Astrology: Quiz: புதிர்: இளம் வயதில் விபத்தில் சிக்கிய இளைஞனின் ஜாதகம்!!!!
ஒரு இளைஞனின் ஜாதகம் கீழே உள்ளது. சித்திரை நட்சத்திரக்காரர் (அதாவது செவ்வாயின் நட்சத்திரக்காரர்) அந்த இளைஞன் அவனுடைய 20வது வயதில் ஒரு விபத்தில் சிக்கி முகத்தில் பலமான அடிபட்டுவிட்டது. ஜாதகப்படி அந்த விபத்திற்கான காரணம் என்ன?
ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!
சரியான விடை 26-1-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
கேதுவே விபத்துக்கு காரணம் ராகு திசை கேது புத்தியில் விபத்து நடந்து இருக்க வேணடும்.
ReplyDeleteM.Santhi
கேதுவே விபத்துக்கு காரணம் ராகு திசை கேது புத்தியில் விபத்து நடந்து இருக்க வேணடும்.
ReplyDeleteM.Santhi
6 மற்றும் 8 ஆம் இடத்து அதிபதிகள் சனியின் பார்வையில்.ராகு 1,6க்குடைய செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில்.
ReplyDeleteஜாதகர் 9 பிப்ரவரி 1977 அன்று பிறந்தவர்.
ReplyDeleteலக்கினாதிபதி செவ்வாய் சூரியனுடன் , எட்டம் அதிபதி புதனுடன் கூட்டணி.சனி நேராக நின்று செவ்வாயுக்குப் பார்வை.பகையாளிகளான, செவ்வாய் சனி , சூரியன் சனி எதிருக்கு எதிர் நின்றது, ராகுதசாவில் இந்த கண்டம் 20 வயதில் ஏற்பட்டது.
வணக்கம்.
ReplyDeleteவிருச்சிக லக்கினம், கன்னி ராசி ஜாதகர்.
அவரின் 20வது வயதில் ஒரு விபத்தில் சிக்கி முகத்தில் பலமான அடிபட்டுவிட்டது. ஜாதகப்படி அந்த விபத்திற்கான காரணம் என்ன?
1) லக்கினாதிபதியும், ஆறாமிட அதிபதியுமான செவ்வாய், மூன்றாமிடமான மகரத்தில் உச்சமடைந்து அமர்ந்துள்ளார்.
2) செவ்வாயுடன் அட்டமாதிபதி புதன் மற்றும் சூரியன் சேர்ந்து அமர்ந்துள்ளனர்.அவரின் மேல் கடக ராசியில் உள்ள சனியின் நேர் பார்வை உள்ளது.
3) பொதுவாகவே சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும், 8ம் வீட்டதிபதியுடன் சேர்ந்திருந்தாலும் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டு உடல் உறுப்புகளில் பாதிப்பு உண்டாகிறது.
4)ஜாதகரின் 20ம் வயதில் கோச்சார சனி+கேது மீன ராசியிலும், ராகு+செவ்வாய் கன்னி ராசியிலும் வந்த போது, (சந்திரன் முகத்திற்கு காரகன்) விபத்து நேர்ந்து முகத்தில் அடிபட்டது.ஜாதகத்தில் சனியின் விஷேச பார்வை சந்திரன் மேலுள்ளதை கவனிக்கவும்.
ஐயா வணக்கம் !
ReplyDelete*லக்னாதிபதியான செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார் சிறப்பு மேலும் அவர் 10ஆம் அதிசயமான சூரியனுடன் சாரப்பரிவர்த்தனை பெற்றுள்ளார்.
*10ஆம் அதிபதியான சூரியன் பகையில் சேர்க்கை பெற்றுள்ளார்.
*8ஆம் அதிபதியான புதன் லக்னாதிபதியுடன் சேர்க்கை.
*லக்னத்திற்கு 12 அமர்ந்த ராகு திசை நடத்தியுள்ளார் அவருக்கு சாரம் கொடுத்த சார நாதன் உச்சம் பெற்றுள்ளார் மேலும் அவருக்கு ஸ்தானம் கொடுத்த ஸ்தானநாதன் உச்சம் பெற்றுள்ளார்.
*எனவே 12ல் அமர்ந்த ராகு வலுவான நிலையில் திசை நடத்தியுள்ளார்.
*செவ்வாய்,புதன்,சூரியன் ஆகியோர்களுக்கு ஸ்தானம் கொடுத்த ஸ்தானநாதன் சனி தன்வீட்டிற்கு 7ல் பகை பெற்று அமர்ந்து 7ஆம் பார்வையாக லக்னாதிபதியை பார்க்கிறார்.
*மேலும் லக்னத்திற்கு முன்னும் பின்னும் அசுப கிரகம் அமர்ந்து லக்னம் பாபகர்த்தாரி தோஷத்தில் சிக்கியுள்ளது.
இப்படிக்கு அடியேன் யுவராஜ்
ஐயா கேள்விக்கான பதில்
ReplyDelete1 .லக்கினாதிபதி செவ்வாய் மூன்றில் உச்சம் பெற்றுள்ளார் ,அவருடன் எட்டாம் அதிபதி புதனும் உள்ளார்
2 .விரயத்தில் அமர்ந்த ராகு திசை கேது புத்தியில் (இருபதாவது வயதில் )
கேது லக்கினத்தை தன பார்வையில் வைத்துள்ளார் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
அய்யா வணக்கங்கள்!
ReplyDeleteஜாதகர் பிப்ரவரி 9ம் தேதி 1977 ல் பிறந்தவர்.விருச்சிக லக்கினமாகி லக்கினாதிபதி செவ்வாய் 8மாதி புதனுடன் சேர்ந்து 3ல் அமர்வு.லக்கினாதி உச்சம்.சூரியனும் கூட்டாக அம்ர்ந்து 3ம்பதி சனியின் பார்வை வாங்கியுள்ளது குற்றம்.12ல் அமர்ந்த ராகு விரையாதிபதி சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி செவ்வாய் நட்சத்திரத்தில் அமர்ந்து தசை நடத்தியதால் சுக்கிரன் புத்தி புதன் அந்தரத்தில் விபத்தை அரங்கேற்றம் நடத்தியுள்ளார்.
அன்புடன்
-பொன்னுசாமி
லக்னாதிபதி சனியின் வீட்டில், அவரது நேரடி பார்வையில்
ReplyDeleteஅஷ்டமாதிபதி சனியின் நேரடி பார்வையில்
லக்னாதிபதி செவ்வாய், ராகு மற்றும் மாந்தியுடன் தொடர்பு
இந்த அமைப்புகளால் விபத்து