மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.10.19

Astrology: Quiz: புதிர்: இடம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!!!


Astrology: Quiz: புதிர்: இடம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. சதய நட்சத்திரக்காரர். ஜாதகத்தில் ராஜ யோகம், கஜகேசரி யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற பல யோகங்கள் உள்ளன. அத்துடன் பத்தாம் வீட்டதிபதி லக்கினத்தில் வந்து
அமர்ந்திருந்தால் ஜாககருக்கு அவர் செய்யும் வேலையில் தொடர்ந்து
பல ஏற்றங்களைக் கொடுப்பார் என்பது ஜோதிட விதி. (If the lord of the 10th is powerful and is in lagna, the native will be successful in profession or business) ஆனால் ஜாதகருக்கு அவர் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் வேலை பார்த்தாரே தவிர எந்தவித முன்னேற்றமும் கிடைக்கவில்லை.

அடுத்து வந்த புதன் திசையில் சொந்தத் தொழிலைச் செய்யத்  துவங்கி பெரும் பொருள் குவித்தார் என்பது தனிக்கதை.  அந்தக்கதை நமக்கு வேண்டாம். துவக்கத்தில், அதாவது அவருடைய 46வது வயது வரை ஏன் அவர் வாழ்க்கை அவர் அப்போது பார்த்த வேலையால் செழுமை (ஏற்றம்) அடையவில்லை?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!

சரியான விடை 20-10-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

 1. ராகு+குரு தசை முடியறப்ப 22 வயசு அடுத்து வர்ற சனி தசை அஷ்டமாபதியோட பரிர்த்ததனையில இருக்கிறதாலேயும் தொழில் அதிபதி செவ்வாய் லக்னத்துல நீச்சமா இருக்கிறதாலேயும் லாப அதிபதி சுக்ரன் நீச்சமா இருக்கிறதாலேயும் சனி தசை முடிய 45 வயசு வரைக்கும் கஷ்டம்.அடுத்து வர்ற புதன் திசை சுக்ரனோட ராசியிலேயும் அம்சத்திலேயும் பரிவர்த்தனை ஆகி அதிர்ஷடத்தை கொடுத்திருக்கு .இதில புதன் வர்கோத்தமம் ஆகி இருக்கிறதால திசை அமோகமாக இருந்திருக்கும்.சரியாக இருந்தால் பாராட்டுக்கள் வாத்தியாருக்கே.தவறாக இருந்தால் குட்டுக்ககள் அனைத்தும் சரியாக படிக்காத எனக்கே

  ReplyDelete
 2. லக்கினாதிபதி 8ல் அமர்ந்தது. எட்டாம் அதிபதி லக்கினத்தில் அமர்ந்தது. இது பரிவர்தனை ஆனாலும் 6க்ஷ்8 காக்கா இருப்பதால் தைன்ய பரிவர்தனை.பலன் இல்லை. குரு கேதுவுடன் சேர்ந்து அமர்ந்தார். அவர் 6ம் அதிபதியும் ஆனார். எனவே 6ம் அதிபதி தசா, எட்டாம் அதிபதி தசா ஆகிய சனி குரு தசாக்கள் பலன் அளிக்கவில்லை.

  ReplyDelete
 3. வணக்கம் வாத்தியார். கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் அஷ்டமாதிபதியம் லக்னாதிபதியும் பரிவர்த்தனை பெற்றுள்ளது(1-8) இது ஒரு கேட்ட பரிவர்த்தனை அதனால் சனி 8ல் ஆட்சி பெற்ற 8ம் வீட்டில் இருந்தால் என்ன பலனோ அதை செய்தார். மேலும் செவ்வாய்வுடன் சேர்ந்து கெட்டு உள்ளார். அதனால் சனி தசை முழுவதும் நற்பலன் இல்லை. தனித்த புதன், சுக்கிரனுடன் (3,4வெற்றி, வித்தை) சுப பரிவர்த்தனை யாகி 10ம் இடத்தையும் எந்தவித பாபர் தொடர்பு இன்றி பார்ப்பதால். மிக யோக பலனை செய்தார். நன்றி.

  ReplyDelete
 4. வணக்கம்

  இடம் பார்த்து என்னை சேர்க்க மறந்தாய் கண்ணா ? என்ற கேள்விக்கான பதில்

  1 ஜாதகர் கடக லக்கினம் , சதய நக்ஷத்திரம் , கும்ப ராசி. பொதுவாக ஜாதகரின் வேலை மற்றும் வேலையின் பலன்களை பத்தாம் இடத்தையும் , பத்தாம் இடத்து அதிபதி நின்ற இடத்தையும் லக்கின அதிபதி நிலையையும் , பதினொன்றாம் இடத்தையும் பார்க்க வேண்டும்.

  2 இவற்றின் பத்தாம் இடத்து அதிபதி செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்து , கர்ம காரகனுடன் ( சனியுடன் ) சேர்ந்து அமர்ந்து உள்ளது. அதனால் வேலையில் தொடர்ந்து நீண்ட காலம் வேலை செய்யும் படி அமைந்தது.

  3 ஆனால் லக்கின அதிபதி சந்திரன் எட்டில் மறைந்து உள்ளதும் , பதினொன்றாம் இடத்து அதிபதி சுக்கிரன் நீசமாக சூரியனுடன் மூன்றாம் இடத்தில் அமர்ந்து அஸ்தங்கதம் ஆனதும் வேலை செய்யும் இடத்தில் வெற்றி அடைய செய்ய வில்லை. இதனால் வேலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சென்றது. மேலும் பதினொன்றாம் இடத்தில் ராகு நின்று வேலையினால் முன்னேற்றம் அடைவதை தடை செய்தார் . மேலும் இவர் தனது குரு தசையில் வேலையில் சேர்ந்தார் . குரு கேதுவுடன் அமர்ந்து நல்ல பலன்களை தர இயலவில்லை. மேலும் ஆறாம் இடத்து அதிபதியும் ஆவார். அடுத்து வந்த சனி தசை அதாவது எட்டாம் இடத்து அதிபதி தசையும் நல்ல பலன்களை தர இயலவில்லை. மேலும் சனி கடக லக்கினத்திற்கு அசுப கிரகமாகும். மேலும் பத்தாம் இடத்து அதிபதி செவ்வாயுடன் அமர்ந்து வேலையில் முன்னேற்றத்தை தராமல் தடை செய்தது. இது ராகு பார்வை வேறு பெற்று நிலைமை மோசமடைய செய்தது.

  4 ஆனால் இவரின் புதன் தசையில் அதாவது தனது 46 ஆம் வயதில் சொந்த தொழில் மூலம் முன்னேற்றம் கண்டார். ஏனென்றால் புதன் மற்றும் சுக்கிரன் (மூன்றாம் , பதினொன்றாம் இடத்து அதிபதிகள் ) பரிவர்த்தனையில் உள்ளது. அதனால் பரிவர்த்தனை பலன்களை அள்ளி தந்தது. செய்தொழில் மிகுந்த முன்னேற்றம் தந்தது. மூன்றாம் இடம் வெற்றி ஸ்தானம் ஆகும். பதினொன்றாம் இடம் லாப ஸ்தானம் ஆகும். இது நல்ல பலன்களை தந்தது .

  நன்றி
  இப்படிக்கு
  ப சந்திரசேகர ஆசாத்
  கைபேசி : 8879885399

  ReplyDelete
 5. ஐயா கேள்விக்கான பதில்
  1 .லக்கினாதிபதி எட்டில்
  2 .கேது கொடிபிடிக்கும் ஜாதகம்
  3 .பின்யோக ஜாதகம்

  3 .பத்தாம் அதிபதி செவ்வாய் எட்டாம் அதிபதி சனீஸ்வரனின் பிடியில்
  4 16 வயது வரை நீச ராகுவின் தசை
  5 .அடுத்து வந்த குரு தசைக்கு அதிபதி குரு நீச ராகுவின் பிடியில்
  6 .வியாபாரகரகன் புதன் நாலில்சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்று பத்தாம் வீட்டை பார்த்து அமர்ந்து மூன்றாம் இடத்திற்கான வெற்றியை கொடுத்திருக்கிறார் ,மேலும் இரண்டாம் அதிபதிபதி சூரியனும் மூன்றில்
  தங்களின் பதிலை ஆவலுடன்
  நன்றி


  ReplyDelete
 6. அய்யா லகினத்திற்கு 5-அம் அதிபதி தசை குரு ஆனவர் பகை கொண்டு கூடவே கேது கூட உள்ளார் . அது மட்டும் அல்லாதது லகினதிக்கு 7-க்கு குடைவான் 8-க்கு குடையவனும் லக்கனத்தில் , வியாபாரம் , திடீர் சரிவு , முன்னற்றம் இல்லாமை இருபதுக்கு இதும் ஒரு காரணம் .

  அதேபோல் 10-இடத்தை லகினமாக கொண்டு ஆராய்தல் 10-க்கு 10-அம் இடம் 7-அம் அதிபதி கேந்திரத்தில் சனி,செவ்வாய் சேர்க்கை இது சரி இல்லாத அமைப்பு. இதுவே காரணம் .

  நன்றி ஸ்ரீ குமரன்

  ReplyDelete
 7. எனது கணிப்பில் இவர் மிதுன லக்கினம் கும்ப ராசியில் பிறந்திருக்க கூடும் என்று தோன்றுகிறது.( செப் 28 1947 1.am) ஒரு 10 நிமிடம் பின்பு பிறந்திருக்க கூடும். கடக லக்கினமாக இருந்தால் பிற்பாடு வந்த விரயாதிபதி தசையில் பொருள் குவித்திருக்க வாய்ப்பு குறைவே. மிதுனலக்கினமாக இருப்பின். பத்தாம் வீட்டை குரு சூரியன் சுக்கிரன் பார்க்க பவுர்ணமிக்கு அருகில் இருக்கும் வளர்பிறை சந்திரன் தனாதிபதி ஒன்பதாம் இடத்தில அமர்ந்து ஜாதகரை செல்வந்தர் ஆக்கி இருக்க வேண்டும்.

  அதே போல் கடக லக்கினமாக இருப்பின் குரு தசை அவரை நல்ல நிலையில் அமர செய்திருக்கும்.மிதுன லக்கினமாக எடுத்து கொண்டால் ஆறில் அமர்ந்த குரு தசை மற்றும் அஷ்டமாதிபதி சனி தசை அவரை உழைக்க வைத்தது . நன்றி.

  ReplyDelete
 8. மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமகனார் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். தாங்கள் ஆய்வு ஜாதகஙகள் வெளியிடும் போது அதில் பிறந்த தேதியுடன் இருந்தால் என்னைப்போன்ற ஆரம்ப நிலையில் உள்ள ஜோதிடம் பயில்பவர்களுக்கு மிகவும் உதவியாக் இருக்கும். அடியேனுடைய வேண்டுகோளை செவி சாய்க்க வேண்டுகிறேன்.
  இப்படிக்கு

  MAHARAJAN M.A., B.L
  email id. maharajan007@gmail.com

  ReplyDelete
 9. வணக்கம் ஐயா🙏

  1. கடக இலக்கினம், கும்ப இராசி ஜாதகம்.

  2. ஜாதகர் அவருடைய 46வது வயது வரை அவர் வாழ்க்கை அவர் அப்போது பார்த்த வேலையால் செழுமை (ஏற்றம்) அடையாமைக்கு பிறந்தது முதல் நடந்த தசைகளே காரணம்.
  10.5 ஆண்டுகள் ராகு தசை, பின்பு
  16 ஆண்டுகள் குரு தசை
  19 ஆண்டுகள் சனி தசை
  பாக்கியாதிபதி குரு, ராசியிலும் அம்சத்திலும் கேது பிடியில் வலிமை இழந்து உள்ளார் அதனால் குருதசை மேன்மையை அளிக்கவில்லை அடுத்து அஷ்டமாதிபதியான சனி தசை அதனாலும் மேன்மை அடைய முடியவில்லை தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் லக்னம் அமர்ந்திருந்தாலும் நீசம் பெற்றுள்ளார் பகை மற்றும் அஷ்டமாதிபதி சனியின் சாரத்திலும் சேர்க்கையிலும் உள்ளதால் உன்னதமான உயர்வைத் தரவில்லை.

  3. அடுத்த வந்த தசை கேந்திர பலம், வர்கோத்தம பலம், பரிவர்த்தனை பலம் மற்றும் 5,10ஆம் அதிபதி செவ்வாய்யின் பார்வை பலமும் பெற்ற புதன் தசையால் செழுமை பெற்றார்.  பிழைகள் இருப்பின் பொருத் தருளுக....


  பணிவுடன்,
  முருகன் ஜெயராமன்,
  புதுச்சேரி.


  ReplyDelete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. "Astrology Quiz: புதிர்: இடம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!!!"
  வணக்கம்,
  கடக லக்னம், கும்ப ராசி ஜாதகர்.
  ஜாதகருக்கு அவர் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் வேலை பார்த்தாரே தவிர எந்தவித முன்னேற்றமும் கிடைக்கவில்லை.
  அவருடைய 46வது வயது வரை ஏன் அவர் வாழ்க்கை அவர் அப்போது பார்த்த வேலையால் செழுமை (ஏற்றம்) அடையவில்லை.
  ஜாதகப்படி அதற்கான காரணம்....
  1) லக்னாதிபதி சந்திரன் 8ல் மறைவு.
  2) யோகாதிபதியும் 10மிட அதிபதியுமான செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து நீசமடைந்துள்ளார்.
  3) கர்மகாரகனும், அட்டமாதிபதியுமான சளியும் லக்னத்தில் அமர்ந்து நீச செவ்வாயுடன் கூட்டணியிலுள்ளார்.
  4) ஜாதகருக்கு 27 வயதில ஆரம்பமான சனி தசை 46 வயது வரை நடைபெற்றது.
  மேற்கண்ட காரணங்களால் அவர் வாழ்க்கையில் 46 வயது வரை எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
  -இரா.வெங்கடேஷ்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com