Short
Cut Astrology - 5
குறுக்கு வழி ஜோதிடம் - 5
அடுத்த பாடம் நட்சத்திரங்களைப் பற்றியது.
வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தி ஏழு (அசுவினி முதல் ரேவதி வரை)
ஒவ்வொருவரும் ஒரு நட்சத்திரத்தில் பிறக்கிறார்கள், அது அவர்களின் ஜென்ம நட்சத்திரம் ஆகும்
மேலும் அது குணங்கள், பலன்கள், பரிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிப்பதில்
முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த நட்சத்திரங்கள் ராசிகளுடன் இணைந்து, வாழ்க்கைத் துணை, நண்பர்கள், எதிரிகள்
போன்ற உறவுகளைக் கணிக்கவும்
உதவுகின்றன.
27 நட்சத்திரங்களின் விபரம்
அசுவினி, பரணி, கார்த்திகை
ரோகிணி, மிருகசீரிடம்,
திருவாதிரை
புனர்பூசம்,
பூசம், ஆயில்யம்
மகம், பூரம், உத்திரம்,
அஸ்தம், சித்திரை, சுவாதி,
விசாகம் , அனுஷம், கேட்டை ,
மூலம், பூராடம், உத்திராடம்,
திருவோணம், அவிட்டம்,
சதயம்,
பூரட்டாதி , உத்திரட்டாதி, ரேவதி
ஒன்பது ஒன்பதாக 3 பிரிவுகளாகப் பிரித்து மனப்பாடம் செய்யுங்கள்
அதில் ஒரு வசதி இருக்கிறது
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள முதல் நட்சத்திரம் ஒரு கிரகத்திற்கு
சொந்தமானது அடுத்தடுத்து வரும்
நட்சத்திரம் மற்றும் ஒரு கிரகத்திற்கு
சொந்தமானது. தொடர்ந்து அப்படியே
மற்றும் உள்ள கிரகங்களுக்கு சொந்தமாகும்
அசுவினி,மகம்,மூலம் ஆகிய 3 நட்சத்திரங்களும் கேதுவிற்கு உரியது
பரணி,பூரம்,பூராடம், ஆகிய 3 நட்சத்திரங்களும் சுக்கிரனுக்கு
உரியது
கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ஆகிய 3 நட்சத்திரங்களும் சூரியனுக்கு உரியது
ரோகிணி,அஸ்தம்,திருவோணம் ஆகிய 3 நட்சத்திரங்களும் சந்திரனுக்கு உரியது
மிருகசீரிடம், சித்திரை,அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்களும் செவ்வாய்க்கு உரியது
திருவாதிரை, சுவாதி, சதயம்,ஆகிய 3 நட்சத்திரங்களும் ராகுவிற்கு உரியது
புனர்பூசம், விசாகம் ,பூரட்டாதி ஆகிய 3
நட்சத்திரங்களும் குருவிற்கு உரியது
பூசம்,அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 3 நட்சத்திரங்களும் சனீஷ்வரனுக்கு
உரியது
ஆயில்யம்,கேட்டை ,ரேவதி ஆகிய 3 நட்சத்திரங்களும் புதனுக்கு உரியது
இப்படி பிரித்துப் படிப்பதில் என்ன
வசதி என்பதை இப்போது சொல்கிறேன்.
ஒரு நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு, அது எந்த கிரகத்தின் நட்சத்திரமோ
அந்த கிரகத்தின் மகாதிசைதான்
முதல் திசையாக வரும்.
திசைகளைப் பற்றிய செய்திகளை அந்த பாடம்
நடத்தும் போது பார்ப்போம்
பொறுத்திருந்து படியுங்கள்
அன்புடன்
வாத்தியார்

No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com