Astrology பஞ்சாங்கக் குறிப்புக்களால் என்ன பலன்?
பஞ்சாங்கத்தில், நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்று ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிடப்பெற்றிருக்கும். அவற்றிற்கு
உரிய பொருள் என்ன என்பதைப் பற்றி முன்பே பதிவுகளில் எழுதியுள்ளேன்.
நாளை வைத்துத்தான் என்ன கிழமையில் நீங்கள் பிறந்தீர்கள் என்று தெரியும். நட்சத்திரத்தை வைத்துத்தான் நீங்கள் பிறந்த ராசி தெரியும். திதியை வைத்துத்தான் உங்கள் வீட்டில் உள்ள முன்னோர்கள் இறந்த நாள் தெரியவரும். அமாவாசை, பெளர்ணமி எல்லாம் தெரியவரும்.
அதுபோல யோகமும் முக்கியம். நீங்கள் அன்று செய்யும் செயல்கள் முடியுமா அல்லது ஊற்றிக்கொள்ளுமா? என்று தெரியவரும்.
யோகங்கள், அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் என்று மூன்று வகைப்படும். மரணயோகத்தன்று செய்யும் செயல்கள் திருப்தியாக முடியாது. சில செயல்கள் ஊற்றிக்கொள்வதோடு உங்களை அழைக்கழித்துவிடும்.
எனக்கு தெரிந்த உறவினர் ஒருவருக்கு, மரண யோகத்தன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அன்பர் வீடு திரும்பவில்லை. அவுட். மரணமடைந்துவிட்டார். மேலே சென்று விட்டார்.
மரண யோகத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தீர்கள் என்றால் பணம் திரும்ப வராது. காந்தி கணக்கில் எழுதிக் கதையை முடிக்க வேண்டியதாக இருக்கும்.
திருமண முகூர்த்த நாட்கள் எல்லாம் மரணயோக தினத்தன்று இருக்காது. வேண்டுமென்றால் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
Routine work எனப்படும் அன்றாட வேலைகளைச் செய்வதற்கெல்லாம் யோகத்தைப் பார்க்க வேண்டியதில்லை.
ஆனால் சுபகாரியங்களைச் செய்வதற்கும், சொத்துக்களை வாங்குவதற்கும், பணத்தை முதலீடு செய்வது போன்ற நல்ல காரியங்களைச் செய்வதற்கும் யோகத்தைப் பார்க்க வேண்டும்.
எங்கே பார்க்க முடியும்?
பஞ்சாங்களில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாட்காட்டிகளில் குறிப்பிட்டு இருப்பார்கள்
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com