மீன லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:
எல்லா ஜாதகங்களிலும், 12ல் அமர்ந்திருக்கும் சுக்கிரன் நன்மை செய்யும் என்ற பொது விதி இருந்தாலும், மீன லக்கினத்திற்கு 12ல் சுக்கிரன் அமர்ந்திருந்தால் அது நன்மையளிக்காது.
இந்த லக்கினத்திற்கு சனி 12ல் இருப்பது நன்மையானது. ஆனால் சந்திரன் வந்து 12ல் அமரக்கூடாது. அது ஜாதகனை வறுமையில் தள்ளி விடும். அது குரு திசை சந்திரபுத்தியில் (in Jupiter dasa, Moon sub-period) ஏற்படும்
இந்த லக்கினத்திற்கு கடகத்தில் குரு இருந்தால் ஜாதகனுக்குப் பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும்.
இந்த லக்கினத்திற்கு மேஷராசியில் சந்திரனும், கடக ராசியில் செவ்வாயும் பரிவர்த்தனையாகி அமர்ந்திருக்கும் அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு சந்திர திசை பெரும் செவத்தைக் கொடுக்கும்!
இந்த லக்கினத்திற்கு சந்திரனும், செவ்வாயும் மகரராசியில் அமர்ந்திருக்க, சிம்மத்தில் குரு இருக்க, துலா ராசியில் சுக்கிரன் இருக்க விருச்சிகத்தில் சனி இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்!
சந்திரன், புதன், செவ்வாய் ஆகிய மூவரும் கூட்டாக மகரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்கு செல்வமும், வீடு வாகன வசதிகளும் உண்டாகும்
சந்திரனும், சனியும் ஒன்றாக லக்கினத்தில் இருக்க, செவ்வாய் மகரத்தில் இருக்க சுக்கிரன் சிம்மத்தில் இருக்கும் அமைப்பு, ஜாதகனுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்
இந்த லக்கினத்திற்கு, லக்கினத்தில் புதன், குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய நால்வரும் இருந்தால், அந்த அமைப்பு ஜாதகனுக்கு, பணம், புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அனைத்தையும் கொடுக்கும். அது அந்த கிரகங்களின் தசா புத்திகளில் ஏற்படும்!
இந்த லக்கினத்திற்கு, தனுசு ராசியில் குரு இருந்தால், அது ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்!
ரிஷபத்தில் சந்திரனும், சிம்மத்தில் சூரியனும், கன்னியில் புதனும், துலாமில் சுக்கிரனும், தனுசுவில் குருவும். கும்பத்தில் சனியும், மகரத்தில் செவ்வாயும் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு பெரும் யோகத்தைக் கொடுக்கும். ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். இதில் ஒன்று அல்லது இரண்டு அமைப்பு இல்லையென்றாலும், மற்றவற்றை வைத்து ஜாதகன் செல்வந்தனாக இருப்பான்!
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com