மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.11.19

Astrology: Quiz: புதிர்: காற்று வாங்கப் போனவர் எதை வாங்கி வந்தார்!!


Astrology: Quiz: புதிர்: காற்று வாங்கப் போனவர் எதை வாங்கி வந்தார்!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவாதிரை நட்சத்திரக்காரர். அடுத்தடுத்து இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு, இரண்டு திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்து விட்டது. ஊக்கமது கைவிடேல் என்று மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அந்தத் திருமணமாவது நிலைக்குமா?

1. ஜாதகத்தை அலசி முதல் இரண்டு திருமணங்களும் கெட்டுப் போனதற்கு ஜாதகப்படி என்ன காரணம் என்பதைச் சொல்லுங்கள்.
2. அத்துடன் மூன்றாவது முயற்சி பலிக்குமா? பலித்தாலும் அதுவாவது நிலைக்குமா?

ஜாதகத்தை அலசி இந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!

சரியான விடை 3-11-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. வணக்கம் ஐயா🙏

    1. மகர இலக்கினம், மிதுன இராசி ஜாதகம்.

    2. ஏழாம் வீட்டு அதிபதி சந்திரன் லக்னத்துக்கு ஆறிலும் தன் வீட்டிற்கு பன்னிரண்டிலும் மறைந்துள்ளார். மேலும் ஏழாம் வீட்டில் பாதகாதிபதி செவ்வாய் நீசமடைந்து அமர்ந்துள்ளார் மற்றும் ஏழாமிடத்தில் ராகு கேதுக்களின் ஆதிக்கம். இந்த காரணங்களால் முதல் இரண்டு திருமணம் கெட்டுப்போனது.

    3. முதல் இரண்டு திருமணங்கள் குரு மகா தசையில் நடந்தது. அடுத்து வந்த சனி மகா தசையில் மூன்றாவது திருமணம் நடந்திருக்கும். அதுவும் நிலைத்திருந்து இருக்காது. ஏனெனில் குடும்பாதிபதியாக சனீஸ்வரன் இருப்பதனால் மூன்றாவது திருமணம் நடந்திருக்கும். ஆனால் அவரும் கேதுவின் பிடியில் அகப்பட்டு வலிமை இழந்து உள்ளார். மேலும் சனீஸ்வரன் மேல் ராகு, பாதகாதிபதி செவ்வாயின் நீச பார்வை ஆகியவற்றால் மேலும் சனீஸ்வரன் பாதிக்கப்பட்டு உள்ளார். பாதகாதிபதி செவ்வாயின் எட்டாம் பார்வை குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டிலும் உள்ளது ஆகிய காரணங்களால் மூன்றாம் திருமணம் நடைபெற்றாலும் நிலைத்திருக்காது.

    பிழைகள் இருப்பின் பொருத் தருளுக....


    பணிவுடன்,
    முருகன் ஜெயராமன்,
    புதுச்சேரி.


    ReplyDelete
  2. ஜாதகர் 28 ஏப்ரல் 1963 அன்று அதிகாலை 1 மணி 32 நிமிடங்கள் 30 நொர்டிகளுக்குப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

    ஜாதகருக்கு 7ம் இடம் என்ற மனைவி ஸ்தானம் செவ்வாய் மற்றும் ராகுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.லக்கின பாவத்தில் சனி மற்றும் கேது.எனவே 4 எதிமறை கிரகங்களின் தொடர்பு அவருடைய முதல் இரு திருமணங்களை பாதித்தன.7ம் அதிபன் சந்திரன் 6ம் இடத்தில் மறைந்தது. எனவே மனைவியிடம் பகையுணர்வு ஏற்படுத்தும்.மனஸ்தாபங்களால் பிரிவினை ஏற்படுத்தும்.
    7ம் இடத்துடன் தொடர்புடைய குரு,சனி தசா ஆகியவற்றில் முதல் இரு திருமணங்கள் நடந்தன.ஆனால் நிலைக்கவில்லை. ஜாதகருக்கு இப்போது புதன் தசா.வயது 56. திருமணம் தேவையா? வயதுக்கேற்ற பெண் கிடைக்குமா?புதன் 6, 9க்கு உடையவர்.புதன் தசா சூரியபுக்தி 6 ஆகஸ்டு 2020. இது நல்ல நேரம் அல்ல.சூரியன் 8ம் அதிபதி. அடுத்துவரும் புதன் தசா சந்திரபுக்தியும் ஏற்றதல்ல.(5 ஜனவரி 2022 வரை.) ஜாதகருக்கு 60 வயது நடக்கும். புதன் தசா குரு புக்தி 22 ஜுலை 2025ல் துவங்கும். 65 வயதில் அவருக்கு யாராவது பெண் கொடுக்க முன் வந்தால் 2025ல் திருமணம் நடக்கலாம்.

    ReplyDelete
  3. The above person was born on 28/04/1963 1.30am. Seventh house lord is placed in 6th house which is not good for marriage life moreover mars and rahu placed in 7th house.Third marriage was not possible because lord of family life is placed in 12th to that house.Thanks sir vazhga valamudan

    ReplyDelete
  4. அய்யா வணக்கம் கொடுக்க பட்டு உள்ள ஜாதகத்தில் லகினத்துக்கு -7-இல் செவ்வாய் நீச்சம் ,கூடவே ராகு நாற்காலி போட்டு கொண்டு அம்சமாக உள்ளார் அதுபோல் களத்திர காரகன் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை கூடவே ராகு வேறு. 7-இல் இரெண்டு கிரகம் இருதார அமைப்பு அதேபோல் 7-அம அதிபதி 6-இல் மறைவு பெற்று மாந்தி பார்ர்கிறார் லகினத்துக்கு 12-இல் மாந்தி கட்டில் சுகம் இல்லை .அதேபோல் 7-அம் வீட்டை லகினமாக கொண்டு பார்க்கையில் 7கு 7-இல் லக்கனத்தில் சனி கேது சேர்க்கை . கேது கெடுதல் செவ்வாய் + கேது சேர்க்கை இதுவே பிரிவினைக்கு காரணம் . 3-வது திருமணம் செய்தலும் இவர்க்கு சந்தோசம் இருக்கும் காரணம் செவ்வாய் நீச்ச பங்கம் ஆகி ராஜா யோகம் கொடுப்பார் ..

    நன்றி ஸ்ரீ குமரன்
    9655819898

    ReplyDelete
  5. மாந்தி எங்கே உட்காருகிறாரோ அந்த இடத்தின் பலனை கெடுத்து விடுவார்.கட்டில் சுகம் என்ற 12வது இடத்தில் மாந்தி உட்கார்ந்து, 7வது இடத்து அதிபதியாகி 6ம் இடத்தில் மறைந்த வலிமையில்லாத சந்திரனை நேர்பார்வை பார்ப்பதால் இன்னும் நிலைமை மோசம்.7ம் இடத்தில் செவ்வாய் +ராகு இணைவு ,12ம் இட அதிபதி 3ல் மறைவு,5ம் இட அதிபதி 3ல் மறைவு ,குரு சுக்ர தோஷம் இவையெல்லாம் பார்க்கும்போது 3வது மனைவியுடனும் வாழ்வதும் கஷ்டம்.

    ReplyDelete
  6. வணக்கம்

    தங்கள் கேள்விக்கான பதில்

    மகர லக்கினம் , திருவாதிரை நக்ஷத்திரம் , மிதுன ராசி ஜாதகர் இரண்டு முறை திருமணம் செய்து முறிந்ததற்கு காரணம் :

    1. பொதுவாக திருமண பந்தத்தை நிர்ணயிப்பது ஏழாம் இடம் என்கின்ற களத்திர ஸ்தானம் ஆகும். இவரின் ஏழாம் இடத்தில் நின்ற செவ்வாய் நீசமாகவும், ராகுவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. மேலும் ஏழாம் இடத்து அதிபதி சந்திரன் ஏழிற்கு பனிரெண்டில் மறைவு, சந்திரன் லக்கினத்திலிருந்து ஆறில் மறைவு, மேலும் சந்திரன் நவாம்சத்தில் ஐந்தில் இருந்தாலும் மாந்தியினால் மாசாகி போய் விட்டது.

    2. இவருக்கு இரண்டு முறை திருமணம் நடந்த தற்கு காரணம் இவரின் ஏழாம் இடத்தின் மேல் குருவின் நேரடி பார்வை உள்ளது. மேலும் களத்திர காரகன் சுக்கிரன் உச்சமாக குருவுடன் சேர்ந்து உள்ளதால் குரு தனது சொந்தவீட்டில் இருந்து ஐந்தாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்ப்பதால் , ஜாதகர் தனது குருவின் தசையில் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். ஆனால் குடும்பம் அமைய நிலைக்க இரண்டாம் இடம் நன்றாக இருக்க வேண்டும்.

    3. ஜாதகரின் இரண்டாம் இடத்து அதிபதி சனி தனது சொந்த வீட்டில் லக்கினத்தில் இருந்தாலும் கேதுவுடன் சேர்ந்து ராகு பார்வை பெற்று , இரண்டாம் வீட்டிற்கு பனிரெண்டில் மறைந்து உள்ளது.

    4. மேலும் இந்த ஜாதகரின் அனைத்து கிரகங்களும் ராகு கேது கட்டுப்பாட்டில் உள்ளது. இது களத்திர தோஷமாகும்.

    5. இவருக்கு குருவின் பார்வையால் இரண்டு முறை திருமணம் ஆனாலும் நீச செவ்வாய் எட்டாம் பார்வையால் குடும்ப வாழ்க்கை அமையவில்லை . மேலும் இரண்டாம் இடத்து அதிபதி சனியின் மேலும் செவ்வாய் பார்வை பெற்று விவகாரத்தில் முடிந்தது.

    ஆனால் மூன்றாவது முறையாக இவரின் லக்கின அதிபதி சனியின் தசையில் திருமணம் மீண்டும் நடைபெற்றது. இதற்கு ஒன்பதாம் அதிபதி புதனும் உதவினார். இவரின் சனி தசை புதன் புக்தியில் இது நடந்தது.

    இந்த மூன்றாவது திருமணம் நிலைத்து நின்றது ஏனென்றால் ராகு மற்றும் கேது தோஷம் இவரின் 35 வயதில் இருந்து யோகமாக மாறி நல்லது செய்தது. ஏனென்றால் ராகு இவருக்கு லக்கினத்தில் இருந்து ஏழில் உள்ளார். சனி தசைக்கு அடுத்து வந்த புதன் தசை, கேது தசை எல்லாம் இவருக்கு நல்ல தசைகளாக மாறி நன்மை செய்தது.

    நன்றி

    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete
  7. ஐயா கேள்விக்கான பதில்
    ௧,
    லக்கினாதிபதி கேந்திரத்தில் அமர்ந்துள்ளார்
    2 லக்கினாதிபதியுடன் எத்தனை கிரகங்கள் தொடர்பு உள்ளதோ
    அத்தனை பெண்களுடன் தொடர்பு ஏற்படும் என்பது ஜோதிட விதிகளில் ஓன்று
    3 .சனீஸ்வரனனின் மூன்றாம் பார்வையில் அமர்ந்துள்ள குரு திசையில் சுக்கிர புத்தியில் முதல் திருமணம்
    4 அந்த குரு திசையில் ஏழாம் அதிபதி சந்திர புத்தியில் இரண்டாம் திருமணம்
    5 அனால் குருவே விரையாதிபதியும் ஆகிறார் மேலும் சனீஸ்வரன் இரண்டாம் இடத்திற்கு பனிரெண்டில் அமர்ந்துள்ளார் ,சந்திரன் ஆறாம் அதிபதி புதனுக்கும் செவ்வாய் ராகுவிக்கும் இடையே கத்தரி யோகத்தில் ,செவ்வாயின் நேரடி பார்வையில் லக்கினம்
    ஆகவே திருமணம் விவகாரத்தில் முறிந்துள்ளது ,
    6 .அடுத்து வந்த சனிதிசை புதன் புத்தியில் மூன்றாம் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது
    புதன் ஒன்பதாம் அதிபதியும் ஆகிறார்
    தங்களின் பதிலை ஆவலுடன்
    நன்றி

    ReplyDelete
  8. ஐயா வணக்கம், கொடுக்க பட்ட ஜாதகத்தில் லக்கினம், களத்திரம், குடும்ப ஸ்தனங்கள் மிக மிக இருள் ஆகியிருக்கின்றன. லக்கினத்தில் சனி கேது, 7ல் செவ்வாய் ராகு, என நான்கு கிரகங்களும் ஒன்றை ஒன்று தாக்கி கொல்லும், மேலும் 2ம் வீட்டின் மேல் ராகுவுடன் சேர்ந்த செவ்வாய் பார்வை ஆக 2ம் இடமும் கேட்டு போய் உள்ளது. ராசிக்கு 7ம் அதிபதி கேந்திரஅதிபத்ய தோஷத்தில் உள்ளார், அதோடு சுக்கிரன் மேல் சனி பார்வை, லக்னத்துக்கும், 7ம் வீட்டுக்கும் சுபர் பார்வை இல்லை. இந்த ஜாதகத்தில் புதன் மட்டும் நன்றாக உள்ளது. 49 வயதில் புதன் தசை வந்தால் களத்திரம் நிலைக்கும், அதுவரை எத்தனை திருமணம் செய்தாலும் நிலைக்காது.
    நன்றி.

    ஐயா, எனக்கு குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி அட்டவணை அனுப்புமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். தேதி கண்டுபிடிப்பதற்ககா. நன்றி.
    mail- seethal.raj87@gmail.com

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com