G.Nandagopal said...
ReplyDeleteசோவின் இந்த அறிவுபூர்வமான ஆராய்ச்சியின் சாயலை திரு மைனரிடமும் என்னால் காண முடிகிறது. மைனருக்கு எனது வாழ்த்துக்கள்.
நந்தகோபால்////
ஜல்லிக்கட்டு முடிந்துவிட்டதே சாமி. இப்போது எதற்காக கொம்பு சீவுகிறீர்கள்?:-))))
அனந்தமுருகன் அவர்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ராமு தாத்தாவுக்கான மூன்று கடமைகள் தரமான நகைச்சுவை. தொடர்ந்து கொடுங்கள். சீரியஸ் விஷயங்களை மட்டும் படிக்காமல் இதுபோன்ற தரமான நகைச்சுவைகள்தான் மனதுக்கு இதம் தரும். கே.எம்.ஆர். சாமவேதி என்பதால் மிக உயர்வாகச் சொல்லிவிட்டார். எல்லா வேதங்களும் சமமே. இதில் உயர்வு, மட்டம் இல்லை. சமீபத்தில் நர்மதா பதிப்பகம் "ருக்,யஜூர்,ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்" எனும் நூலை வெளியிட்டிருக்கிறார்கள். வேதம் படிக்காதவர்கள், படிக்க முடியாதவர்கள், அதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அதை உயர்த்தியும் தாழ்த்தியும் பேசுபவர்கள் இவர்களுக்கென்று அதில் அதன் ஆசிரியரான வடுவூர் நாராயணன் (வடுவூர் வீரவல்லி வீ.தேசிகாச்சாரியாரின் வழிகாட்டுதலோடு எழுதியது) வேதங்களின் உட்கருத்தை எளிய தமிழ் நடையில் ஒன்று விடாமல் கொடுத்திருக்கிறார். அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். தெருவில் வேடிக்கை காட்டும் மோடி மஸ்தான் பாம்புக்கும் கீரிக்கும் சண்டையென்று கடைசிவரை சொல்லிவிட்டு கடையைக் கட்டிக்கொண்டு போய்விடுவான். அதுபோல வேதம் குறித்து பலதரப்பட்ட கருத்துரையாடல்களுக்கிடையே அதில் என்னதான் சொல்லியிருக்கிறது என்பதைப் படித்துவிட்டு விவாதித்தால் நன்றாக இருக்கும். இது ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன். அந்த நூல் மிக பயனுள்ளது. ஆகவே கே.எம்.ஆர். சாம வேதம் குறித்து அதிகம் கர்வம் கொள்ளத் தேவையில்லை. பழமையான ருக் வேதம் சூரியன், சந்திரன், இந்திரன், இடி, மின்னல், மழை இவற்றைப் போற்றும் பழமை வாய்ந்தது. யஜூர் என்பது நித்யானுஷ்டான சடங்குகள், யாகங்கள், ஹோமங்கள், இல்லத்து திருமணம் போன்ற நிகழ்வுகளைக் கொண்டது, சாம வேதம் இசைக்கு அடிப்படையானது. இசை மூலம் வேதக் கருத்துக்களைப் பரப்புவது. ஆக மூன்றும், ஒவ்வொரு குணமுடையது. இதுகுறித்து விரிவான கட்டுரையொன்றை விரைவில் எழுதுகிறேன்.
ReplyDelete//கோரக்கர் (என்ன பெயருடா சாமி)//
ReplyDeleteஇவர் விபூதியில் இருந்து பிறந்தவர். அதனால் அவருக்கு இந்த பெயர் என்று சொல்லப் படுகிறது. இவரது குரு மச்ச முனி மீனாக இருந்து மனிதனாக ஆனவர். இருவருமே 18 சித்தர்கள் வரிசையில் வருபவர்கள்.
பெண்ணின் சேலை கையில் பட்டதற்கு அதை வெட்டிக் கொண்டாரா. பெண்கள் தீண்டத்தகாதர்கள் என்பது போல் அல்லவா இருக்கிறது. அவர் இந்த காலத்தில் இருந்திருந்தால் தீண்டாமை ஒழிப்பு சட்டம் 17ம் பிரிவின் படி அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பார்கள். அடுத்து தற்கொலை முயற்சி. (இது நகைச்சுவைக்காக சொன்னது)
/////Blogger Thanjavooraan said...
ReplyDeleteஅனந்தமுருகன் அவர்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ராமு தாத்தாவுக்கான மூன்று கடமைகள் தரமான நகைச்சுவை. தொடர்ந்து கொடுங்கள். சீரியஸ் விஷயங்களை மட்டும் படிக்காமல் இதுபோன்ற தரமான நகைச்சுவைகள்தான் மனதுக்கு இதம் தரும். கே.எம்.ஆர். சாமவேதி என்பதால் மிக உயர்வாகச் சொல்லிவிட்டார். எல்லா வேதங்களும் சமமே. இதில் உயர்வு, மட்டம் இல்லை. சமீபத்தில் நர்மதா பதிப்பகம் "ருக்,யஜூர்,ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்" எனும் நூலை வெளியிட்டிருக்கிறார்கள். வேதம் படிக்காதவர்கள், படிக்க முடியாதவர்கள், அதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அதை உயர்த்தியும் தாழ்த்தியும் பேசுபவர்கள் இவர்களுக்கென்று அதில் அதன் ஆசிரியரான வடுவூர் நாராயணன் (வடுவூர் வீரவல்லி வீ.தேசிகாச்சாரியாரின் வழிகாட்டுதலோடு எழுதியது) வேதங்களின் உட்கருத்தை எளிய தமிழ் நடையில் ஒன்று விடாமல் கொடுத்திருக்கிறார். அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். தெருவில் வேடிக்கை காட்டும் மோடி மஸ்தான் பாம்புக்கும் கீரிக்கும் சண்டையென்று கடைசிவரை சொல்லிவிட்டு கடையைக் கட்டிக்கொண்டு போய்விடுவான். அதுபோல வேதம் குறித்து பலதரப்பட்ட கருத்துரையாடல்களுக்கிடையே அதில் என்னதான் சொல்லியிருக்கிறது என்பதைப் படித்துவிட்டு விவாதித்தால் நன்றாக இருக்கும். இது ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன். அந்த நூல் மிக பயனுள்ளது. ஆகவே கே.எம்.ஆர். சாம வேதம் குறித்து அதிகம் கர்வம் கொள்ளத் தேவையில்லை. பழமையான ருக் வேதம் சூரியன், சந்திரன், இந்திரன், இடி, மின்னல், மழை இவற்றைப் போற்றும் பழமை வாய்ந்தது. யஜூர் என்பது நித்யானுஷ்டான சடங்குகள், யாகங்கள், ஹோமங்கள், இல்லத்து திருமணம் போன்ற நிகழ்வுகளைக் கொண்டது, சாம வேதம் இசைக்கு அடிப்படையானது. இசை மூலம் வேதக் கருத்துக்களைப் பரப்புவது. ஆக மூன்றும், ஒவ்வொரு குணமுடையது. இதுகுறித்து விரிவான கட்டுரையொன்றை விரைவில் எழுதுகிறேன்./////
ஆகா, எழுதுங்கள். விரிவாக எழுதுங்கள். தனிப் பதிவாகப் போட்டு விடுகிறேன்.
இறைவன் ஒருவன்தான். மதங்கள் ஆறுகளைப் போன்றவை. இறைவன் என்னும் கடலில் அவை கலக்கின்றன என்பார் கவியரசர் கண்ணதாசன்
ஆகவே அனைத்து மதங்களும் சமமானவை
அனைத்து வேதங்களும் சமமானவை
அனைத்து மனிதர்களும் சமமானவர்களே
அனைத்து மனிதர்களும் சமமானவர்களே என்பதற்கு சாட்சியாக அஷ்டகவர்க்கம் உள்ளது. யாராக இருந்தாலும் மொத்தப் பரல்கள் 337 மட்டுமே!
மன்மோகன் சிங்கிற்கும் 337
அவருடைய வாகன ஓட்டுனருக்கும் 337
அம்பானிக்கும் 337
அவருடைய செயலாளருக்கும் 337
ரஜினிகாந்திற்கும் 337
கூலி வேலை செய்யும் சந்திர காந்திற்கும் 337
அமலா பாலிற்கும் 337
கமலா ஆச்சிக்கும் 337
////Blogger ananth said...
ReplyDelete//கோரக்கர் (என்ன பெயருடா சாமி)//
இவர் விபூதியில் இருந்து பிறந்தவர். அதனால் அவருக்கு இந்த பெயர் என்று சொல்லப் படுகிறது. இவரது குரு மச்ச முனி மீனாக இருந்து மனிதனாக ஆனவர். இருவருமே 18 சித்தர்கள் வரிசையில் வருபவர்கள்.
பெண்ணின் சேலை கையில் பட்டதற்கு அதை வெட்டிக் கொண்டாரா. பெண்கள் தீண்டத்தகாதர்கள் என்பது போல் அல்லவா இருக்கிறது. அவர் இந்த காலத்தில் இருந்திருந்தால் தீண்டாமை ஒழிப்பு சட்டம் 17ம் பிரிவின் படி அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பார்கள். அடுத்து தற்கொலை முயற்சி. (இது நகைச்சுவைக்காக சொன்னது)////
புராணங்களை ஆராயக்கூடாது என்று சொல்லியும், நீங்கள் சட்டத்தை வைத்து, என்ன வழக்காகும் என்பதுவரை ஆராய்ந்திருக்கிறீர்களே - நியாயமா?
அரூப வடிவத்தில் பல சித்தர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சித்தர்களின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள் ஆனந்த்!
(இதுவும் நகைச்சுவைக்காகத்தான்)
///எது பகுத்தறிவு என்பதையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது...///
ReplyDeleteபகுத்து அறிவது அறிவு..
எதை பகுப்பது என்பதில் தான் அவர்கள் குழம்புகிறார்கள்...
பகுக்க தெரிந்தவர்கள் அறிவதும்
அறிந்ததை புரிந்து கொள்வதும் புரிந்த நிலையினை உணர்வதும்.. உயர்த்தும் ஒரு படி
///சித்த பெருமக்களைப் போலவே இறைவனை மட்டுமே நினைத்திருந்தாலே அவருடைய அருள் கிடைக்கும் என்பது என் கருத்து...//////
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான். நன்றி சகோதரி!///
வாருங்கள் சகோதரி...
வந்து சொல்லுங்கள்..
அய்யர் சொன்னால் புரியலையாம்..
அவர்களுக்கு நீங்களே சொல்லுங்கோ
///எல்லா வேதங்களும் சமமே. இதில் உயர்வு, மட்டம் இல்லை. //
ReplyDeleteவேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
இது சம்பந்தர் வாக்கு..
அந்த தேவார பாடல் இதோ...
காத லாகிக் கசிந்து கண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
"வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சி வாயவே."
ஆம்படையான் அடிச்சானாம் அவ கண்ணுல இருந்த தூசு போச்சாம் என்ற ஒரு சொல்லடைவு. 'நான் சாமவேதியாக்கும்; அரி அரன் இருவருக்கும் உகந்ததாக்கும்' என்றும், அந்த வேதக்காரரகளுக்கு இருக்கும் ஆவணி அவிட்டப் பண்டிகையில் இருக்கும் 'வேரியேஷனை'த்தெரிவிப்பதற்காகவுமே பின்னூட்டம் இட்டேன்.
ReplyDeleteஆகா! என்று எழுந்துவிட்டார் தஞ்சாவூரார்.பொங்கி எழுந்து வந்து வேத,வேதாந்த விளக்கம் அளித்தால் அனைவருக்கும் நல்லதே. பயனுள்ளதே. வரவேற்கிறோம். கட்டுரைக்குக் காத்திருக்கிறோம்.
ம்..ம்.. சித்தாந்தம் என்ன சொல்லுமோ.பார்ப்போம்!
"ஓரை" என்றால் நேரத்தைக் குறிக்குமோ? "தாரகை" என்றோ "விண்மீன்" என்றோ குறிபிட்டிருக்கவேண்டும் அல்லவா? அடாடா என் தமிழறிவு பட்டொளி வீசி பறக்கிறதே.
ReplyDelete///////// SP.VR. SUBBAIYA said...
ReplyDelete/////Blogger G.Nandagopal said...
சோவின் இந்த அறிவுபூர்வமான ஆராய்ச்சியின் சாயலை திரு மைனரிடமும் என்னால் காண முடிகிறது. மைனருக்கு எனது வாழ்த்துக்கள்.
நந்தகோபால்////
ஜல்லிக்கட்டு முடிந்துவிட்டதே சாமி. இப்போது எதற்காக கொம்பு சீவுகிறீர்கள்?:-))))////////
வந்த அன்னிக்கே சொற்போர் அப்பிடி இப்படின்னு சொல்லிக்கிட்டேதான் வந்தாரு மாம்ஸ்..
நான் கூட அய்யரை காணோம். இவரு யாருகிட்டே என்னத்தைநடத்தப் போறாருன்னு நினைச்சேன்..
என் மேல கல்லை வுட்டெரிஞ்சுருக்காரு..(கல்லை கேட்ச் பிடிச்சு பத்திரமா வெச்சுருக்கேன்..பின்னாடி உதவலாம்லே.)
யாரையாவுது இப்படி ஏத்திவுட்டு வெச்சா எதாவுது விபரீதமா நடக்கும்ன்னு கணக்குப் போட்டிருக்காரு..
எதுக்கு இப்புடிக் கனவு காணனும்?அப்புறமா ஏன் ஓடி ஒளியணும்?
so ..சோ கூட பாவம்தான்..
நான் தெளிவா இருக்கேன்..சம்மந்தமே இல்லாத கனவு சமாச்சாரமே லைப்லே கிடையாது..ஆமாம்..
//////SP.VR. SUBBAIYA said...
ReplyDelete////Blogger minorwall said...
கரெக்ட்டான நேரத்திலே 'சோ' படம் போட்டு பதிவா?
இனிமேலே துக்ளக் தர்பார்தானே?அதைத்தானே சொல்ல வர்றீங்க?
பெங்களூர் கோர்ட் ஜட்ஜ்மென்ட் வந்து எதாவுது சிக்கலாயிட்டல் ஒருவேளை அடுத்த தமிழக முதல்வர் 'சோ'தானாமே?
அதுக்காக இப்பத்திலேருந்தே
காக்கா பிடிச்சு பதிவெல்லாம் போடுறீங்களே சார்..
நீங்க கிரேட்..//////
சனீஷ்வரனையே பிடித்துவைத்திருக்கிறேன். எனக்கு எதற்கு காக்காய்கள் மைனர்?////////
பொதுவா சனியன்தான் எல்லோரையும் பிடிப்பார்..நீங்க என்னடான்னா சனியனையே பிடிச்சு வெச்சுருக்கேன்னுறீங்க..
ஏழரைலேருந்து தாண்டியாச்சுன்னு ஒரே ஆட்டமா?
எங்க தலைவர் வாகனத்த ஏளனமா சொல்லி அவரையே புடிச்சு வெச்சுருக்கேன்னு சொல்ல என்ன தைரியம் உங்களுக்கு?
இன்னும் மூணே மாசத்துல (மே 17 ) தலைவர் வக்கிரமா ரிடர்ன் ஜர்னி பண்றார்..
அப்பவும் உங்களுக்கு ஏழரைதான்..
அடக்கித்தான வாசியுங்கோ..
எதுக்கும் அவர்கிட்டே ஒரு சாரி சொல்லிவெச்சுடுங்க..சொல்லிட்டேன்..
Mrசோ அவர்களின் நக்கல் நையாண்டி கலந்த அரசியல் அலசல் நன்கு பிடிக்கும்.
ReplyDeleteஏனோ வெளிபடையாக அரசியலுக்கு வராமல் ,பின் புறத்திலேயே அரசியல் செய்கிறார். Mrசோ அவர்கள் . ஆன்மிகமும் அரசியலும் நன்கு அறிந்த வாழும் மேதைகளில் ஒருவர் .
ஆசிரியர் ஐயா அவர்களே! வாத்தியார் வெளியூர் செல்வது என்பது வாத்தியாருக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், தினமும் காலையில் வகுப்பறையைத் திறந்து பார்க்கும் மாணவர்களுக்கு ஏமாற்றமும், வருத்தமும்தான் மிஞ்சும். ஆக மகிழ்ச்சியான செய்தி என்ற அறிவிப்பு மாணவர்களுக்குப் பொருந்தாது. தாராளமாக வெளியூர் சென்று வாருங்கள். காத்திருக்கிறோம்.
ReplyDeleteCan any one clarify my doubt:
ReplyDeleteMy daughter is simha lagna & sun(uccham)& Mercury in Mesha & Moon in Kadagam (aatchi)
My daughter has got
rahu in 6th hoouse & Kethu in 12th hse
Guru in 7th House.
I have read Sir's Ashtalakshmi Yogam & Kalasarpa Dhosham classes
As per his classes:
6th raghu, 7th Jupiter & 12th Kethu will have Ashtalakshi Yogam
&
(6th raghu & 12 th Kethu will have their childhood days more sufferings as per Kalasarpa dosham.
My doubt is what I have to consider now whether ashtalakshmi yoga or kalasarpa dosham?
ஊடலுடன் கூடலைக் கேட்டு ஆனந்தமாவது சுகம்..சுகம்...சுகம்!
ReplyDeleteஆமா..வாத்தியாருக்கு சிம்ம ராசின்னு நினைச்சு இப்புடி கமென்ட் அடிச்சுட்டேன்..அப்பிடித்தான் ஞாபகம்..எது எப்புடியோ சிம்ம ராசிக் காரங்களுக்கு சொன்ன எச்சரிக்கையா எடுத்துக்குங்க..
ReplyDelete//////Blogger iyer said...
ReplyDelete///எது பகுத்தறிவு என்பதையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது...///
பகுத்து அறிவது அறிவு..
எதை பகுப்பது என்பதில் தான் அவர்கள் குழம்புகிறார்கள்...
பகுக்க தெரிந்தவர்கள் அறிவதும். அறிந்ததை புரிந்து கொள்வதும், புரிந்த நிலையினை உணர்வதும்.. உயர்த்தும் ஒரு படி/////
நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!
/////Blogger iyer said...
ReplyDelete///சித்த பெருமக்களைப் போலவே இறைவனை மட்டுமே நினைத்திருந்தாலே அவருடைய அருள் கிடைக்கும் என்பது என் கருத்து...//////
நீங்கள் சொல்வது சரிதான். நன்றி சகோதரி!///
வாருங்கள் சகோதரி...
வந்து சொல்லுங்கள்..
அய்யர் சொன்னால் புரியலையாம்..
அவர்களுக்கு நீங்களே சொல்லுங்கோ/////
நீங்கள் சொன்னாலும் புரியும். சொல்வதை உரை நடையில் சொன்னீர்களென்றால் அனைவருக்கும் புரியும்!
//////Blogger iyer said...
ReplyDelete///எல்லா வேதங்களும் சமமே. இதில் உயர்வு, மட்டம் இல்லை. //
வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
இது சம்பந்தர் வாக்கு..
அந்த தேவார பாடல் இதோ...
காத லாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
"வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சி வாயவே."//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஆம்படையான் அடிச்சானாம் அவ கண்ணுல இருந்த தூசு போச்சாம் என்ற ஒரு சொல்லடைவு. 'நான் சாமவேதியாக்கும்; அரி அரன் இருவருக்கும்
உகந்ததாக்கும்' என்றும், அந்த வேதக்காரரகளுக்கு இருக்கும் ஆவணி அவிட்டப் பண்டிகையில் இருக்கும் 'வேரியேஷனை'த் தெரிவிப்பதற்காகவுமே பின்னூட்டம்
இட்டேன்.
ஆகா! என்று எழுந்துவிட்டார் தஞ்சாவூரார். பொங்கி எழுந்து வந்து வேத,வேதாந்த விளக்கம் அளித்தால் அனைவருக்கும் நல்லதே. பயனுள்ளதே.
வரவேற்கிறோம். கட்டுரைக்குக் காத்திருக்கிறோம்.
ம்..ம்.. சித்தாந்தம் என்ன சொல்லுமோ.பார்ப்போம்!////
ஆகா பார்ப்போம். நானும் காத்திருக்கிறேன் ஆவலுடன்!
/////Blogger தேமொழி said...
ReplyDelete"ஓரை" என்றால் நேரத்தைக் குறிக்குமோ? "தாரகை" என்றோ "விண்மீன்" என்றோ குறிபிட்டிருக்கவேண்டும் அல்லவா? அடாடா என் தமிழறிவு பட்டொளி
வீசி பறக்கிறதே.//////
பெண்கள் கொடி பிடித்தால் எப்போது அக்கொடி பட்டொளிவீசிப் பறக்கத்தான் செய்யும்!
/////Blogger minorwall said...
ReplyDelete///////// SP.VR. SUBBAIYA said...
/////Blogger G.Nandagopal said...
சோவின் இந்த அறிவுபூர்வமான ஆராய்ச்சியின் சாயலை திரு மைனரிடமும் என்னால் காண முடிகிறது. மைனருக்கு எனது வாழ்த்துக்கள்.
நந்தகோபால்////
ஜல்லிக்கட்டு முடிந்துவிட்டதே சாமி. இப்போது எதற்காக கொம்பு சீவுகிறீர்கள்?:-))))////////
வந்த அன்னிக்கே சொற்போர் அப்பிடி இப்படின்னு சொல்லிக்கிட்டேதான் வந்தாரு மாம்ஸ்..
நான் கூட அய்யரை காணோம். இவரு யாருகிட்டே என்னத்தை நடத்தப் போறாருன்னு நினைச்சேன்..
என் மேல கல்லை வுட்டெரிஞ்சுருக்காரு..(கல்லை கேட்ச் பிடிச்சு பத்திரமா வெச்சுருக்கேன்..பின்னாடி உதவலாம்லே.)
யாரையாவுது இப்படி ஏத்திவுட்டு வெச்சா எதாவுது விபரீதமா நடக்கும்ன்னு கணக்குப் போட்டிருக்காரு..
எதுக்கு இப்புடிக் கனவு காணனும்?அப்புறமா ஏன் ஓடி ஒளியணும்?
so ..சோ கூட பாவம்தான்..
நான் தெளிவா இருக்கேன்..சம்மந்தமே இல்லாத கனவு சமாச்சாரமே லைப்லே கிடையாது..ஆமாம்..//////
அது நீங்கள் வசிக்கும் நாட்டின் பொதுக்குணம் மைனர்!
//////Blogger minorwall said...
ReplyDelete//////SP.VR. SUBBAIYA said...
////Blogger minorwall said...
கரெக்ட்டான நேரத்திலே 'சோ' படம் போட்டு பதிவா?
இனிமேலே துக்ளக் தர்பார்தானே?அதைத்தானே சொல்ல வர்றீங்க?
பெங்களூர் கோர்ட் ஜட்ஜ்மென்ட் வந்து எதாவுது சிக்கலாயிட்டல் ஒருவேளை அடுத்த தமிழக முதல்வர் 'சோ'தானாமே?
அதுக்காக இப்பத்திலேருந்தே காக்கா பிடிச்சு பதிவெல்லாம் போடுறீங்களே சார்..
நீங்க கிரேட்..//////
சனீஷ்வரனையே பிடித்துவைத்திருக்கிறேன். எனக்கு எதற்கு காக்காய்கள் மைனர்?////////
பொதுவா சனியன்தான் எல்லோரையும் பிடிப்பார்கள்..நீங்க என்னடான்னா சனியனையே பிடிச்சு வெச்சுருக்கேன்னுறீங்க..
ஏழரைலேருந்து தாண்டியாச்சுன்னு ஒரே ஆட்டமா?
எங்க தலைவர் வாகனத்த ஏளனமா சொல்லி அவரையே புடிச்சு வெச்சுருக்கேன்னு சொல்ல என்ன தைரியம் உங்களுக்கு?
இன்னும் மூணே மாசத்துல (மே 17 ) தலைவர் வக்கிரமா ரிடர்ன் ஜர்னி பண்றார்..
அப்பவும் உங்களுக்கு ஏழரைதான்..
அடக்கித்தான வாசியுங்கோ..
எதுக்கும் அவர்கிட்டே ஒரு சாரி சொல்லிவெச்சுடுங்க..சொல்லிட்டேன்../////
நான் சிம்ம லக்கினம் மற்றும் மகர ராசிக்காரன். லக்கினத்தால் சூரியன் வேண்டப்பட்டவர். ராசியால் சனீஷ்வரன் வேண்டப்பட்டவர். மொத்தத்தில் இருவருமே வேண்டப்பட்டவர்கள். இருவரையும் அத்துடன் பழநியில் உறையும் அப்பனையும் சேர்த்து, மூவரையுமே நண்பர்களாகப் பாவிப்பவன் நான்.
சூரியன் + சனி எப்படியொரு காம்பினேஷன் பாருங்கள் மைனர்!
/////Blogger thanusu said...
ReplyDeleteMrசோ அவர்களின் நக்கல் நையாண்டி கலந்த அரசியல் அலசல் நன்கு பிடிக்கும்.
ஏனோ வெளிபடையாக அரசியலுக்கு வராமல் ,பின் புறத்திலேயே அரசியல் செய்கிறார். Mrசோ அவர்கள் . ஆன்மிகமும் அரசியலும் நன்கு அறிந்த
வாழும் மேதைகளில் ஒருவர் .//////
அவர் அரசியலுக்கு வந்தால் ஒரு கட்சியாச் சாரும்படி ஆகிவிடும். இப்படி இருப்பதால் ஒரு சுதந்திரத் தன்மை கிடைக்கிறது. சிறந்த விமர்சகராகவும் அவரால் இருக்க முடிகிறது.
////Blogger Thanjavooraan said...
ReplyDeleteஆசிரியர் ஐயா அவர்களே! வாத்தியார் வெளியூர் செல்வது என்பது வாத்தியாருக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், தினமும் காலையில் வகுப்பறையைத் திறந்து பார்க்கும் மாணவர்களுக்கு ஏமாற்றமும், வருத்தமும்தான் மிஞ்சும். ஆக மகிழ்ச்சியான செய்தி என்ற அறிவிப்பு மாணவர்களுக்குப் பொருந்தாது. தாராளமாக வெளியூர் சென்று வாருங்கள். காத்திருக்கிறோம்.//////
ஒரு சுவைக்காக எழுதுவதுதான். அதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் கோபாலன் சார்!
/////Blogger GAYATHRI said...
ReplyDeleteCan any one clarify my doubt:
My daughter is simha lagna & sun(uccham)& Mercury in Mesha & Moon in Kadagam (aatchi)
My daughter has got
rahu in 6th hoouse & Kethu in 12th hse
Guru in 7th House.
I have read Sir's Ashtalakshmi Yogam & Kalasarpa Dhosham classes
As per his classes:
6th raghu, 7th Jupiter & 12th Kethu will have Ashtalakshi Yogam
& (6th raghu & 12 th Kethu will have their childhood days more sufferings as per Kalasarpa dosham.
My doubt is what I have to consider now whether ashtalakshmi yoga or kalasarpa dosham?//////
Both. Mixed results
/////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ReplyDeleteஊடலுடன் கூடலைக் கேட்டு ஆனந்தமாவது சுகம்..சுகம்...சுகம்!/////
என்ன சொல்கிறீர்கள் வெங்கடபதி? பதிவிற்கு சம்பந்தமில்லாத சுகமாக இருக்கிறதே?
///////Blogger minorwall said...
ReplyDeleteஆமா..வாத்தியாருக்கு சிம்ம ராசின்னு நினைச்சு இப்புடி கமென்ட் அடிச்சுட்டேன்..அப்பிடித்தான் ஞாபகம்..எது எப்புடியோ சிம்ம ராசிக்காரங்களுக்கு சொன்ன எச்சரிக்கையா எடுத்துக்குங்க../////
கைவசம் 337 டானிக் ஒரு முழுப் பெட்டி இருக்கிறது. அதையும் ஞபகம் வைத்துக்கொள்ளுங்கள் மைனர்
ஐயா வணக்கம்!காபி,பேஸ்ட் செய்யும்போது ஏற்பட்ட பிழை! மன்னிக்கவும்!
ReplyDeleteசித்திரை நட்சத்திரக் கோவில் எனது மனைவியாருக்கும், அவிட்ட நட்சத்திர கோவில் குறிப்பு தாயாருக்கும்,மகளுக்கும் உரித்தானவை! மிக்க நன்றி!
இதை எழுதப் போய், வேறொன்றில் முடிந்து விட்டது!