------------------------------------------------------------------------------------
Astrology பெண்ணின் நிறத்தில் என்ன(டா) இருக்கிறது?
இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதற்கான சுட்டி இது!
-------------------------------------------------------------------
வேலை கிடைப்பதைப் பற்றி சென்ற பதிவில் அலசியிருந்தோம்.
வேலை கிடைத்துவிட்டது. அடுத்து என்ன?
அடுத்து டும் டும்........ டும்தான். அதாவது திருமணம்!
வேலை கிடைத்தவுடன் திருமணம் நடந்தால் நல்லது. இளைஞன் அல்லது இளைஞி யாராக இருந்தாலும் முன்பு 21 வயதில் திருமணம் செய்து வைத்தார்கள்.
இப்போது, பொருளாதாரத் தேடலில், வாழ்க்கை வசதித் தேடலில் இரு பாலருமே திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள்.
30 அல்லது 32 வயதாகியும் திருமணமாகாதவர்கள் இன்று பலர் இருக்கிறார்கள். 25 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டாமா?
கேட்டால், “இன்னும் வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை, செட்டில் ஆன பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்” என்பார்கள்.
ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதற்கு 10’ X 10' படுக்கை அறையுடன் கூடிய சின்ன வாடகை வீடு போதாதா? இதைவிடச் சின்ன வீடுகளில் - ஏன் ஒற்றை அறை வீடுகளில் எத்தனை பேர் மும்பை போன்ற பெரு நகரங்களில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
தி.நகரில் வாடகை கொடுத்து மாளாது என்றால், அம்பத்தூரில் ஒரு வீட்டைப் பிடி. அல்லது போரூரில் ஒரு வீட்டைப் பிடி. ஒரு மணி நேரம் முன்பாகப் புறப்பட்டு, வேலை பார்க்கும் இடத்திற்கு வந்து சேர்.
சிக்கனமாக இரு. இரண்டு முளம் மல்லிகைப்பூ இருபது ரூபாய் என்றால், அதை எதற்கு வாங்குகிறாய்? ஒரு ஒற்றை ரோஜா வாங்கிகொண்டுபோய், அதை நீயே உன் மனைவி தலையில் சொருகிவிட்டு, “தேவயானி போல இருக்கிறாயடி, என்று சொல்!” கிறங்கிப் போவாள்.
நீ செட்டில் ஆகிற வரைக்கும் உன்னுடைய இளமை காத்திருக்குமா?
செட்டில் ஆகிறது என்பது மாயமானைத் தேடுவதற்கு ஒப்பாகும். அதற்கு அளவில்லை. கடலில் அலை ஓய்ந்து என்றைக்குக் குளிப்பது? அலை பாட்டிற்கு அடித்துக் கொண்டுதான் இருக்கும். நடுவில் போய் ஒரு காக்காய்க் குளியல் போட்டுவிட்டு வருவதில்லையா? அதுபோல செட்டில் ஆகிற பாடலை ஒதுக்கி வைத்துவிட்டுத் திருமணம் செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம்.
“எனக்குத் தகுதியான பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை” என்று சிலர் சொல்வார்கள்.
தகுதி என்று எதைச் சொல்கிறாய்?
ஜோடிப் பொருத்தத்தைச் சொல்கிறாயா?
"Made for each other" என்று மற்றவர்கள் சொல்லும்படியாக மனைவி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா?
அதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும். ரியல் லைஃபில் நடக்காது.
சிலர் சிவப்பான பெண்ணைத் தேடிக்கொண்டிருப்பார்கள். சிலர் சிவப்பான முகக்களையான பெண்ணைத் தேடிக்கொண்டிருப்பார்கள்.
நிறத்தில் என்ன இருக்கிறது?
என் நெருங்கிய உறவினர் ஒருவர் இருந்தார். இப்போது அவர் இல்லை. அதிரடியாகப்பேசுவார். சாமர்த்தியமானவர். இருபது வருடங்களுக்கு முன்பு, அவர் தன் நண்பனின் மகனுக்கு, ஒரு பெண்ணைப் பரிந்துரை செய்தார். செய்துவிட்டு, பத்து நாட்கள் கழித்து, ஒரு திருமண வீட்டில் தன் நண்பனைச் சந்தித்த போது, கேட்டார்
“டேய் நான் சொன்ன வரன் என்னடா ஆயிற்று, பேசினாயா?”
அவர் வருத்தமுடன் சொன்னார்: “பேசினேனப்பா. அவர்கள் சம்மதிக்கிறார்கள். ஆனால் என் பையன் ஒத்துக்கொள்ளவில்லை”
இவர் விடவில்லை. “ஏன்?” என்று கேட்டார்
“பையன், பெண் கறுப்பாக இருக்கிறாளே. வேண்டாம் என்று கூறிவிட்டான்”
“அடப்பாவி, அவனைக் கூப்பிடு நான் விசாரிக்கிறேன்”
அடுத்த ஐந்து நிமிடத்தில் பையன் வந்து சேர்ந்தான். திருமண வீடல்லவா? சுற்றிலும் கூட்டம். ஆனால் நம்ம தலைவர் அதற்கெல்லாம் யோசிக்கவில்லை. அவனைத் துளைக்க ஆரம்பித்தார்.
“டேய் அந்தப் பெண்ணை நேரில் பார்த்தாயா?
“பார்த்தேன்”
“களையாக இருக்கிறாளா - இல்லையா?”
“களையாகத்தான் இருக்கிறாள்”
“பின் ஏன்டா வேண்டாம் என்று சொன்னாய்?”
“கறுப்பாக இருந்தாள். அதனால் வேண்டாம் என்று சொன்னேன்”
“மயி.......டி, நீ என்னடா ரெம்ப சிவப்பா? நீயும் கறுப்புத்தானே?”
“நான் விருப்பப்படுவதில் என்ன தவறு இருக்கிறது? கல்வி, அந்தஸ்து என்று எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கும்போது, சிவப்பான பெண் கிடைக்காமலா போய்விடுவாள்?”
தலைவருக்குக் கோபம் வந்து முத்தாய்ப்பாய்ப் பேசினார்:
“ சிவப்புன்னு தேடிப் பிடித்துக் கட்டிக்கிட்டவன் எல்லாம் செருப்படி பட்டுக்கிட்டு இருக்கான்டா. பெண்ணுக்கு குணம்தான்டா முக்கியம். நிறத்தில என்னடா இருக்கு? விளக்கை அணைச்சா எல்லாப் பொண்ணும் ஒன்னு தாண்டா! கட்டி அனைச்சா கிடைக்கிற சுகமும் ஒன்னுதான்டா!”
(அலசல் தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

'கருப்பே அழகு காந்தலே ருசி' என்பது ஒரு சொல்லடை.மிகச் சிறிய வயதிலே முன்பு திருமணம் நடந்தபோது அது ஒரு விளையாட்டுப் போல நடந்தது.
ReplyDeleteஅப்போது இளைஞனுக்கு அழகு பார்க்கும் எண்ணமெல்லாம் தெரியாது. இப்போது போல திரைப்படக் கவர்ச்சிக் கன்னிகள் கனவில் வந்து டிஸ்கோ ஆடமாட்டார்கள்.
அழகு பற்றிய 'கான்செப்ட்' நீலப்படங்களில் இருந்து துவங்கும் இக்காலம் வேறு! அக்காலம் வேறு.!
////“மயி.......டி, நீ என்னடா ரெம்ப சிவப்பா? நீயும் கறுப்புத்தானே?”
ReplyDelete“நான் விருப்பப்படுவதில் என்ன தவறு இருக்கிறது? கல்வி, அந்தஸ்து என்று எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கும்போது, சிவப்பான பெண் கிடைக்காமலா போய்விடுவாள்?”
தலைவருக்குக் கோபம் வந்து முத்தாய்ப்பாய்ப் பேசினார்:
“ சிவப்புன்னு தேடிப் பிடித்துக் கட்டிக்கிட்டவன் எல்லாம் செருப்படி பட்டுக்கிட்டு இருக்கான்டா. பெண்ணுக்கு குணம்தான்டா முக்கியம். நிறத்தில என்னடா இருக்கு? விளக்கை அணைச்சா எல்லாப் பொண்ணும் ஒன்னு தாண்டா! கட்டி அனைச்சா கிடைக்கிற சுகமும் ஒன்னுதான்டா!”////
சூப்பர்! பாறையை பிளக்க உளி தான் வேண்டும் அதுவும் இப்படி கூறாகத்தான் இருக்க வேண்டும்....
பார்க்க வேண்டியதை விட்டு விட்டு வேறு எதையோத் தேடி திரிந்து வேட்டியில் ஓனான்....
என்பார்களே அதைப் போல.....
அனுபவப் பட்டவர்கள் அதிலும் எதார்த்தத்தை பேசுபவர்கள் இப்படி பேசுவதைப் பார்த்திருக்கேன்..
அந்த உணர்வை வழக்கம் போலவே! அருமையாக உங்கள் நடையிலே கொண்டுவந்துள்ளீர்கள்...
"எப்படி எழுதவேண்டுமென்று புத்தகம் போட்டால் இந்த ஆக்கமும் எழுத்தும் நடையும் நிச்சயம்
மேற்கோளாகும்!"
சம்பட்டி சத்தம் சொல்கிறது உளியின் மேல் விழுந்த அடியின் அழுத்தத்தை..
நன்றிகள் ஐயா!
//"Made for each other" என்று மற்றவர்கள் சொல்லும்படியாக மனைவி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா?
ReplyDeleteஅதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும். ரியல் லைஃபில் நடக்காது.//
சத்தியமான வார்த்தைகள் ஐயா,
ஒரு பெண்ணிடம் எதிர்பார்கக வேண்டியது குணத்தையே தவிர அழகை அல்ல..
இது அனுபவித்தால் தான் புரியும்..
ஆனால் என்ன செய்வது ?
அனுபவம் என்பது சீப்பு மாதிரி..
அது பலருக்கும் தலை வழுக்கையான பிறகுதான் கிடைக்கிறது...
நன்றி..
அன்புடன் வணக்கம்
ReplyDeleteமனை, மனையாட்டி அமைவது எல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம். !!!புண்ணியம் செய்திருந்தா மகாலட்சுமி.. இல்லேன??? அவுக அக்கா?? அடியேன் அன்னை அடிக்கடி சொல்லும் சொல்லாடை..!!!!வளரும் இளைஞர்களுக்கு சரியான போதனை பதிவு!!சிறு கதை எழுதுவது எப்பிடி என ஒரு நூல் போட்டால் ஏன் போன்றவர்களுக்கு மிக்க வசதியாக இருக்கும்.. நன்றி ...
புத்திமதிகள் இன்றைய
ReplyDeleteபுதிய உலக இளைஞனுக்கு..
அடுத்த பதிவில் ஆணை குறை கூறம்
அழகு பெண்களுக்காக இருக்க வேண்டும்
எதிர்பார்ப்பில்.. இன்றைய பெண்
எதையெதை எதிர்பார்த்து இருக்கிறாள்
என பட்டியலிட்டால்..
எழுத இடமுமில்லை மையும் இல்லை
ஆண்களின் கனவை குறிப்பிடுபவர்
ஆ!எனும் பெண் கனவை அறிவாரோ?
கொஞ்சம் அந்தப் பக்கமும் பாருங்க
கொலுசுகள் சத்தம் போடுவதில்லை
கொஞ்சி பேசும் பெண்களிடம்
கெஞ்சி பேசும் நிலை என மாறி
ஆண் சுதந்திரம் என்ற நிலையில்
ஆடி போயிருக்கும் இளைஞருக்கு
ஆறுதலாக ஏதாச்சும் சொல்லுங்களேன்
அய்யோன்னு இருக்கற அவுகளுக்காக..
கறுப்புத்தான எனக்கு பிடிச்ச கலரு என
ReplyDeleteகறுப்பினை பட்டியலிடும் பாடலை பாடி
கறுப்பின் மீது இல்லை இளைஞனுக்கு
வெறுப்பு, கறுப்பாய் இருந்தாலும்
முறுக்கு குறையாத பெண்களை..
செருக்குடன் நடக்கும் அவர்களை..
கிறுக்கு பயல்கள் என சொல்லி
குறுக்கு வழியில் நிற்பவர் யார்?
சறுக்கி விழும் வாழ்க்கையிலே
சுறுக்குன்னு தைக்கும் படி பெண்ணுக்கு
தேருக்குரிய அச்சானியே ஆண் என
போருக்குரியவீரனுக்கு சொல்வதுபோல்
(அன்பை)பெருக்கி வாழ சொல்லுங்கள்
யாருக்கு என சொல்லவும் வேண்டுமா
உருகி விழுகும் மெழுகாக
பெருகி வரும் அன்பாலிந்த வேண்டுதல்
Dear Sir,
ReplyDeleteNow Expectations are more that is the problem