++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology அவனைக் கண்டால் வரச்சொல்லடி! அன்றைக்குத் தந்ததைத் தரச்சொல்லடி!
தலைப்பைப் பார்த்து விட்டு, “வாத்தியார் நீங்களுமா?” என்று கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.
இந்தப் பதிவை முழுமையாகப் படித்துவிட்டு, ஒரு முடிவிற்கு வரக்கூடிய மனப்பான்மை உள்ளவர்கள் மட்டும் தொடரவும்
நேசத்துடன்,
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------------
காதல் அதீத சக்தி வாய்ந்தது. காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியது. எடுத்துச் சொல்ல
முடியாத ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடியது.
காதல் வயப்பட்டிருக்காத மனிதனோ அல்லது மங்கையோ இருக்க முடியாது. நான் இருந்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால் அது பொய்!
என் ஜாதகத்தில் சுக்கிரன் இல்லை என்று சொன்னால் அது எப்படி உண்மையாகும்? ஜாதகத்தில் எங்காவது ஒரு இடத்தில் சுக்கிரன் இருப்பாரல்லவா? சுக்கிரன் இருக்கும்போது எப்படிக் காதல் இல்லாமல் இருக்கும்?
ஜாதகத்தில் சுக்கிரன் இல்லை என்றால், ஜாதகம் பொய்யானது.
காதல் இல்லை என்றால் வாழ்க்கையும் பொய்யானது. சொல்லும் ஆசாமியும் பொய்யானவன்.
காதல் பல வகைப்படும். விடலைக் காதல். கருத்தொன்றிய காதல், ஒரு தலைக் காதல், திருமணத்திற்கு முன் காதல், நிறைவேறிய காதல், பிரிவில் முடிந்த காதல். திருமணத்திற்குப் பின் காதல் - அதாவது கழுத்தை நீட்டியவளையே தீவிரமாகக் காதலிப்பது.
ஜாதகத்தில் முன்யோகம், பின்யோகம் என்று இரண்டு அமைப்புக்கள் இருப்பதைப்போல காதலிலும் இரண்டு அமைப்புக்கள் உள்ளன. பலருக்கும் திருமணத்திற்குப் பிறகு கட்டிக் கொண்டவளையே அல்லது கட்டிக்கொண்டவரையே காதலிக்கும் யோகம் (?!) இருக்கும்
படைக்கப்பெற்ற ஜீவராசிகளுக்கெல்லாம் வேண்டிய உணவும் சேர்ந்தே படைக்கப்பெற்றிருக்கிறது. அதுபோல எல்லா உயிர்களுக்கும் காதல் உணர்வும் சேர்ந்தே கொடுக்கப் பெற்றிருக்கிறது..
சுக்கிரன் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் காதல் உணர்வு இருக்கும். நீசமாக இருந்தாலும் காதல் உணர்வு இருக்கும். அந்த உணர்வுகள் எந்த அளவிற்கு மீட்டப் பெறுகின்றன என்பதுதான் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும்.
ஒரு அம்சமான பெண்ணைப் பார்க்கும் போது, “அடடா, இவள் எனக்கு மனைவியாகக் கிடைத்தால் எப்படி இருக்கும்?” என்று ஒரு காலகட்டத்தில், ஒரு தடவையாவது நினைத்திருக்காத, விரும்பியிருக்காத மனிதனே இருக்க முடியாது. விரும்பியிருக்காத பெண்ணும் இருக்க முடியாது.
அவளை நினைத்துப் பலநாட்கள் தூக்கத்தைத் தொலைத்தவனும் இருப்பான். வீண் ஆசை என்று ஒதுக்கி விட்டு அடுத்த நாளே மறக்க முயற்சித்தவனும் இருப்பான். அதுதான் மனித இயல்பு. சுக்கிரனின் உள்ளடி வேலைகள்.
திருமணத்திற்கு முன்பு வாய்ப்புக் கிடைக்காமல் (அதுவும் ஜாதகப் பலன் தான்) திருமணத்திற்குப் பின் வந்தவளை மாய்ந்து மாய்ந்து காதலித்தவர்களும், காதலிப்பவர்களும் உண்டு. அது உன்னதமான காதல். உன்னதம் ஏன் என்றால், அதில் எந்தப் பிரச்சினைகளுக்கும் இடம் இல்லை அதனால் அது உன்னதமானது.
நாளும் பொழுதும் வளரக்கூடியது.
“உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
உன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி
கால சுமைதாங்கி போலே மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில்
என் விம்மல் தனியுமடி
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
என்று பாடி மயங்கிப் போவார்கள். அல்லது மாய்ந்து போவார்கள் அந்தவகைத் தம்பதிகள்
-------------------------------------------------
சிலருக்கு, அவர்களுடைய இளம் வயதிலேயே ஒரு நல்ல பெண்ணின் சிநேகம் கிடைத்து, அது காதலாக மாறி அலைக்கழிக்கும். அவர்கள் இப்படிப் பாடி, தங்களை மரந்துவிட்டு அல்லது தங்களைக் காதலுக்குப் பறிகொடுத்துவிட்டு இருப்பார்கள்:
‘நீயில்லாத உலகத்திலே நிம்மதி இல்லை-உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை.-உன்னைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை.
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னை தேடி ஓடுது.
பொன்விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னை
புரிந்துக் கூட சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே.
இன்று நாளை என்று வாழ்வை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே!! ”
---------------------------------------------------------------------
சில அசுரக் காதல்களும் உண்டு. காதலிக்காக உலகத்தையே புரட்டுவேன் என்பான். அவர்களின் மன ஓட்டத்தைக் கவிஞன் ஒருவன் இப்ப்டிப் பாட்டாக எழுதினான். Fantasy காதல் ரகத்தைச் சேர்ந்தது இது.
“தொடு தொடு எனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்கனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
சத்தியமாகவா?
நான் சத்தியம் செய்யவா..
(தொடு தொடு..)
இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்?
நட்சத்திரங்களை தூசு தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா இது மெய்தானா?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
(தொடு தொடு..)
நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சலடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க
இந்த நீரிலே அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு
(காதலிக்காக, அவளுடைய கூந்தலைக் கலைக்கும் காற்றைக் கைது செய்வேன் என்கிறான். இதுதான் அசுரக் காதலின் உச்சக் கட்டம்)
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
(தொடு தொடு..)”
----------------------------------------------------------------
அது போல ஏக்கக் காதலும் உண்டு. அதையும் பாட்டில் சொன்னான் ஒரு கவிஞன்
“நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன்மலை சூடினான்
கன்னியழகை பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்
கலஞனாகினான்........
-------------------------------------------------------------------
இப்படி ஆயிரம் பக்கங்களுக்கு சலிப்பில்லாமல் காதலைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.
இன்று காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு அல்லது காதல் வயப்பட துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அல்லது அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு, ஜோதிடம் மூலம் என்ன சொல்லலாம் என்பதே கட்டுரையின் நோக்கம்
காதல் கலகலப்பில் முடியுமா அல்லது கலக்கத்தில் முடியுமா?: இதுதான் கேள்வி
அதற்கான விடையை நாளை பார்க்கலாம்.
கட்டுரையின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், என்னுடைய தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.
(தொடரும்)
----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

(நட்சத்திரங்கள் ஒன்றில் இடம் பிடித்து, அவளுக்காக வீடு கட்டுவானாம். எப்படி இருக்கிறது கற்பனை? அவள் விட்டாளா? இல்லை. அவளும் பதிலுக்கு தன் கேள்விக் கணைகளைத் தொடர்கிறாள்)

Good Morning to Everyone
ReplyDelete// "இந்தப் பதிவை முழுமையாகப் படித்துவிட்டு, ஒரு முடிவிற்கு வரக்கூடிய மனப்பான்மை உள்ளவர்கள் மட்டும் தொடரவும்" //
Accept.
///கட்டிக்கொண்டவரையே காதலிக்கும் யோகம் (?!) இருக்கும்///
ReplyDeleteஇறுதியில் வேறு வழியில்லாமல் என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
யார் மீதும் அன்பு, பாசம் இல்லாதவர்கள், முற்றும் துறந்த துறவிகள் இவர்களுக்கு ..... சுக்கிரன் எந்த நிலையில் இருப்பார். மறைவு ஸ்தானத்தில் பகை நீசம் பெற்று பாய் போட்டு படுத்திருப்பாரோ.
காதல் என்பது ஒரு அற்புத உணர்வு...
ReplyDeleteஇந்த உலகம் இயங்க அது தான் உயிர்...
இதயமிருக்கும் இடமெல்லாம்
இதமானக் காதலும் இருக்கும்...
இளமையில் வந்தக் காதல்
முதுமை வரை அல்ல வாழ்வது முடியும் வரை
இளமையாகவே இருக்கும்...
மானுடனாகப் பிறந்த மகாவிஷ்ணுவும் விலக்கல்ல...
தெயவீகமானக் தெய்வக் காதலை
கவிச் சக்ரவர்த்தி இப்படிப் பாடுவான்...
"எண்ணரும் நலத்தினாள் இனையன் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது, உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!"
வள்ளுவப் பெருந்தகையோ இப்படிக் கூறுகிறான்...
"கண்ணோடுகண் இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல"
வைரமுத்து இதையே! இன்றைய இளசுகளுக்கு இப்படி எழுதுகிறார்...
"விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே...."
ஆறாம் பொருளையே பெரும் பாலும் அலசிய வகுப்பறையில்
இப்போது இன்பத்துப் பாலூருவது இனிமையானது....
கலகலப்போ? கலகமோ?....
நினைவில் வந்தால் என்றும்,
ஒரு கிளுகிளுப்புத் தான்....
நாளையப் பதிவை ஆவலுடன் நோக்கி....
நன்றி ஐயா!
//காதல் வயப்பட்டிருக்காத மனிதனோ அல்லது மங்கையோ இருக்க முடியாது. நான் இருந்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால் அது பொய்!//
ReplyDeleteநிஜம் தான்
"காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம்
ReplyDeleteகாதற் பெண்கள் கடைக்கண் பார்வையில்" என்பார் மஹாகவி பாரதியார்.
இலக்கியத்தில் காதல் என்றால் மகிழ்ந்து ரசிப்பவர்கள்,கிணோற்று ஓரக்காதல்
என்றால் காய்கிறார்களே என்று வருந்துவார் மஹாகவி.
பாரதியின் கண்ணன் பாட்டில் காணும் ச்ருங்கார ரசப் பாடல்களுக்காக
வ வெ சு ஐயர் அவரை சிறிது கண்டித்து முகவுரை எழுதியுள்ளார்.
காதலைப்பற்றி அருமையான ஆக்கம் ஐயா!
///யார் மீதும் அன்பு, பாசம் இல்லாதவர்கள், முற்றும் துறந்த துறவிகள் இவர்களுக்கு ..... சுக்கிரன் எந்த நிலையில் இருப்பார். மறைவு ஸ்தானத்தில் பகை நீசம் பெற்று பாய் போட்டு படுத்திருப்பாரோ.////
ReplyDeleteஆனந்த் அவர்களே! எனக்கு அப்படித்தான் உள்ளார். 3ம் இடத்தில் கன்னியில் நீசம்.கூடவே கேதுவும். நீச குருவின் 9ம் பார்வை, மகரத்தில் இருந்து.
அம்சத்தில் சுக்ரன் உச்சம் பெற்றுக் காப்பாற்றிவிட்டார்.சாமியார் அளவுக்கு வளர்க்கப்பட்டு, அம்ச சுக்ரனால் சாமியார் ஆகாமல் தப்பினேன்.
/////யார் மீதும் அன்பு, பாசம் இல்லாதவர்கள், முற்றும் துறந்த துறவிகள் இவர்களுக்கு ..... சுக்கிரன் எந்த நிலையில் இருப்பார். மறைவு ஸ்தானத்தில் பகை நீசம் பெற்று பாய் போட்டு படுத்திருப்பாரோ.//
ReplyDeleteஆனந்த் அவர்களே! எனக்கு அப்படித்தான் உள்ளார். 3ம் இடத்தில் கன்னியில் நீசம்.கூடவே கேதுவும். நீச குருவின் 9ம் பார்வை, மகரத்தில் இருந்து.
அம்சத்தில் சுக்ரன் உச்சம் பெற்றுக் காப்பாற்றிவிட்டார்.சாமியார் அளவுக்கு வளர்க்கப்பட்டு, அம்ச சுக்ரனால் சாமியார் ஆகாமல் தப்பினேன்./////
அத்துடன் சுயவர்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கு சுக்கிரன், லக்னத்தில் 8ல் இருக்கிறார். நவாம்சத்தில், 12ல் இருக்கிறார். பிறகு எப்படி திருமணமானது என்கிறீர்கள். அதற்கு வேறு கிரக நிலைகள் சாதகமாக இருந்தன. குறிப்பாக 7ம் அதிபதி.
பின் ஊட்டம் ஏதும் தராமால்
ReplyDeleteவருகை பதிவு மட்டும் இன்று..