மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.5.11

கோவி கண்ணன் சொன்னது சரிதானா?

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 கோவி கண்ணன் சொன்னது சரிதானா?

16.5.2011ம் தேதியன்று, ‘எண்ணைத் தொட்டியை புறக்கணித்த ஜெ !’ என்ற தலைப்பில் கோவியார் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதைப் படித்திராதவர்களை, அதைப் படித்துவிட்டு வந்து இந்தப் பதிவைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

அதற்கான சுட்டி இங்கே உள்ளது

http://govikannan.blogspot.com/2011/05/blog-post_16.html

அதன் சாராம்சம் இங்கே உள்ளது:

/////////////எண்ணைத் தொட்டி என்று நான் குறிப்பிட்டது வேறொன்றும் இல்லை, மு.மு.மு.கருணாநிதி (முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி) அவர்களால் கட்டவுட்டாகவும், கட்டி முடிக்கப்பட்டதாகவும் சுமார் 1000 கோடி செலவில் திறக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகம் தான் அது. அது ஏன் எண்ணைத் தொட்டி ?

பண்டைய காலம் தொட்டே தமிழர்களுக்கு என்றே தனிப்பட்ட கட்டிடக் கலையின் வரலாறுகள் உண்டு, மாளிகைகள் காலத்தால் அழிந்துவிட்டாலும், என்றும் அழியாக்காட்சியாக நிற்கும் கல்லணை, மற்றும் கோவில் கோபுரங்கள் எண்ணற்றவை, பவுத்த, சமண விகாரங்கள் அதன் பிறகு எழுந்த சைவ வைணவக் கோவில்கள் அனைத்தும் தமிழகத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் தமிழகக் கட்டிடக் கலையின் காட்சிகள். பாறைகளை சிற்பமாக வடித்து காட்சிக் கூடங்களாக ஆக்கி அமைத்த மாமல்லபுரச் சிற்பக் கலைக் கோவில்கள், பல்வேறு கோட்டைகள் என தமிழகமெங்கும் தமிழகக் கட்டிடக் கலையின் வரலாறுகள் நினைவுச் சின்னங்களாக இருக்க, இவற்றில் ஒன்றைக் கூட நினைவு படுத்தாத மாபெரும் கச்சா எண்ணைத் தொட்டி போன்ற ஒரு கட்டிடத்தை 1000 கோடி செலவில் கட்டத் துவங்கி, திறப்பு நாளுக்குள் முடிவுக்கு வராமல் போக கட் அவுட் வைத்து திறந்து காட்டி, பின்னர் மீண்டும் முறைப்படி திறந்தார் கருணாநிதி.

தமிழக மன்னர்களைப் பற்றிய காவியங்கள் எழுதிக் குவித்த கருணாநிதி, தமிழகத்தின் முதற்சின்னமாக தொலைகாட்சிகளின் அடிக்கடிக்கடிக் காட்ட வேண்டிய தலைமைச் செயலகத்தின் வடிவமைப்பில் சிறுதும் கவனம் செலுத்தாமல் போனதுடன், அதைத் திறக்க விரைவு காட்டியதைத் தவிர்த்து வேறெந்த அக்கறையும் இருந்திருக்கவில்லை.

பெங்களூரின் தோற்றப் பெருமையே அதில் அமைந்திருக்கும் 'விதான் சவுதா' எனப்படும் தலைமைச் செயலகத்தின் தோற்றப் பொழிவுதான், உண்மையாகச் சொல்லுங்கள் கருணாநிதி கட்டிய எண்ணைத் தொட்டி அப்படியான ஒரு தோற்றப் பொழிவை சென்னைக்குத் தந்திருக்கிறதா ?

1000 கோடிகளை ஏப்பம் விட்டு விழுங்கி அமர்ந்திருக்கும் புதிய தலைமைச் செயலகம் திமுக ஆட்சியின் அவலாமாகவும் நினைவுச் சின்னமுமாக இருப்பதைத் தவிர்த்து வேறொன்றும் உருப்படியாகச் செய்ய முடியாதா ? முடியும், உள்ளமைப்புக் கட்டுமானத்தில் மாறுதல் செய்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடலாம்.////////

கேள்வி அவர் எழுதியுள்ளது சரிதானா?

சரிதான். அது இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் போன்ற எரிபொருள் எண்ணை வழங்கும் நிறுவனங்கள் இடத்திற்கு இடம் ஊருக்கு ஊர் கட்டிவைத்திருக்கும் எண்ணைத் தொட்டிகளை நினைவு படுத்துகின்றன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

படங்கள் கீழே உள்ளன. நீங்களும் பாருங்கள்







+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

கட்டட விதிகளின்படி, கட்டடங்கள் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருக்க வேண்டுமே தவிர, வட்ட வடிவில் இருக்கக் கூடாது என்பார்கள். வட்ட வடிவில்  விளையாட்டு மைதானங்கள் மட்டுமே இருக்கலாம்.

கட்டட அமைப்பு விதிகளின்படி கோவில்கள், பொது மன்றங்கள், மண்டபங்கள், அலுவலங்கள், விடுதிகள், வீடுகள் என்று அனைத்துமே வட்ட வடிவில் இருக்கக்கூடாது என்பார்கள். தமிழ் நாட்டில் எத்தனையோ கோவில்கள் புராதணக் கட்டடங்கள் உள்ளன. ஏதாவது வட்ட வடிவில் இருக்கிறதா?

ஒரு படத்தில் சிங்கப்பூர் சிங்காரம் என்னும் கேரக்டரில் நடிகவேள் எம்.ஆர்.ராதா சிறப்பாக நடித்திருப்பார். படத்தில் வரும் ஒரு காட்சியில் ஒரு அம்மையார், இட்லிக் கடை வைத்திருப்பார். இட்லிச் சட்டி நீராவியில் கொதித்துக் கொண்டிருக்கும். பக்கத்தில் குழாய்ப் புட்டுப் பாத்திரத்திலும் நீராவி வெளிப் பட்டுக் கொண்டிருக்கும். அதைப் பார்த்தவுடன், எம்.ஆர்.ராதா இப்படிக் கலாய்ப்பார்

“அவனவன் நீராவியில கப்பல் விடுறான். ரயில் விடுறான். நீங்கள் நீராவியில இட்லி விடுறீங்களாடா? விடுங்கடா!”

நம்மை நாமே கலாய்ப்பதில் அல்லது நக்கலடித்துக் கொள்வதில், நமக்கு ஈடாக வேறு ஒரு மொழிக்காரனும் இல்லை. தமிழர்களுக்கு நிகர் தமிழர்களேதான்.

பல படங்களில் நமது கலாச்சாரங்களையும், நம்பிக்கைகளையும், நடிகர் விவேக் நக்கலடித்து வசனம் பேசியிருக்கிறார். அதையும் கேட்டு விட்டு, நாம் சிரித்து விட்டுத்தான் வந்திருக்கிறோமே தவிர, அதைப் பற்றி என்றுமே வருத்தப்பட்டது கிடையாது.

வாஸ்து சாஸ்திரம் என்னும் கட்டடக் கலை வேதத்திற்கு, மற்ற மாநிலங்களில் உள்ள மரியாதை தமிழகத்தில் கிடையாது. அது பற்றி நான் நிறையப் படித்திருந்தாலும், கேள்விப் பட்டிருந்தாலும், சொந்தத்தில் அனுபவித்திருந்தாலும் அது பற்றி இதுவரை பதிவில் எழுதியதில்லை.

1939ஆம் ஆண்டு முதன் முதலில் ஊரில் உள்ள எங்கள் இல்லத்தில்
அக்னி மூலையில் (கிழக்கும், தெற்கும் சந்திக்கும் மூலை. அங்கே
சமையல் அறைதான் இருக்க வேண்டும். கோயில்களில் அங்கே
மடப் பள்ளி இருக்கும்) கிணறு ஒன்றை வெட்டி, வெட்டிய பிறகு
ஏற்பட்ட பல பிரச்சினைகளையும், தொடர்ந்து ஏற்பட்ட பல பிரச்சினைகளையும், என் தந்தையாரும், என் சிறைய தந்தையாரும் விவரிக்கக் கேட்டிருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள்
சகோதரர்கள் எல்லாம் சேர்ந்து அதை மூடிவிட்டோம். அதற்குப்
பிறகு என்ன நடந்தது என்பதும் தனிக் கதை.

இதை எல்லாம் எழுதினால், இடக்காகக் கேட்பார்கள். “தில்லியில் என்ன வாழ்கிறதாம்? நமது பாராளுமன்ற வளாகமும் வட்ட வடிவில்தானே இருக்கிறது?”

அதில் 247 பெரிய தூண்கள், ஜன்னல்கள், கதவுகள், வராந்தாக்கள், உட்புறம் திறந்தவெளி முற்றங்கள் என்று சிற்சில பரிகாரங்கள் இருந்தாலும் வட்டம் வட்டம்தான். அதனால் என்னென்ன கேடுகள், அந்தக் கேடுகள் நீங்க என்ன செய்யலாம்? என்று நான் எழுதினால் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? ஆகவே என்னுடைய நேரத்தை வீணடித்து எதற்காக நான் எழுத வேண்டும்? என்று எழுதவில்லை.

ஹெர்பட் பேக்கர் என்னும் வெள்ளைக்காரன் வடிவமைத்த கட்டடம் அது. வாஸ்துவைப் பற்றி அவன் என்னத்தைக் கண்டான்?

Parliament House of Delhi, generally known as the Sansad Bhawan is located at the end point of the Sansad Marg in New Delhi. Parliament House of Delhi is a circular construction designed by Herbert Baker and was opened in 1927. The massive structure of the Parliament House in Delhi has 247 pillars with wide corridor. The Parliament House of New Delhi is the governmental Assembly of the country.

நம்மிடம் எவ்வளவோ கலைகளும், சாஸ்திரங்களும் இருக்கின்றன. இன்றையப் பொருளாதாரத் தேடலில் அதை எல்லாம் தெரிந்து கொள்ள யாருக்கும் நேரமில்லை. அதைவிட முக்கியமாக விருப்பமில்லை.

டாஸ்மாக் சரக்கை விரும்பும் அளவிற்கு மக்கள் வேறொன்றையும் விரும்புவதில்லை. வாழைத் தண்டு கால்களை ரசிக்கும் அளவிற்கு வேறு ஒன்றையும் ரசிப்பதில்லை.

ஆகவே கவியரசர் கண்ணதாசன் சொல்லியதைப் போல நாமும் சொல்ல வேண்டியதுதான்.   "தெரிந்து கொள்ள விரும்புகிறவனுக்கு அது தெரியட்டும். தெரிந்து கொள்ள விரும்பாதவனுக்கு அல்லது தகுதியில்லாதவனுக்கு அது தெரியாமலேயே போகட்டும்!"

அன்புடன்
வாத்தியார்

வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றிய சிறு தகவல். உபயம் விக்கி மஹராஜா. அதற்கான சுட்டி இங்கே!

Vastu Shastra (vāstu śāstra, also Vastu Veda, "science of construction", "architecture") is a traditional Hindu system of design based on directional alignments. It is primarily applied in Hindu architecture, especially for Hindu temples, although it covers other applications, including poetry, dance, sculpture, etc. The foundation of Vastu is traditionally ascribed to the mythical sage Mamuni Mayan.

While Vastu had long been essentially restricted to temple architecture, there has been a revival in India in recent decades, notably under the influence of V. Ganapati Sthapati of Chennai, Tamil Nadu (b. 1927), who has been campaigning for a restoration of the tradition in modern Indian society since the 1960s.

While the fields are related, Shilpa Shastra explicitly deal with sculpture - forming statues , icons, stone murals etc. Vastu Shastra are concerned primarily with building architecture - building houses, forts, temples, apartments etc.

Terminology

The Sanskrit word vastu means "any really existing or abiding substance or essence, thing, object, article", and also "goods, wealth, property". The vrddhi, vāstu takes the meaning of "the site or foundation of a house, site, ground, building or dwelling-place, habitation, homestead, house". The underlying root is vas "to dwell, live, stay, abide".

The term shastra may loosely be translated as "science, doctrine, teaching".
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=======


வாழ்க வளமுடன்!

20 comments:

  1. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. டாஸ்மாக் சரக்கை விரும்பும் அளவிற்கு மக்கள் வேறொன்றையும் விரும்புவதில்லை. வாழைத் தண்டு கால்களை ரசிக்கும் அளவிற்கு வேறு ஒன்றையும் ரசிப்பதில்லை.//

    :)) மிக சரி.

    ReplyDelete
  3. என் புலம்பலை அப்படியே சொல்லிட்டீங்க வாத்தியார் ஐயா.

    eye sore ன்னு தான் சொல்லணும். தமிழ்நாட்டுக் கட்டிடக்கலையைத் தொட்டுக்காமிக்காம இவுங்க தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வலர்க்கறாங்க( தட்டச்சு பிழை இல்லை)

    அம்சமா இருந்த ராஜாஜி ஹாலைக் காணோமேன்னு நேத்து சீனாசார்கிட்டே பேசும்போது கேட்டால்.... இருக்காமே.....கண்ணன் சொன்ன தொட்டிக்குள்ளே!

    ReplyDelete
  4. ஹா..ஹா... உண்மை தான்....

    ஒருவேளை சுத்திகரிக்கப் படாத கச்சா எண்ணையை தேக்கி வைக்கும் கிடங்கு (Unprocessed / not purified crude oil Tank) போன்றத் தோற்றம் கூட காரணப் பெயராக / பொருளாக இருக்குமோ?!....

    நண்பர் கோவி கண்ணன் தந்த பெயர் பொருத்தமாகத் தான் இருக்கிறது....

    நமது கட்டிடக் கலையை மறந்தது பெரும் பிழைதான்.
    நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் வாத்தியார் ஐயா,

    கணபதி ஐயா சுட்டிய கருத்துரையை விரிவுபடுத்தி ஒரு பதிவாகவே தந்தமைக்கு பாராட்டுக்கள்...

    நமது பாரம்பரியம் மிக்க சோதிடம், வாஸ்து, கட்டிடக் கலை, சித்த வைத்தியம் இப்படி யாவிலும் நிறைய பொருள் புதைந்திருக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

    நல்ல பதிவு ஐயா..

    ReplyDelete
  6. நமது பாராளுமன்ற வளாகமும் வட்ட வடிவில்தானே இருக்கிறது?”//

    அங்கே மக்கள் ஒருத்தர் மேல ஒருத்தர் நாற்காலி, மைக்கைத் தூக்கிப்போட்டு ஜாலியா விளையாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?

    ReplyDelete
  7. அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
    நன்றாக விவரித்து எழுதி இருக்கறீர்கள் நன்றி..

    ReplyDelete
  8. தஞ்சையில் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுவிழா நடத்தப்பட்ட போது, தஞ்சைக் கோபுரம் கட் அவுட் ஆக தோட்டாத்தரணியால் உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.அதன் கீழே அமர்ந்து, "ராஜராஜனும் தந்தையும் மகனுமாக ஆட்சி செய்தான்" என்று தான் மகன்களுடன் ஆட்சி செய்வதை தனக்குத் தானே
    சிலாகித்துக் கொண்டார் கருணாநிதி.1000கோடி செலவு செய்து நிரந்தரமாக ஒரு கட்டிடத்தைக் கட்டும் போது, பொதுப் பயன்பாட்டுக்கு உண்டானதை இப்படியா ஒரு தொட்டிப் போலக் கட்டுவது? தமிழ் நாகரிகம் பரிமளிக்கக் கட்ட வேண்டாமா?
    அறிவாலயம் கட்டும் போது காட்டிய அக்கறையைக்கூட இதில் காட்டவில்லையே!
    எது செய்தாலும் கமிஷன் அடிப்படை என்னும் போது, தமிழாவது, தமிழர் கலாச்சாரமாவது?

    இன்னொன்று தெரியுமா? தமிழக இலச்சினை கோபுரம் 'சீலை' மாற்ற வேண்டும் என்று கூட அந்தத் தரப்பு பேச ஆரம்பித்து இருந்தது.இன்னும் 6 மாதம் இருந்து இருந்தால் கோபுர 'சீல்' போய், இந்த எண்ணைத்தொட்டி தமிழக இலச்சினை ஆகி இருக்கும்.

    ReplyDelete
  9. அன்புடன் வணக்கம் திருமதி உமா
    **நமது பாராளுமன்ற வளாகமும் வட்ட வடிவில்தானே இருக்கிறது?”//
    மக்கள் ஒருத்தர் மேல ஒருத்தர் நாற்காலி, மைக்கைத் தூக்கிப்போட்டு ஜாலியா விளையாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?**
    பக்கத்தில் இருக்கறீர்கள் தெரிகிறது///நாங்களும் தொ(ல்)லை காட்சில பார்க்கிறோம்... மிக பெரிய ஜனநாயக நாடு.நமது .!!!!! உலகமே வியக்கும் வண்ணம் ஏதாவது ஒரு உருப்படியான விஷயம் அந்த மண்டபத்தில் அரங்கேறி இருக்கிறதா?? எனக்கு தெரிய வில்லை ??உங்களுக்கு தெர்யுமா?? அது போக வட்ட வடிவமாக இருந்தாலும் அங்கங்கு சிற்சில நுழைவு நீள் சதுரமாக உள்ளது ஒரு வேளை அது வாஸ்து நிவர்த்தி ஆகிறதோ ?
    சரியா????thanks.

    ReplyDelete
  10. சுட்டி - தனமாக இருந்தாலும்
    தொட்டித் தகவல் சிந்திக்க வைத்தது

    எதிர்ப்பைதெரிவிக்கநமக்குவார்த்தைகள்
    எதிர்த்து நிற்க அவர்களுக்கு அரசானை

    இழப்பு என்னவோ (பக்த)கோடிகளுக்கு
    இழந்து நிற்பதால் வந்தது மாற்றம்

    இருந்தும் என்னவோ..
    இங்கே ஏமாற்றம் வராமலிருக்கவே

    மாற்றங்கள் வந்தது
    ஏற்றங்களும் வரும் வரட்டும்

    வழக்கம் போல்
    வணக்கமும் வாழ்த்துக்களும்

    கோவியாருக்கும்..
    கோலமிட்ட அனைவருக்கும்

    ReplyDelete
  11. கோவிக்கண்ணனுக்கு எதிர் வினை செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

    நாத்திகமும்,ஆத்திகமும் கட்டிடக்கலையில் ஒன்றாய் பயணிப்பது மகிழ்ச்சிக்குரியது:)

    ReplyDelete
  12. எனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையால் முன்னாள் முதல்வர் செய்த செயல்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  13. எனக்கொரு 'ஜந்தேகம்'

    மே 13 க்கு முன்னால் ஏன் இந்தத் தொட்டியைப் பத்தி ஒருவருமே வாயைத் திறக்கலை?

    கண்ணுக்குக் கடின்னு நான் சென்னைப்பயணப்பதிவுலே எழுதி இருந்தேன். அப்பவும் அதை வாசிச்சவங்க கப்சுப்!!

    ReplyDelete
  14. Dear Sir

    I fully agree with your comment. But The design of the Indian Parliament Building does not come from the brain of Mr.Herbert Baker as mentioned. The design is copied from the Durga Temple at Aihole built by Chalukyas, which can be seen now also. The temple is in tact.

    With regards
    S.Subramanian

    ReplyDelete
  15. இத்தனை காலம் கலைஞர் குடும்பம் ஆல் போல் தழைத்து இத்தனை செல்வாக்கோடு வாழ்வாங்கு வாழ எந்த வாஸ்து காரணமாக இருந்ததோ? வாழ்ந்தவர் வீழ்வதும் வீழ்ந்தவர் வாழ்வதும் இயற்கையின் விளையாட்டு..இதில் யாரும் விதிவிலக்கல்ல..

    வாஸ்து கணிப்பில் அமைந்த வாசஸ்தலம் மட்டுமே ஒருவருக்கு சகல சம்பத்துகளையும் தந்துவிடுமானால் பெரும் தனவந்தர்கள் நினைத்தால் தன் விருப்பத்துக்கு வாஸ்துவை சரிசெய்து விடமுடியும். இதன்மூலம் ஜாதகத்து 12 இடங்களிலே 28 க்கு குறைவான பரல் உள்ள இடங்களுக்கான பிரச்சனைகளை நிவர்த்திபண்ணிவிடமுடியுமா? 337 பாலன்சிங் அடிபட்டுப் போய்விடாதா என்ன?

    இதே போயஸ் தோட்ட வீடுதானே அம்மையாருக்கு கடந்த காலங்களில் தோல்வியையும் வழங்கியிருக்கிறது?வீட்டை மாற்றிவிட்டாரா என்ன?

    இந்த ஐந்தாண்டு காலங்களில் அவ்வளவாக ஒன்றும் பெரிதாக எதிர்கட்சியாக செயல்படாவிட்டாலும்கூட கடைசி எலெக்ஷன் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கி அவர் கைகொண்ட அரசியல் சாதுர்யம் ஏன் எல்லோருக்கும் கண்களுக்குத் தெரியவில்லை..

    கலைஞரைப் பற்றி குறிப்பிட்டால் இந்த தள்ளாத வயதுக்கு மேல் புதிதாக ஒன்றும் சாதனை செய்திட வேண்டிய அவசியம் இல்லை.. எம்ஜிஆர் காலம் முடியும் வரை காத்திருந்து அவர் செய்த அரசியலில் அவருக்கு கிடைத்த வெற்றிகள் யார்நினைத்தாலும் வரலாற்றிலிருந்து நீக்கப்படமுடியாதது..

    ஏதோ கால வேகத்தில் கிரக மாறுதல்களினால் தனக்கு வந்த வாய்ப்பு என்று எந்த ஒரு வெற்றியையும் எப்போதும் அவர் எடுத்துக்கொண்டதில்லை..
    எதிராளிகளை திக்குமுக்காட வைத்த ஒரு முதுபெரும் அரசியல் சூத்ரதாரி; தளராத முயற்சிக்கும் தொய்வில்லாத செயல்பாட்டுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர் என்பதையும் கணக்கில் கொண்டே ஆகவேண்டும்..

    மக்கள் கொடுத்த வாய்ப்பு; வீழ்த்தியதும் மக்கள் கொடுத்த தீர்ப்பு..

    ReplyDelete
  16. ///எதிராளிகளை திக்குமுக்காட வைத்த ஒரு முதுபெரும் அரசியல் சூத்ரதாரி; தளராத முயற்சிக்கும் தொய்வில்லாத செயல்பாட்டுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர் ///

    சபாஷ் சரியான போட்டி..

    ஒங்களோட 60 வருஷ அனுபவம்
    ஒப்பிட்டு பார்த்தா என்னோட

    ஒன்பதாண்டு அனுபவத்துக்கு சமமென
    ஒருவர் சொன்னா அது ஓவர் என்றா

    சொல்லவேண்டும்..உண்மையானால்
    சொன்னபடியே ஒத்துக்கலாம்

    பீற்றல் என்றால் இருக்கட்டும்
    சீற்றம் கொள்ளாமலாவது இருக்கலாம்

    ஆனால் மைனர்வால் உங்க பக்கம்பேச ஆளு ஒருத்தர் கூட வரலை பாருங்க..

    வீக்காக இருக்கு அதனால
    வீம்புக்கு கூட யாரும் அவருக்கு

    சாதகமாக சொல்லவில்லை பாருங்க
    சாதாரண ஆளாக்கிட்டாங்க..

    சதா ரணமாக்கமலிருந்தா
    சோதனையிலிருந்து தப்பிக்கலாம்..ம்ம்

    ReplyDelete
  17. அன்புடன் வணக்கம் திரு மைனர்வால்
    ***வாஸ்து கணிப்பில் அமைந்த வாசஸ்தலம் மட்டுமே ஒருவருக்கு சகல சம்பத்துகளையும் தந்துவிடுமானால் பெரும் தனவந்தர்கள் நினைத்தால் தன் விருப்பத்துக்கு வாஸ்துவை சரிசெய்து விடமுடியும். இதன்மூலம் ஜாதகத்து 12 இடங்களிலே 28 க்கு குறைவான பரல் உள்ள இடங்களுக்கான பிரச்சனைகளை நிவர்த்திபண்ணிவிடமுடியுமா? 337 பாலன்சிங் அடிபட்டுப் போய்விடாதா என்ன?****
    மறுத்து எழுதுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்..!!. ஒரு கார் நன்றாக ஓட வேண்டும் என்றால் .நாலு வீல்!! இஞ்சின் !!ஓரளவு நல்ல பாடி!! ஓட்டுனர்!! இவை எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்..அது போல ஒருவருக்கு கரக நிலை &இருப்பிடம் சரியாக இருக்க வேண்டும்.. !! போயஸ் தோட்டம் &,மு.க இருப்பிடம் வாஸ்து பற்றி பேச வில்லை.. தலைமை செயலகம். எண்ணெய் தொட்டி போல் உள்ளது வாஸ்து சரி இல்லை. அம்மையாரும் அதில் சபை நடத்த விரும்ப வில்லை.. !! ஒரு நல்ல ஆரோக்கியமான மனிதனை சயனைடு காஸ் அறையல் வைத்தால் நிச்சயம் இறந்து போவான் அது போல என்னதான் அதிகமான பரல்கள் இருந்தாலும். இருப்பிடம் சரி இல்லை என்றால் அங்கு அவனால் சரிவர சிந்தித்து இயங்க முடியாது.. [தென் கிழக்கு மூலைய்ல் படுக்கை அறை இருந்தால் அங்கு இருக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பேறு இருக்காது ஏன் அனுபவம்.]வெளி நாட்டில் இதெல்லாம் எதுவும் பார்ப்பதில்லை ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறதே? அடியேன் நமது புண்ணிய பூமி பற்றி மட்டுமே !! வாஸ்து எனப்படும் வேதம் நமது நாட்டுக்கு மட்டுமே.. வாத்தியார் அய்யா .. என்ன சொல்கிறார்கள்.. அவர்கள் வாஸ்து தெளிவாக தெரிந்தவர்கள்..

    ReplyDelete
  18. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி

    ReplyDelete
  19. /////////// iyer said...
    ஆனால் மைனர்வால் உங்க பக்கம்பேச ஆளு ஒருத்தர் கூட வரலை பாருங்க..

    வீக்காக இருக்கு அதனால
    வீம்புக்கு கூட யாரும் அவருக்கு

    சாதகமாக சொல்லவில்லை பாருங்க
    சாதாரண ஆளாக்கிட்டாங்க..\\\\\\\\\\\\
    ரிசல்ட் வரும் வரைக்கும் இந்த மக்கள் கூட்டம் வாய் பொத்தி மவுனியாக இருந்ததுதான்..அய்யா புகழ் பாடியதுதான்..
    மக்களின் இந்த குள்ளநரித் தந்திர குணம் தெரிந்துதான் அம்மையார் தன்னை விசுவாசிகளுக்கென ஒப்படைத்து தனக்கென ஒரு கவச வளையத்தை ஏற்படுத்தி அதனுள்ளே வாசம் செய்து வருகிறார்..வாழ்வை அற்பணித்தும் வருகிறார்..அரசியலில் மக்களிடம் நேரிடைத் தொடர்புகளை விடுத்து அவர் கறார் பேர்வழியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டதற்குக் காரணம் தோற்ற பின் ஓடி ஒளியும் சுய ஆதாயம் தேடும் இந்த கூட்டத்தை பார்த்து வெம்பிய இந்த அனுபவத்தினால்தான்..இது கூட இயற்கையின் விளையாட்டின் ஓர் அங்கம்தான்

    ReplyDelete
  20. ஆசிரியர் ஐயா என்னை மன்னிக்க வேண்டும். கடந்த ஒரு பத்து நாட்களாக என்னுடைய சொந்தப் பிரச்சனை எனக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தது. ஒரு வழியாக அதிலிருந்து சற்று மீண்டு வந்து இன்றுதான் வகுப்பறையில் வந்து பார்த்தேன். படிக்க வேண்டியதும், அது குறித்து சொல்ல வேண்டியதும் நிறையவே இருக்கின்றன. இன்று அல்லது நாளை விவரமாக சொல்லுகிறேன். 'எண்ணைத் தொட்டி' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும் சில புகைப்படங்களையும் பார்த்தேன், ஆழ்ந்து படிக்கவில்லை. இது குறித்து ஒரு நீண்ட கடிதத்தைத் தங்களுக்குத் தனியே மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன். மற்ற பகுதிகள் குறித்த என் கருத்துக்களை விரைவில் எழுதுகிறேன். நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com