Short Cut Astrology – Part 8
குறுக்கு வழி ஜோதிடம் - பகுதி 8
அடுத்த பாடம் ராசிகளுக்கும் நட்சத்திரங்களும் உள்ள தொடர்பைப் பற்றியது
நட்சட்திரங்கள் 4 பாகங்களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது.
27 நட்சத்திரங்கள் பெருக்கல் 4 பாகங்கள் என்ன வரும்?
பெருக்கிக் பாருங்கள் 108 என்ற எண் வரும்.
108 வகுத்தல் 12 ராசிகள் = 9 என்ற எண்ணிக்கை வரும்
அந்த 9 தான் ஒவ்வொரு ராசிக்கும் உரியது
அதாவது ஒரு ராசிக்கு 2.25 நட்சத்திரம்
ராசிகளுக்கு உரிய நட்சத்திரங்கள்
12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு உண்டு;
ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2.25 நட்சத்திரங்கள் அடங்குவதைச்
சொல்லியுள்ளேன்.,
உதாரணமாக, மேஷ ராசியில் அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் வரை வரும்;
ரிஷபத்தில் கார்த்திகை இரண்டாம் பாதம்
முதல் மிருகசீர்ஷம் இரண்டாம் பாதம் வரை வரும்;
சிம்மத்தில் மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை வரும்;
கன்னி ராசியில் உத்திரம் இரண்டாம்
பாதம் முதல் சித்திரை இரண்டாம் பாதம் வரை வரும்.
இப்போது முழுமையான விபரத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
ராசிகளும் அதனுடன் தொடர்புடைய நட்சத்திரங்களும்
(முழுமையான பட்டியல்):
மேஷம்: அசுவினி, பரணி, கார்த்திகை (1 ஆம் பாதம்)
ரிஷபம்: கார்த்திகை (2 ஆம் பாதம்), ரோகிணி, மிருகசீர்ஷம் (2 ஆம் பாதம்)
மிதுனம்: மிருகசீர்ஷம் (3 ஆம் பாதம்), திருவாதிரை, புனர்பூசம் (2 ஆம் பாதம்)
கடகம்: புனர்பூசம் (3 ஆம் பாதம்), பூசம், ஆயில்யம்
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் (1 ஆம் பாதம்)
கன்னி: உத்திரம் (2 ஆம் பாதம்), அஸ்தம், சித்திரை (2 ஆம் பாதம்)
துலாம்: சித்திரை (3 ஆம் பாதம்), சுவாதி, விசாகம் (3 ஆம் பாதம்)
விருச்சிகம்: விசாகம் (4 ஆம் பாதம்), அனுஷம், கேட்டை
தனுசு: மூல, பூராடம், உத்திராடம் (1 ஆம் பாதம்)
மகரம்: உத்திராடம் (2 ஆம் பாதம்), திருவோணம், அவிட்டம் (2 ஆம் பாதம்)
கும்பம்: அவிட்டம் (3 ஆம் பாதம்), சதயம், பூரட்டாதி (2 ஆம் பாதம்)
மீனம்: பூரட்டாதி (3 ஆம் பாதம்), உத்திரட்டாதி, ரேவதி
முக்கிய குறிப்பு: ஒவ்வொரு நட்சத்திரத்தின் பாதங்களும் (1/4 பகுதி) ராசிக்குள் பிரிந்து வருவதால்,
ஒரு ராசிக்கு 2.25 நட்சத்திரங்கள் என கணக்கிடப்படுகின்றன
(9 பாதங்கள் / 4 பாதங்கள்).
அதை மனதில் வையுங்கள்.
இதை மனப்பாடம் செய்ய வேண்டாம்.
நன்றாகத் தெரிந்து கொண்டால் போதும்!
அன்புடன்
வாத்தியார்

No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com