மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.8.17

Astrology: ஜோதிடம்: அரிஷ்ட யோகம் - (படுக்கவைக்கும் யோகம்)


Astrology: ஜோதிடம்: அரிஷ்ட யோகம் - (படுக்கவைக்கும் யோகம்)

யோகங்களைப் பற்றிய பாடங்கள்!!!!

நாமாகப் படுத்தால் அதற்கு அர்த்தம் வேறு. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் நாம் படுக்க நேர்ந்தால்
அதன் பொருள் வேறு.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைப் படுக்க வைக்கும் யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடம் கீழே உள்ளது.

இவைகள் பொது விதிகள். தனிப்பட்டவர்களின் ஜாதகங்களுக்கு, சுபக்கிரகங்களின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும்.
ஆகவே அவசரப்பட்டு முடிவிற்கு வராதீர்கள். அதேபோல ஹோம் ஒர்க் நோட்டு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, என்னுடைய
ஜாதகத்தை வைத்து இதற்கு விளக்கத்தை எழுதிக்கொடுங்கள் சார் என்று யாரும் கேட்காதீர்கள். உங்களுக்கு நீங்களே
பாருங்கள். இவை எல்லாம் மேல் நிலைப் பாடங்கள். அதை நினைவில் வையுங்கள்!
----------------------------------------------------------
அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும்.

அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும்.

உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அரிஷ்ட யோகம் 1
(அவயோகம்தான்)
தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு!

1
லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில்
இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga:
The Lagna lord is in conjunction or mutual aspect with the 6th, or the 8th, or the 12th house lords (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information)
-----------------------------------------------------------------
2.
எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga The 8th house lord is conjunct or in mutual aspect with the lord of the 12th house lord (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information).
--------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்
================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. Good morning sir,oh shocking to hear Arista yogam thanks sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. Good morning sir,
    I have this yoga, in 5th house
    I have sukran(lagnathipathi as well as 6th house lord), guru 8th & 11th house Lord. But sani is also along with them(9th & 10th lord). when it will happen u haven't mentioned sir. Thanks for your previous reply.

    ReplyDelete
  3. Sir, If 8th house Lord has joined with 12th house Lord it will be treated as "Vipareetha raja yogam" is it not?. Then how come you say it will give illness to the individual. Please clarify.

    Mohan

    ReplyDelete
  4. 1. When 8 and 12 lord are conjucting, it can produce powerful vibreetaRaaja yogas.
    2. When this yoga is present with either way, but when Lagna is fortified with presence of Laguna lord or benefit aspect or vargotama or subakarthari, how does this conflicting yogas would perform in predicting?

    In analysis, does Lagna or lagna lord says more about physical illness?

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்
    அருமை
    கண்ணன்

    ReplyDelete
  6. 8th house Lord joined with 12th house lord and sits in 6 or 8 or 12, then only Vipareeta Raja yoga is active.

    ReplyDelete
  7. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir,oh shocking to hear Arista yogam thanks sir vazhga valamudan sir////

    எதற்கு அதிர்ச்சி? ஜாதகத்தில் உள்ள மற்ற யோகங்களையும் பாருங்கள் சண்முகசுந்தரம்!

    ReplyDelete
  8. //////Blogger gokila srinivasan said...
    Good morning sir,
    I have this yoga, in 5th house
    I have sukran(lagnathipathi as well as 6th house lord), guru 8th & 11th house Lord. But sani is also along with them(9th & 10th lord). when it will happen u haven't mentioned sir. Thanks for your previous reply.//////

    கிரகங்கள் அதனதன் மகா திசை மற்றும் புத்திகளில் (Major Dasa & Sub period) தான் பலன்களைக் கொடுக்கும். தீய பலன்களை இறைவழிபாடுடன் எதிர் கொள்ளலாம். God will confer withstanding power தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்!!!!

    ReplyDelete
  9. //////Blogger MOHAN SETHURAMAN said...
    Sir, If 8th house Lord has joined with 12th house Lord it will be treated as "Vipareetha raja yogam" is it not?. Then how come you say it will give illness to the individual. Please clarify.
    Mohan//////

    8 & 12ம் வீட்டு அதிபதிகள் சுபக் கிரகங்களாக (Lords of Dushtasthanas as functional benefics) இருந்தால் நன்மையான பலன்களும், அவைகளே தீய கிரகங்களாக இருந்தால் (Lords of Dushtasthanas as functional malefics) தீமையான பலன்களே நடைபெறும்.
    The word, Viparita, in Sanskrit means the "Opposite", unexpected because the Viparita Raja yoga is basically a planetary combination/association of the lords of Dushtsthanas, which lords otherwise by virtue of their being functional malefics, during the course of their own dashas and also periodic unfavourable transits, give much pain, hardship and losses.

    ReplyDelete
  10. /////Blogger selvaspk said...
    1. When 8 and 12 lord are conjucting, it can produce powerful vibreetaRaaja yogas.
    2. When this yoga is present with either way, but when Lagna is fortified with presence of Laguna lord or benefit aspect or vargotama or subakarthari, how does this conflicting yogas would perform in predicting?
    In analysis, does Lagna or lagna lord says more about physical illness?/////

    8 & 12ம் வீட்டு அதிபதிகள் சுபக் கிரகங்களாக (Lords of Dushtasthanas as functional benefics) இருந்தால் நன்மையான பலன்களும், அவைகளே தீய கிரகங்களாக இருந்தால் (Lords of Dushtasthanas as functional malefics) தீமையான பலன்களே நடைபெறும்.
    The word, Viparita, in Sanskrit means the "Opposite", unexpected because the Viparita Raja yoga is basically a planetary combination/association of the lords of Dushtsthanas, which lords otherwise by virtue of their being functional malefics, during the course of their own dashas and also periodic unfavourable transits, give much pain, hardship and losses.

    ReplyDelete
  11. /////Blogger Kannan L R said...
    ஐயா வணக்கம்
    அருமை
    கண்ணன்/////

    நல்லது. நன்றி!!!

    ReplyDelete
  12. ஒரே கிரகம் லக்னாதிபதியாகவும் 6 அல்லது, 8 அல்லது 12ம் அதிபனாகவும் இருப்பவரின் உடல்நிலை எவ்வாறு இருக்கும்? எடுத்துக்காட்டாக விருச்சிகத்திற்கு மேஷம் 6ம் இடம், மேஷத்திற்கு விருச்சிகம் 8ம் இடம். செவ்வாய் 6 அல்லது 8ல் இருந்தால்?

    ReplyDelete
  13. //////Blogger KJ said...
    8th house Lord joined with 12th house lord and sits in 6 or 8 or 12, then only Vipareeta Raja yoga is active./////

    விபரீத ராஜ யோகம் என்பது நீங்கள் சொல்லும்படி அமர்வதாலும் உண்டாகும் ஒருவரையொருவர் பார்ப்பதாலும் உண்டகும்.. அவைகள் அந்த இடங்களுக்கு அதிபதி என்னும் போது முதல் நிலை ராஜ யோகம் உண்டாகும்.
    இதற்கு உதாரணமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் ஜாதகத்தைச் சொல்லலாம். அவர் மிதுன லக்கினக்காரர். அவருடைய ஜாதகத்தில் 6ம் அதிபதி செவ்வாய் 8ம் வீட்டில் ராகுவுடன் சேர்ந்து அமர்ந்துள்ளார், செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார், வலிமை பெற்று முதல்நிலை ராஜ யோகத்தை அவருக்கு வழங்கினார்

    ReplyDelete
  14. /////Blogger kmr.krishnan said...
    ஒரே கிரகம் லக்னாதிபதியாகவும் 6 அல்லது, 8 அல்லது 12ம் அதிபனாகவும் இருப்பவரின் உடல்நிலை எவ்வாறு இருக்கும்? எடுத்துக்காட்டாக விருச்சிகத்திற்கு மேஷம் 6ம் இடம், மேஷத்திற்கு விருச்சிகம் 8ம் இடம். செவ்வாய் 6 அல்லது 8ல் இருந்தால்?/////

    இரண்டு பாவங்களுக்கான (அதாவது 6ம் பாவம் & 8ம் பாவம்) பலன்களையும் கொடுக்க அவர் கடமைப்பட்டவர். தீமையான தசாபுத்திகளிலும், வலுவில்லாத கோச்சார இடங்களிலும் அவர் எட்டாம் இடத்திற்கான பலன்களையும் கொடுப்பார், கொடுக்காமல் விடமாட்டார். நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  15. Thanks for your post. How long this bala-arista yogam is effective.

    ReplyDelete
  16. ////Blogger karthikeyan said...
    Thanks for your post. How long this bala-arista yogam is effective.////

    பாலரிஷ்ட தோஷம் என்பது, குழந்தைகளுக்கு அவர்களுடைய குழந்தைப் பருவம் வரை தீவிரமாக வேலை செய்யும். பத்து வயதுவரை என்று வைத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com