Astrology முற்பிறவி, கர்மவினை என்றெல்லாம் சொல்லி ஏன் பயமுறுத்துகிறீர்கள்?
”இன்றைய வாழ்க்கையில் ஏன் இத்தனை துயரங்கள், துன்பங்கள், தொல்லைகள் என்றால், ஜாதகப்படி முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே (உரியதாகவே) அடுத்த பிறவி அமையும். ஆகவே முற்பிறவியின் கூட்டுப் பலன் தான் இப்பிறவி என்று சொல்கிறார்கள். ஒரே வார்த்தையில் கர்மவினை என்கிறார்கள். வாத்தியார் என்னடாவென்றால் வாங்கி வந்த வரம் என்கிறார். அப்படி முற்பிறவியில் என்னதான் செய்தேன்? அதைத் தெரிந்து கொள்ள வழி இருக்கிறதா?”
”இருக்கிறது. ஒருவரின் ஜாதகம் அவர் முற்பிறவியில் செய்த நன்மை, தீமைகளைக் கோடிட்டுக் காட்டும்.”
”எப்படி?”
”கிரகங்கள் எல்லாம் வலுவிழந்து இருந்தாலும் அல்லது 3, 6, 8, 12 என்று தீய வீடுகளில் போய் படுத்திருந்தாலும், ஜாதகன் முற்பிறவியில் புண்ணியத்தைவிட பாபங்களையே (பாவங்களையே) அதிகமாகச் செய்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ளலாம். சில கிரகங்கள், குறிப்பாக சுபக் கிரகங்களான, குரு, சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியவை ஜாதகத்தில் வலுவாக இருந்தால் ஜாதகன் முற்பிறவியில் புண்ணியங்களை, தர்மங்களை அதிகமாகச் செய்திருக்கிறான் என்றும் தெரிந்து கொள்ளலாம்.”
”கோடிட்டுக் காட்டாமல், விளக்கமாகச் சொல்ல வழி இல்லையா?”
”இருக்கிறது. அதற்கு பிரசன்ன ஜோதிடம் உங்களுக்கு உதவும்.”
”பிரசன்ன ஜோதிடமா? அது என்ன புதுக் கரடி?
”நடைமுறை ஜோதிடத்தைப்போல, அதுவும் ஜோதிடத்தின் வேறு ஒரு பகுதி. நடைமுறை ஜோதிடத்தில் இருந்து அது முற்றிலும் மாறு பட்டது. பிரசன்ன ஜோதிடம் மிகவும் விரிவானது. பிறகு ஒரு சமயம், நேரம் கிடைக்கும்போது, அதை விரிவாக - தொடராக எழுதலாம் என்றுள்ளேன். என்னிடம் பழைய நூல் ஒன்று உள்ளது. அதைப் படித்தால் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும். ஏராளமான வடமொழிச் சொற்கள்.முதலில் நான் ஒரு வடமொழி தெரிந்த வாத்தியாரை வைத்து அந்தச் சொற்களுக்கெல்லாம் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகுதான் விரிவு படுத்தி எழுத முடியும். என் நடையில் அனைவருக்கும் புரியும்படி எழுத முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்சமயம் நேரமில்லை. ஒரு ஆண்டு பொறுத்துக்கொள்ளுங்கள்.
----------------------------------------------------------------------
Prasanna or Horary Astrology
The Prasanna branch is another unique division of Vedic Astrology. When a person asks a question to an astrologer, based on the time at which the question is asked, a horoscope is made for that time and date. With the help of this chart the astrologer predicts about the events that are going to take place. There are several types of Prasanna systems and it is almost a separate science by itself. Normally the Prasanna chart is studied along with the birth chart to give an additional dimension to predict the results correctly.
Horary Astrology is based on Hora or Hour. Its principles are similar to the principles of Natal Astrology. Some factors which are unknown to Natal Astrology is known to Horary. For instance, a person may not have his time of birth. So he asks the Astrologer questions and these questions are answered by Horary.
Karma = The consequences of our past actions in this and previous lifetimes.
-------------------------------------------------------------------
முற்பிறவி
பிரசன்ன ஜோதிடத்தின் இன்னொரு பிரிவில், முற்பிறவியைக் குறித்து தெரிந்து கொள்ளும் வழி உள்ளது.
பிரசன்ன ஜோதிடத்தில், முற்பிறவியைக் குறித்து கேள்வி கேட்கப்படும் நேரத்தை வைத்து அந்த நிமிடத்திற்கான ஜாதகத்தைக் கணிப்பார்கள். கணிக்கப்பெற்ற ஜாதகத்தில், கீழ்க்கண்டவாறு வீடுகளை எடுத்துக் கொண்டு, ஜாதகனின் முற்பிறவியைச் சொல்வார்கள். முற்பிறவியில் அவன் செய்த சேட்டைகளூம், தேட்டைகளும், போட்ட ஆட்டங்களும், ஆட்டைகளும் தெரியவரும்.
புண்ணிய ஆத்மாக்களின் ஜாதகத்தில் செய்த புண்ணியங்களும் தெரியவரும்!
அவ்வாறு கணிக்கப்பெற்ற முற்பிறவிக்கான பிரசன்ன ஜாதகத்தில் உள்ள 9ஆம் வீடுதான் லக்கினம்:
அதை வைத்து கர்மாவின் சுயரூபத்தைச் சொல்வார்கள் (Karma Swarupa)
10ம் வீடு கர்ம தானம் (karma Dhana)
11ம் வீடு கர்ம சகாயம் (karma Sahaya)
12ம் வீடு கர்ம அதிகரணா (Karma Adhikarana)
1ம் வீடு கர்ம பூதவஸ்து (Karma Bhutha Vasthu)
2ம் வீடு கர்ம நாசகர்னா (Karma Nasa karana)
3ம் வீடு கர்ம சஹசார்யம் (Karma sahachari)
4ம் வீடு கர்மயூஸ் (Karmayus)
5ம் வீடு கர்ம பாக்கியம் (Karma Bhagya)
6ம் வீடு கர்மவியாபாரம் (Karma Vyapara)
7ம் வீடு கர்ம லாபம் (Karma Labha)
8ம் வீடு கர்மவியாயா (Karma Vyaya)
இதற்கெல்லாம் அர்த்தத்தை (பொருளை) நம் பெங்களூரு அம்மையார்தான் சொல்ல வேண்டும்! பின்னூட்டத்தில் சொல்வார்கள். பொறுத்திருங்கள்!
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com