---------------------------------------------------------------------------------
சிறுகதை: கருப்பஞ்செட்டியாரும் கருவேலமரமும்!
மலர்ந்து மலராத பாதிமலர் போன்ற அதிகாலை நேரம். பொழுது முழுதாகப் புலரவில்லை. தோட்டத்தில் குடியிருக்கும் காளியம்மா போட்ட அலறல் சத்தத்தில், திடுக்கிட்டு எழுந்தார் கருப்பஞ் செட்டியார்.
என்ன ஆகியிருக்கும்? காளியம்மாவைப் பாம்பு ஏதாவது கொத்தியிருக்குமோ? யாருக்குத் தெரியும்? போய்ப்பார்த்தால் அல்லவா தெரியும்?
கொசுவலையை விலக்கிக் கொண்டு, தான் படுத்திருந்த கட்டிலைவிட்டு இறங்கினார். பெட்டகசாலை விளக்கைப் போட்டார். சைனா டார்ச் லைட்டைக் கையில் எடுத்துக் கொண்டார். பிரதான முகப்புக் கதவைத் திறந்து, வேகமாக நடந்து முகப்புப் பத்தியைக் கடந்தார். செருப்பை மாட்டிக்கொண்டு வாரத்தில் இறங்கி, கிணற்றடியை அடைந்தார். அங்கேதான் தோட்டத்திற்குச்
செல்லும் கதவு இருந்தது.
கதவில் இரு பக்கமும் திறக்கும்படியான செயின் போட்ட பூட்டு. அதைத் திறந்து, தோட்டத்திற்குள் அவர் அடியெடுத்து வைப்பதற்குள், ஐந்து நிமிடங்கள் கடந்து போயிருந்தன.
அதற்குள் எல்லாம் நடந்து முடிந்திருந்தது. தோட்டத்தில் குடியிருக்கும் மூன்று குடித்தனக்காரர்களும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வீட்டின் எதிர்ப்புறம், கொழும்பு லேனா வீட்டுக் கார் ஷெட்டில் டீக்கடை வைத்திருக்கும் சுல்தான் பாயும், அவனுடைய வாப்பாவும் நின்று கொண்டிருந்தார்கள்.
காளியம்மா அங்கே கிடந்த பட்டியக்கல் ஒன்றில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். கை கால்கள் எல்லாம் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தன.
அவள் எதிரில், எட்டு அடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஒன்று அடித்துப்
போடப் பட்டிருந்தது.
பெரிய செட்டியாரைப் பார்த்தவுடன், அனைவரும் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். காளியம்மாவின் கணவன் செல்லையாதான் முன்வந்து அவருக்கு விவரத்தைச் சொன்னான்.
இரும்பு வாளிக்குள் கிடந்த பாம்பை, இருட்டில் கவனிக்காமல், கயிறு என்று நினைத்துக் காளியம்மா கையில் தூக்கிவிட்டாளாம். நொடியில், பாம்பு என்று தெரிந்தவுடன் அலறிக் கீழே போட்டவள், அதன் மீது வாளியையும் போட்டுவிட்டாளாம். இரும்பு வாளி தாக்கியதில் நகர முடியாமல் கிடந்த பாம்பை மற்றவர்கள் எல்லாம் ஒன்று கூடி அடித்துக் கொன்றிருக்கிறார்கள்.
கதையைக் கேட்ட பெரிய செட்டியார், பெருமூச்சு விட்டார். அவரால் செய்ய முடிந்தது அது ஒன்றுதான்.
பாவம் காளியம்மாள். வயது முப்பதுதான். நான்கு பிள்ளைகளுக்குத்தாய். கணவன் செல்லையா சத்திரம் சீனாதானா வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கிறான். பாம்பு கொத்தியிருந்தால் காளியம்மாவின் குடும்பம் சீரழிந்து போய்விடுமே?. பிள்ளைகள் தாயில்லாமல் தவித்துப்போய்விடுமே?
தங்கள் வீட்டுத் தோட்டத்தில் அசாம் காடுகளைப்போல் அடர்த்தியாக நீண்டு வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களைப் பார்த்தார் செட்டியார். 400 அல்லது 500 மரங்கள் இருக்கலாம். இரண்டு வீட்டு மனை இடம் என்றால் சும்மாவா? அதை விட அதிகமான எண்ணிக்கையில் அங்கே பாம்புகள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஊருக்குக் கடைசி என்பதாலும்,
அருகில் கருப்புசாமிக் கண்மாய் இருப்பதாலும், பாம்புக்குப் பஞ்சமில்லை.
தினசரி பாம்பின் தரிசனமும், வாரம் ஒன்று அடித்துக் கொல்லப்படுவதும் நடக்கின்ற கதைதான். காளியம்மாள் இன்று கையால் பாம்பைப் பிடித்துக் கொண்டு அலறியது மட்டும்தான் புதுக்கதை!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த கருவேலமரப் பிரச்சினை பத்து வருடங்களாக வாட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பு, கீழக் குடியிருப்பில் இருக்கும் ஜனங்கள் வந்து மரங்களை, செட்டியார் வீட்டிற்குச் செலவில்லாமல், வெட்டி எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். அவர்களுக்கு அவைகள் விறகாகிவிடும். செட்டியாருக்குத் தோட்டம் சுத்தமாகிவிடும்.
தற்போது நிலைமை அப்படியில்லை. திண்டுக்கல், வேடசந்தூர், தாடிக்கொம்பு பகுதிகளில் தோன்றியுள்ள ஏராளமான நூற்பாலைகளால் உள்ளூர் ஏழை ஜனங்கள் புலம் பெயர்ந்து போய்விட்டார்கள். ஊர் வெறிச்சோடிப் போய்விட்டது. வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.
பக்கத்துக் கிராமத்தில் இருந்து ஆட்களைத் தேடிப் பிடித்துக் கொண்டுவந்தால், ஒரு மரத்தை வெட்டுவதற்கு 250 ரூபாய் என்ற கணக்கில் குத்து மதிப்பாக ஒன்றரை லட்ச ரூபாய் கேட்கிறார்கள். பத்துப் பேர்கள் வருவார்களாம். ஒரு மாதம் வேலை இருக்கிறதாம்.
வெட்டுவதும் தரையில் இருந்து ஒரு அடி விட்டுவிட்டு, அதற்கு மேல் உள்ள மரத்தின் பகுதியைத் தான் வெட்டுவார்களாம். “வேருடன் தோண்டி எடுக்க வேண்டாமா?” என்றால், அதை மிஷினை வைத்து (Poclain) நீங்கள்தான் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
கரும்பின் விலை டன் 1,800 ரூபாய். ஆனால் கருவேல மரத்தின் விலை டன் மூவாயிரம் ரூபாய். சரி ஆகின்ற செலவை வெட்டும் மரங்களை வைத்துச் சரி பண்ணிக்கொள்ளலாம் என்று பார்த்தால், அதிலும் சிக்கல் இருக்கிறது. அந்தத் தொழில் சில அரசியல் பிரமுகர்களின் கையில் இருக்கிறது. வெட்டிய பிறகு, துண்டுகள் போட்டு விட்டுக் கூப்பிடுங்கள். உருட்டுக் கட்டைகளை மட்டும் எடுத்துகொள்வோம் என்கிறார்கள். அதில் உள்ளடி வேலைகள் உள்ளன. அடிமாட்டு விலைக்குத்தான் போகும் போல் இருக்கிறது.
என்ன செய்வது என்று புரியாத நிலைமை.
வீட்டில் இருப்பது கருப்பஞ்செட்டியார் ஒருவர்தான். மற்ற
பங்குதாரர்கள் எல்லாம், அதாவது கருப்பஞ்செட்டியாரின் மகன்கள்,
மற்றும் அவருடைய இரண்டு தம்பிகள், அவர்களுடைய மகன்கள்
ஆறு பேர்கள், ஆக மொத்தம் பத்துப் பேர்களும் சென்னை, கோவை,
திருச்சி போன்ற நகரங்களில் வசிக்கிறார்கள். விஷேசங்களுக்குக்
கார்களில் வந்து போவதோடு சரி. எல்லோரும் வசதியாக இருக்கிறார்
கள். ஆனால் எந்தப் பொதுக்காரியத்தையும் ஒத்துவந்து செய்ய
மாட்டார்கள். அவர்களும் செய்ய மாட்டார்கள். அடுத்தவனையும்
செய்ய விடமாட்டார்கள்
கருப்பஞ் செட்டியாருக்கு எண்பது வயதாகிறது. அவர் அடிக்கடி
இப்படிச் சொல்வார்.
“செட்டிய வீடூகளில் ஒரு அய்யா, ஒரு மகன், ஒரு பேரன், ஒரு கொள்ளுப்பேரன் என்று வாரிசு வரிசை இருந்தால் எந்தப் பிரச்சினை
யும் இருக்காது. தவறி ஒரு அய்யா, இரண்டு மகன்கள், ஐந்து அல்லது
ஆறு பேரர்கள், எட்டு அல்லது பத்துக் கொள்ளுப்பேரர்கள் என்று
வம்சாவழி அதாவது வாரிசு வரிசை விரிவாக இருந்தால் எல்லா
விதப் பிரச்சினைகளும் அந்த வீட்டில் இருக்கும். அதை வைத்துப்
பெரிய புத்தகம் போடலாம். அந்த அளவு பிரச்சினைகள் சுவாரசியமாக
வும் இருக்கும்”
“பிரச்சினை என்றால் தலைவலிதானே இருக்கும், சுவாரசியத்திற்கு அங்கே இடமேது?” என்று கேட்டால், “ரசனை உணர்வோடு பார்த்தால், எதுவுமே சுவாரசியமாகத்தான் இருக்கும். பிரச்சினைகளும் அதற்கு விதிவிலக்கல்ல” என்று சொல்வார்.
“சொத்துக்கள் இருந்தால்தானே பிரச்சினை? சொத்து எதுவும் இல்லாவிட்டால், அவனவன் கையை ஊன்றிக் கர்ணம் அடிக்கின்றான் என்னும் நிலை இருந்தால், அங்கே பிரச்சினைக்கே இடமில்லையே?”
“ஏன் இல்லை? எங்கள் அய்யா, அவர் காலத்தில், அதாவது 1931ஆம் ஆண்டு, காரைக்குடியில் இருந்து, பத்துக் கிலோ மீட்டர் தூரத்திற்கு சொந்தச் செலவில் இரும்புக் கிராதிகளை நட்டு, குட்டி டிரான்ஸ்ஃபார்மரை நிறுவி, ஊருக்கே மின்சாரத்தைக் கொண்டு வந்தாராம். மின்சாரம் வந்த அன்று, இரவு, ஒளிவெள்ளத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தாராம். அத்துடன், எங்கள் தெருவில் இருந்த அத்தனை வீடுகளுக்கும் மின் இணைப்பு எடுத்துக்கொள்ள உதவினாராம். தனி மனுஷனாக அன்று அவர் செய்ததை இன்றும் ஊரில் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று எங்கள் வீட்டு நிலைமை அப்படியா இருக்கிறது?”
“ஏன், என்ன ஆச்சு?”
“எங்கள் வீட்டில் ஆரம்பத்தில் ஒரு மீட்டர்தான் இருந்தது. இன்று எட்டு மீட்டர்கள் இருக்கின்றன. வருடத்திற்கு ஆகின்ற சொற்ப மின்கட்டணத்தை ஒன்றாகச் செலுத்தி, பங்கிட்டுக் கொள்ளும் மனப்பக்குவம் யாருக்கும் இல்லை. ஆளாளுக்குத் தனித்தனி இணைப்பு, தனித்தனி மீட்டர். தனித்தனி கட்டணம்”
“அதற்கு என்ன காரணம்?”
“ஆண்டு முழுவதும் நான் வெளியூரில் இருக்கிறேன். உள்ளூரில் குடியிருந்து கொண்டு குப்பை கொட்டுகிறவன் கட்டட்டும் என்னும் மனப்பாங்கு, தனித்தனி மீட்டரில் முடிந்துவிட்டது. அது மட்டுமா?
வீட்டின் முன்பக்கம், தனித்தனி கழிப்பறை, தனித்தனி குளியலறை,
தனித்தனிப் பூட்டு, தனித்தனி சாவி! பவுன் பதிமூன்று ரூபாய் விற்ற
காலத்தில் அவர் லட்ச ரூபாய் செலவழித்து, பர்மாத்தேக்கு, இத்தாலி
மார்பிள், பெல்ஜியம் கண்ணாடி என்று பார்த்துப் பார்த்துக் கட்டிய
வீட்டைப் பராமரிப்பதில் கூட இன்று பல பிரச்சினைகள். அன்று
கூட்டுக் குடும்ப வாழ்க்கை. இன்று அது இல்லை. மைக்ரோ ஃபாமிலிகளாகிவிட்டன. அன்று தர்ம சிந்தனை இருந்தது. இன்று
தன்னைப் பேணித்தனம்தான் இருக்கிறது.”
“எல்லா வீடுகளிலும் அப்படி இல்லை. சில வீடுகளில் அப்படி இருக்கலாம்”
“நானும் இருக்கிற வீடுகளைத்தான் சொல்கிறேன். எங்கள் வீட்டில் இருக்கிறது.
“இருந்தால் என்ன? பேசித் தீர்த்துக்கொள்ளலாமே?”
“எங்கள் வீட்டில் அது முடியாது. கோணவழக்குப் பேசுவார்கள். ரத்த
அழுத்தநோய் வந்துவிடும். வந்துவிட்டது. மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இருக்கிற பிரச்சினைகள் போதாதென்று எங்கள்
வீட்டுத் தோட்டத்திலுள்ள கருவேலமரங்களை வைத்து வேறு பெரிய பிரச்சினை. அதற்காக வீட்டு பொதுக்குழுவைக் கூட்டிப் பேசியபோது,
என் சின்னத்தம்பி சிங்காரம் சொல்லிவிட்டான். மரங்களை வெட்டிச்
சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்தான். பழைய வழக்கப்படி சுத்தம் செய்கிறவர்களையே கூலிக்குப் பதிலாக மரங்களை எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டியதுதான். கைக்காசை எப்படிச் செலவு பண்ணுவது? பாம்புக்குப் பயந்தால் எப்படி? இங்கே சுத்தம் செய்தாலும், பக்கத்துக் கண்மாய்களில் இருந்து பாம்புகள் வரத்தான் செய்யும். குடியிருப்பவர்
களைக் காலி செய்யச் சொல்லி, பாம்பு வராத இடத்திற்குக் குடி போகச் சொல்லுங்கள். அதுதான் தீர்வு.”
“மற்றவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று சுவாரசியமாகக் கேட்டபோது, அதற்குச் செட்டியார்அதிரடியாக இப்படிப் பதில் சொன்னார்.
“என்ன திரைப்படமா எடுக்கப்போகிறோம். பலரிடமும் விவாதித்துத் திரைக்கதை அமைப்பதற்கு? சிங்காரம், அப்படிப் பேசியவுடன், கூட்டம் கலைந்துவிட்டது. அனைவரும் எழுந்து போய்விட்டார்கள். என்
பங்கிற்கு, நான் பழநி மலைமேல் உரையும் தண்டாயுதத்தானைப்
பிரார்த்திக் கொண்டிருக்கிறேன். பிரச்சினையை அவன் தீர்த்துவைப்பான்”
கருப்பஞ்செட்டியாரின் நம்பிக்கையும் பிரார்த்தனையும் வீண் போகவில்லை. பழநி அப்பன் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினான்.
அடுத்து வந்த மூன்று மாதங்களில், அவனருளால் அது நிறைவேறியது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அரண்மனை போன்ற அந்த வீட்டின் பங்குதாரர்களில் ஒருவனும், கருப்பஞ் செட்டியாரின் மூத்த தம்பி அழகப்பனின் மகனுமான தேனப்பன், ஒரு வேலையாக ஊருக்கு வந்தவன், தங்கள் வீட்டுத் தோட்டத்தைப் பார்த்து அசந்துவிட்டான்.
அவனால் நம்ப முடியவில்லை. அப்படியொரு மாற்றம்.
ஒரு கருவேல மரம்கூட இல்லை. தோட்டத்தின் மொத்தப்
பரப்பளவான 67 சென்ட் இடமும், கார் தொழிற்சாலைகளில் இருப்பது
போல கான்ங்க்ரீட் சிமெண்ட் தளம் போடப்பெற்றுப் பளபளத்துக் கோண்டிருந்தது. தோட்டத்தைச் சுற்றிலும் ஐந்தடி உயரத்திற்குப் புதிய
சுற்றுச் சுவர்கள் கட்டப்பெற்று, மஞ்சள் வண்ணத்தில் பளபளத்துக் கொண்டிருந்தன. வீட்டை ஒட்டி தோட்டத்தின் நுழைவாயிலில்,
பதினைந்தடி அகலத்தில் புதிய ‘கேட்’. அத்துடன் அதில் ஒரு சிறிய
திறப்புக் கதவு (wicket gate) குடியிருப்பவர்களின் உபயோகத்திற்காக. அசத்தலாக தெரு விளக்கு உயரத்திற்கு தோட்டத்தில் ஆறு இடங்களில்
மின்விளக்குக் கம்பங்களும் இருந்தன.
வாசலில் நின்று கொண்டிருந்த காளியம்மாதான் கேட்டைத் திறந்து விட்டாள். கேட்டிலிருந்து கார் உள்ளே செல்வதற்கான தடம் நெடுஞ்சாலை களில் இருப்பதுபோல, மஞ்சள் மற்றும் வெள்ளைக் கோடுகளால் குறியிடப்பெற்றிருந்தது. அத்துடன் வீட்டுச் சுவரை ஒட்டி ஆறு கார்கள் நிறுத்தும் அளவிற்கு லைட் ரூஃபிங் வேயப்பெற்ற கார்களை நிறுத்துமிடமும் புதிதாக இருந்தது. அதை ஒட்டியிருந்த மூன்று குடியிருப்புக்களும் மராமத்து செய்யப்பெற்றுப் பளபளத்துக் கொண்டிருந்தன.
காரைவிட்டு இறங்கியவன், காளியம்மாவிடம், “என்ன நடந்தது? ஏன் இப்படியொரு அதிசய மாற்றம்? என்பதைக் கண்களாலேயே கேட்டான்.
“நெறைய ஆளுங்களை வைத்துக் காண்ட்ராக்டர் சண்முகம் செட்டியார்தான்ணே இந்த வேலைகளை எல்லாம் செஞ்சாரு. மேல் விவரமெல்லாம் எங்ககிட்ட அவர் எதுவும் சொல்லலையன்ணே!”
நெஞ்சு குறுகுறுத்தது. முதலில் இதைத் தெரிந்து கொள்ள
வேண்டும். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழரை. எட்டு மணிக்கெல்லாம் சண்முகம் செட்டியார் காரைக்குடி அல்லது
மதுரைக்குக் கிளம்பி விடுவார். இரண்டு ஊர்களிலும் அவருக்குக்
கட்டுமானப் பணிகள் உள்ளன. அதற்குள் அவரைப் பார்க்க வேண்டும்.
விருட்டென்று மீண்டும் காருக்குள் ஏறியவன், சிவன்கோவில் ஊருணிக்கரையில் இருந்த அவருடைய வீட்டை அடைந்தான். அந்தக் காலத்தில் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர் அவர். நெருங்கிய நண்பர்.
முதலில் சாதாரணமாகத் தன் பேச்சைத் துவங்கியவன், பிறகு தங்கள்
வீட்டு விஷயத்தைச் சொல்லிக் கேட்டவுடன், புன்னகையுடன் அவர்
பதில் சொன்னார்.
“ஒரு புண்ணியவான் பணம் கொடுத்தான்டா. எனக்கு முழு சுதந்திரமும் கொடுத்து செய்யச் சொன்னான்டா. செஞ்சேன். யாரு? எவருன்னு கேட்காதே? பணம் கொடுத்தவன், பேரைச் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கான்”
“ஒகோ” என்று சொன்ன தேனப்பன், பதிலை வரவழைக்கும் விதமாக, கேள்வியை மாற்றிப் போட்டுக் கேட்டான்.
“எவனோ சொன்னான்கிறதுக்காக நீ எப்படிச் செய்யலாம்? வீட்டுக்கு உடையவங்க நாங்க இருக்கிறோம். எங்க கிட்ட நீ பெர்மிசன் வாங்க வேண்டாமா?”
“ஆகா, உங்க வீட்டு இடக்கு, வில்லங்கம் எல்லாம் எனக்குத் தெரியாதா என்ன? பர்மிசன் வாங்கிகிட்டுத்தான் செஞ்சேன் அப்பச்சி”
“யாருகிட்டே?”
“உங்க பெரியப்பச்சிகிட்ட! அதான் உங்க வீட்டுக்கு மூத்தவர் கானரூனா கிட்ட. அவருகிட்ட பர்மிசன் வாங்கினா போதுமில்ல! அவர் தெளிவா சொன்னாரு. சண்முகம், நாம வீட்டுக்குள்ள கையை வச்சாத்தான் எல்லோருகிட்டேயும் பர்மிசன் வாங்கணும். வீட்டுக்கு வெளியே பொது இடத்தில, அதுவும் காலியிடத்தில திருப்பணி செய்றதுக்கு யாருகிட்டேயும் பர்மிசன் வாங்க வேண்டாம். நீ செஞ்சுமுடி. மத்ததை நான் பார்த்துக்கிறேன் னார்”
தேனப்பனுக்கு அந்தக் கூற்று நியாயமாகப் பட்டது. இருந்தாலும் தெரிந்துகொள்ள வேண்டியதைத் தெரிந்து கொள்ளாமல் போகக்கூடாது என்பதற்காக, தேனப்பன், அவரை நச்சரித்து, அதற்கும் மேலாகக் கெஞ்சிக் கூத்தாடி, நடந்ததைத் தெரிந்துகொண்டான்.
கதையின் நீளம் கருதி அதைச் சுருக்கிக் கொடுத்துள்ளேன்.
வீட்டுப் பெரியவர் கருப்பஞ்செட்டியாரின் பேரன் மெய்யப்பன்,
இரண்டரைமாதங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து சென்னையில் இருக்கும் தன் பெற்றோர்களைப் பார்க்க வந்திருந்தவன், அய்யாவையும் பார்க்க ஊருக்கு வந்தானாம். வந்த இடத்தில் நடந்தவற்றை எல்லாம் கேள்விப்பட்டதோடு தோட்டைத்தையும் பார்த்து வருந்தினானாம். தோட்டத்தைச் செம்மைப் படுத்தி, பாம்புத்தொல்லையில் இருந்து
விடுபட, காண்ட்ராக்டர் சண்முகம் செட்டியாரை, அழைத்து வந்து பேசினானாம். அவன் எண்ணப்படி எல்லாவற்றையும் செய்து முடிக்க உத்தேசமாக பதினைந்து லட்ச ரூபாய் செலவாகும் என்றவுடன்,
சற்றும் யோசிக்காமல், முகம் சுளிக்காமல் பதினைந்து லட்ச
ரூபாய்க்குக் காசோலை ஒன்றை எழுதிக் கொடுத்து, உடனே செய்து
விடுங்கள் என்றானாம்.
“ஏனப்பா, நீ ஒருவனாக இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கலாமா?” என்று கேட்டதற்கு, இப்படி அழுத்தம் திருத்தமாக அவன் பதில் சொன்னானாம்:
“அண்ணே பணத்தின் மதிப்பு அதைச் சேர்த்து வைப்பதில் இல்லை.
நல்ல விதத்தில் அதைச் செலவழிப்பதில்தான் இருக்கிறது. இங்கே உள்ளவர்கள் யாருக்கும் உயிரின் மதிப்புத் தெரியவில்லை. எனக்குத்
தெரியும். ஒரு வருடத்திற்கு முன்பு, என் குழந்தை ஒன்றைப் பறி
கொடுத்தேன். நீச்சல் குளத்தில் தவறி விழுந்து என் குழந்தைகள்
இரண்டில் ஒன்று இறந்து விட்டது. துக்கத்தில் ஒருவாரம் நான் தூங்க
வில்லை. இங்கே இத்தனை பாம்புகள் இழைகின்றன. கடித்து ஒருவர்
இறந்து போனால் என்ன ஆகும்? இந்தக் கிராமத்தில் உடனடி
சிகிச்சைக்கும் வழியில்லை. போகிற உயிர் சின்ன உயிராக
இருந்தால் என்ன? பெரிய உயிராக இருந்தால் என்ன? தோட்டத்தில் குடியிருப்பவன் அல்லது வீட்டிற்குள் வந்து போகிறவன் என்கிற
பேதம் உயிர்களுக்கு இல்லை. உயிர் உயிர்தான். ஆகவே நீங்கள்
செய்யுங்கள். பணம் பற்ற வில்லை என்றால் எனக்குத் தகவல்
சொல்லுங்கள். மேலும் தேவையான பணத்தை அனுப்பிவைக்கிறேன்”
அவன் வார்த்தைகளில் மயங்கிப்போன சண்முகம் செட்டியார்,
தனக்குரிய சர்வீஸ் தொகையைக் கூட எடுத்துக்கொள்ளாமல், முழு
மனதுடன் அவன் கொடுத்த பணத்திற்குள்ளேயே, அதைச் சேவையாகச்
செய்து முடித்தாரம்.
தேனப்பனுக்குக் கண்கள் பனித்துவிட்டன. எழுந்து தன் நண்பனிடம்
விடை பெற்றவன், முத்தாய்ப்பாக இப்படிச் சொல்லிவிட்டுச் சென்றான்.
“எங்கள் வீட்டிற்குள்ளும் சில கருவேல மரங்கள் இருக்கின்றன. கூடவே ஒரு சந்தன மரமும் இருக்கிறது! அதுதான் நாங்கள் செய்த பாக்கியம்”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏபரல்’ 2011 மாத இதழில் வெளிவந்து, பலரது பாராட்டையும் பெற்ற சிறுகதை. நீங்களும் படித்து மகிழ உங்களுக்காகக் கொடுத்துள்ளேன். கதை எப்படி இருக்கிறது சாமிகளா?
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்

தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
4.5.11
2.5.11
Astrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது
---------------------------------------------------------------
Astrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது
Seniority & Priority எல்லாம் இங்கே செல்லாது. முன்னுரிமை, முக்கியத்துவம் என்ற வாதம் எல்லாம் இங்கே எடுபடாது
Seniority (மூப்புரிமை)
1. The state of being older than another or others or higher in rank than another or others.
2. Precedence of position, especially precedence over others of the same rank by reason of a longer span of service.
Priority (முன்னுரிமை)
1. Precedence, especially established by order of importance or urgency.
2. a. An established right to precedence.b. An authoritative rating that establishes such precedence.
3. A preceding or coming earlier in time.
4. Something afforded or deserving prior attention.
மூத்தவன், இளையவன் என்ற பாகுபாடு எல்லாம் இங்கே கிடையாது. நான் பெரியவன், இவன் சின்னவன் என்ற வேறுபாடும் இங்கே கிடையாது. நான் ஸீனியர். நீண்ட நாட்கள் அனுபவம் மிக்கவன். இவன் எனக்குப் பிறகு வந்தவன். ஜீனியர்.ஆகவே எனக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இடமில்லை. சுருக்கமாகச் சொன்னால் உங்கள் நிலைப்பாடுகள், வாதங்கள் எதுவுமே இங்கே செல்லாது.
எங்கே?
அதாவது ஸீனியாரிட்டிக்கும், பீரியாரிட்டிக்கும் மதிப்பே இல்லாத இடம் எது?
காலதேவனின் மேற்பார்வையில் இருக்கும் மரண அமைச்சகம்தான் அது (Ministry of death)
நேரம் முடியும்போது சொல்லாமல் கொள்ளாமல் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள், அவனுடைய தூதர்கள்
“காலா, வாடா! உன்னைக் காலால் மிதிக்கிறேன்” என்று ஒரு மாபெரும் கவிஞன் சொன்னான். அவனையும் காலதேவன் விட்டு வைக்கவில்லை. 39 வயது முடிவதற்குள்ளாகவே அவரைத் தூக்கிக்கொண்டு போய்விட்டான்
“காலன் ஒரு படிப்பறிவில்லாதவன். கண்ணதாசன் என்ற அரிய புத்தகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டான்” என்றார் கவிஞர் வாலி. ஆதங்கத்திலும், துக்கத்திலும் நாம் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளலாம்.
Meeting is always a pleasure
Parting is always painful
மரணத்தைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:
1. மரணம் அனைவருக்கும் பொதுவானது (Death is commom to all)
2. மரணம் தவிக்கமுடியாததது (inevitable, Impossible to avoid or prevent)
3. ஒவ்வொருநாளும் நாம் மரணத்தை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம் (walking towards death)
சாதாரண மனிதனுக்கு இதெல்லாம் தெரியாது. தான் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் வாழப்போவதாக நம்பிக்கொண்டிருப்பான்.
ஊரை அடித்து உலையில் போட்டுப் பணத்தைச் சேர்த்துக்கொண்டிருப்பான்.
கேட்டால் பணம், மரணத்திற்கான பாதுகாப்புத் தொகை என்பான். Money is the security against death என்பான். அதாவது பணம் இருந்தால் வயதான காலத்தில் அது தன்னைக் காப்பாற்றும் என்பான். நோய்வாய்ப் பட்டுப் படுத்தால், ஒரு நல்ல மருத்துவமனையில் சிகிச்சைபெற பணம் தேவைப்படும் என்பான்.
மரணம் எப்போது வரும், எப்படி வரும் என்ற சிந்தனை இல்லாததால் அல்லது அறியாமையால் அப்படிச் சொல்வான்.
மரணம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்போது வேண்டுமென்றாலும் வரும்.
பலரை இரவு தூக்கத்திலேயே மரணம் சுருட்டிக்கொண்டு போயிருக்கிறது. விபத்தில் ஒரு நொடியில் மரணத்தைச் சந்தித்தவனும் உண்டு. பல ஆண்டுகள் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்பட்டு, பலரை அவஸ்தைக்கு உள்ளாக்கி இறந்தவனும் உண்டு.
மரணம் நமக்குத் தெரியாமல் வர வேண்டும். உயிர் நாம் அறியாமல் போக வேண்டும். அதுதான் உன்னத மரணம்.
அதற்கு வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
நம் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரியுமா?
தெரியும்.
அதைப் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று நாளை வெளிவரும். இங்கேயல்ல! வகுப்பறையின் தனி இணைய தளத்தில் அது வரும். இங்கே வந்தால், வகுப்பறையின் சுற்றுச் சுவர்களில் குந்திக் கொண்டிருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய் விடுவார்கள். திருட்டுப்போகக்கூடாது என்பதற்காக 4 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பெற்றது தனி இணைய தளம். பயனர் பெயர் (User Name), கடவுச் சொல்லுடன் (Password) கூடியது அந்த இணைய தளம் அதில் பல பாடங்கள் இது வரை வந்துள்ளன! இதுவும் அங்கே தான் வரும்
மேல் நிலைப் பாடங்கள், அலசல் பாடங்கள், அஷ்டகவர்க்கப் பாடங்கள், ஜாதக நுட்பங்கள் என்று கலக்கலாக எழுதும் பாடங்கள் அனைத்தும் அதில் மட்டுமே வரும்.
அதில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், படிக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள், பின்னால் அவைகள் அனைத்தும் புத்தக வடிவாக வரும்போது படித்துக்கொள்ளலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

லேபிள்கள்:
Astrology,
classroom,
Lessons 431 - 440
1.5.11
குடும்ப அரசியல்
--------------------------------------------------------------------------
குடும்ப அரசியல்
========================================
எழுதியவர் மிஸ்டர் முக்காலம்
ஞாயிறு மலர்
தலைப்பை பார்த்து நீங்கள் ஏதாவது கற்பனை செய்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. கட்டுரையாளர் கொடுத்திருந்த தலைப்பு வேறு. அதை நான் சற்று மாற்றியிருக்கிறேன். அவ்வளவுதான். சரத் பாவரில் துவங்கி இன்று பல்வேறு மாநிலங்களிலும் நடக்கும் குடும்ப அரசியலால் இந்தத் தலைப்பு மிகவும் பிரசித்தம். அதனால் உங்களை இழுக்கும் முகமாக இந்தத் தலைப்பை வைத்தேன். இதுதான் கொக்கித் தலைப்பு என்பது
”தலைப்பை நன்றாகப் போடு
தானே வருவார்கள்”
என்பதுதான் வகுப்பறையின் முதல் மந்திரம். என்ன சரிதானா?
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
29 ஏப்ரல் 2011 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் மஹாத்மா காந்திஜியின் இரு பிள்ளைகளைப் பற்றிய குறிப்பு வந்துள்ளது. புதிய தலைமுறைக்கு காந்திஜியின் பிள்ளைகளைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மஹாத்மாஜி தன் பிள்ளைகளில் மூத்தவரைத் தவிர மற்றவர்களைச் சமூகப் போராளிகளாகவே ஆக்கிவிட்டார். ஆம்!பதவிக்க்காகப் போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகளாக அல்ல!உண்மையான சமூக மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய மனோ வலிமையும்,போராட்ட குணமும் உடைய சமூகப் போராளிகளாக உருவாக்கினார் காந்திஜி, தன் நான்கு மகன்களில் மூவரை ! ஒருவர் மட்டும்,மூத்தவர், வேலி தாண்டிய வெள்ளாடாக இருந்தார்.
அந்த நான்கு பேரைப் பற்றி சிறு குறிப்புத் தரப்பட்டுள்ளது
காந்திஜிக்கு நான்கு புதல்வர்கள்
1.ஹரிலால் காந்தி (1888=1948)
2.மணிலால் காந்தி (1892=1956)
3.ராம்தாஸ் காந்தி (1897=1969)
4.தேவதாஸ் காந்தி (1900=1957)
இதில் மூத்தவர் ஹரிலால் சிறுவயதில் இந்தியாவில் காந்திஜியின் சகோதரர் பொறுப்பில் விடப் பட்டார். தந்தையுடன் அவர் வாழத் துவங்கியது தன் 18 வயது முதலே. தன் 18 வயதில் தென் ஆப்பிரிக்காவில் காந்திஜியின் பீனிக்ஸ் ஆசிரமத்தில் சேரும் போது, அந்த ஆஸ்ரம வாழ்க்கைக்கு ஏற்ற மனோ நிலையில் அவர் இல்லை.ஏற்கனவே பல கெட்ட சஹவாசங்களினால் உடலும் மனமும் கெட்டுத்தான் வந்து சேர்ந்திருந்தார்.
அவரைத் திருத்த காந்திஜி மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தன, தன் கை மீறிப் போய்விட்ட நிலையில் அவரைத் தன் மகன் அல்ல என்று காந்திஜி சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அரசியலுக்காக் முஸ்லிம் லீக் ஹரிலாலை அப்துல்லா காந்தியாக மது வாங்கிக் கொடுத்து மத மாற்றம் செய்தது. முஸ்லிம் லீக் மேடைகளில் மதுவின் போதையில் மஹாத்மாவை இழிவாகப் பலமுறை ஹரிலால் பேசியது உண்டு. ஆனால் கராச்சியில் ஹரிலாலை வைத்துக்கொண்டு காந்திஜியை இழிவாகப் பேசிய முல்லாவை "என் தந்தயையா அவமதிக்கிறாய்?" என்று மேடையிலேயே செருப்பால் அடித்தவரும் ஹரிலால் தான்.
காந்திஜி முயற்சி செய்து தன்னிடமிருந்த வேண்டாத குணஙளை விரட்டினார், அவைகள் எல்லாம் ஒரு பூதம் போல் திரண்டு ஹரிலாலிடம் உட்புகுந்து கொண்டது. '.காந்திஜி பிள்ளைப் பாசத்தைத் துறக்கிறாரா என்று பார்க்க ஆண்டவன் வைத்த சோதனையே ஹரிலால். காந்திஜி மறைந்த 8 மாதங்களில் ஒரு முனிசிபல் மருத்துவமனையில் பிச்சைக்காரனாக இறந்தார் ஹரிலால்.
அடுத்தவர் ம்ணிலால் காந்தி பின்னால் வந்த இருவரைப் போலவே காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் இருந்த போது பிறந்து காந்திஜியின் நேரடிப் பராமரிப்பில் வளர்ந்தவர். காந்திஜியின் எல்லாச் செயல்களிலும் தன் சிறு வயது முதலே நேரடித் தொடர்பும், ஆர்வமும் கொண்டவராக விளங்கினார்.காந்தீய வழியில் அக்கால ஆங்கிலப் பள்ளியில் கல்விக்குச் செல்லாமல் தந்தையிடமே கல்வி பயின்றார். தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி சிறையில் அடைக்கப்பட்ட போது 12 வயது சிறுவனான் மணிலால் ஆஸ்ரம நிர்வாகப் பொறுப்பை திறம்பட ஏற்று நடத்தினார்.ஆஸ்ரம வாசிகளின் உணவுக்காக முள்ளங்கியைத் தலையில் ஏந்திச் சென்று விற்றுக் காசாக்கி பசிப்பிணி போக்கினார். உடல் நலம் குன்றிய தாயைப் பேணிக் காத்தார்.
காந்திஜி இந்தியாதிரும்பிய பின்னர் 24 வயதில் மணிலால் மீண்டும் தென் ஆப்பிரிக்கா அனுப்பப்பட்டார்.அங்கே நிறவெறிக் கொள்கையை எதிர்த்து காந்தீய வழியில் தொடர்ந்து 30 ஆண்டுகள் போராடினார். நெல்சன் மண்டேலாவுக்கு காந்தீய வழிமுறைகளை எடுத்துச்சொன்னவர் மணிலாலே. அதே போல வன்முறையைக் கைவிட்டு அற ப்போராடத்திற்குத் திரும்பிய அல்பெர்ட் லுதுலி அமைத்திக்கான நோபல் பரிசு பெறப் பின்னனியில் இருந்தவர் மணிலாலே.
ஆப்பிரிக்க இந்தியர்களை மணிலாலிடமிருந்து பிரித்து அரசியல் செய்தது தென்னாப்பிரிக்க நிறவெறி அரசு. மனம் தளராமல் ஆப்பிரிக்க இந்தியர்களையும்.கறுப்பின மக்களையும் ஒன்றிணைத்து நிறவெறிக்கு எதிராகப் போராடினார்.நெல்சன் மண்டெலா 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தார்.மணிலால் காந்தி ஆப்பிரிக்கச் சிறையில் 14 ஆண்டுகள் இருந்துள்ளார்.25 முறைகளுக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய சுதந்திரப்போராட்டத்தில் உப்பு சத்தியாகிரஹத்தில் மண்டை உடைந்து சிகிச்சைப்பெற்றுள்ளார்.
மூன்றாவதான ராமதாஸ் காந்திஜியின் எல்லாப் போராட்டங்களிலும் கூடவே இருந்துள்ளார்.பல சமயம் காந்திஜியின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். ஆன்மீக நாட்டம் அதிகம் உடையவர்.காந்திஜியின் வழிமுறைகளை அவரிடமே விவாதம் செய்து அவற்றிற்கு ஒரு பொது உருவம் கிடைக்கப் பின்னணியில் இருந்து பாடுபட்டவர். காந்திஜியின் கருத்துக்களிலிருந்து மாறுபட்டார் என்று சொல்லும் அளவு காந்தீயக் கொள்கையில் அலசி ஆராய்ந்தார்.வார்தா ஆஸ்ரமத்தை வழிநடத்தி கிராமப்பணி செய்து 1969ல் மறைந்தார்.
தேவதாஸ் காந்திஜியின் நான்காவது மகன். எல்லாவகையிலும் காந்திஜியின் வாரிசு.அமைதியின் இருப்பிடம். ராஜாஜியின் மகளைக் காதலித்து மணந்தார்.காந்தியின் எல்லா போராட்டஙளிலும் பங்கு கொண்டார். காந்திஜிக்குப் பக்க பலமாக இருந்தார்.ஹிந்துஸ்தான் டயிம்ஸ் பத்திரிகையில் ஆசிரியராக தன் மறைவு 1957 வரை இருந்தார்.
ஆக்கம்:
திருவாளர் “முக்காலம்”
(எழுதியவர் புனைப்பெயரை மட்டும் கொடுத்துள்ளார் உண்மைப் பெயரையும், ஊரையும் சொல்லவில்லை)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
இதுதான்டா பின்னூட்டம்
12 வயதுச் சிறுவன் ஒருவன் மகாராஜாவாகப் பட்டம் சூட்டப்பெற்றிருக்கிறான்.
யாஹீ செய்தி வலையில் முழுவிவரம் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது.
சிறுவனின் படம் கீழே உள்ளது.
முகத்தில் என்னவொரு அப்பாவித்தனம்?
இளம் மகாராஜாவை நிறையப் பேர்கள் வாழ்த்திப் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். நீங்களும் வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள். முக்கியமாக அந்தத் தளத்தில் வந்த வாழ்த்துக்களில் ஒன்று அசத்தலாக இருந்தது. அதையும் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜெய்ப்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு
பத்வி ஏற்றுக்கொண்ட
மகாராஜாவின் எழில்மிகு தோற்றம்
அடுத்து உள்ளது அசத்தலாக வந்த அந்தப் பின்னூட்டம்
வாழ்க வளமுடன்!
Subscribe to:
Posts (Atom)