மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.10.13

Astrology: Quiz புதிர் - பகுதி 13 வித்தியாசமான கேள்விகளுடன்

 

 Astrology: Quiz புதிர் - பகுதி 13 வித்தியாசமான கேள்விகளுடன்

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி பதிமூன்று

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரணப் பெண்மணிதான்!



கேள்விகள்

1.  இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?
2. ஆகிவிட்டதென்றால், அது இந்தப் பெண்ணிற்குக் காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நிச்சயித்தபடி திருமணமா?
3. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்குமா?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=====

54 comments:

  1. 1) The girl didn't get married due to the following reasons:
    a) Mars and Rahu two malefics on 7th place. Ketu's aspect on 7th place.
    b)7th lord debilitated in 8th house.
    and caught in papakartari yog.
    c)Saturn's 3rd aspect on 2nd house,Mars 8th aspect on 2nd house. Saturn's malefic aspect on kalatrakaraka venus, venus also destroyed by its association with another malefic Sun.
    d) Kalathra stanadipathi Guru is also pathakadipathi for mithuna lagna aspecting the 2nd house of kutumba sthana.
    e) Lagnathipathi is also debilitated in 10th house.
    f) Parivarthana between 9th lord and 12th lord is also week.
    There is literally no saving grace in terms of marriage aspect.



    ReplyDelete
  2. 1.திருமணம் ஆகிவிட்டது. 33 வயதில் திருமணம் ஆகியிருக்கும். அதாவது செவ்வாய் தசா முடிந்தபிறகு, கால சர்பதோஷத்தின் வீரியம் குறைந்தபிறகு திருமணம் ஆகியிருக்கும்.ராகு தசா குருபுக்தியில் திருமணம்.7ம் இடம் 33 பரல்.

    2. 7ம் இடத்திற்கு உரிய குருஜி 8ல் அமர்ந்ததால் திருமணம் செய்தவரை திருமணத்திற்கு முன்பே அறியும் வாய்ப்பு உண்டு.எனவே காதல் திருமண்ம் ஆக இருக்கலாம்.4ம் இடத்து புதன் நீசம், 9ம் இடத்து சனி 12ல் ஆகியவை பெற்றொரிட‌த்தில் சுமுக உறவைக் குறிக்கவில்லை. எனவே பெறோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணமாக இருக்கலாம்.

    3.திருமண‌ வாழ்வில் பல சிரமங்கள் இருக்கும்.சுக்கிரன் அஸ்தங்கதம், புதனும் அஸ்தங்கதம், 7ம் அதிபன் குருவை சுற்றி அசுபர்கள். எனவே திருமணத்தில் பிரச்சனைகள் உண்டு. ஆனாலும் குரு சந்திரன் ஒருவருக்கு ஒருவர் கேந்திரம் என்பதால் பிரச்சனைகளை எதிர்கொள்ளூம் சக்தி உண்டு.

    தசா இருப்பைக் கூறாததால் சரியான நட்சத்திரம் தெரியவில்லை. அஸ்வினியா, பரணியா,கிருத்திகை முதல் பாதமா?

    9 மார்ச் 1973ல் மதியம் 2.30 போலப் பிறந்தவர்.

    ReplyDelete
  3. Laknathipathi Neecham, Rahu+Mars in 7th house, guru also neecham. Not sure sukran is asthangam or not. Kala sharba dosam with Kethu starting...
    2nd lord moon is with subha karthari yogam and Guru looks at 2nd house. So it is possible she got married (But based on the first line she may not have married at all).
    It is arranged marrage (if she got married).
    Lot of problems with marrage (if she got married).

    ReplyDelete
  4. 1) 1973-ஆம் ஆண்டு மாசி மாதம், (அஸ்வினி, பரணி அல்லது கார்த்திகை முதல் பாதத்தில்) பிறந்த இப்பெண்மணிக்குத் திருமணம் ஆகியிருக்கும் (வர்க்கோத்தம சுக்கிரன், நட்பு ராசியில் - ஒன்பதாம் இடத்தில் அமர்ந்துள்ளார். சுக்கிரனுடைய பரணி நட்சத்திரமாக இருந்தால் இன்னும் பலம் அதிகம். சுக்கிரனின் பரல்கள் 5; களத்திரஸ்தான பரல்கள் 33)

    2) சுக்கிரன் பலமாயும், (ஏழாம் அதிபதி) குரு நீச்சமாகி, மூன்று பரல்களுடன் மறைவிடத்தில் இருப்பதாலும் காதல் திருமணம்.

    3) ஏழில் இரண்டு கொடிய கிரகங்கள் சுபர்கள் பார்வையின்றி இருப்பதாலும்; ஏழாமதிபன் எட்டில் சுபகிரகங்களின் பார்வையின்றி மறைவானதாலும் (ஆனாலும் மாங்கல்யஸ்தானமாதலால், அதிலிருக்கும் குரு நீச்சமானாலும் மாங்கல்ய பலமுண்டு); மேலும் களத்திர காரகன், மூன்றிற்குரிய பகைவன் சூரியனுடன் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்ததால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சி அற்றதாக இருக்கும்.

    -நன்றி ஐயா
    ஸ்ரீனிவாச ராஜுலு

    ReplyDelete

  5. லக்கினத்தில் கேது. அப்படியென்றால் ஏழில் ராகு. லக்னத்தையும் இரண்டாம் வீட்டையும் செவ்வாய் பார்க்கிறார். ஆறாம் வீட்டுக் காரர் ஏழாம் வீட்டில்.

    லக்கினத்துக்கு ஏழாம் அதிபன் எட்டாம் வீட்டில், பாபகர்த்தாரி யோகம். இரண்டாம் அதிபன் சூரியன், பன்னிரண்டாம் அதிபனுடன், அதுவும் சனியின் வீட்டில்.

    இரண்டாம் அதிபன் பதினொன்றில்.

    திருமணம் மறுக்கப் பட்ட ஜாதகம் எனப் பார்த்த முதல் பார்வையில் படுகிறது என்றாலும் சில அமைப்புகளை பார்த்தால் கஷ்டப்படுவதர்காகவே திருமணம் ஆகும் ஜாதகம் என தோன்றி, வருத்தமாக உள்ளது.

    திருமணம் ஆனால் அது காதல் திருமணமாக இருக்கும். நாலாம் வீட்டுக் காரன் நீசம் அடைந்ததாலும், புத்திகாரகனாகவும் அவர் இருப்பதாலும் அவர் முடிவால் அவர் வம்பை வாங்க இயலும். சுகஸ்தானாதிபதி புதன் நீசம், பத்தில் + ராசிக்கு இரண்டாம் மற்றும் ஏழாம் வீட்டுக் காரன் சுக்கிரன் ராசிக்கு ஐந்தாம் வீட்டுக் காரர் சூரியனரோடு பதினொன்றில், காதலால் திருமணத்தைக் காட்டும் வகையில் உள்ளார்.

    திருமணம் ஆகி இருப்பின், மணவாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கும் எனப் படுகிறது. இவருக்கும் கணவருக்கும் ஓயாத பிரச்சினைகள் வரும் சந்தகன்களால் சண்டை வரும் எனபது தெளிவாக ராகுவால் தெரிகிறது.

    சூரியனோடு சுக்கிரன் இணைந்திருக்கும் அமைப்பு மணவாழ்க்கை தாம்பத்திய சந்தோஷத்துக்கு நல்லதல்ல. திருப்தி இல்லாத நிலை இருக்கும். இது முன்கூறிய பிரச்சினைகளுக்கு தூபம் போடும். பிரிவில் கொண்டு போய் விடும்.

    கடுமையான செவ்வாய் தோஷமும், ஏழாம் வீட்டு அமைப்பும் ஏழாம் அதிபன் குருவின் நிலையம் நாலாம் வீட்டு + லக்கினாதிபதி புதன் நீசம் ஆனதும் கணவனைப் பிரிந்த (இழந்த?) வாழ்வை காட்டுகின்றன.

    திருமணம் மறுக்கப் பட்ட ஜாதகத்தில் ஒன்றிரண்டு முட்டுக் கட்டைகள் போதும். திருமணமாகி இன்னல்கள் அனுபவிக்க வேண்டும் என்ற ஜாதகத்தில் தான், இவ்வளவு நெகடிவ் விஷயங்கள் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    குடும்ப ஸ்தானத்தை + பன்னிரண்டில் எட்டாம் அதிபனை + நாலாம் வீட்டை குரு பார்ப்பதாலும், ஏழில் உள்ள செவ்வாய் ஆறாம் அதிபனாக மட்டும் அல்லாது பதினொன்றாம் வீட்டுக் காரனாகவும் இருப்பதாலும், தட்டுத் தடுமாறி திருமணம் நடக்கலாம். நடந்தால் இன்னல்களும் பூசல்களும் நிறைந்த வாழ்க்கை.

    மத்திம ஆயுள்.

    ReplyDelete
  6. ஸ்திரீ ஜாதகம்.

    கஷ்டமான ஜாதகம்.

    காலசர்ப்ப தோஷம்.

    லக்கினத்தில் கேது. அப்படியென்றால் ஏழில் ராகு. லக்னத்தையும் இரண்டாம் வீட்டையும் செவ்வாய் பார்க்கிறார். ஆறாம் வீட்டுக் காரர் ஏழாம் வீட்டில்.

    லக்கினத்துக்கு ஏழாம் அதிபன் எட்டாம் வீட்டில், பாபகர்த்தாரி யோகம். இரண்டாம் அதிபன் சூரியன், பன்னிரண்டாம் அதிபனுடன், அதுவும் சனியின் வீட்டில்.

    இரண்டாம் அதிபன் பதினொன்றில்.

    திருமணம் மறுக்கப் பட்ட ஜாதகம் எனப் பார்த்த முதல் பார்வையில் படுகிறது என்றாலும் சில அமைப்புகளை பார்த்தால் கஷ்டப்படுவதர்காகவே திருமணம் ஆகும் ஜாதகம் என தோன்றி, வருத்தமாக உள்ளது.

    திருமணம் ஆனால் அது காதல் திருமணமாக இருக்கும். நாலாம் வீட்டுக் காரன் நீசம் அடைந்ததாலும், புத்திகாரகனாகவும் அவர் இருப்பதாலும் அவர் முடிவால் அவர் வம்பை வாங்க இயலும். சுகஸ்தானாதிபதி புதன் நீசம், பத்தில் + ராசிக்கு இரண்டாம் மற்றும் ஏழாம் வீட்டுக் காரன் சுக்கிரன் ராசிக்கு ஐந்தாம் வீட்டுக் காரர் சூரியனரோடு பதினொன்றில், காதலால் திருமணத்தைக் காட்டும் வகையில் உள்ளார்.

    திருமணம் ஆகி இருப்பின், மணவாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கும் எனப் படுகிறது. இவருக்கும் கணவருக்கும் ஓயாத பிரச்சினைகள் வரும் சந்தகன்களால் சண்டை வரும் எனபது தெளிவாக ராகுவால் தெரிகிறது.

    சூரியனோடு சுக்கிரன் இணைந்திருக்கும் அமைப்பு மணவாழ்க்கை தாம்பத்திய சந்தோஷத்துக்கு நல்லதல்ல. திருப்தி இல்லாத நிலை இருக்கும். இது முன்கூறிய பிரச்சினைகளுக்கு தூபம் போடும். பிரிவில் கொண்டு போய் விடும்.

    கடுமையான செவ்வாய் தோஷமும், ஏழாம் வீட்டு அமைப்பும் ஏழாம் அதிபன் குருவின் நிலையம் நாலாம் வீட்டு + லக்கினாதிபதி புதன் நீசம் ஆனதும் கணவனைப் பிரிந்த (இழந்த?) வாழ்வை காட்டுகின்றன.

    திருமணம் மறுக்கப் பட்ட ஜாதகத்தில் ஒன்றிரண்டு முட்டுக் கட்டைகள் போதும். திருமணமாகி இன்னல்கள் அனுபவிக்க வேண்டும் என்ற ஜாதகத்தில் தான், இவ்வளவு நெகடிவ் விஷயங்கள் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

    குடும்ப ஸ்தானத்தை + பன்னிரண்டில் எட்டாம் அதிபனை + நாலாம் வீட்டை குரு பார்ப்பதாலும், ஏழில் உள்ள செவ்வாய் ஆறாம் அதிபனாக மட்டும் அல்லாது பதினொன்றாம் வீட்டுக் காரனாகவும் இருப்பதாலும், தட்டுத் தடுமாறி திருமணம் நடக்கலாம். நடந்தால் இன்னல்களும் பூசல்களும் நிறைந்த வாழ்க்கை.

    மத்திம ஆயுள்.

    ReplyDelete
  7. 7ம் அதிபதி நீசம் பெற்று 8ம் இடத்தில் இருக்கிறார். இலக்னத்திற்கு செவ்வாயின் நேரடி பார்வை, இரண்டாம் வீட்டின் (குடும்ப ஸ்தானத்தின்) மேலும் களத்திரகாரகன் சுக்கிரன் மேலும் எட்டாம் அதிபன் சனியின் பார்வை வேறு. சரி, களத்திரகாரகன் சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதோடு சனியுடன் பரிவர்த்தனையில் இருப்பது உதவுவுமா என்று பார்த்தால் சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமித்து விட்டார். 12ம் அதிபதியும் பரிவர்த்தனையில் இருப்பதால், இது தைன்ய பரிவர்த்தனை கணக்கில் வரும். இந்த ஜாதகிக்கு திருமணம் அநியாயத்திற்கு தாமதப்பட்டிருக்கலாம். நவாம்சத்தில் கிரக நிலைகளை வைத்து ஒரு வேளை திருமணம் நடந்திருந்தாலும் பல எதிர்ப்புகளை மீறி காதல் திருமணமாக இருந்திருக்கும். இலக்னத்தை பார்வையிடும் செவ்வாய், இலக்கினாதிபதியும், 4ம் அதிபதியுமான புதனையும் பார்வையிடுகிறார். 2ம் அதிபதி சந்திரன் 11ல். ஆனால் 7ல் இருக்கும் செவ்வாயும், 12ல் இருக்கும் சனியும் ஜாதகிக்கு திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கொடுத்து விவாகரத்து வரை கூட சென்றிருக்கலாம். ஆனால் ஜாதகி இயற்கையிலேயே தைரியமானவர் என்பதால் பிரச்சனைகளை கண்டு அஞ்சாமல் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருப்பார்.


    அட, இந்த ஜாதகத்திற்கு கிரக மாலிகா யோகமும் உண்டு, இல்லையா அய்யா?

    ReplyDelete
  8. 1) Married. Venus in 9th house.
    2) Love marriage. 7th house has mars and raagu, also 7th lord guru in 8th house.
    3) Happy married life. 2nd lord moon in 11 th house-good sign. Also moon is mana karagan. For happiness in life, that's important.

    Kaalasarpa dhosha jadhagam - wait ing for vathyar's reply to know this effect.

    ReplyDelete
  9. 7 th place owner guru neesam and also in baaba karthari yogam. Kethu holding flag in front. Lagnathypathy budhan neesam. Marriage is not possible.

    ReplyDelete
  10. வணக்கம் .
    1. மார்ச் 9, 1973ல் பிறந்த ஜாதிக்கு அப சவ்ய கால சர்ப்ப தோஷம் இருப்பதாலும் , 7ம் வீட்டில் செவ்வாய் , ராகு இருப்பதால் களத் திர தோஷம் இருந்தும் , 9ம் வீட்டு அதிபதி சனி 12ம் வீட்டில் இருப்பதாலும் , லக்னாதிபதி புதன் நீச மாக இருப்பதாலும் , 7ம் வீட்டு அதிபதி குரு 8ம் வீட்டில் நீச மாக இருந்தாலும் , அம்சத்தில் 7ம் வீட்டு அதிபதி குரு கேந்திரத்தில் உள்ள மீன ராசியில் சுக்ரன் உடன் உச்சத்தில் பலமாக சுப யோகம் இருப்பதால் திருமணம் 30 வயதில் கட்டாயமாக நடந்திருக்கும்.

    2. அப்படி திருமணம் நடந்தால் காதல் திருமணம் ஆகத்தான் இருக்கும் .

    3. திருமண வாழ்கை மகிழ்ச்சி யாக இருக்காது . கால சர்ப்ப தோஷம் உள்ள 7ம் வீட்டில் ராகு தொடங்கி லக்னத்தில் முடியும் கேது, வாழ்கையின் இரண்டாவது பகுதி மோசமானதாக இருக்கும் .7ம் வீட்டில் செவ்வாய் , ராகு இருப்பதால் கள த் திர தோஷம் (எத்தனை திருமணம் நடந்தாளும் ஓன்று கூட நிலையாக அமையாது) தீய பலன்கள் இரடிப்பாக இருக்கும் . லக்னாதிபதி புதன் நீச மாக இருப்பதாலும்,7ம் வீட்டு அதிபதி குரு 8ம் வீட்டில் நீச மாக இருப்பதாலும், 2ம் வீட்டுக்காரன் நன்றாக இருந்தும் , திருமணம் மகிழ்ச்சி யாக இருக்காது.

    சந்திரசேகரன் சூர்யாநாராயணன்



    ReplyDelete
  11. 1. Late marriage
    2. Kathal thirumanam than because of Kethu with the lagna
    3. Narayan prachanaikal undu

    ReplyDelete
  12. மார்ச் 9, 1973 பிறந்தவரின் ஜாதகம்.
    1. திருமணம் ஆகிவிட்டது. குரு நீசம் அடைந்தாலும் சுக்கிரன் மற்றும் சந்திரன் நட்பு வீடுகளில்.
    2. காதல் திருமணம் 7ல் ராகு, சந்திரன் மற்றும் சுக்கிரன் சமபலத்துடன். கணவன் வேற்று மதத்தவராக அல்லது வேற்றினத்தவராக இருந்திருக்கலாம்
    3. விவாகரத்து ஆகியிருக்கும். 7ல் ராகு + 6ஆம் அதிபதி செவ்வாய் நல்லதல்ல. 7ஆம் அதிபதி 8ல் நீசம். 2ஆம் வீட்டின் மேல் சனியின் பார்வை. குடும்ப வாழ்க்கை ஏது?

    ReplyDelete
  13. Quiz - 13.

    Indha penmanikku thirumanam nadanthirukka vaipillai.

    1. Lagnathipathi & 4 suga sthana adhipathi budan kendrathil irunthalum, neechamagi valuvizhandhu ullar.

    2. 7- kalatlhira sthana adhipathi guru 8 neechamagi maraithullar.

    3. 6- adhipathi sevvai 7-il raguvudan ullar.(7th ragu kalathira dosham).

    4. 3 &12 theeya sthana adhipathigal suriyan + sukkiran 9th place irundhu bakkiyathai keduthu vittanar.

    5. Sayana sthanathil(12) sani illara vazhvirku thadaiya ullar.

    7. Lagnathil kethu irunthu kodi pidithu sella koodiya VILOMA YOGAM ulladhu. idhu oru ava yogam agum.

    Sariya ayya!!

    Lakshmi Senthil.(classroom 2013 student, Dubai)

    ReplyDelete
  14. 1.திருமணம் ஆனவர் . லக்ன ப்ரஹாரம் 7-ம் அதிபதியான குரு 8-ல் நீசம் பெற்று
    பாப கர்தாரி யோகத்தில் உள்ளது. மாங்கல்ய பலம் குறைவு.
    ஆனால் சந்திரா லக்கினத்தை வைத்துப் பார்க்கும் போது 7-ம் அதிபதி மற்றும்
    களத்திர காரகன் லக்ன யோககாரகன் ஆன சுக்கிரன் 9-ல் தன் உச்ச வீட்டை நோக்கிப் பயணம்.
    2-ம் குடும்ப அதிபதியான சந்திரன் லாப ஸ்தானத்தில்.
    எனவே திருமணம் நடைபெற்று இருக்கும்.

    2. சந்திர லக்னம் ப்ரஹாரம் 5-ம் அதிபதியான சூரியன் 7-ம் அதிபதியான
    சுக்கிரனுடன் இணைவு . சுக்கிரனுக்கு 7-ம் வீட்டுக்காரன் சூரியன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார்.எனவே காதல் திருமணம் தான்.

    3. கால சர்ப்ப தோஷ ,களத்திர தோஷ மற்றும் செவ்வாய் தோஷமுடைய ஜாதகம்.
    பாக்கியாதிபதி சனி விரயத்தில்.
    எனவே துணையைப் பிரிந்து வாழக் கூடிய அமைப்புள்ள ஜாதகம்.
    லக்கினாதிபதி நீசமாக உள்ள ஜாதகர் வாழ்க்கை போராட்டமாகத் தான் இருக்கும்.
    தாய்வீட்டு ஆதரவு மற்றும் சகோதர ஆதரவு நிறைவாக உள்ளது.

    ReplyDelete
  15. ayya,
    idhu kala sarpa yoga jaadhagam. Raaghu kodipidithu selgirar. Ivarukku thirumanam guru 7m adhipathy thisaiyil sani buthiyil thirumanam nadandirukka vendum. Sondhathil thirumanam nadandirukka vendum (Sooriyanum, Sukkiranum Ondraga baaghyasthaanamana 9m veettil ullaargal). Guru neesamaanalum, suba graham. Guru, baaghyathibathyaana sani bagavaanaiyum, 2m veedu matrum 4m veettai than paarvaiyil vaithullaar. Adhu mattumallaamal, Budha bagavan(lagnathypathy neesamaanalum) 4m veettai than parvayil vaithullar. Baaghyaathypathy, Sani baghavan, sukkiran 10-4 parivarthanaiyil ullaargal. Aanal, thirumana vaazhkkai, santhoshamaaga irukka vaaippu kuraivu. Kaaranam, 7m athipathy guru neesam matrum 7m veettil 6m athipathi sevvayudan raaghu. Nandrigal.

    Mu.Prakaash

    ReplyDelete
  16. அய்யா ,
    பெண்மணி பரணி நட்சத்திரம். மேஷ ராசி . கால ஸர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம்.
    (1) செவ்வாய் 7-ல் இருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது. செவ்வாய் தனுசு லக்னத்தில் இருப்பதாலும் , ராகு சேர்க்கை கேது பார்வை இருப்பதாலும் செவ்வாய் தோஷம் விலக்கு அளிக்கப்படுகிறது. 7-ம் வீட்டு பரல்கள் 33. திருமணம் சர்வ நிச்சயம்.
    (2) செவ்வாய் ராகு 7-ம் வீட்டில் இருப்பது காதல் திருமணத்திற்கு அறிகுறி. மேலும், நவாம்சத்தில், லக்னத்தில் குருவும் சுக்கிரனும் இருப்பதும் காதல் திருமணத்தை குறிக்கும். செவ்வாய்க்கு 5 பரல்கள். சுக்கிரனுக்கும் 5 பரல்கள். ஆகவே, காதல் திருமணம். 1997-1999-ல் திருமணம் நடந்திருக்கும். செவ்வாய் தசை சுய புக்தி அல்லது ராகு புக்தி அல்லது அதை தொடர்ந்து வந்த குரு புக்தியிலோ காதல் திருமணம் நடந்திருக்கும்.
    (3) 4-ம் அதிபதி (சுக ஸ்தானம்) புதன் நீசம். அதுவும் தனித்து 10-ம் இடத்தில் வக்கிரம் பெற்று இருக்கிறார். 7-ம் இடத்தில் பாவ கிரஹங்கள் செவ்வாய், ராகு . லக்னத்தில் கேது கொடி பிடிக்கும் கால ஸர்ப்ப தோஷம் . இரண்டாம் இடத்து அதிபதி சந்திரன் ராகுவுடன் நவாம்சத்தில் சேர்க்கை. கேது பார்வை. கடும் பகை. நவாம்சத்தில் ஏழாம் இடத்து அதிபதி புதன் அதற்கு 12-ல் . அதுவும் வக்கிரத்தில் தனியாக இருக்கிறார். ராசி கட்டத்திலும் புதன் தனியாக நீசம் பெற்று வக்கிரத்தில் இருக்கிறார். அதனால்ல் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் நிறைந்திருக்கும்.
    சரியா , அய்யா ?. எனக்கு எவ்வளவு மதிப்பெண்கள் ?.

    ReplyDelete
  17. In general, 2nd house and 7th house should not be occupied by evil planets. in this horoscope, 7th house is occupied by two evil planets i.e rahu and mars. The 7th house is aspected by another evil planet ketu. The lord of the worst evil house i.e 6th house, mars is in 7th house. Further the lord of 7th house is in another evil house viz.8th house. The 7th house or the lord 7th house got no benefic aspect. In view of the above, it is felt that the married life may not be happy,peaceful & longstanding. Kindly confirm or correct the same. -Ganesan.

    ReplyDelete
  18. வணக்கம் அய்யா,

    1.கல்யாணம் ஆகியிருக்கும்.
    2.இரு மத கலப்பு திருமணமாக இருக்கலாம்.
    3.கேது கொடி பிடித்து செல்கிறார். மேலும் 7க்குரிய குரு
    8ல் என்பதால் பிரச்சனைகளுடன் அசம்பாவிதம் நடைபெற்றிருக்கலாம்

    தவறு இருந்தால் மன்னிக்கவும் அய்யா!

    ReplyDelete
  19. அய்யா,
    24-9-2013 அன்று நடத்திய பாடத்தில் சூரியன் 12-இல் இருந்தால் அவன் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு நாலாவது செயல் படுவான் என்று. பாரதரத்ன திருமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மி,கர்னாடக இசைப் பேர‌ரசி அவர்களுடைய ஜாதகத்திலும் சூரியனும், புதனும் 12-இல் உள்ளது அப்பிடி என்றால் இவர்களும் அரசாங்கத்திற்கு எதிராக செயல் பட்டார்களா?

    ReplyDelete
  20. ஐயா வணக்கம்,
    இந்த ஜாதகத்தில் லக்கினாபதி புதன் நீசம்.
    7மதிபதி குரு நீசம்
    லக்னத்தில் கேது 7இல் ராகு செவ்வாய்
    இருந்தாலும் கிரக மாலிகா யோகம்
    இரண்டாமதிபதி 11இல் அமர்ந்ததாலும்
    களத்திரகாரகன் பாக்கியத்தில் அமர்ந்ததாலும்
    கிரக மாலிகா யோகமும் சேர்ந்து நிச்சயக்கப்பட்ட திருமணம் நடந்திருக்கும்.

    ஆனால் 7இல் அமர்ந்த ராகு முதல் திருமணத்தை பிரிவில் முடித்து வைத்திருப்பான்.
    7இல் அமர்ந்த செவ்வாய் 2வது திருமணத்திற்க்கும் வழி செய்திருப்பான்.
    அதுவும் பிரச்சனைகள் நிறைந்ததாகத்தானிருக்கும்

    ReplyDelete
  21. Respected Sir,

    The native of the horoscope is not a married woman

    Reason: 7th lord guru is hidden in 8th house also neecham. 6th lord mars is in 7th house with combo of raghu which is very unfavourable for the marriage. Sukran is with the combo of sun another big diasdvantage. Sani in 12th house i.e., ayana sayana isthanam spoiled. above all lagna lord also neecham.
    All these things will not let the native to get married.

    ReplyDelete
  22. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 13 இல் கொடுத்திருந்த ஜாதகத்தை அலசியபோது சில ஆச்சரியங்கள் ஏற்பட்டது.

    முதலில் இந்த ஜாதகம் கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், எட்டில் குரு நீச்சம், கேந்திரத்தில் புதன் நீச்சம் என்று நல்ல ஜாதகமாக இல்லாதது போல் தோன்றியது. ஆனால் மற்ற கிரக நிலைகளை வைத்து நன்றாக அலசும்போதுதான் இது ஒரு அருமையான ஜாதகம் என்று புரிந்தது. வளர்பிறை சந்திரனும் குருவும் பரஸ்பர கேந்திரங்களில் இருப்பதால், கஜகேசரி யோகம் ஏற்பட்டு மற்ற தோஷங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டது.

    1. களத்திர காரகன் சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதாலும், எட்டுக்கு அதிபதியான சனி பகவான் பன்னிரண்டில் மறைந்து விபரீத ராஜயோகம் ஏற்படுவதாலும் கட்டாயம் திருமணம் நடந்திருக்கும்.

    2. ஏழாமிடத்தில் செவ்வாயும், ராகுவும் சேர்ந்திருப்பதால் நிச்சயம் காதல் திருமணம்தான்.

    3. வரிசையாக ஆறு கட்டங்களில் ஏழு கிரகங்கள் அமர்ந்து கிரகமாலிகா யோகம் ஏற்பட்டிருப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தில் அதன் காரகன் சூரியன் அமர்ந்து சூரியனுக்கு முன்னும் பின்னும் சுபக்கிரகங்களும், லாபஸ்தானத்தில் உள்ள சந்திரனுக்கு முன்னும் பின்னும் சுபக்கிரகங்களும் இருப்பதால் இரண்டு இடங்களிலும் சுபகர்த்தாரி யோகம் ஏற்பட்டு அதனால் மகிழ்ச்சியான வசதியான குடும்ப வாழ்க்கை அமைந்திருக்கும்.

    ReplyDelete
  23. Sir

    கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம்

    ஏழாம் அதிபதி எட்டில்

    யோகம் எதுவும் தெரியவில்லை

    நன்றி

    ReplyDelete
  24. Respected Sir,

    My answer for our Quiz No.13:-

    1. She was born on 9.3.1973 and forty years old. She doesn't get married. the reason is,

    i). Six house lord is sitting in seventh house along with Rakhu and not receiving any good planets aspect. So seventh house totally affected.

    ii) Seventh house lord is debilitated and sitting in eighth house and not receiving any good planets aspect as well as not joined with good planets. Hence seventh house lord totally affected.

    iii) Second house is getting saturn's aspect which is sitting in twelth house. house of benefit also affected due to saturn and venus exchanged and sun is sitting.

    iv) lagna and lagna lord is week. Kedhu is sitting in langa.It affects native's character. Lagna lord is debilitated and getting sixth house lord aspects.

    v) Twelth house is called as pleasure of couch.This is affected by saturn.

    Vi) Running of dasha's are also not favourable for marriage.

    Hence, all the above reasons, She doesn't get married.

    The answer for question no.2 and 3 are obviously not applicable.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  25. வணக்கம் ஐயா,

    1.கால சர்ப்பதோஷம்,முதலில் கேது கொடிபிடித்து செல்கிறார்,
    7ல் தீயகிரகங்களான செவ்வாய்,கேது சேர்க்கை,
    7ம் அதிபதி குரு 8ல் நீசம்,
    களத்திரகாரகன் சுக்கிரன் பகைவனான சூரியனுடன் சேர்க்கை,சுக்கிரன் சூரியன் சேர்க்கை நல்லதல்ல,
    7ம் வீடு சனியின் பார்வையில், ஆனால் குடும்ப அமைப்பிற்கான 2ம்வீட்டு
    சந்திரன் 11ல் நல்ல நிலையில்,2ம் வீடுகுருவின் பார்வையில் இருப்பதால்
    திருமண வாய்ப்பு உள்ளது.

    2.9ம் வீட்டில் சூரியன்,சுக்கிரன் சேர்க்கை,9மதிபதியும்,12மதிபதியும்
    பரிவர்த்தனை,காதல் திருமணம் சண்டையில் முடிந்திருக்கும்.

    3.4ம் அதிபதி புதன் நீசம்,7மதிபதி நீசம்,9ம் அதிபதி 12ல்,11ம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை,5ம் அதிபதி சூரியனுடன் சேர்க்கை,திருமண வாழ்க்கை மகிழ்ச்சி அடைய வாய்ப்புகள் கமியாகவே உள்ளது.

    ReplyDelete
  26. கேள்வி அமையும் முறையே ஓரளவு யூகத்தைத் தூண்டுவதாக அமைந்து விடுகிறது.இரண்டாவது கேள்வி முதல் கேள்விக்கான பதிலாக இருக்குமோ என்று
    யூகிக்க வேண்டியுள்ளது.அதுபோலவே மூன்றாவதுவது கேள்விக்கான பதில்
    இரண்டாவதில் பொதிந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    ஜாதகத்தைக் கொடுத்து விட்டு திருமணம் பற்றி எழுதுக என்று கேட்டாலே போதும் என்று நினைக்கிறேன்.கிட்டத்தட்ட சரியான பதில் கொடுப்பவர்களைத் தேர்ந்து எடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. இதை நானும் வழி மொழிகிறேன்

      Delete
  27. Sir,

    This Woman's marriage may be a delayed one and the marrriage might be with her uncle's/Aunty's son. Her life will be leaded smoothly.
    Reasons are 1. Delay due to Kaalasarbha thosam. 2. sixth lord is in 7th place hence she should be married in close relation. 3. king jupiter is viewing her 2nd place so her life will be able to manage any difficulties.

    ReplyDelete
  28. sir, this is a kala sharpa dosha horoscope with ketu in the lead.

    i think marriage is a question mark
    7th lord and lagna lord are debilitated

    if at all married her life will be troublesome because of mars and rahu in the 7th place

    iam unable to find whether it is a love marriage or arranged marriage

    ReplyDelete
  29. Ayya Vanakkam,

    1.) Thirumanam Nadandirukkum.

    Kaalasarpa Dhosam jadhagam. Indha dhosamum pinnalil yogamaga maari-irukkum (According to your Kalasarpa dhosam cum Yogam Theory)

    Lagnathirku 7-il Adhu Dhanusu Raasi adhil Chevvai & Raghu. Dhanusu rasi avaigalukku natpu idangal. Veedu kodutha Guru avar veetirku 2-il. karagan Sukran 9il trikonam and avar veetuku 5-il. Lagnadipathy budhan 10il kendhiram. 5-m veetirku Guruvin Paarvai and Chandran paarvai. Puthira bhakyam undu. Neecham petra guru aanalum, Ketalum menmakkal menmakkaley and sangu suttalum venmai tharum endra ungal karuthupadi avar nanmayai seivar. Thirumanam nadandirukkum.

    2.) Petrorgal nichayam seidha tirumanam. Kaaranam Kadhal tirumanathirku 5 & 7 adhipathy sambandham aagiirukka vendum. ingu sukran and guru virku sambandham illai.

    3.) 2-m veedu adhipathy chandran laabasthanathil irukirar. 4-m veetu adhipathy budhan 10-il and 5-m veetu adhipathy sukran 9-il and subha karthari yogam. so Thirumana valkai sandhosamaga irukkum ayyaa.

    Thavarugal irundhal naalaya padhivin moolamaga thiruthikolgiraen.

    Thanks for giving this opportunity.

    ReplyDelete
  30. அய்யா மிகவும் கொடுமயன ஜாதகம்
    1.லக்ந அதிபதி 10 இல் இரிருந்தாலும் நீட்ச்ம் அடைந்து விட்டார் .
    2.7 ஆம் அதிபதி குரு 8 இல் நீட்ச்ம்.
    3. சரி போகட்டும் சுக்கிறன் நாவது கை கொடுப்பார் என்றால் மூன்றாம் அதிபதி சூரியனுதன் கூட்டு.
    4.ஏழாம் இடத்தில் 6 ஆம் அதிபதி காதல் கத்திரிக்காய் உண்டு. திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் .
    கால சர்ப்ப தோசம் உள்ளது ஆகயல் அதன் அடிப்படைஇல் நடந்தால் மட்டும் சாத்தியம்.

    ReplyDelete
  31. 1.திருமணம் ஆகி விட்டது .(காதல் திருமணம்)
    2.திருமண வாழ்கை பிரச்சனை ஆக இருக்கும்.

    7இல் இரு பாவ கிரகங்கள் . கேதுவின் பார்வை 7ம் இடத்தின் மீது.
    7ம் இடது அதிபதி 8இல் நீசம் ...

    சுக்ரன் சூரியன் இணைவு ஆகிய காரணங்களால் காதல் திருமணமும் அதை தொடர்ந்து பிரச்சனயும் ..............

    நன்றி
    சத்ய நாராயணன்

    ReplyDelete
  32. மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

    1. இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?

    7ல் ராகு, செவ்வாய் - ராகு தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் மற்றும் 7 ம் அதிபதி குரு மகரத்தில் நீசம்.
    இந்த நிலைபாடு இருந்தாலும் 2ம் அதிபதி (குடும்ப ஸ்தானம்) சந்திரன் 11ல் லாபஸ்தானத்தில் இருக்கிறார்.
    மாங்கல்ய ஸ்தானத்தில் (8ல் குரு) நீசம் பெற்றாலும் "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே" என்பதிற்கேற்ப திருமணம் நடந்திருக்கும். இந்த ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் 30+ வயதிற்கு பின் திருமணம். (லேட் மேரேஜ்)


    2. ஆகிவிட்டதென்றால், அது இந்தப் பெண்ணிற்குக் காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நிச்சயித்தபடி திருமணமா?

    9ல் சுக்கிரனுடன் சூரியன் - களத்திரகாரகன் சுக்கிரனுடன் சூரியன் - தந்தை வழி உறவின் மூலம் திருமணம் - பெற்றோர் நிச்சயம் செய்த திருமணம்.


    3. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்குமா?

    7ல் ராகு, செவ்வாய் மற்றும் 7ம் அதிபதி குரு 8ல் நீசம். களத்திரகாரகன் சுக்கிரன் சூரியனுடன் அஸ்தமனம். திருமணம் கண்டிப்பாக பல பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.

    நன்றி,

    அன்புடன்,

    சரவணா.சி

    ReplyDelete
  33. Vanakkam Aiya,

    Kaalasarpa thosham ulla jadhagam idhu.lagnadhibadhi budhan neesam(meenathil);7m adhibadhi guru neesam (magarathil) agi 8m veetil amarndullar;kalathiragaran sukiran,9m veetil suriyanodu(bahai-kumbathil);

    2m veetuku adhibadhi chandiran 11m veetil amarndadal thirumanam agirukum;

    7m veetil sevvai,raguvodu amarndulladal kaadal thirumanam;melum than kulathaivitu,vetru jadhiyil manamudithirupar;

    7il ragu amarndale kalathira thosham;melum 7m adhibadhi neesam anadal sandoshamana vazhkai amaindirukadu...needithum irukadu aiya....

    ReplyDelete
  34. she is intelligent and well educated professional married the husband from rich family .he is also in gud profession.but because of kujachandala yoga that too in mars dasa ,she got seperated from her husband,may be have a child.
    she s divorced and also diseased .

    ReplyDelete
  35. SIR,
    MY OPINION ;
    THIS PERSON NOT GET MARRIED , BECAUSE
    7 TH LORD GURU NEESAM AND PLACED THE 8TH HOUSE , 7 HOUSE OCCUPY WITH RAGHU AND 6TH LORD MARS THIS REASON THIS PERSON NOT MARRIED.

    ReplyDelete
  36. Hello Sir,

    திருமணமானவர், 23 வயதில் சரியான தசா நடப்பு

    காதல் திருமணத்திர்க்கு வாய்ப்பு இல்லை - புதன் நீசம்


    6 ஆம் அதிபதியின் தசா நடப்பும் 7 ல் பாவ கிரகமும் - சிக்கல் அல்லது பிரிவு

    Thanks
    Satya

    ReplyDelete
  37. குரு வணக்கம்,
    லக்குன + சுக அதிபதி புதன் பத்தாம் வீட்டிலே நீச்சம் ஆகி தூங்கிகொண்டு இருக்கிறான். ஏழு + பத்தாம் அதிபதி எட்டில் நீச்சம் ஆகி தூங்கிகொண்டு இருக்கிறான். செவ்வாய் , நாக தோஷம். கால சர்ப்ப யோகம் . ஏழாம் வீட்டில் ஆறு+ பதினொண்ணாம் அதிபதி செவ்வாய் ,ராகு கூட்டணி. ஏழாம் வீட்டிலே 33 பரல்கள் எனவே நல்ல வாகனம் இருக்கு . காரகன் சுக்ரன் 5 பரல்கள் எனவே நல்ல சாலையும் இருக்கு. ஏழாம் அதிபதி குரு 3 பரல்கள் எனவே விருப்பமில்லாத driver. நான்கு வழி சாலையில் வண்டி ஓட்ட சுமாரான driver போதும். அடுத்த்தவன் வந்து மோதாத வரை வண்டி ஓடும். கஜகேசரி யோகம் பெரிதாக பலன் தர வாய்ப்பு இல்லை. எட்டாம் இடம் சம்பந்தம் பலன் மிக குறைவாகவே இருக்கும். லக்குணத்தில் 28 பரல் , 2 ம் வீட்டில் 28 பரல். கேது திசை 7 + சுகரன் 20 வலுவான சுக்கிரன் திசை முடிவதற்குள்+ காலசார்ப தோஷம் 27 அல்லது 30 குள் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. 8+9 ஆம் அதிபதி சனி 12 ல இருந்து 9 ஆம் வீட்டிலுள்ள சுக்ரனை பார்ப்பதால் வேறு ஜாதியில் / காதல் திருமணம் நடக்கும். 7 ல் செவ்வையுடன் ராகு சேர்க்கையும் இதை உறுதி படுத்துது. மன காரகன் சந்திரன் 6 பரல் பெற்று வலுவாக உள்ளான் . செவ்வாய் 6 ஆம் அதிபதி என்ற வகையில் சண்டைகள் இருக்கத்தான் செய்யும்.

    ReplyDelete
  38. 7 th Lord Guru is in 8 th house so the above said horoscope lady get a problemetic life

    ReplyDelete
  39. 7ல் செவ்வாய், ராகு இருப்பது திருமணத்திற்கு தடங்கள் ஏற்படுத்தும் அமைப்பு. ஆயினும் காதல் கலப்பு திருமணத்திற்கு இது போன்ற அமைப்பு இருக்கலாம்.

    1) திருமணம் ஆகி விட்டது.

    2) காதல் திருமணம்

    3) குரு இரண்டைப் பார்ப்பதால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் எனலாம்.

    இந்த ஜாதகத்தை நன்றாக ஆராய வேண்டும் நிறைய சொல்ல வேண்டும் என்ற ஆசை. ஆனால் நேரமின்மை காரணமாக சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டேன்.

    ReplyDelete
  40. அன்புடன் வணக்கம்
    கொடுத்துள்ள ஜதாகி க்கு திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை.. !!


    1.லக்னத்தில் கேது!! ..7 ல் ரகுவுடன் செவ்வாய் 2 பாவிகள் களஸ்த்ரா ஸ்தானத்தில் .
    2,திருமணம் கொடுக்க வேண்டிய சுப கிரகமான குரு தன வீட்டிற்கு 2ல் அங்கிருந்து குடும்பச்தானமான கடகத்தை 7ம் பார்வை பார்கிறான் 3.சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து பார்வை ஏதும் இல்லை..
    4..செவ்வாய் 8ம் பார்வையாக குடுமஸ்தானமாகிய 2மிடத்தை பார்கிறான் .அது ஒரு திருமண தடை..!!
    5..மிக முக்கியமான கிரக நிலை அனைத்து கிரகங்களும் கேது ,ராகுவுக்குள் அடக்கம் ..இது காள சர்ப்ப யோகம் !!!
    ஆகவே 30 வயதுக்கு மேல் வாழ்க்கை நிதானமாகக போகும் ஆனால் ..
    திருமண வாழ்க்கை கிடையாது !!!

    6.லக்னாதிபதி புதன் நீசமாகி போனான் ,4,மிடத்துகாரன் கல்வி ம்ம்ஹூம் !!

    வாத்தியார்அய்யா தவறுகளை சுட்டி காட்டுங்கள் திருத்தி கொள்ள வேண்டும்
    அன்புடன்
    கணபதி

    ReplyDelete
  41. ஐயா, வணக்கம். இந்த ஜாதகப்படி ஏழாம் வீட்டில் ஆறாம் வீட்டிற்குரிய செவ்வாய் மற்றும் ராகு உள்ளனர். ஏழாம் வீட்டிட்குறிய குரு எட்டில் மறைந்து விட்டார். இரண்டாம் வீட்டை சனியும் செவ்வாயும் சேர்ந்து பார்க்கின்றனர். மேலும் லக்கினாதிபதி நீச்சம். 9ம் வீட்டு சனியும் 12ம் வீட்டு சுக்கிரனும் பரிவர்தனை ஆகியுள்ளனர். பாக்கிய ஸ்தானம் கெட்டு விட்டது. திருமணம் என்பது மிக கடினம். இருந்தாலும் குரு அயன சயன சுகம் தரும் 12ம் வீட்டையும், குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டையும், சுக ஸ்தானமான 4ம் வீட்டையும் பார்ப்பதினால் திருமணம் ஆகியிருக்கும். சனியால் பார்வைபெறும் சூரியன்+சுக்கிரன் காதல் திருமணத்திற்கு வழி வகுத்திருக்கும். இருந்தாலும் செவ்வாயும் ராகுவும் ஏழாம் வீட்டில் இருப்பதால் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கை மிகவும் பிரச்சனைக்குரியதாக இருந்திருக்கும். பிரிவு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. கனிப்பு சரியானதா என்பதை அறிய ஆவல். நன்றி. Padmanaba Rao

    ReplyDelete
  42. இன்னொன்றையும் குறிப்பிட மறந்து விட்டேன். களத்திரகாரகன் சுக்கிரன் சுபகர்த்தாரி யோகத்தில் உள்ளார். அதனால் ஜாதகிக்கு திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனால் மற்ற அமைப்புகளினால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் இருந்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  43. 7ல் செவ்வாய் மற்றும் ராகு, சுக்கிரன் திரிகோணத்தில் ஆகவே காதல் திருமணம்.
    7ம் வீட்டின் அதிபதி 8ல் நீசமானதால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்காது.
    Just a try.

    ReplyDelete
  44. சார் வணக்கம்,

    இவர் திருமணம் ஆனவர் 7ஆம் அதிபதி குரு 7ஆம் வீடுக்கு 2லிருகிறார் மேலும் குடும்பாஅதிபதி சந்திரன் லக்னதிற்கு 11 மற்றும் 2க்கு 10 இவர் திருமணம் காதல்
    திருமணம் காரணம் 7ல் ராகு மற்றும் செவ்வாய் மண வாழ்கை சந்தோஷ்மாயிருக்காது காரணம்
    1, லகனத்தில் கேது
    2. 6ஆம் அதிபதி செவ்வாய் செவ்வாய் மிதுன லகனதிபதி புதனுக்கு பாவி
    3. 7ஆம் அதிபதி குரு 8லிருகிறார்.

    ReplyDelete
  45. குருவிற்கு வணக்கம்,
    முதலில் இது ஒரு விலோமா யோக ஜாதகம் ஏனெனில் கேது முன்னின்று வழி நடத்துகிறான்.
    1. ஜாதருக்கு திருமணமாகியிருக்க வாய்ப்பு இல்லை ஏனெனில் ஏழுக்குடைய குரு நீசம் அத்துடன் ஏழில் ராகு மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் போதாகுறைக்கு குரு பாபகர்தாரி யோகத்தில்.
    2. அட்டம மற்றும் பாக்கிய ஸ்தானாதிபதி சனி லக்னத்திற்கு 12ல் அத்துடன் சுக்கிரனுடன் பரிவர்தனை. பாக்கிய ஸ்தானத்தில் விரையாதிபதி சுக்கிரன் மற்றும் மூன்றுக்குடைய சூரியனின் ஆதிக்கம் அத்துடன் காரகன் பாவ நாசம்.
    3. 12ல் சனி அயனன சயன போகம் கிடைக்க வாய்பில்லை.
    4. எல்லாவற்றையுவிட லக்கினதிற்கும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான புதன் நீட்சம். அத்துடன் லக்கினம் கேதுவின் ஆதிக்கத்தில் மற்றும் செவ்வாயின் பார்வையில்.
    5. குடும்ப ஸ்தானத்தில் சனி மற்றும் செவ்வாயின் பார்வை.

    ReplyDelete
  46. Dear Guruji,

    Please find my answers as below.

    1) திருமணமானவர் :

    களத்திரகாரன் சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் நட்பு வீட்டில் நல்ல நிலையில் இருப்பது திருமணம்
    உண்டு என்பதற்கான அமைப்பு.

    2) காதல் திருமணம் :

    மிதுன லக்னத்திற்கு குரு 8ல் தனித்து இருப்பது காதல் திருமணம் செய்ய காரணமாகும்.
    ஏழாம் வீட்டில் ராகு கலப்புத் திருமணம் ஏற்படுத்தும்.
    ஏழாம் வீட்டில் செவ்வாய், ராகு சேர்க்கை காதல் திருமணம் செய்ய காரணமாகும்.

    3) திருமண வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்தது :

    மிதுன லக்கின அதிபதி புதன் மீனத்தில் நீச்சமடைதல்.
    7ஆம் அதிபதி குரு 8ல் மறைவு.
    லக்கினத்தில் கேது & ஏழாம் வீட்டில் ராகு திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
    லக்கினத்திற்கு 7ல் செவ்வாய் செவ்வாய் தோஷ அமைப்பு.
    மிதுன லக்கினத்திற்கு யோககாரர் சுக்கிரன் சனியுடன் பரிவர்த்தனை.
    தைன்ய பரிவர்த்தனை. தீய இடங்களான 8, 12ஆம் வீடுகளுக்கு ஆட்சிக் கிரகம் பரிவர்த்தனை பெற்றதால், பரிவர்த்தனையான யோககாரர் சுக்கிரன் பாதிப்பிற்கு உள்ளாகியது.
    மிதுன லக்கினத்திற்கு யோககாரர் சுக்கிரன் சுரியனிடத்தில் அஸ்தமனமானது.
    காலசர்ப்ப தோஷ ஜாதகம் : கேது கொடி பிடிக்க ஊர்வலம் செல்லும் அமைப்பு.
    12ல் சனி இருந்து அயன சயன போக பாக்கியத்தை குறைத்தல்.

    ReplyDelete
  47. மன்னிகவும் , நேரம் ஆகிவிட்டது. என்னுடைய அலசல் , இவர் ஏற்கனவே திரமணம் ஆனவரை திருமணம் செய்து இருப்பார். late marrige (got married to widower). மகிழ்ச்சியான திருமண வாழ்வு. extended family and her own parents will not be in good relation and she may face troubles due to that. She may have girl child of her own marriage and she may also be step mom to a son.

    ReplyDelete
  48. //////Tuesday, October 01, 2013 2:36:00 pm
    Blogger kmr.krishnan said...
    கேள்வி அமையும் முறையே ஓரளவு யூகத்தைத் தூண்டுவதாக அமைந்து விடுகிறது.இரண்டாவது கேள்வி முதல் கேள்விக்கான

    பதிலாக இருக்குமோ என்று
    யூகிக்க வேண்டியுள்ளது.அதுபோலவே மூன்றாவதுவது கேள்விக்கான பதில்
    இரண்டாவதில் பொதிந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
    ஜாதகத்தைக் கொடுத்து விட்டு திருமணம் பற்றி எழுதுக என்று கேட்டாலே போதும் என்று நினைக்கிறேன்.கிட்டத்தட்ட சரியான

    பதில் கொடுப்பவர்களைத் தேர்ந்து எடுக்கலாம்./////

    தங்களின் யோசனைக்கு நன்றி. அடுத்து வரும் புதிர்களில் அப்படியே செய்கிறேன். நன்றி!
    அன்புடன்
    வாத்தியார்
    ++++++++++++++++++++++++++++++++

    ReplyDelete
  49. காதல் திருமணம். ஆனால் பிரச்சினைகள் நிறைந்தது என்று பலரும் எழுதியுள்ளார்கள் மூன்று கேள்விகளுக்கும் சரியான விடையை
    நெருங்கி வந்து எழுதியிருக்கிறார்கள். ஆனால் ரத்தில் முடிந்திருக்கும் என்பதை ஐவர் மட்டுமே எழுதியுள் ளார்கள். பின்னூட்டங்களைப்

    படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தடுத்து வரவுள்ள ஜாதகங்களில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்!

    பெரும்பாலானவர்கள் ஒரு கேள்விக்கும் சிலர் 2 கேள்விகளுக்கும் பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்

    கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    அன்புடன்
    வாத்தியார்
    --------------------------------------------------------

    ReplyDelete
  50. இது நல்ல பயிற்சி..
    இதைவிட முக்கியம்

    எந்த கோணத்தில் ஒவ்வொருவரும்
    எப்படி கையாளகின்றனர் என்பதை

    பின்ஊட்ட பதில்கள் தெளிவாக்குவதும்
    பின்புலங்கள் நாம் பார்க்காதவைகளை

    நமக்கு காட்டும் விதமாகவும் அமைந்த
    நல்ல பாடம் மற்றும் பயிற்சி..

    நன்றி
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. நிச்சயமாக க்ளு தர வேண்டும்
    நேர பற்றாக்குறையில் இருக்கும்

    எம்மவர்களுக்கு இந்த க்ளு தான்
    எப்படியாவது உதவி செய்யும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com