கும்ப லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:
இந்த லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் சேர்ந்திருப்பதால் மட்டுமே ராஜயோகத்தைக் கொடுக்க மாட்டார்கள்
அவர்களுடன் சுபக்கிரகங்கள் சேர்ந்திருந்தாலும் அல்லது பார்வையை வைத்திருந்தால் மட்டுமே அந்த யோகம் கிடைக்கும்
சுக்கிரனும், ராகுவும் லக்கினத்தில் இருப்பதுடன், விருச்சிகத்தில் சூரியனும் இருக்கும் அமைப்பு இருந்தால், ஜாதகனுக்கு ராகு திசையிலும், குரு திசையிலும் பலவிதமான நன்மைகள் கிடைக்கும்
இந்த லக்கினத்திற்கு, கன்னி ராசியில் சூரியனும், செவ்வாயும் இருக்கும் அமைப்பில், அவர்களுடைய திசைகளில் ஜாதகனுக்குப் பல உபத்திரவங்கள், துன்பங்கள் ஏற்படும்
அதே அமைப்பில், புதனுடைய திசை நன்மை செய்யக்கூடியதாக இருக்கும்.
இந்த லக்கினத்திற்கு, குரு லக்கினத்தில் இருப்பதோடு, சனி மீனத்தில் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு குரு திசையில் கலவையான பலன்களையும், சனிதிசையில் சாதாரணமான பலன்களையும் கொடுக்கும்
சனியும், சுக்கிரனும் தனுசு ராசியில் இருந்தால், சுக்கிரதிசை அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்!
இந்த லக்கினத்திற்கு மேஷராசியில் சூரியன், புதன் & சுக்கிரன் ஆகிய மூவரும் கூட்டாக அமர்ந்திந்தால், சூரிய திசை ஜாதகனுக்கு, அதிகாரமுள்ள பதவியைப் பெற்றுத்தரும்!
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com