மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்:
இந்த லக்கினத்திற்கு லக்னத்தில் குரு இருப்பதோடு சுக்கிரனின் பார்வையையும் பெற்றால், அத்துடன் சிம்மத்தில் புதன் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும். ஆனால் வாழ்க்கை வறுமையானதாக இருக்கும்.
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் ரிஷபத்தில் இருப்பது நன்மையானது. அதே சுக்கிரன் துலாமில் இருந்தால் நன்மையளிக்காது.
இந்த லக்கினத்திற்குப் புதனும் சுக்கிரனும் லக்கினத்தில் இருப்பதோடு, ரிஷபத்தில் சந்திரன் உச்சம்பெற்று குரு பார்வையுடன் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு பெரும் யோகத்தைக் கொடுக்கும். ஜாதகன் அரசனைப்போல வாழ்வான்.
குருவும் சுக்கிரனும் லக்கினத்தில் இருக்க, செவ்வாய் விருச்சிகத்தில் இருக்கும் அமைப்பு நன்மையானது. ஜாதகனுக்கு குரு மகாதிசை பெரும் செல்வத்தைக் கொடுக்கும்.
சூரியன், சந்திரன், புதன் ஆகிய மூவரும் லக்கினத்தில் இருப்பதோடு, செவ்வாயும் சுக்கிரனும் தனுசுவில் இருக்கும் அமைப்பு ஜாதகனுக்கு செல்வத்தை வாரி வழங்கும்.
கன்னிராசியில் புதனும் சனியும் இருக்கும் அமைப்பு இந்த லக்கினத்திற்கு அதிர்ஷ்டகரமானது.
இந்த லக்கினத்திற்கு ராகு. குருபகவானுடன் சேர்ந்து தனுசுவில் இருக்கும் அமைப்பில் ராகு யோககாரனாக மாறி தனது தசா புத்திகளில் பல யோகங்களைக் கொடுப்பான்.
இந்த லக்கினத்திற்கு கடகத்தில் சந்திரன் இருப்பதோடு, செவ்வாய் லக்கினத்தில் இருக்கும் அமைப்பு ராஜயோகத்தைக் கொடுக்கும்!
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com