மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.11.17

யாரை நீங்கள் நியமிக்க முடியாது?


யாரை நீங்கள் நியமிக்க முடியாது?

மனவளக் கட்டுரை

பணம் பணம் பணம் என்று அதை நோக்கியே நேர் வ்ழியிலும் சரி, குறுக்கு வ்ழியிலும் சரி செயல்படும் நண்பர்களுக்கு..

உலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவ்னத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி
56 வ்யதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தியை அவரின் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்திச் சொல்கிறேன்..

"வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது
என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம்.
உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.
ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் 
வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.

எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது.

வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.

நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும்.

முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும்.

செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான்.

நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும்
30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.

ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான குடும்பத்தினர் அனவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி. அது நீங்கள் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் எந்தப் பொருளிலும் இல்லை.

பின் குறிப்பு:
ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த போது அவர் விட்டுச் சென்ற சொத்துக்களின் மதிப்பு 2011ல் 10.2 பில்லியன் டாலர்ஸ்!
( இந்திய மதிப்பில் அறுபத்து ஐந்தாயிரம் கோடிக்கு மேல்)

படித்தேன்: உங்களுக்காக பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

  1. Good morning sir,it's real fact, excellent sir, thanks for posting valuable message vazhga valamudan sir

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,எத்துனை அனுபவங்களை படித்தாலும்,ஞானிகளை தவிர மற்றவர்களுக்கு மரண படுக்கையில்தான் புரிகின்றன.சிலருக்கு அதுவும் புரிவதில்லை.நன்றி.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Nice and its fact....

    Thanks for sharing...

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. ஐயா

    இது ஒரு வதந்தி

    https://www.snopes.com/steve-jobs-deathbed-speech/

    ReplyDelete
  5. ஐயா, இந்தப் பதிவைக் காப்பி பேஸ்ட் பண்ணி என்னுடைய ஒரு தளத்தில் என் நினைவிற்காக பதிந்து வைத்தேன். அது எப்படியோ தமிழ் மணத்தில் வந்து விட்டது. மன்னிக்கவும். தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தால் பதிவை நீக்கி விடுகிறேன்.

    ReplyDelete
  6. அவர் கூறும் உண்மையான மகிழ்ச்சி பற்றிய கூற்று...புதிதானது அல்ல என்றாலும் ,.. மனிதமும் உறவுகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு வெற்றியாளராக வழி மொழிந்துள்ளார்.

    ReplyDelete
  7. நிதர்சனமான உண்மை

    ReplyDelete
  8. வணக்கம் குருவே!
    அந்த ஆத்மாவின் உண்மையான தவிப்பிபின் நிலையை எண்ணிக்
    கண்ணீர் சிந்தினேன்

    ReplyDelete
  9. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir,it's real fact, excellent sir, thanks for posting valuable message vazhga valamudan sir/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  10. ///Blogger adithan said...
    வணக்கம் ஐயா,எத்துனை அனுபவங்களை படித்தாலும்,ஞானிகளை தவிர மற்றவர்களுக்கு மரண படுக்கையில்தான் புரிகின்றன.சிலருக்கு அதுவும் புரிவதில்லை.நன்றி.////

    உண்மைதான். ஆனால் கர்மகாரகன் சனீஷ்வரன் புரிய வைத்துத்தான் கூட்டிக்கொண்டு போவான்!!!!

    ReplyDelete
  11. ///Blogger GAYATHRI said...
    Excellent Sir,////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  12. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice and its fact....
    Thanks for sharing...
    With kind regards,
    Ravi-avn////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  13. ///Blogger Parthiban Nagarajan said...
    ஐயா
    இது ஒரு வதந்தி
    https://www.snopes.com/steve-jobs-deathbed-speech/////

    இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் முக்கியமானவை. அதை மட்டும் பார்ப்போம். நன்றி!!!

    ReplyDelete
  14. /////Blogger ப.கந்தசாமி said...
    ஐயா, இந்தப் பதிவைக் காப்பி பேஸ்ட் பண்ணி என்னுடைய ஒரு தளத்தில் என் நினைவிற்காக பதிந்து வைத்தேன். அது எப்படியோ தமிழ் மணத்தில் வந்து விட்டது. மன்னிக்கவும். தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தால் பதிவை நீக்கி விடுகிறேன்./////

    எனக்கு என்ன ஆட்சேபனை இருக்க முடியும்? அப்படியே இருக்கட்டும். நல்ல செய்திகளை எத்தனை முறைகள் வேண்டுமென்றாலும் பதிவிடலாம். உங்களின் தகவலுக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  15. Blogger Thanga Mouly said...
    அவர் கூறும் உண்மையான மகிழ்ச்சி பற்றிய கூற்று...புதிதானது அல்ல என்றாலும் ,.. மனிதமும் உறவுகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு வெற்றியாளராக வழி மொழிந்துள்ளார்.

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  16. /////Blogger csubramoniam said...
    நிதர்சனமான உண்மை////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  17. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அந்த ஆத்மாவின் உண்மையான தவிப்பிபின் நிலையை எண்ணிக்
    கண்ணீர் சிந்தினேன்/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com