மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.4.20

Astrology: Quiz: புதிர்: 27-3-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 27-3-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்பர் ரேவதி நட்சத்திரக்காரர். தான் வேலை பார்த்த அலுவலகத்தில் மோசடி வழக்கில் சிக்கி வேலையை இழந்ததோடு கெளரவம் மரியாதை என்று அனைத்தையும் இழந்து, வழக்கில் சிக்கி அவதிப்பட்டார் அன்பர். பிறகு ஜாமீனில் வெளியேவந்து வழக்கை கீழ் / மேல் நீதிமன்றங்களில் சந்தித்து இறுதியில்  பூரண விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார். இப்போது இரண்டு கேள்விகள்:
1. அன்பர் வழக்கில் சிக்கியதற்கான காரணம் என்ன? 2. அதேபோல் போராடி விடுதலை பெற்று வெளியே வந்ததற்காக காரணம் என்ன? ஜாதகத்தை அலசி இந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: மீன லக்கினக்காரர்
1. லக்கினத்தில் எட்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனும் ராகுவும் டெண்ட் அடித்து அமர்ந்திருக்கிறார்கள். அது நன்மையான அமைப்பு அல்ல!
2. ஆறாம் வீடும் பன்னிரெண்டாம் வீடும் பாபகர்த்தாரி யோகத்தில் 6ற்கு ஒரு பக்கத்தில்செவ்வாய் மறுபக்கம் கேது. அதேபோல் 12ற்கு ஒரு பக்கம் சனி மறுபக்கம் ராகு
3. எட்டாம் வீட்டின் மேல் சனி மற்றும் செவ்வாயின் பார்வை.
4. 1 & 7ல் ராகு & கேது அமர்வு!
எல்லா தீய வீடுகளும் மேலும் கெட்டிருக்கின்றன
வழக்குகளுக்கு இதுதான் காரணம்!
-----------------------------------------
அதே போல் ஜாதகருக்கு கை கொடுக்கும் சூப்பரான அமைப்பும் ஜாதகத்தில் உள்ளது. அதனால்தான் அவர் போராடி வெற்றி பெற்று வழக்குகளை உதறிவிட்டு விடுதலையாகி வெளியே வந்தார்.
1. 8 மற்றும் 12ம் வீடுகளின் மேல் லக்கினாதிபதி மற்றும் நம்பர் ஒன் சுபக்கிரகமான குருவின் பார்வை!
2. ஆறாம் வீட்டுக்காரர் சூரியன் சுப கர்த்தாரி யோகத்தில் - வழக்குகளை உதறுவதற்கு இவர் பெரும்பங்காற்றினார்
3. எட்டாம் வீட்டுக்காரர் சுக்கிரன் உச்சம் பெற்று லக்கின கேந்திரத்தில் அமர்ந்துள்ளது நன்மையான அமைப்பு
4. பன்னிரெண்டாம் வீட்டுக்காரனான சனீஷ்வரன்சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் உள்ளார்
----------------------------------------------
இவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 8 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

கொரோனா/ ஊரடங்கு உத்தரவு போன்ற தேசிய பிரச்சினைகள் தீர்ந்து ஒரு சுமூகமான சூழ்நிலை திரும்பும்போது மீண்டும் ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்ட மீன லக்கின ரேவதி நக்ஷத்திர மீன ராசி ஜாதகர் வழக்கில் சிக்கி , பின்னர் மீண்டு வந்ததற்கான காரணங்கள்
1 பொதுவாக வழக்கு போன்ற இன்னல்களை பார்க்க ஜாதகரின் ஆறாம் இடம் காரணமாகும். இவரின் ஆறாம் இடத்து அதிபதி சூரியன் ஆவார். சூரியன் இவருக்கு சுப பலன் தருபவராக இருந்தாலும் ஆறாம் இடத்து அதிபதியாகி சுக்கிரனின் ரிஷப வீட்டில் அமர்ந்து வழக்கு போன்றவற்றை சந்திக்க செய்தார். ஏனென்றால் சூரியன் அமர்ந்த வீட்டு சுக்கிரன் உச்சமாகி லக்கினத்திலேயே அமர்ந்து ராகு மற்றும் மாந்தியுடன் கூட்டணி போட்டு சந்திரனையும் கெடுத்து மனத்தினையும் பாதிக்க செய்து , இவரின் சூரிய மஹா தசையில் பிரச்சினை ஏற்பட்டு , ராகு மஹா தசையில் அது அதிகமாகி சிரம படுத்தியது .
2 ஆதலால் ஜாதகரின் ஆறாம் இடத்து அதிபதி சூரியன் தசையில் ஆரம்பித்த வழக்கு ராகு தசையில் உச்சம் பெற்றது. மேலும் இடதனி இவரின் எட்டாம் இடத்து அதிபதி சுக்கிரன் உச்சமாக அமர்ந்து இதை தீவிர படுத்தினார்.
3 இந்த அனைத்து வேலை சம்பந்தப்பட்ட வழக்குகளும் இவரின் குரு மகா தசையில் முடிவுக்கு வந்தது . ஏனென்றால் குருவான இவருக்கு லக்கின மற்றும் ராசி அதிபதி ஆவார். குரு நான்கில் அமர்ந்து நேரடி ஏழாம் பார்வையாக இவரின் பத்தாம் இடத்தை பார்ப்பதால் வேலையினால் ஏற்பட்ட வழக்கு சாதக முடிவை இவருக்கு ஏற்படுத்தி தந்தது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, March 27, 2020 11:46:00 AM
-----------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி நாலில் கேந்திரம் ,கால சர்ப்ப தோஷம் வேறு
2.லக்கினத்தின் மேல் எட்டாம் அதிபதி சுக்கிரன் அமர்ந்துள்ளார் மாந்தியடன் விரயாதிபதி சனியின் பார்வையும் உள்ளது
3 இரண்டு ஒன்பதுக்குரிய செவ்வாய் நீசமாய் உள்ளார்
4 .ஆறாம் அதிபதி சூரியனின் திசையில் வழக்கில் சிக்கி இருக்ககூடும் (ஆறாம் இடம் பாப கத்தரி இல்
5 .சந்திர திசை குரு புத்தியில் ஜாதகர் விடுதலை ஆகி இருப்பார் குருவின் பார்வை பனிரெண்டாம் இடத்தை பார்த்து
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, March 27, 2020 2:25:00 PM
----------------------------------------------------
3
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கங்கள்!
ஜாதகர் 15 மே 1931 அன்று காலை 3-00 மணியளவில் பிறந்தவர்.
மீன லக்கினம். லக்கினாதிபதி குரு 4ல் சுபர் வீட்டில். ஆயினும் பாப கர்த்தாரி யோகத்தில்.
லக்கினத்திற்க்கு ஆட்சி பலம் பெற்ற சனீஸ்வரனின் பார்வை.
மிகுந்த பலம் பெற்ற 6ம் அதிபதி சூரியனின் தசையில் மோசடி வழக்கில் சிக்கி அவமானப் பட்டதற்க்கு 5ல் அமர்ந்த நீச்ச செவ்வாய் காரணம். பெயர் புகழ் தரும் 5மிடம் கெட்டதால் அனைத்து இழப்புகளும்.சூரிய தசை செவ்வாய் புத்தியில் 29 வது வயதில் இழப்பு.
அடுத்து வந்த சந்திர தசை ராகுவுடன் 5 பாகைக்குள் இணைந்து கெட்டதால் நண்மையில்லை. 2 - 9 க்குடைய செவ்வாய் நீச்சம் தசை பலனில்லை. அடுத்து வந்த ராகு குரு வீட்டில் அமர்ந்து தசை நடத்தும்போது ராகு தசை குரு புத்தியில் தனது 54வது வயதில் விடுதலை பெற்று மீண்டிருப்பார். லக்கினாதிபதி குரு 10 மிடத்தை பார்வை செய்வதால் சிக்கலில் இருந்து விடுபட்டிருப்பார்.
அன்புடன்
-பொன்னுசாமி.
Saturday, March 28, 2020 12:44:00 PM
---------------------------------------------------
4
Blogger Shanmugasundaram said...
Good evening sir the above horoscope person was born on 15/05/1931 time 3.01am place coimbatore. Sixth house corresponds to house of ligitation here sixth house is hemmed between two malefic Mars and ketu during sun Maha dasa rahu bukthi due to financial crisis he was lost his job . In this horoscope lagna Lord Jupiter in Kendra in fourth house aspect 10th house hence he was recovered from ligitation during Moon dasa .here moon moon is fifth lord and in lagna . thanks sir vazhga valamudan
Saturday, March 28, 2020 6:23:00 PM
-----------------------------------------------------------
5
Blogger Ram Venkat said...
வணக்கம்.
மீன லக்கினம், மீன ராசி ஜாதகர்.
அவர் தான் வேலை பார்த்த அலுவலகத்தில் மோசடி வழக்கில் சிக்கி வேலையை இழந்ததோடு கெளரவம் மரியாதை என்று அனைத்தையும் இழந்து, வழக்கில் சிக்கி அவதிப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியேவந்து வழக்கை கீழ் / மேல் நீதிமன்றங்களில் சந்தித்து இறுதியில் பூரண விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார்.
இப்போது இரண்டு கேள்விகள்: ஜாதகப்படி
1. அன்பர் வழக்கில் சிக்கியதற்கான காரணம் என்ன?
2. அதேபோல் போராடி விடுதலை பெற்று வெளியே வந்ததற்கான‌ காரணம் என்ன?
1) லக்கினாதிபதியும், கர்ம ஸ்தான அதிபதியுமான குரு பகவான், 4மிடத்தில் பரம விரோதியான புதனுடைய ராசியில் அமர்ந்து பாப கர்த்தாரியின் பிடியில் வலுவிழந்துள்ளார்.
2) வம்பு, வழக்கு மற்றும் ஜெயில் தண்டனை முதலியவற்றிற்கு ஆறாம் பாவம் காரணமாகிறது. ஆறாமிடம் பாபகர்த்தாரியின் பிடியிலுள்ளது. அதன் அதிபதி சூரியன் மூன்றில் அமர்ந்து சுபகத்திரி யோகத்தில் இருந்தாலும், லக்கினாதிபதி குருவுடம் 1, 12 நிலையில் உள்ளார்.
3) கர்மகாரகனான சனியும் வக்கிரமடைந்து குருவுடன் 6,8 நிலைமை மற்றும் நீச செவ்வாயின் நேர் பார்வையில் உள்ளார்.
மேல் கண்ட கிரக அமைப்பின் காரணமாக ஜாதகர், 6ம் பாவமான சூரியினின் தசையில் தன் அலுவலகத்தில் மோசடி வழக்கில் சிக்கி வேலையை இழந்து அவதிப்பட்டார். அதன் பிறகு சந்திர தசை, சுக்கிரன் புத்தியில் போராடி (லக்கினத்தில் ராகு+சந்திரன்+ உச்ச சுக்கிரன்) விடுதலை பெற்று வந்திருப்பார்.
Saturday, March 28, 2020 9:33:00 PM
-----------------------------------------------
6
Blogger seethalrajan said...
வணக்கம், வழக்கு காரகன் செவ்வாய் நீசம், சனி பார்வை பெற்று மிகவும் பாதிப்பு,
2. லக்கின, 10ம் அதிபதி ஆகிய குரு கேந்திர ஆதிபத்ய தோஷத்தில் மேலும் பகை.
3. 8ம் அதிபதி ராகு உடன் லக்கினத்தில் ஆகையால் லக்னம் பாதிப்பு.
ஆகையால் வழக்கு ஏற்பட்டது.
4. 3ல் சூரியன் வெற்றி ஸ்தனத்தில், ஆகையால் வெற்றி கிடைத்தது.
Saturday, March 28, 2020 9:49:00 PM
-----------------------------------------------------
7
Blogger kmr.krishnan said...
சிக்கல் வரக் காரணம்: 1. 8 வது வீட்டுக்காரன் லக்கினத்திலேயே அமர்ந்தது
2. 2,9 க்கு உடைய செவ்வாய் நீசம் பெற்று சனியின் நேர் பார்வையைப் பெற்றது.3.6 வது வீடு செவ்வாய் கேதுவால் சூழப்பட்டது
மீண்டு வரக்காரணம்: 10 ம்இடத்திற்கு குரு பார்வை.8 ம் இடத்திற்கு குரு பார்வை.
Sunday, March 29, 2020 11:50:00 AM
-------------------------------------------
8
Blogger sree said...
sukkira dasai sani bhukthiyil avaruku indha sangadam yerpattu sooriya dasai chandira bhukthiyil meendu vandhiruppar.
Monday, March 30, 2020 1:56:00 PM
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com