Astrology : குரு ஜாதகத்தில் எங்கே இருக்க வேண்டும்
?
குரு 1, 5, 9 ஆம் விடுகளில் இருந்தால் உத்தமம்.
லக்கினத்தில் குரு இருந்தால் அதி
உத்தமம். ஜாதகன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
Yes, the
native of the horoscope is a blessed person. அவனுக்கு ஜாதகத்தைப் பார்த்துப்
பலன் சொல்ல வேண்டாம். ஜாதகத்தைத்
திருப்பிக் கொடுத்துவிடலாம். நல்லதும்
கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை.
அவனுடைய வாழ்வில் அது இரண்டும் இருக்கும்.
அந்த இரண்டு சூழ்நிலைகளிலும், குரு அவனுக்குக் கை கொடுப்பார்.
நல்லதிற்குக் கை கொடுக்க யாரும்
வேண்டியதில்லை. ஆனால் கெட்ட சூழ்நிலையில்
நமக்குக் கை கொடுக்க ஒருவராவது
வேண்டும். அந்த ஒருவராகக் குரு பகவானே
வந்து நிற்பார் எனும்போது வேறு என்ன வேண்டும்?
வந்து நிற்பார் என்றால் என்ன பொருள்?
The native is self equipped to stand in any situation!
அது முக்கியம்.
அதேபோல 7ல் குரு இருந்தாலும் நல்ல பலன். இரண்டு
விதமான பலன். அவர்
லக்கினத்தைத் தன் கண்பார்வையில்
வைத்திருப்பதோடு, ஜாதகனுக்கு
அல்லது
ஜாதகிக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுப்பார்.
”நீ பாதி; நான் பாதி கண்ணே” என்று ஜாதகன் பாடிக் கொண்டிருப்பான்
(திருமணத்திற்குப் பிறகுதான்)
அதேபோல 5ஆம், வீடு அல்லது 9ஆம் வீடுகளில் குரு இருந்தாலும்
சிறப்புத்தான்.
5ல் இருந்து தனது விஷேச பார்வையான 9ஆம் பார்வையாக லக்கினத்தை அவர்
தன் கண்ணில் வைத்திருப்பார். 9ஆம் வீட்டில் இருந்தாலும், தனது 5ஆம்
பார்வையால், அவர் லக்கினத்தைத் தன் கண்ணில் வைத்திருப்பார்.
9ல் குரு இருந்தால் ஜாதகனுக்கு நல்ல
தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள்
கிடைக்கும். 5ல் குரு இருந்தால் ஜாதகன் அறிவு
ஜீவியாக இருப்பான்.
(Guru is
the authority for keen intelligence).
கல்வி நான்காம் வீடு; அறிவு ஐந்தாம் வீடு. அதனால்தான் படித்த முட்டாளூம்
இருக்கிறான். படிக்காத மேதையும்
இருக்கிறான்.
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com