மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.11.19

Astrology: Quiz: புதிர்: நான் பேச நினைப்பதை எல்லாம் கோள்கள் பேச வேண்டும்!!!!


Astrology: Quiz: புதிர்: நான் பேச நினைப்பதை எல்லாம் கோள்கள் 
பேச வேண்டும்!!!!

ஒரு இளைஞனின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோணம் நட்சத்திரக்காரர். லக்கினாதிபதி புதன் எட்டில் உள்ளார். என்னுடைய ஜாதகம் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம். மொத்தத்தில் நான் அதிஷ்டமில்லாதவன் (unlucky) என்று அவரே சொல்லிக்கொண்டிருப்பார். இளம் வயதில் அவர் வாழ்க்கையில் நடந்தவற்றை வைத்துப் பார்க்கும்போது அப்படித்தான் இருந்தது.

ஏன் இந்த நிலைமை? நல்லதும் கெட்டதும் கலந்ததுதானே வாழ்க்கை! அவருக்கு எப்போது நல்ல காலம்”

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 1-12-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. வணக்கம் வாத்தியாரே .. கன்னி லக்கனம் அதிபதி மேஷம் 8-இல் கூடவே சனி யின் நீச்ச சேர்க்கை வேறு அதேபோல் லகினத்துக்கு சுபர் பார்வை என்பது இல்லாமல் போய் விட்டது .6-இல் ராகு 6-இல் உள்ள தசை முடிந்து குரு தசை யில் ஜாதகர் நல்ல காலம் உண்டு .. காரணம் 4-அம் இடம் புதையல் அதிர்ஷ்டம் அதிபதி சனியின் ,புதன் பார்வை உள்ளது .

    நன்றி ஸ்ரீ குமரன்

    ReplyDelete
  2. லக்கினாதிபதி 8 இல் மறைவு
    5 மற்றும் 6 குடைய சனி லக்கினாதிபதி புதனுடன் சேர்ந்து நீசம் பெற்று 8 இல் மறைவு .


    9இல் சூரியன் , எனவே சூரிய திசையில் ஜாதகர் சிறுவயதிலேயே தந்தையை இழந்திருப்பார் .
    அதன்பிறகு வந்த 3 மற்றும் 8 குடைய செவ்வாய் திசை செவ்வாய் திசையும் சிறப்பில்லை .

    பிறகு 6 இல் அமர்த்த ராகுவின் திசையும் சிறப்பாக அமையவில்லை . ராகு அமர்ந்த வீட்டின் அதிபதி சனி நீசம் பெற்று 8 இல் மறைந்தார் .

    33 வயதில் வந்த 4 மற்றும் 7 க்கு அதிபதியான குரு 2இல் அமர்ந்து தனது திசையில் நன்மைகளை வழங்கியிருப்பார் . குரு 2இல் அமர்ந்து 6(ராகு) 8(புதன் , சனி) மற்றும் 10 யை (செவ்வாய் , சுக்கிரன் ) ஆகியவற்றை பார்வையிட்டு நன்மை செய்கிறார் .

    நன்றி
    ஆனந்த்

    ReplyDelete
  3. ஜாதகர் 26 மே மாதம் 1970 அன்று மதியம் 3 மணி 1 நிமிடம் 15 நொடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

    லக்கினாதிபதி 8ல் மறைந்தது.10ம் அதிபன் 8ல் மறைந்தது நிரந்தர வேலைகிடைப்பதில் சிரமம் ஏற்படுத்தியது.வேலைக்கான காரகன் சனி நீசம்.

    5ம் அதிபன் 8ல் அமர்ந்தது பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் சிரமம்.பிள்ளைகளால் தொல்லை.
    6ம் அதிபன் 8ல் அமர்ந்ததால் பேசுபவர்களிடம் எல்லாம் சச்சரவு.7ம் இடம் ராகு, சனியால் சூழப்பட்டுள்ளதால் மண வாழ்வில் சிரமம.

    12ம் அதிபன் 9ல் இருப்பதால் தந்தை உறவும் கஷ்டமானது. பொருள் விரயம் நஷ்டம் அதிகமானது

    இவையெல்லாம் அவர் அதிர்ஷ்டக்குறைவு என்று குறைப்பட்டுக்கொள்ளக்காரணமானது.

    27 வயது வந்த போது குரு தசா வந்தது.அதிலிருந்தது அவருக்கு நல்ல் காலம் துவங்கியது. ஏனெனில் குருவின் பார்வை ராகு, சனி,புதன்,செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் மீது படுகிறது.எனவே குரு தசா அவருக்கு நன்மையாக அமைந்திருக்கும்.

    ReplyDelete
  4. வணக்கம்

    தாங்கள் கேட்ட புதிருக்கான பதில் :

    மிதுன லக்கினம், மகர ராசி , திருவோண நக்ஷத்திர ஜாதகர் இளம் வயதில் பட்ட கஸ்டங்களுக்குக்கான காரணம்:

    1 . பொதுவாக கஷ்டம் துயரம் போன்றவற்றை பார்க்க எட்டாம் இடத்தையும் , யோக கிரகங்களின் நிலையையும் பார்க்க வேண்டும்.

    2 இவரின் லக்கின அதிபதியே எட்டாம் இடத்தில் மறைந்து , நீச சனியுடன் சேர்ந்து கஷ்டங்களை தந்தார்.

    3 இவரின் யோககாரகர்களான சனியும், புதனும் நல்ல நிலையில் இல்லை.

    4 மிதுன லக்கினத்திற்கு யோக காரகனான சனி ராசி கட்டத்தில் நீசமாகவும், நவாம்ச கட்டத்தில் உச்சமாக இருந்தாலும் எட்டாம் அதிபதியுடன் கூட்டணி போட்டு உள்ளது. இது நல்ல நிலை அல்ல.

    5 மேலும் மற்றொரு யோகக்காரனான சுக்கிரன் ராசி கட்டத்தில் எட்டாம் அதிபதி செவ்வாய் யுடன் சேர்ந்து கெட்டு உள்ளது. மேலும் செவ்வாய் மிதுன லக்கினத்திற்கு பகை கிரகமாகும்.

    6 . இவரின் இளம் வயதில் அதாவது 10 வயது முதல் 28 வயது வரை வந்த ராகு தசையும் இவருக்கு பல கஷ்டங்களை தந்தது.

    7 இவரின் 28 வயதிற்கு மேல் வந்த குரு, மிதுன லக்கினத்திற்கு அசுப கிரகமாக இருந்தாலும் குரு தசை கஷ்டங்களை குறைத்து நல்ல பலன்களை தந்தது.

    நன்றி

    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete
  5. வணக்கம்,
    மிதுன லக்கினம், மகர ராசி ஜாதகர்.இளம் வயதில் அவர் வாழ்க்கையில் பல இன்னல்கள்.அவருக்கு எப்போது நல்ல காலம்?
    1) லக்னாதிபதி புதன் எடடில் மறைவு மற்றும் நீச சனியுடன் கூட்டு.
    2) ஜாதகருக்கு 9 வயது முதல் 27 வயது வரை ராகு தசை நடந்துள்ளது.
    3) பிறகு வந்த குரு தசை, குரு புத்தி முடிந்த பிறகு, அவரது வாழ்க்கையில் வசந்தம் வந்தது.
    குரு பகவானின் நேர் பார்வையில் லக்னாதிபதி புதன் மற்றும் கர்மாதிபதி சனி உள்ளனர். சனி பகவான் ராசியில் நீசமானாலும் அம்சத்தில் உச்சமடைந்துள்ளதை கவனியுங்கள்.
    மேலும் கஜ கேசரி போன்ற ராஜ யோகங்கள் செயல் படத் தொடங்கி, அவரை மேலும் நல்ல நிலையை அடைய செயதன.

    ReplyDelete
  6. குரு திசை வரும்போது...?

    ReplyDelete
  7. ஐயா கேள்விக்கான பதில்
    1 .பனிரெண்டில் மாந்தி திடீர் விரையம்
    2 .இளம் வயதில் வந்த 3 ,6க்கு உரிய செவ்வாய் மூன்றாம் இடத்திற்கு ஆறில் மேலும் ராகுவும் லக்கினத்திற்கு ஆறில் 3rd place fortune
    3 .எட்டாம் இடத்தில் நீச சனி
    4 .ஜாதகருக்கு 26 வயதிற்கு மேல் வந்த குரு த்தன் பார்வையால் எட்டாம் இடத்தை கட்டு படுத்தி ஜாதகருக்கு உயர்வை கொடுத்திருப்பார் தங்களின் பதிலை ஆவலுடன்
    நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com