Astrology: விபரீத ராஜயோகம்
(Reversal of Fortune)
அதென்ன ஸ்வாமி விபரீதம்?
விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்
நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால்
அதை விபரீதம் என்போம். அதைப்போல கிடைக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக்
கிடைத்து விட்டால் அது விபரீத ராஜயோகம்!
அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?
விபரீத ராஜயோகம் என்பது வழக்கமான ராஜயோகங்களில் இருந்து மாறுபட்டது.
எப்படி மாறுபட்டது?
அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்ணை நீங்கள் தேர்வு செய்து, கெஞ்சிக்கூத்தாடி,சம்மதிக்க வைத்து, நீங்கள் திருமணம் செய்து கொண்டால், அது வழக்கமான ராஜ யோகம்
ஆனால், அதே அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்கள், அவர்களாகவே முன்வந்து, உங்களிடம் கெஞ்சிக்கூத்தாடி, மன்றாடி, உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அது விபரீத ராஜயோகம்
இன்னும் விளக்கமாகச் சொன்னால், பிரிட்டீஷ் அரச குடும்பத்தினரே முன் வந்து அவர்கள் வீட்டுப் பெண்ணை,உங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதாகச் சொன்னால், அது விபரீத ராஜ யோகம்.
உதாரணங்கள் போதுமா?
மிதுன லக்கின ஜாதகத்தின் 12ஆம் வீட்டில் சுக்கிரனும், சனியும் ஒன்றாக இருக்கிறார்கள்
என்று வைத்துக் கொள்ளுங்கள். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து, உரிய நேரத்தில்
திருமணமாவதும் தடைபட்டு, விரும்பும் அளவிற்கு ஒரு மங்கை நல்லாளும் ஜாதகனுக்குக்
கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளூங்கள். அப்படிப்பட்ட நேரத்தில், ஜாதகனின்
எட்டாம் வீட்டு அதிபதி சனி 12ல் இருப்பதால் (ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி இன்னொரு
துஷ்ட ஸ்தானத்தில் அமர்வது) அவர் சுக்கிரனின் பென்டை நிமிர்த்தி, ஜாதகனின் திருமணத்தை
உரிய நேரத்தில் நடத்தி வைப்பதுடன், மயக்கும் அழகுள்ள மங்கையையும் அவனுக்குப் பிடித்துக்
கொடுத்து விடுவார்.அதுதான் விபரீத ராஜயோகம்
பெண்ணை உதாரணமாகச் சொன்னால்தான் சிலருக்கு மண்டையில் சுறுசுறுப்பாக ஏறும் என்பதற்காக இதைச் சொன்னேன்.
பணம், வேலை, பதவி, செல்வாக்கு என்று எதற்கு வேண்டுமென்றாலும் இந்த யோகம் ஒத்துவரும். அது அங்கே போய் அமரும் துஷ்டனையும், அவன் அடித்து வீழ்த்தும் சம்பந்தப்பட்ட அதிபதி அல்லது காரகனையும் பொறுத்து உண்டாகும்.
ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com