மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.10.13

என்ன பாட்டுடா சாமி!!!!

 

முக்கிய அறிவிப்பு:

நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று இன்று வரவேண்டிய புதிர் பகுதி, ஒரு நாள் தள்ளிவைக்கப் பெற்றிருக்கிறது. அது நாளை காலை வெளியாகும். அனைவரும் பொறுத்தருள்க!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------------------------

என்ன பாட்டுடா சாமி!!!! 

சில பாடல்களைக் கேட்கும்போது, அவை நம்மை உள்ளே இழுத்துக் கொண்டுவிடும். பாடலின்  தாக்கம் அன்று முழுவதும் நம் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும்.

அப்படித் தாக்கம் நிறைந்த தத்துவப் பாடல் ஒன்றை, உங்களுக்காகப் பதிவிட்டுள்ளேன். கவிஞர் வாலி அவர்கள் எழுதிய இந்தப் பாடல், குணா என்னும் திரைப்படத்தில் வந்ததாகும். 5.11.1991ல்  வந்த படம். சுமார் 22 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாடல் புதிதாகவே உள்ளது. கேட்கக்
கேட்கப் புதிதாகவே உள்ளது. அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு!

பாடலை உயர்த்திப் பிடிப்பது திருவாளர் இளையராஜா அவர்களின் வளமான குரல் என்றால் அதை மறுப்பதற்கில்லை.

பாடலைக் கேட்டுப் பாருங்கள். வரிக்கு வரி கேளுங்கள். என்னவொரு அற்புதமான வரிகள்.அற்புதமான பாடல்.

அன்புடன்
வாத்தியார்

------------------------------------
பாடலின் வரி வடிவம் கீழேற் உள்ளது. அதைத் தொடர்ந்து ஒலி, மற்றும் ஒளி வடிவமும் உள்ளது.

அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு

அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு - ஞானப் பெண்ணே
சக்கையாக போகும் கரும்பு
பந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

(அப்பன் என்றும் அம்மை என்றும் .)..

குத்தம் குறை ஏதும் அற்ற ஜீவன் இங்க யாரடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
சிவனைக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப்பார்வை ஏதடா

ஆதி முதல் அந்தம் உன் சொந்தம்
உன் பந்தம் நீ உள்ளவரைதான்
வந்து வந்து கூடும் கூட்டம்தான்
விட்டோடும் ஓர் சந்தைக்கடைதான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா

தட்டுக் கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்று விழும்

(அப்பன் என்றும் ...)
++++++++++++++++++++++++++++++++++++++++++
 Our sincere thanks to the person who uploaded this song in the netவாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

19 comments:

  1. வாலி --நீ வாழி --வெளியிட்ட உங்களுக்கு நன்றி.இளையராஜா ராஜா ராஜாவல்ல பேரரசர்.

    ReplyDelete
  2. அருமையான பாடல் ஐயா... பாடல் வரிகளுக்கு நன்றி...

    ReplyDelete
  3. அருமையான பதிவுக்கு
    அன்பான வணக்கம்

    இசையென்னும் காட்டுக்கு
    இவர் தான் "ராஜா"

    எந்த "மானும்"
    எப்போதும் ராஜாவாக முடியாது

    ReplyDelete
  4. வாலியின் எழுத்துக்களும் இளையராஜாவின் அருமையான இசையும், படமாக்க பட்டிருக்கின்ற விதமும் நெத்தி அடியாக இருக்கிறது ! பல தடவை இந்த பாட்டை கேட்டிருக்கிறேன். ஆனாலும், இன்று புது அர்த்தங்களுடன் தொனிக்கிறது !.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,

    வாலி ஐயாவின் பாடல் பதிவிற்கு நன்றி, நாளைய பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி

    ReplyDelete
  6. அய்யா,
    திரு. KMR.Krishnan அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க
    வரும் சூரியனின் உதயத்தை நிறுத்திவைக்க முடியாது!!!
    இரவின் நிலவை நிறுத்தி வைக்க முடியாது!!!
    ஆனால் நமது வகுப்பரையின் புதிர் போட்டியை நிறுத்தி வைக்க முடியும் என்று நிருபிதுவிட்டிர்கள்!!!!

    ReplyDelete
  7. Dear Sir,
    i have seen the date error in our class room site and i sent the e-mail to(classroom2007@gmail.com) you with a screen shot.

    ReplyDelete
  8. ல.ரகுபதி
    மதிப்பிற்க்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். மனித மனசாட்சியினை புடம்போடும் கருத்தாழமிக்க இப்பாடலை மீண்டும் நினைவூட்டியதர்க்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  9. ////Blogger Sethuraman Anandakrishnan said...
    வாலி --நீ வாழி --வெளியிட்ட உங்களுக்கு நன்றி.இளையராஜா ராஜா ராஜாவல்ல பேரரசர்.////

    இசைஞானி என்ற பட்டம்தான் அவருக்கு மிகவும் பொருத்தமானது!

    ReplyDelete
  10. /////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    அருமையான பாடல் ஐயா... பாடல் வரிகளுக்கு நன்றி.../////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger Sattur Karthi said...
    Good Morning Sir!/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  12. ////Blogger வேப்பிலை said...
    அருமையான பதிவுக்கு
    அன்பான வணக்கம்
    இசையென்னும் காட்டுக்கு
    இவர் தான் "ராஜா"
    எந்த "மானும்"
    எப்போதும் ராஜாவாக முடியாது/////

    ஒவ்வொருக்கும் ஒரு திறமை உள்ளது. திறமைசாலிகளை மான், மயில் குயில் என்று ஒப்பீடு செய்யக்கூடாது! எல்லாம் இறையருள்!


    ReplyDelete
  13. /////Blogger murali krishna g said...
    வாலியின் எழுத்துக்களும் இளையராஜாவின் அருமையான இசையும், படமாக்க பட்டிருக்கின்ற விதமும் நெத்தி அடியாக இருக்கிறது ! பல தடவை இந்த பாட்டை கேட்டிருக்கிறேன். ஆனாலும், இன்று புது அர்த்தங்களுடன் தொனிக்கிறது !/////.

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  14. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா,
    வாலி ஐயாவின் பாடல் பதிவிற்கு நன்றி, நாளைய பாடத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி/////

    பாடம் எங்கே போய்விடப் போகிறது? நிச்சயம் பாடங்கள் தொடர்ந்து வரும். நடுவில் இதுபோன்ற பதிவுகள் ஒரு மாறுதலுக்காக சகோதரி!

    ReplyDelete
  15. /////Blogger C.Senthil said...
    அய்யா,
    திரு. KMR.Krishnan அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க
    வரும் சூரியனின் உதயத்தை நிறுத்திவைக்க முடியாது!!!
    இரவின் நிலவை நிறுத்தி வைக்க முடியாது!!!
    ஆனால் நமது வகுப்பறையின் புதிர்ப் போட்டியை நிறுத்தி வைக்க முடியும் என்று நிருபித்துவிட்டீர்கள்!!!!/////

    வகுப்பறை சாதாரணமானது. அதை மிகைப் படுத்திச் சொல்கிறீர்கள். யார் நினைத்தாலும் காரணத்தை எழுதினால், அவர்களுக்காக நிறுத்திவைக்க முடியும். இதை உங்களுக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

    ReplyDelete
  16. ////Blogger C.Senthil said...
    Dear Sir,
    i have seen the date error in our class room site and i sent the e-mail to(classroom2007@gmail.com) you with a screen shot.////

    அது தானாகவே அப்படி வருகிறது. தானாகவே மாறிவிடுகிறது. இப்போது பாருங்கள். கோடிங்கில் ஏதோ பிரச்சினை. கோடிங்கைப் பற்றி (html coding) எனக்கு என்ன தெரியும்? பொறுத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  17. ////Blogger pathi raghu said...
    ல.ரகுபதி
    மதிப்பிற்க்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். மனித மனசாட்சியினை புடம்போடும் கருத்தாழமிக்க இப்பாடலை மீண்டும் நினைவூட்டியதர்க்கு நன்றி ஐயா.////

    உங்களுடைய மனம் நிறைவான, சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே1!

    ReplyDelete
  18. இளையராஜாவின் குரலில் அற்புதமான தத்துவ பாடலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com