மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.10.19

Astrology: Quiz: புதிர்: ஆசைப் பட்டது நடக்கவில்லை ஏனடா கண்ணா!!!Astrology: Quiz: புதிர்: ஆசைப் பட்டது நடக்கவில்லை ஏனடா கண்ணா!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. மூல நட்சத்திரக்காரர். வீட்டாரின் கட்டாயப்படி ஜாதகர் கனரக வாகனங்களை வைத்து தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டினார். பத்தாம் வீட்டுக்காரன் சந்திரனின் பார்வை 9ம் வீட்டிலுள்ள சுக்கிரன் மேல் விழுவதைப் பாருங்கள். அது பாக்கிய ஸ்தானம். அத்துடன் சுக்கிரன் லக்கினத்திற்கு அதிபதி. மேலும் சுக்கிரன் வாகனங்களுக்குக் காரகன். லக்கின அதிபதியும் தொழில்காரகனும் கூட்டணி சேர்ந்தால் பலனுக்குக் கேட்கவா வேண்டும். அதுதான் வீட்டார்கள் அவருடைய ஜாதகத்தை வைத்து குடும்பத் தொழிலான வாகனத் தொழிலுக்கு அவரை இழுத்துக்கொண்டு போனது. ஆரம்பத்தில் பாதி மனதுடன் அவர் ஈடுபட்டாலும், போகப் போக சூழ்நிலை காரணமாக அவர் அதில் முழு ஈடுபாடு கொள்ளும்படி ஆகிவிட்டது.

ஆனால் அவர் உள் மனதில் இருந்த ஜோதிட ஆசை - அதாவது ஜோதிடம் கற்றுக் கொண்டு ஜோதிடராகும் ஆசை  கடைசிவரை நிறைவேறவில்லை.  கேள்வி இதுதான் - அவருடைய ஜோதிட ஆசை நிறைவேறாமல் போனதற்கு ஜாதகப்படி என்ன காரணம்? அதை மட்டும் அலசி பதில் சொல்லுங்கள்!!!!!

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!

சரியான விடை 28-10-2019 திங்கட்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

 1. வணக்கம் அய்யா ஜோதிட துறையில் சிறப்பிக்க புதன்,2-அம் அதிபதி ,சந்திரன் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். ஆனால் கேட்க பற்று இருக்கிற ஜாதகத்தில் . சனி கூட கேது சேர்த்து கொண்டு சனி 10-அம் இடத்தை பார்க்கிறார் .அதேபோல் 10-கு உடையவன் சுக்கிரன் பார்வை , மனசு அலைபாயும் ஜோதிடம் கற்க புதன் வலுவாக இருக்க வேண்டும் ஆனால் புதன் 8-இல் மறைவு .அதேபோல் குரு 5-அம் பார்வையாக சுக்கிரன் பார்க்கிறார் சுக்கிரன் பெண்கள் வழியில் எண்ணம் ஆகையால் குரு ஜாதகர் அவர் சுக்கிரன் பார்வை இதுவே அவர்க்கு ஜோதிட துறையில் இருக்க முடியவில்லை , காரணம் ஜோதிட படிக்கும் போது தடை எற்படும்.

  நன்றி ஸ்ரீ குமரன்

  ReplyDelete
 2. வணக்கம் ..

  தங்கள் புதிருக்கான பதில்

  துலா லக்கின ஜாதகரின் அனைத்து கிரகங்களும் தொழில் முன்னேற்றத்திற்கு சாதகமாக இருந்தாலும் அவரின் உள் மனது ஆசை நிறைவேறாமல் போனதற்காக காரணங்கள்

  1 பொதுவாக கற்பது அல்லது படிப்பு பற்றிய அறிவை அறிவதற்கு நான்காம் இடத்தை நன்றாக பார்க்க வேண்டும். . இவற்றின் ஜோதிட படிப்பு பற்றிய அறிவை அல்லது படிப்பை பார்ப்பதற்கு புதனின் நிலையையும் , குருவின் நிலையையும் பார்க்க வேண்டும்.

  2 இதில் இவற்றின் நான்காம் இடத்து அதிபதி சனி சொந்த வீட்டில் இருந்தாலும் கேதுவுடன் கூடி சற்று பாதிப்பு அடைந்து உள்ளது. இவற்றின் மேல் ராகுவின் பார்வையும் உள்ளதால் தனக்கு பிடித்த படிப்பை படிக்க இயலவில்லை. மேலும் புதன் எட்டில் மறைந்து பலன் தரவில்லை. புதனும் சூரியனால் அஸ்தங்கதம் ஆகி உள்ளது.

  3 படிப்பு ஸ்தான அதிபதி சனியின் மேல் புதனின் பார்வையோ அல்லது குருவின் பார்வையோ விழவில்லை . குரு ஜோதிடம் போன்ற கலையை கற்க உதவுபவர்.

  4 ஆதலால் படிப்பு ஸ்தான அதிபதி சனி , ஜோதிட அறிவை தரும் புதன் , கலையை கற்க உதவும் குரு ஆகிய மூன்றும் தொடர்பு பெறாததால் இவரால் இவருக்கு பிடித்த ஜோதிடத்தை கற்க முடியாமல் போனது.

  நன்றி

  இப்படிக்கு
  ப. சந்திரசேகர ஆசாத்
  கைபேசி : 8879885399

  ReplyDelete
 3. To learn astrology- Mercury should be in kendra where as in this horoscope it is in eighth house hence he could not become astrolger

  ReplyDelete
 4. Good morning sir the above person born on 22/05/1962 time 5.25pm .11th house corresponding to house of desire here eleventh house lord sun is in 8th house and 11th house having maandhi hence his desire not fullfilled.moreover for astrology second house should be strong here second house lord is in sixths to that bhava .

  ReplyDelete
 5. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் ஜோதிடம் கற்று கொள்வதற்கு ஒருவருக்கு அவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்க வேண்டும். அதாவது புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும். , அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருக்க வேண்டும் அல்லது புதன் வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும்.

  ஆனால் இந்த ஜாதகத்தில் புதன் லக்கினத்திற்கு எட்டில் மறைவு மேலும் சந்திர லக்கினத்திற்கு ஆறில் மறைவு. இதுதான் ஜாதகருக்கு ஜோதிடம் வராமல் போனதற்கான காரணம் அய்யா.

  ReplyDelete
 6. ஜோதிடர் ஆவதற்கு புதனே முக்கியமான கிரகம். புதன் சந்திர கேந்திரத்தில் இருப்பது அவசியம். அல்லது புதனும் சந்திரனும் ஆட்சி உச்சம் பெற்று லக்கினத்தோடு தொடர்பு பெற்றிருக்க வேண்டும். அடுத்த படியாக புதன் அல்லது சந்திரன் பத்தாம் வீட்டோடு தொடர்பு பெற்று அவரது தசா புக்திகள் வரும் போது தொழில் முறை ஜோதிடர் ஆகலாம். இவரது ஜாதகத்தில் லக்கினாதிபதி சுக்கிரன் புதனுடன் பரிவர்த்தனை பெற்று அவரை சந்திரன் பார்ப்பதால் சுக்கிர தசையில் இவருக்கு ஜோதிட ஈடுபாடும் , ஜோதிட அறிவும் கிடைத்திருக்கும். ஜோதிட ஆர்வத்திற்கு லக்கினம் அல்லது ராசியோடு கேதுவின் சம்பந்தம் இருப்பதும் ஒரு காரணம். ஜாதகர் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளார்.

  இவர் ஜாதகத்தில் புதன் லக்கினத்திற்கு எட்டிலும் ராசிக்கு ஆறிலும் மறைந்து இருக்கும் காரணத்தால் அவரது ஜோதிட ஆசை நிறை வேற வில்லை

  ReplyDelete
 7. பதில் உங்கள் முதல் பாடத்திலேயே உள்ளது.ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்ற நபராக விரும்பினாலும் அவருடைய ஜாதகத்தில் புதனும் சுக்ரனும் கெடாமல் இருக்க வேண்டும்.இந்த ஜாதகத்தில் புதன் எட்டாம் இடத்தில் மறைந்து அஷ்டமாதிபதி சுக்ரனோட பரிவர்த்தனை ஆனதோடு நவாம்சத்தில் சுக்ரன் மாந்தியோட அமர்ந்து இருப்பதும் காரணம்.பத்தாம் இடத்தில் ராகு உள்ளதால் வாயினால் சம்பாதிக்க கூடிய(வக்கீல்,சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,ஜோதிடர் )வேலைக்கு சரிபட்டு வரமாட்டார்.

  ReplyDelete
 8. ஐயா வணக்கம். ஜாதகத்தில் சூரியன் புதன் சேர்ந்தாலே ஜாதகருக்கு கண்டிப்பாக ஜோதிடம் வரும் ஆனால் அது கலையாக வரவேண்டுமென்றால் சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் சந்திரனுக்கு புதன் எட்டில் மறைந்து உள்ளார் அதனால் அவர் ஆசை நிறைவேறவில்லை.

  ReplyDelete
 9. ஜோதிடத்திற்கான காரகன் புதன் 8ல் மறைந்து சூரியனால் பாதிக்கப்பட்டது. வாக்கு ஸ்தானாதிபதி செவ்வாய் தன் வீட்டிற்கு ஆறில் நின்றது.பத்தாம் இடத்திற்கு சனி, செவ்வாய், கேது பார்வை பத்தாம் இடத்திலேயே ராகு.பத்தாம் இடத்திற்கு குரு புதன் சுக்கிரன் வளர்பிறைச்சந்திரன் ஆகியவற்றின் பார்வை கிடைத்திருந்தால் ஒரு வேளை ஜோதிடராக ஆகியிருக்கலாம்.

  ReplyDelete
 10. வாத்தியார் அவர்கள் லக்கினகாரகன் வலிமையினை நன்றாக விளக்கி உள்ளார் . சுக்கிரன், ஆட்சியுடமையுடன் பாக்கியஸ்தானத்தில் நின்று ஜாதகருக்கு தொழிலை வழங்கியுள்ளார்.

  கணிதக்காரகன் புதன் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தும் 8ம் வீட்டில் சுபர் பார்வை அற்று, மற்றும் தனது தசா காலத்தை ஜாதகருக்கு இதுவரை அளிக்கவும் இல்லை. குரு ஆனவர் 6ம் அதிபதியாக 9ம் பார்வையில் லக்கினத்தினை பாரத்து லக்கினாதிபதியின் ஆளுமைக்கு துணை செய்துள்ளார். அதனால் புதன் சாதகம் (சோதிடம்) அடிபட்டுப் போனது.

  ReplyDelete
 11. ஐயா கேள்விக்கான பதில்
  1 .வியாபாரத்திற்கு,விதைக்கு அதிபதி புதன்
  2 .லக்கினத்திற்கு எட்டில் அமர்ந்துள்ளார்
  3 நுண் அறிவிற்கு அதிபதி குரு ஐந்தில் அமர்ந்தாலும் ,
  இனத்திற்கு அதிபதி சனி அந்த இடத்திற்கு 12 இல் அமர்ந்துள்ளார்
  தங்களின் பதிலை ஆவலுடன்
  நன்றி

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com