Astrology. சன்னியாசி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?
சன்னியாசி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஒன்றும் செய்ய வேண்டாம். ஆசைகளைத் துறந்தால் போதும்! மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளையும் உதறித்தள்ளினால் போதும்! முடிகிற காரியமா அது? கஷ்டம்தான்!!
அமெரிக்காவில் வீடு வாங்கியவன். அந்தக் கடன் முடியுமுன்பாகவே, சென்னை அடையாறிலும் ஒரு வீட்டை, வங்கி உதவியுடன் வாங்குகிறான். கேட்டால் அமெரிக்க வீடு பிளைகளுக்காம். அடையாறு வீடு வயதான காலத்தில் அவன் வந்து தங்குவதற்காம். அத்துடன் கோவை சேலம் நெடுஞ்சாலை வழித்தடத்தில், அவனாசி அருகே பத்து ஏக்கர் நிலத்தையும் வாங்கிப் போடுகிறான். கேட்டால் அது சேமிப்புக் கணக்காம். எதிர்காலத்தில் இட விலை எல்லாம் எகிறும்போது ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பணம் வருமாம். எப்படி இருக்கிறது? இந்த மாதிரி ஆசாமி எல்லாம் சன்னியாசி ஆகவே முடியாது. யாருக்காகச் ச்ம்பாதிக்கிறான், எதற்காகச் சேர்க்கிறான் என்பது அவனுக்கே தெரியாது. வயதான காலத்தில் சனீஷ்வரன் எப்படிப் புரட்டிப் போடுவான், எந்த மருத்துவமனையில் படுத்திருக்க நேரிடும், ஒருவாய்ச் சோறாவது உண்ண முடியுமா? என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.
இதுதான் இன்றையப் பணத் தேடலின் நிலைமை. ஆயிரங்களைத் தேடி அலைபவனும் இருக்கிறான். லட்சங்களைத் தேடி அலைபவனும் இருக்கிறான். கோடிகளைத் தேடி அலைபவனும் இருக்கிறான். ஆனால் அலைபவன் எவனும் நிம்மதியாக இல்லை. அது மட்டும் உண்மை!
பாலியல் பலாக்காரம் பற்றிய செய்திகள் தினமும் வருகின்றன. பெண்ணாசையையும் மனிதர்கள் துறப்பதில்லை.
சன்னியாசம் என்றால் என்ன? அதை முதலில் பார்ப்போம்!
renounce என்ற ஆங்கில வார்த்தைக்கு (to give up) கை விடு என்று தமிழில் பொருள் வரும். renouncer என்றால் எல்லாவற்றையும் விட்டவன் - துறந்தவன் என்ற பொருள்வரும். துறவி என்று வைத்துக்கொள்ளுங்கள். துறவி என்றால், நம்க்குப் புத்தரும், ஆதிசங்கரரும், விவேகானந்தரும், ரமண மகரிஷியும் மனதில் வந்து நிற்பார்கள்.
Sannyasa (Devanagari: संन्यास, saṁnyāsa) is the life stage of the renouncer within the Hindu scheme of āśramas. It is considered the topmost and final stage of the ashram systems and is traditionally taken by men or women over fifty or by young monks who wish to renounce worldly and materialistic pursuits and dedicate their lives to spiritual pursuits. People in this stage of life develop vairāgya, or a state of dispassion and detachment from material life, renouncing worldly thoughts and desires in order to spend the remainder of their lives in spiritual contemplation. A member of the sannyasa order is known as a sannyasin (male) or sannyasini (female).- உபயம் விக்கி மகராஜா!
சன்னியாசி ஆவதற்கான முக்கிய அமைப்பு ஜாதகப்படி என்ன?
நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் வலுவாகப் பத்தாம் வீட்டில் அல்லது ஏதாவது ஒரு கேந்திர வீட்டில் இருந்தால், அந்த அமைப்பு ஜாதகனைத் துறவறத்தில் த்ள்ளிவிடும். நிச்சயம் அவன் துறவறம் பூண்டு விடுவான். உலக ஆசைகளை எல்லாம் கடாசி விட்டு, இறைவன் திருவடிகளைப் போற்ற ஆரம்பித்துவிடுவான். இறைவனின் மேன்மையை அனுதினமும் நினைக்க ஆரம்பித்துவிடுவான். உலக வாழ்க்கை ஒரு மாயை (illusion) என்பதை உணர்ந்துவிடுவான்
அவ்வாறு இருக்கும் கிரகங்களில்
சூரியன் அதிக வலுவுடன் இருந்தால், அத்தைகைய சன்னியாசி, காடுகளில் வசிப்பான்.
சந்திரன் அதிக வலுவுடன் இருந்தால், ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், மரியாதைக்கு உரியவனாகவும் இருப்பான்.
செவ்வாய் அதிக வலுவுடன் இருந்தால், தந்திர, மந்திர சித்து வேலைகளில் நாட்டமுடையவனாக இருப்பான்.
புதன் அதிக வலுவுடன் இருந்தால், அதிகமான சீடர்களுடனும், அதிகமான பேச்சுக்களுடனும் இருப்பான். (He will be a loose talker)
குரு அதிக வலுவுடன் இருந்தால், ஒரு கையில் திருவோட்டுடனும், ஒரு கையில் தண்டத்துடனும் இருப்பான். அவனுக்குப் பல சீடர்கள்/பக்தர்கள், பின்தொடர்பாளர்கள்/ followers இருப்பார்கள்
சுக்கிரன் அதிக வலுவுடன் இருந்தால் தேசாந்திரியாக, ஊர் விட்டு ஊர் சுற்றுபவனாக இருப்பான்.
சனி அதிக வலுவுடன் இருந்தால், உடலில் ஆடை கூட அணியாமல் பக்கிரிபோல திரிவான்
எல்லாவற்றையும் விட முக்கியமாக அந்தக் கூட்டணியில், சூரியன், சனி, செவ்வாய் ஆகிய மூவரும் இருந்தால், அந்த ஜாதகன் மனைவி, மக்களை இழந்தவனாக இருப்பான். அல்லது அவகளால் துன்பமுற்றவனாக/ சோகமுற்றவனாக இருப்பான். அல்லது அவர்கள் இல்லாதவனாக இருப்பான். அதாவது பிரம்மச்சாரியாக இருப்பான். ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்களை வைத்து அந்த நிலை மாறுபடும்.
உங்களில் யாரும் சன்னியாச ஆக வேண்டாம். அதற்காக இதை நான் பதிவிடவில்லை. ஆனால் தேவையில்லாத ஆசைகளை மனதிற்குள் வளர்த்துக்கொண்டு அவற்றை அடையும் நோக்கத்துடன் வாழ்க்கையின் மேன்மையான தருணங்களை இழந்து விடாதீர்கள்.
அன்புடன்
வாத்தியார்
========================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com