மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.12.24

சிம்ம லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

சிம்ம லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

1
இந்த லக்கினத்திற்கு சூரியன் லக்கினாதிபதி. செவ்வாய் யோககாரகன் (ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு திரிகோண் வீட்டிற்கும் உரியவன்) புதன் 2 & பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன். ஆகவே அவர்கள் மூவரும் ஜாதகத்தில் வலிமையுடன் இருப்பது முக்கியம்.

2
இந்த லக்கினத்திற்கு சூரியனும், புதனும், செவ்வாயும் சேர்ந்திருப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ஜாதகனுக்கு செல்வங்கள் சேரும்.

3
அதே போல் சூரியன், புதன் குரு பகவான் ஆகிய மூவரும்  சேர்ந்திருப்பதும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ஜாதகனுக்கு செல்வங்கள் சேரும்.

4
சூரியனும் புதனும் சேர்ந்திருப்பது ஓரளவிற்கு செல்வத்தைக் கொடுக்கும்

5
இந்த லக்கினத்திற்கு ராஜகுருவும் (குரு) அசுரகுருவும் (சுக்கிரன்) சேர்ந்திருப்பது நன்மையைத் தராது. மேற்கொண்டு இருக்கும் யோகங்களை அழித்து விடும். கிடைக்க வேண்டியது கூட கிடைக்காமல் போய்விடும்!

6
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் பெரிய நன்மைகளைச் செய்ய மாட்டான். ஆனால் துலா ராசியில் இருக்கும் சுக்கிரன் நன்மைகளைச் செய்வான். அதே நேரத்தில் ரிஷப ராசியில் இருக்கும் சுக்கிரன் தீமைகளையே செய்வான்.

7
லக்கினத்தில் சூரியனும், புதனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால், புதன் திசை அல்லது புதன் புத்திகளில் செல்வம் சேரும்!

8
இந்த லக்கினத்திற்குக் கடக ராசியில், சனியும் செவ்வாயும் சேர்ந்திருந்தால், சனி திசை நன்மை உடையதாக இருக்கும்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.12.24

Astrology: கடக லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

கடக லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

1
இந்த லக்கினத்திற்கு புதன் சாதகமானவன். அதாவது பயனுள்ளவன். நன்மைகளைச் செய்யக்கூடியன்

2
ஆனால் அதே நேரத்தில் குரு இந்த லக்கினத்திற்கு எந்த வித யோகத்தையும் தரக்கூடியவன் அல்ல!

3
இந்த லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். பலவிதமான நன்மைகளைச் செய்யக்கூடியவன். அதிலும் செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருந்தால் இன்னும் அதிகமான, பலவிதமான  நன்மைகளைச் செய்யக் கூடியவன்

4
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் சிம்மத்தில் அல்லது மிதுனத்தில் இருந்தால் நன்மைகளைச் செய்வான்.

5
இந்த லக்கினத்திற்கு, செவ்வாய், சந்திரன், மற்றும் குரு ஆகிய மூவரும் சிம்மத்தில் இருந்தால் ஜாதகனுக்கு செல்வங்கள் சேரும். அதிர்ஷ்டகரமானவனாக ஜாதகன் இருப்பான். அதேபோல் சூரியனும், சுக்கிரனும் சேர்ந்து விருச்சிகத்தில் இருந்தாலும் ஜாதகனுக்கு செல்வங்கள் சேரும்.

6
புதனும், சுக்கிரனும் சேர்ந்து விருச்சிகத்தில் இருந்தால், புதன் திசை ஜாதகனுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கும்.

7
இந்த லக்கினத்திற்கு, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய மூவரும் மிதுனத்தில் இருப்பதோடு, கடகத்தில் குரு பகவானும், மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்றும் இருந்தால், அந்த அமைப்பு ஜாதகனுக்கு ராஜ யோகங்களைத் தரும். ஜாதகன் ஒரு அரசனைப் போல வாழ்வான்.

8
இந்த லக்கினத்திற்கு சூரியனும், செவ்வாயும் மேஷத்தில் இருந்தால் ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். 

9
இந்த லக்கினத்திற்கு ஆறாம் இடத்ததிபன் என்ற முறையில் குரு பகவான் தன்னுடைய திசையில் மாரகத்தைச் செய்யக்கூடும்! இது பொதுப்பலன்!

10
இந்த லக்கினத்திற்கு புதனும் சுக்கிரனும் மிதுனத்தில் இருந்தால் சுக்கிரதிசை பல நன்மைகளைச் செய்யும்!

11
இந்த லக்கினத்தைச் சேர்ந்தவர்களுக்கு லக்கினத்தில் குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால், ஜாதகர் புகழ் பெறுவார். அத்துடன் அதிர்ஷ்டமும் அவருக்குத் துணை நிற்கும்

12
இந்த லக்கினத்திற்கு சந்திரன் லக்கினத்தில் இருப்பதோடு, மகரத்தில் செவ்வாய் இருந்தாலும் அல்லது துலாமில் சனி இருந்தாலும் அல்லது மேஷத்தில் சூரியன் இருந்தாலும் அந்த அமைப்பு ஜாதகருக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும்!

13
இந்த லக்கினத்திற்கு, சூரியனும் புதனும் லக்கினத்தில் இருப்பதோடு, துலாமில் சுக்கிரனும், சந்திரன் செவ்வாய் குரு ஆகிய மூவரும் ரிஷபத்தில் இருந்தால் சூரிய திசை மோசமானதாக் இருக்கும். அது ஜாதகனை திவாலாக்கிவிடும். மற்ற கிரகங்களின் திசைகள் நன்மையானதாக இருக்கும்

14
இந்த லக்கினத்திற்கு புதனும் குருவும் ரிஷபத்தில் இருக்க, சனியும் ராகுவும் விருச்சிகத்தில் இருக்க, அமையும் அந்த நிலைகளை உடைய ஜாதகன் பல புண்ணிய நதிகளில் நீராடும் பாக்கியத்தைப் பெறுவான்

அடுத்த பாடம்: சிம்ம லக்கினத்திகு உரிய முக்கிய பலன்கள். அவற்றை எழுதிப் பதிவிட உள்ளேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.12.24

Astrology: மிதுன லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

மிதுன லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்

இந்த லக்கினத்திற்குப் புதன் அதிபதி. ஆகவே இந்த லக்கினக்காரர்கள் அழகான தோற்றத்துடன் இருப்பார்கள். அனைவரையும் கவரும்படியாக இருப்பார்கள். புத்திசாலிகளாக இருப்பார்கள். தாங்கள் நுழையும் துறையில் சிறப்பாகப் பணி செய்து மென்மையான நிலைக்கு உயர்வார்கள். இவை எல்லாம் பொதுப் பலன்.

1
இந்த லக்கினகாரர்களுக்கு லக்கினாதிபதி புதன் சூரிய்னுடன் சேர்ந்து சிம்ம ராசியில் இருக்குமென்றால், ஜாதகனுக்குப் புதன் திசை அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்

2
அதேபோல சுக்கிரன், செவ்வாய் ஆகிய இருவரும் சந்திரனுடன் கூட்டாக கடக ராசியில் இருந்தால், சுக்கிரதிசையில் ஜாதகனுக்கு செல்வம் சேரும். வாழ்க்கை வளமாக இருக்கும்

3
இந்த லக்கினகாரர்களுக்கு செவ்வாய் கடகத்தில் இருக்க, சந்திரனும் சனியும் கூட்டாக மகரத்தில் இருக்கும் அமைப்பு இருந்தால், சனி திசை கலவையாக இருக்கும். அதாவது நன்மையும், தீமையும் கலந்த திசையாக அது இருக்கும்

4
மேற்சொன்ன அதே அமைப்பில், செவ்வாய் தன்னுடைய திசையில் ஜாதகனுக்கு செல்வங்களை வாரி வழங்குவார்

5
இந்த லக்கினகாரர்களுக்கு செவ்வாயும், சனியும் கடகத்தில் இருப்பதோடு, மகரத்தில், சந்திரனும் இருந்தால், ஜாதகரின் கைகாசு மற்றும் சொத்துக்கள் எல்லாம் செவ்வாய் திசையிலும் சனி திசையிலும் கையை விட்டுப் போய்விடும்

6
இந்த லக்கினகாரர்களுக்கு சந்திரன் இரண்டாம் இடத்து அதிபதி என்ற போதிலும் அவன் மாரகத்தைச் செய்ய மாட்டான்!

7
இந்த லக்கினகாரர்களுக்கு சனி கும்பத்தில் இருப்பதோடு, செவ்வாயும் சந்திரனும் கூட்டாக மேஷத்தில் இருந்தால் மிகுந்த தன யோகம் உண்டாகும். அதாவது அதீதமான செல்வம் கிடைக்கும். பண வரவு இருக்கும்.

8
சனியும், குருவும் கும்பத்தில் இருந்தால், ஜாதகருக்குப் பல புண்ணிய நதிகளில் நீராடும் வாய்ப்புக் கிடைக்கும்

9
இந்த லக்கினகாரர்களுக்கு புதன் மேஷத்தில் இருந்தால், மூத்த சகோதரருடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும்

10
இந்த லக்கினக்காரர்கள் இயற்கையாகவே நல்ல தோற்ரத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் இருப்பார்கள்

அடுத்த பாடம்: கடக லக்கினத்திகு உரிய முக்கிய பலன்கள். அவற்றை எழுதிப் பதிவிட உள்ளேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!