வாரணாசி நகர விடுதி நுழைவாயில் உள்ள நீண்ட நடை பாதை
200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்றது என்றாலும்
எத்தனை அழகாக இருக்கிறது பாருங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++வாரணாசியின் மறுபக்கம்!
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப்போல, ஒரு ஊருக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இன்று வாரணாசியின் மறுபக்கத்தைப் பார்ப்போம்!
சென்னையில் இப்போது இருப்பது போன்ற “பெருநகர் வளர்ச்சிக் குழுமம்” Chennai Metropolitan Development Authority (CMDA) எல்லாம் அப்போது இந்தியாவில் எங்கும் இல்லாத காலம். அதனால்தானோ என்னவோ வாரணாசியில் உள்ள தெருக்கள் எல்லாம் முறைப்படி இல்லை. பெரும்பாலும் அகலக் குறைவாக நெரிசலாக உள்ளன. சந்துகளின் (Lanes) எண்ணிக்கை உள்ளூர்க்காரனுக்கே தெரியாது. அத்தனை சந்துகள். ஒவ்வொரு சந்தும் கிலோ மீட்டர் கணக்கில் நீளும். ஆனால் ஒவ்வொரு சந்தும் இறுதியாக கங்கைக்கரைக்கு உங்களைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.
அதனால்,
வாழ்க காசி
வாழ்க காசி நகரத்து சந்துகள்!
வளர்க அவ்விடத்து மக்கள்!
காசிக்குச் சென்றால், சென்றவுடன் முதல் வேலையாக கங்கைக் கரைக்குச் சென்று உங்களுடைய முன்னோர்களுக்கு 'திதி’ கொடுக்கும் சடங்குகளைச் செய்து விடுங்கள். நகரத்தார் விடுதியில் விஸ்வநாத சாஸ்திரிகள் என்ற முதியவர் இருக்கிறார். அவர் உங்களுடன் கங்கைக் கரைக்கு வந்து வேத மந்திரங்களைச் சொல்லி, திதி கொடுக்கும் நிகழ்வை முழுமையாகச் செய்து விடுவார். அவருக்கு தட்சணை ரூ.300:00 மட்டுமே.
திதியை முடித்தவுடன் கங்கையில் நன்றாக முங்கிக் குளித்துவிட்டு வந்து விடுங்கள். அதற்குப் பிறகுதான் விசுவநாதர் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
மேலதிகத் தகவல்கள்:
தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தல் மற்றும் அஸ்தி கரைத்தல்: பனை ஓலைக் குடைகளின் கீழே ஏராளமான சாஸ்திரிகளை நீங்கள் பார்க்கலாம். அவர்களுக்கு அங்கே ‘பண்டா’க்கள் என்று பெயர். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை அவர்கள் செய்து கொடுப்பார்கள். பித்ருக்கள் என்றால் அர்த்தம் தெரியாமல் விழிக்க வேண்டாம். உங்கள் முன்னோர்களைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். தாய், தந்தை இருவரும் உயிருடன் இல்லை என்றால் அவர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். ஒருவர் மட்டும் இல்லை என்றால் இல்லாதவருக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் தாய்க்குக் கொடுக்கும்போது அவரைப் பெற்றவருக்கும், தாய் வழிப்பாட்டிக்கும் ஆக மொத்தம் 3 பேருக்கும் திதி கொடுக்க வேண்டும். அவர்களை நினைவில் கொண்டு வழிபடவேண்டும். தந்தைக்கும் அப்படியே. ஆகவே 3 தலைமுறை யினரின் பெயர்களையும், அவர்கள் பிறந்த நட்சத்திரத்தையும் குறித்து எடுத்துக்கொண்டு செல்லுங்கள். உங்களுடைய கோத்திரம் என்ன வென்று கேட்பார்கள். தெரிந்தால் சொல்லுங்கள். தெரியவிட்டால் ‘சிவகோத்திரம்’ என்று சொல்லுங்கள். எல்லா மக்களுமே சிவனுடைய பெயரைச் சொல்லி விடலாம். அவர் ஒன்றும் சண்டைக்கு வரமாட்டார்!
விஸ்வநாத சாஸ்திரி |
த்ரப்பணம் செய்யக் காத்திருக்கும் பண்டா’க்கள்
என்னும் வேத சாஸ்திரிகள்
புனித நீராடல் (Holy Dip): கங்கா தேவியே நதி வடிவில் ஓடுவதாக ஐதீகம். கரையில் தண்ணீர் சில இடங்களில் அசுத்தமாகக் காணப்படும். அதற்குக் காரணம் கங்கை வரும் வழியில் உள்ள பல நகரங்களின் கழிவு நீர்கள் அதனுடன் கலந்து வருவதுதான். படகில் ஏறி எதிர்க்கரைக்குச் சென்றால் தண்ணீர் சுத்தமாக இருக்கும் அங்கே குளித்துவிட்டுத் திருமபலாம். அது போல கங்கை நீரை நடு ஆற்றில் இருந்து கேன்களில் பிடித்துக்கொண்டு வாருங்கள். அந்தக் கேன்கள் எல்லாம் கரையிலேயே பணம் கொடுத்தால் கிடைக்கும்.
நதியில் குளியுங்கள். லட்சக்கணக்கானவர்கள் குளிக்கிறார்கள். ஆகவே ஒன்றும் ஆகிவிடாது. கோவிலின் அருகில் இருக்கும் அகல்யா கட்டம் என்னும் இடத்தில் படித்துறையும், அதனைத் தொட்டுக்கொண்டு ஓடும் கங்கையும் குளிப்பதற்கு வசதியாக இருக்கும். பெண்கள் உடை மாற்றிக்கொள்ள அங்கே metal sheetகளில் சிறு சிறு அறைகளைக் கட்டியும் வைத்துள்ளார்கள். கங்கையில் குளிக்கும்போது இதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் போக வேண்டும் என்ற பிரார்த்தனையோடு முங்கிக் குளியுங்கள்.
ஆன்ந்தக் குளியலுக்கு மேலும் ஒரு கட்டம். கேதார் கட்டம் |
தெரிந்தும் தெரியாமலும், அறிந்து அறியாமலும் செய்த பாவங்கள் எல்லாம் போகும். நம்பிக்கைதான் முக்கியம். கேள்வி கேட்டு உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். காலையில் சூரிய உதயத்தின்போது குளிப்பது மிகவும் சிறப்பாகும். முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு சூரிய பகவானை வழிபடுவது அதைவிடச் சிறப்பாகும்!
விளக்கு விற்கும் பெண்மணி!
காசித் தீர்த்தம் கொண்டு வருவத்ற்குக் கிடைக்கும் சிறு கேன்கள்
தீப வழிபாடு: குளித்து முடித்த பின்பு, ஊதுபத்திகளை ஏற்றி, விளக்குகளை ஏற்றி, பூக்களை வைத்து சிறு வழிபாட்டிற்குப் பிறகு அந்த விளக்கை அதைத் தாங்கியிருக்கும் இலையுடன் கங்கையில் மிதக்க விட்டு விடலாம். அவை எல்லாம் கங்கைக் கரையிலேயே கிடைக்கும்.
செல்லும்போது ஒரு ஆயிரம் ரூபாய்க்கு வெறும் பத்து ரூபாய் நோட்டுக்களாக கொண்டு செல்லுங்கள். அங்கே செலவழிப்பதற்கு சில்லறை தட்டுப்பாடு இருக்காது.
திதி கொடுக்காவிட்டாலும் முதலில் கங்கையில் முங்கிக் குளித்துவிடுங்கள். அது முக்கியம். அதற்குப் பிறகுதான் கோவில் விஸிட், நாஷ்டாவெல்லாம். அர்த்தம் ஆயிந்தா சுவாமி?
---------------------------------------------------------------------------------
தெருக்களில், சந்துகளில் வணிகம் செய்யும் கடைகள்தான் அதிகம் உள்ளன. எங்கே பார்த்தாலும் வியாபாரம்தான். துணிக்கடைகளே அதிகம். விதம் விதமான பனாரஸ் பட்டு சேலைகள். சிந்தடிக் சேலைகள். மனதை அள்ளும் சுடிதார்கள். ஜரிகை மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுடன் கூடிய துணிவகைகள். குர்த்தாக்கள், குழந்தைகளுக்கான ஆயத்த அடைகள்.பாசி மணி ஊசிமணிக் கடைகள். ருத்திராட்சம், காசிக்கயிறு காசித்தீர்த்தக் கடைகள். இனிப்பு விற்கும் கடைகள். சொல்லும் விலையில் பாதியைக் குறைத்துக் கேட்கலாம். தந்துவிடுகிறார்கள். எல்லாம் பேரம்தான். ஏமாந்தால் நம் தலையை அம்மியாக்கி மிளகாய் அரைத்து விடுவார்கள்.
எண்ணிக்கையற்ற டீக்கடைகள். மற்றும் ஜர்தா பீடாக் கடைகள்.
எல்லா இடங்களிலுமே டீ சூப்பராக இருக்கிறது. நம்மூர் டம்ளருக்கு அரை டம்ளர் அளவுதான் டீ தருகிறார்கள். மசாலா டீ. அது போதும். விலை நான்கு ரூபாய்தான். காசியில் விசுவநாதருக்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் பிடித்தது அந்த மசாலா டீதான்.
அதற்காக ஒரு கடைக்காரனிடம் டீ மேன்மையின் இரகசியம் அறிந்து, அதற்குரிய டீத்தூளை ஹோல்சேல் கடைக்காரனிடம் கேட்டு வாங்கி வந்தேன். அந்த டீத்தூளுடன் நெஸ்கஃபே காப்பிப் பவுடரை சிறிது கலக்கிறார்கள் ருசிக்காகவும். மணத்திற்காகவும்!
சந்துகளில் மனிதர்களைவிட மாடுகள் அதிகம் திரிகின்றன. அவைகள் உங்களை ஒன்றும் செய்யாது. பயப்பட வேண்டாம். பழைய வாரணாசியில் உள்ள வீடுகள் எல்லாம் 100ல் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்றவை. சில வீடுகள் கலை நயத்துடன் 3 அடுக்கு 4 அடுக்குகளுடன் அழகாக உள்ளன.
பெண்கள் எல்லாம் (பெரும்பாலும்) சிவந்த நிறத்துடன் அழகாக இருக்கிறார்கள். குழந்தைகள் எல்லாம் லட்டு லட்டாக இருக்கின்றன. வழியில் பல இடங்களில் எருமை மாட்டுச் சாணி. பெண்களைப் பார்த்துக்கொண்டே நடந்தால் சாணத்தில் கால்களை நனைத்துக்கொண்டே செல்லும் அபாயம் உண்டு. ஆகவே பெண்களைப் பார்ப்பதுடன், அவ்வப்போது தெருவையும் பார்த்து நடக்க வேண்டும்.
ஆண்களைப் பார்த்தால், உங்களுக்குக் கோபம் வரலாம். பெரும்பாலோர் வாயில் புகையிலை கலந்த ஜர்தா பீடா (Jarda Paan) அல்லது Manic Chand அல்லது Pan Parag. வாயில் மோட்டார் வைத்து அரைப்பதைப்போன்று அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு வருமானம் எத்தனை ரூபாய்கள் இதற்குச் செலவழிக்கிறார்கள் என்ற கணக்கே இருக்காது போலும். நாளொன்றுக்கு பத்து டீயும், இருபது ஜர்தா பீடாவரை போடும் ஆசாமிகள் எல்லாம் சர்வ சாதாரணமாக உண்டு!
உங்கள் பார்வைக்கு ஒரு பீடாக்கடை.
எத்தனை வகையான மசாலாக்கள் கடையில் உள்ளன பாருங்கள்
காசியில் காக்காயும் இல்லை கருடனும் இல்லை. நகரப் பேருந்தும் இல்லை (என் கண்ணில் படவில்லை)
ஹரிச்சந்திரகட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய இரண்டு கட்டங்களிலும், கங்கைக் கரையில் கணக்கு வழக்கு இன்றி சடலங்களை (இறந்தவர்களின் உடல்களை) எரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்விரு இடங்களும் ஜே..ஜே..என்று திருவிழாக் கூட்டம் போல இருக்கிறது
வாரணாசியைச் சுற்றி 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமங்கள் அல்லது சிறு நகரங்கள் என்று அனைத்துப் பகுதிகளிலும் யார் இறந்தாலும் எரிப்பதற்கு இங்கே கொண்டு வந்து விடுவார்களாம். படகுகளில் வைத்துக் கொண்டுவந்து விடுவார்களாம். படகுகளில் மனித சடலங்களும் வருகின்றன. எரியூட்டுவதற்குத் தேவையான விறகுகளும் கட்டுக் கட்டாக வருகின்றன. சைக்கிள் ரிக்ஷாக்களில் உட்கார வைத்த நிலையில் சடலங்களைக் கொண்டுவந்து விடுகிறார்கள்.
ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு சடலங்கள் எரிந்து கொண்டிருக்கும்போதே மூன்றாவது சடலத்தையும் அதன் மேல் ஏற்றி எரிக்கத் துவங்கிவிடுகிறார்கள். அஸ்தி தனியாக எடுக்கத்தேவையில்லை. சுடச்சுட அப்போதே கங்கையில் கரைத்து விடுகிறார்கள். பிறகு அஸ்தி எதற்கு?
நாளொன்றுக்கு சராசரியாக 200 சடலங்கள் எரிக்கப்படுகின்றனவாம். இது ஒரு உத்தேசக் கணக்குதான்! அதிகமாகவும் இருக்கலாம்!
Pollution Control எல்லாம் இங்கே எடுபடாது. எவனாது கேள்வி கேட்டு வந்தால். அவனையும் எரியும் சடலங்களோடு ஒரே அமுக்காக அமுக்கிப் படுக்க வைத்து எரித்து விடுவார்கள் போல் உள்ளது. அத்தனை முரட்டுத் தனமான ஆட்கள்!
எரியூட்டும் இடம் ஹரிச்சந்திர கட்டம் என்னவொரு பொருத்தமான பெயர் பாருங்கள் |
படகில் வந்து சேரும் விறகுக் கட்டுகள். மணிகர்ணிகா கட்டம்
அதை வேடிக்கை பார்க்க ஏராளமான வெளி நாட்டவர்கள் அங்கே வந்து அமர்ந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். வியப்பில் அவர்களின் கண்கள் கங்கையின் அகலத்திற்கு விரிகின்றன!
படகில் சென்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வாருங்கள். மோட்டார் படகில் செல்லுங்கள். 30 அல்லது 40 பேர்களை ஏற்றிக்கொள்கிறார்கள். தலைக்கு 20 ரூபாய் மட்டுமே கட்டணம். கங்கைக் கரையில் உள்ள எல்லாக் கட்டங் களையும் படகில் இருந்தவாறே பார்த்துவிட்டு வரலாம்!
சாதா படகுகள் உள்ளன. தலைக்கு நூறு ரூபாய் கேட்டு வம்படி செய்வார்கள். 5 அல்லது 7 பேர்களை ஏற்றிச் செல்லும் சிறிய படகுகள். தலைக்கு 30 ரூபாய் மட்டுமே கட்டணம். ஆனால் வரமாட்டார்கள். பேரம் பேசிப் படிய வைக்க வேண்டும்!
அதே போல முடிந்தவரை ஆட்டோ ரிக்ஷாக்களைத் தவிர்த்து விடுங்கள். ரயில்வே ஸ்டேசனில் இருந்து விடுதிக்கு வருவதற்கும், திரும்பி விடுதியில் இருந்து ரயில் நிலையத்திற்குச் செல்வதற்கு மட்டுமே பயன் படுத்துங்கள். 5 கிலோ மீட்டர் தூரம்தான். அதிக பட்சம் நூறு ரூபாய் மட்டுமே கொடுங்கள்.
உள்ளூரில் 3 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கே ஆட்டோக்காரர்கள் நூறு ரூபாய் கேட்கிறார்கள். அதே தூரத்திற்கு சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் 30 ரூபாய்க்கு வருகிறார்கள். டோங்கா என்னும் குதிரை வண்டிகளை வைத்து ஓட்டுபவர்கள் 60 ரூபாய்க்கு வருவார்கள். 4 பேர்கள் அதில் செளகரியமாகச் செல்லலாம். ஒரு வாயுள்ள மனிதனுக்கும், ஒரு வாயில்லாத பிராணிக்கும் ஒரு சேர உதவி செய்த புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும்!
வாரணசிக்குச் செல்லும் இரயில்களின் பட்டியலைக் கொடுத்துள்ளேன். சிங்காரச் சென்னையில் இருந்து தூரம் 2,138 கிலோ மீட்டர். பிரயாண நேரம் 36 மணி நேரம். போக வர நபர் ஒன்றிற்கு ரூ1,100 செலவு ஆகும். நீங்கள் மூத்த குடிமகன் என்றால் கட்டணத்தில் 40 சதவிகிதம் சலுகை உண்டு 730 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.
பதிவு செய்யப்பெற்ற சீட்டு இருந்தால் மட்டுமே பயணியுங்கள். RAC (Reservation against cancellation) ஐ நம்பி எல்லாம் பயணிக்காதீர்கள். திரும்பி வரும்போது சிக்கலாகி விடும். வாரணாசியில் இருந்து இரயில் புறப்படும்போது ஓட்டுனர் ஒருவர் மட்டுமே வண்டியில் வருவார். இயக்குவார். ஒரு பெட்டிக்குக்கூட TTE (Travelling Ticket Examiner) வரமாட்டார். 72 பேர்கள் ஏறவேண்டிய பெட்டியில் 150 பேர்கள் ஏறுவார்கள். உங்கள் பெர்த்தில் ஏதாவது அன்னக்காவடி படுத்திருக்கும். எனக்கும் RAC Waiting List என்று கூறுவான். TTE வரட்டும் எனது பெர்த் எது என்று தெரிந்துகொண்டு போகிறேன் என்பான். உண்மையில் அவன் கையில் டிக்கெட்டே இருக்காது. நிலைமை அவ்வளவு மோசம்.
சென்னையில் இருந்து அலாகாபாத் வரை பயணம் செளகரியமாக இருக்கும். Double Track - Both are electrified tracks. அதற்குப் பிறகு அங்கிருந்து வாரணாசி வரை உள்ள 125 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 3 மணி நேரம் ஆகும். Single Track - Hauled by Diesel Locomotives வழியில் உள்ள ஸ்டேசன்கள் எல்லாம் அழுது வடிகின்றன. இந்திய சுதந்திரத்திற்கு முன்னால் கட்டப்பெற்ற ரயில் நிலையங்கள், அதற்குப் பிறகு அவைகள் எல்லாம் பராமரிக்கப்படவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. அந்த இடைப்பட்ட தூரத்திற்கு பேருந்து பயணமும் அவலமாகத்தான் இருக்கும்! ஆகவே எச்சரிக்கையாக இருங்கள். நேற்றையப் பின்னூட்டத்தில் நண்பர் ஒருவர் சொன்னதைப்போல எதைப் பற்றியும் கவலைப் படாத முரட்டு ஜனங்கள்!
-----------------------------------------------------------------------------
பயணிக்க இரயில்களின் விவரம்:
12669 Ganga Kaveri Express Dep: 5:35 PM சேரும் நேரம் 7:05 AM 2138 Kilo Meter Monday & Saturday வாரம் இரண்டு நாட்கள் மட்டும்
12295 Sangha Mithra Express Dep: 3:40 PM Mughal Sarai JN சேரும் நேரம் 5:10 AM (3rd Day Early Morning) vaaraththil 5 waatkaL mattum (முகல் சராய் ஸ்டேசனில் இருந்து வாரணாசிக்கு நீங்கள் ஆட்டோவில் பயணிக்க வேண்டும். - தூரம் 13 கிலோ மீட்டர்கள் - ஆட்டோக்காரன் ரூ 150 கேட்பான்) இந்த வண்டிக்கு தினசரி சேவை உள்ளது. அதனால இதைக் கொடுத்துள்ளேன்
14259 Rameshwaram - Varanasi Express Dep at Chennai 1.15 PM 4:40 AM Weekly once Wednedsday (வாரம் ஒருமுறை மட்டும்)
சென்னையில் இருந்து இட்டார்சி ஜங்சனுக்குச் சென்று அங்கிருந்து வேறு இரயிலுக்கு மாறி வாராணசிக்குச் செல்வதென்றால், onward journeyக்கும் சேர்த்து நீங்கள் திட்டமிட்டுக்கொள்ளலாம். அந்த வழியில் உங்களுக்கு நிறைய இரயிலகள் உள்ளன. அவற்றைப் பற்றிய விவரங்களைக் கீழே கொடுத் துள்ளேன்.
Chennai to Itarsi Junction 1095 KMs + Itarsi to Varanasi 736 KM = 1,831 KM
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச் சேர்க்கை!
வகுப்பறை மாணவர் திருவாளர் விசுவநாதன் அவர்கள் அனுப்பிய மேலதிகத்தகவல்கள்:
.. அனுமான் காட்டின் தெரு முனையில் மகாகவி பாரதியாரின் சிலை இருக்கிறது
,, வாய் பேசாமலிருந்து திரு முருகன் திருவருளினால் பேச்சுத் திறமை பெற்ற
பேரரளுளார் குமரகுருபரர் மொழி தெரியாத அந்த காசி நகரில் (போராடி சண்டை போட்டு என சொல்லலாமா?) இடம் வாங்கி தமிழ் வளர்க்க தொண்டாற்றியவர்
,, இந்த குமாரசாமி மடம் கேதார் காட்டில் உள்ளது.
,, லங்கா ரோட்டின் தொடக்கத்தில் ராமகிருஷ்ண மடம் உள்ளது.
,, பல மடங்களில் இலவசமாக சாப்பாடு போடுகிறார்கள்
.. விலை அதிகம் விற்பதற்கு அவர்களுக்கு வேறு வருமானமில்லை என்பதே..அந்த நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கும் தாராளம் காட்டலாம் (விரும்புபவர்கள்)
.. கேதார் காட்டில் ஆந்திர ஆசிரமம் அருகில் உள்ள கடை (செட்டியார் கடை என செல்லமாக சொல்கிறார்கள்) யில் பூசை பொருட்கள் தரமானதாகவும் நியாயமான விலையிலும் மொழி பிரச்சனை உள்ளவர்களுக்கு தமிழிலும் வியாபாரம் இருக்கும்
.. சீராக இல்லாத ரோட்டில் சைக்கி ரிக்க்ஷா பயணம் ஒரு adventure என்றே சொல்லலாம்
,, ஆட்டோ கட்டணம் கூடுதல் தான் ஷேர் ஆட்டோவில் கட்டணம் குறைவு மொழியும் இடமும் தெரிந்தவர்களுக்கு இது தான் சிக்கனம்
,,சிறு பிள்ளைகள் கூட வாயில் போட்டு அறைக்கும் அந்த பழக்கம் புற்று நோய்க்கு இது தான் தாய் நாடு என சொல்ல வைக்கிறது
,,வெண்மையாக உள்ள பல்லைக் கண்டு நம்மை வெளியூர்க்காரன் என எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்
.. அண்மையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த லங்கா ரோடில் உள்ள சங்கட் விமோசன் அனுமான் கோவிலில் வானரங்களுக்கு பஞ்சமில்லை.. மக்கள் கூட்டம் எப்போதும்.. வியாழன் கிழமைகளில் இன்னமும் அதிகமாக இருக்கும்.
.. BHU என செல்லமாக அழைக்கும் பல்கலைகழகம் மிக மிக பெரியது இதற்கு அடுத்தது தென்னிந்தியாவில் உள்ள மைசூர் பல்கலைகழகம் என நினைக்கிறேன்.
.. இதன் அருகே உள்ள விசுவநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது.. இங்கு அதோமுக லிங்கம் உள்ளது.
.. இந்நகரில் உள்ள துர்கா மா மந்திர் எனும் துர்கை அம்மன் கோவிலில் உள்ள கதவுகளில் வீட்டு சாவியை வைத்து வணங்கி வழிபட்டால் வீட்டில் திருடுபோகாது என்றும் கல்லா பெட்டி சாவியை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை இந்த ஊர் மக்களிடம்..
.. பழைய கோவில் அருகே உள்ள பள்ளி வாசல் பற்றி ஒரு செய்தி உண்டு அதனை வகுப்பறையில் பதிவிடுவது ஆரோக்கியமாக இராது என்பதால் (அதனை மறைத்து) அமைதி கொள்கிறோம்.
.. cantontment பகுதியில் அனைத்து இரும்பு பொருட்களும் கம்பளி பொருட்களும் எதிர்பார்த்திராத விலையில் கிடைக்கும்.
..சலவைக்கல்லில் கடவுள் சிலையை வடித்துக் கொடுக்கும் கடைகள் ஏராளம் தாராளம். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீடுகட்டும் ஆயத்தில் இருப்பவர்களுக்காக இது..
,, point to point டிக்கெட் எடுப்பதற்கு பதில் circular ticket எடுத்துக் கொண்டால் செலவு இன்னமும் குறையும் அல்லது இதே செலவில் இன்னமும் சுற்றிப் பார்க்கும் இடம் அதிகம் கிடைக்கும்
.. திட்டமிட்டு route போட்டு குறைந்த நாட்களில் அதிக செலவில்லாத ரயில் பயண திட்டம் இந்த அவசர உலகில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் (LTA அல்லது குறைந்த நாள் லீவு கிடைப்பவர்களுக்காக இது),
,,கை தாராளம் உள்ளவர்கள் விமானத்திலும் செல்லலாம். விமான நிலையம் நகரத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது
ஆண்டு தோறும் ஒருவரை இலவசமாக காசிக்கு அழைத்துச் செல்லும்/அனுப்பி வைக்கும் அய்யரின் பங்கிற்கு இந்த தகவலை சொல்லிவிட்டோம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=,, வாய் பேசாமலிருந்து திரு முருகன் திருவருளினால் பேச்சுத் திறமை பெற்ற

உங்களின் நேரமும் பொறுமையும் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். காசியைப் பற்றியும், அதன் சுற்றுப்புறத்திலுள்ள ஸ்தலங்களைப் பற்றியும் இன்னும் செய்திகள் உள்ளன. அவைகள் தொடர்ந்து வரும்.
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
காசி செல்வோருக்கு மிக..மிக.. மிக ..பயன் தரும் உபயோகமான குறிப்புகள், நன்றி ஐயா. அத்துடன் ஒரு நீண்ண்ண்ண்ண்ட பதிவை தட்டச்சு செய்து வெளியிட்ட உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteகை பிடித்து அழைத்துச் செல்வது போலவே உள்ளது. அருமை. நன்றிகள் பல.
ReplyDeleteதிரு பாலகுமாரன் அவர்களின் புருஷவதம் என்ற நூலில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய காசி மாநகர் பற்றி எழுதியுள்ளார். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே மறு பிறவி அமையும் என்பதை உணர வைக்கும் புத்தகம்.
அருமை, அற்புதம், சுவாரஸ்யம், உபயோகம் நிறைந்த பதிவு....
ReplyDeleteநன்றிகள் ஐயா!
கூடுதலாக இந்த தகவல்களையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்..
ReplyDelete.. அனுமான் காட்டின் தெரு முனையில் மகாகவி பாரதியாரின் சிலை இருக்கிறது
,, வாய் பேசாமலிருந்து திரு முருகன் திருவருளினால் பேச்சுத் திறமை பெற்ற
பேரரளுளார் குமரகுருபரர் மொழி தெரியாத அந்த காசி நகரில் (போராடி சண்டை போட்டு என சொல்லலாமா?) இடம் வாங்கி தமிழ் வளர்க்க தொண்டாற்றியவர்
,, இந்த குமாரசாமி மடம் கேதார் காட்டில் உள்ளது.
,, லங்கா ரோட்டின் தொடக்கத்தில் ராமகிருஷ்ண மடம் உள்ளது.
,, பல மடங்களில் இலவசமாக சாப்பாடு போடுகிறார்கள்
.. விலை அதிகம் விற்பதற்கு அவர்களுக்கு வேறு வருமானமில்லை என்பதே..அந்த நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கும் தாராளம் காட்டலாம் (விரும்புபவர்கள்)
.. கேதார் காட்டில் ஆந்திர ஆசிரமம் அருகில் உள்ள கடை (செட்டியார் கடை என செல்லமாக சொல்கிறார்கள்) யில் பூசை பொருட்கள் தரமானதாகவும் நியாயமான விலையிலும் மொழி பிரச்சனை உள்ளவர்களுக்கு தமிழிலும் வியாபாரம் இருக்கும்
.. சீராக இல்லாத ரோட்டில் சைக்கி ரிக்க்ஷா பயணம் ஒரு adventure என்றே சொல்லலாம்.
,, ஆட்டோ கட்டணம் கூடுதல் தான் ஷேர் ஆட்டோவில் கட்டணம் குறைவு மொழியும் இடமும் தெரிந்தவர்களுக்கு இது தான் சிக்கனம்
,,சிறு பிள்ளைகள் கூட வாயில் போட்டு அறைக்கும் அந்த பழக்கம் புற்று நோய்க்கு இது தான் தாய் நாடு என சொல்ல வைக்கிறது
,,வெண்மையாக உள்ள பல்லைக் கண்டு நம்மை வெளியூர் காரன் என எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்
.. அண்மையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த லங்கா ரோடில் உள்ள சங்கட் விமோசன் அனுமான் கோவிலில் வானரங்களுக்கு பஞ்சமில்லை.. மக்கள் கூட்டம் எப்போதும்.. வியாழன் கிழமைகளில் இன்னமும் அதிகமாக இருக்கும்.
.. BHU என செல்லமாக அழைக்கும் பல்கலைகழகம் மிக மிக பெரியது இதற்கு அடுத்தது தென்னிந்தியாவில் உள்ள மைசூர் பல்கலைகழகம் என நினைக்கிறேன்.
.. இதன் அருகே உள்ள விசுவநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது.. இங்கு அதோமுக லிங்கம் உள்ளது.
.. இந்நகரில் உள்ள துர்கா மா மந்திர் எனும் துர்கை அம்மன் கோவிலில் உள்ள கதவுகளில் வீட்டு சாவியை வைத்து வணங்கி வழிபட்டால் வீட்டில் திருடுபோகாது என்றும் கல்லா பெட்டி சாவியை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை இந்த ஊர் மக்களிடம்..
.. பழைய கோவில் அருகே உள்ள பள்ளி வாசல் பற்றி ஒரு செய்தி உண்டு அதனை வகுப்பறையில் பதிவிடுவது ஆரோக்கியமாக இராது என்பதால் (அதனை மறைத்து) அமைதி கொள்கிறோம்.
.. cantontment பகுதியில் அனைத்து இரும்பு பொருட்களும் கம்பளி பொருட்களும் எதிர்பார்த்திராத விலையில் கிடைக்கும்.
..சலவைக்கல்லில் கடவுள் சிலையை வடித்துக் கொடுக்கும் கடைகள் ஏராளம் தாராளம். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீடுகட்டும் ஆயத்தில் இருப்பவர்களுக்காக இது..
,, point to point டிக்கெட் எடுப்பதற்கு பதில் circular ticket எடுத்துக் கொண்டால் செலவு இன்னமும் குறையும் அல்லது இதே செலவில் இன்னமும் சுற்றிப் பார்க்கும் இடம் அதிகம் கிடைக்கும்
.. திட்டமிட்டு route போட்டு குறைந்த நாட்களில் அதிக செலவில்லாத ரயில் பயண திட்டம் இந்த அவசர உலகில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் (LTA அல்லது குறைந்த நாள் லீவு கிடைப்பவர்களுக்காக இது),
,,கை தாராளம் உள்ளவர்கள் விமானத்திலும் செல்லலாம். விமான நிலையம் நகரத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது
ஆண்டு தோறும் ஒருவரை இலவசமாக காசிக்கு அழைத்துச் செல்லும்/அனுப்பி வைக்கும் அய்யரின்
பங்கிற்கு இந்த தகவலை சொல்லிவிட்டோம்
மற்றதை வாத்தியார் தொடருவார்
மாணவர்களுள் சென்று வந்தவர் சொல்லுவார்
Thanks for the detailed post.
ReplyDeletewill be very helpful.
sir, any info on madhwa mutt like uttradhi, raghavendra, vyasa raja mutts in kashi specially pandits who can perform these rituals based on rigveda.
கட்டுரை படங்களுடன் நன்றாகவே உள்ளது.மேலும் பல தகவல்களுடன் தொடர காசி விசுவரின் அருள் கிடைப்பதாக.
ReplyDeleteவாரணாசியின் மறுபக்கம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள். அதிலும் குறிப்பாக தென்னகத்திலிருந்து செல்லும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ரயில் முன்பதிவு. டெல்லியிலிருந்து காசி விஸ்வநாதர் விரைவு ரயிலில் நான், நான்கு பெரியவர்கள் இரு குழந்தைகளுக்கு முன்பதிவு செய்து ரயில் நிலையம் போனேன். அந்த பெட்டி நிறைந்து வழிந்தது. என் முன்பதிவைக் காட்டி இடம் வேண்டினேன். ஒருவரும் அசைந்துக்ககூட கொடுக்கவில்லை, என்னைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. பகல் ஒரு மணி சுமாருக்குப் புதுடில்லி நிலையத்தில் கிளம்பிய வண்டியில் குழந்தைகள் ஒண்டிக்கொண்டும், நாங்கள் நின்றுகொண்டும் பயணம் செய்தோம். இரவு எட்டு மணிக்குச் சுல்தான்பூர் எனும் நிலையத்தில் பெரும்பகுதி இறங்கினர். அப்போதும் நாங்கள் பதிவு செய்திருந்த ஆறு படுக்கைகளில் மூன்று மட்டுமே பெற முடிந்தது. டிக்கெட் பரிசோதகரிடம் சொல்லியும், அவர் வந்து கேட்டபோதும் விடாக்கண்டர்கள் எழுந்திருக்க வில்லை. மூன்று படுக்கைகளில் நாங்கள் அறுவர் பயணம் செய்து காலை ஆறு மணிக்கு வாரணாசி வந்து சேர்ந்தோம். மறக்கமுடியாத நரக வாசம் அது. ஆகையால் ஆசிரியர் குறிப்பிட்டபடி முன்பதிவு இருந்தாலும், தெற்கிலிருந்து போகும் ரயிலாவது பரவாயில்லை, வடக்கேயிருந்து பயணித்தால் கவனம் தேவை. நல்ல அறிவுரை. இதனை அனைவரும் பின்பற்றுதல் நன்று.
ReplyDeleteதகவல் களஞ்சியம் தங்கள் பதிவு.
ReplyDeleteபலருக்கும் பயன்படும் வகையில் உள்ளது.
பகிர்வுக்கு நன்றி வாத்தியார் ஐயா.
காசிக்கு என்ரு ஒரு சாபக்கட்டலை உன்டு;நகர எல்லைக்குல் பருந்து பரக்காது; பூ மனக்காது; பல்லி குரி சொல்லாது;மாடு முட்டாது;பினம் நாராது
ReplyDeleteNERIL SOLVATHU POLL ULLATHU SIR
ReplyDeleteஎதைச் சொன்னாலும் நெஞ்சைத் தொடச் சொல்லும் பாங்கு வாத்தியாரைத் தவிர வேறு யாருக்கு கைகூடும்.
ReplyDeleteகாசி யாத்திரை உங்களுக்கு மட்டுமல்ல வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் தான். வாசிப்பின் அனுபவமே வாழ்ந்த அனுபவம் போல் இருக்கிறது.
வாழ்த்துக்க்ள். பழனியப்பன் தங்களுக்கு அனைத்து வளங்களையும் அளிப்பாராக.
God given you good opportunity to see the lord shiva's Kasi viswanath.
ReplyDeleteYour writing about varanasi is Very interesting to read.
I went one time already to varanasi. Willing to go once again.
Ganga arathi in the sides of the river Ganga is very wonderful. Kindly write about ganga arathi which you have seen.
miga miga arumayana pathivu
ReplyDelete(www.astrologicalscience.blogspot.com)
/////Blogger தேமொழி said...
ReplyDeleteகாசி செல்வோருக்கு மிக..மிக.. மிக ..பயன் தரும் உபயோகமான குறிப்புகள், நன்றி ஐயா. அத்துடன் ஒரு நீண்ண்ண்ண்ண்ட பதிவை தட்டச்சு செய்து வெளியிட்ட உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி.//////
நல்லது. மிக..மிக..மிக..மிக்க நன்றி சகோதரி!
////Blogger Sathish K said...
ReplyDeleteகை பிடித்து அழைத்துச் செல்வது போலவே உள்ளது. அருமை. நன்றிகள் பல.
திரு பாலகுமாரன் அவர்களின் புருஷவதம் என்ற நூலில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய காசி மாநகர் பற்றி எழுதியுள்ளார். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே மறு பிறவி அமையும் என்பதை உணர வைக்கும் புத்தகம்.//////
பாலகுமாரனைப் பற்றிச் சொல்லவா வேண்டும். மனதைக் கிறங்க அடிக்கும் நடையில் எழுதக்கூடியவர் அவர்! தகவலுக்கு நன்றி நண்பரே!
///Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteஅருமை, அற்புதம், சுவாரஸ்யம், உபயோகம் நிறைந்த பதிவு....
நன்றிகள் ஐயா!/////
நல்லது. நன்றி ஆலாசியம்!
Blogger iyer said...
ReplyDeleteகூடுதலாக இந்த தகவல்களையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்..
.. அனுமான் காட்டின் தெரு முனையில் மகாகவி பாரதியாரின் சிலை இருக்கிறது
,, வாய் பேசாமலிருந்து திரு முருகன் திருவருளினால் பேச்சுத் திறமை பெற்ற
பேரரளுளார் குமரகுருபரர் மொழி தெரியாத அந்த காசி நகரில் (போராடி சண்டை போட்டு என சொல்லலாமா?) இடம் வாங்கி தமிழ் வளர்க்க தொண்டாற்றியவர்
,, இந்த குமாரசாமி மடம் கேதார் காட்டில் உள்ளது.
,, லங்கா ரோட்டின் தொடக்கத்தில் ராமகிருஷ்ண மடம் உள்ளது.
,, பல மடங்களில் இலவசமாக சாப்பாடு போடுகிறார்கள்
.. விலை அதிகம் விற்பதற்கு அவர்களுக்கு வேறு வருமானமில்லை என்பதே..அந்த நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கும் தாராளம் காட்டலாம் (விரும்புபவர்கள்)
.. கேதார் காட்டில் ஆந்திர ஆசிரமம் அருகில் உள்ள கடை (செட்டியார் கடை என செல்லமாக சொல்கிறார்கள்) யில் பூசை பொருட்கள் தரமானதாகவும் நியாயமான விலையிலும் மொழி பிரச்சனை உள்ளவர்களுக்கு தமிழிலும் வியாபாரம் இருக்கும்
.. சீராக இல்லாத ரோட்டில் சைக்கி ரிக்க்ஷா பயணம் ஒரு adventure என்றே சொல்லலாம்
,, ஆட்டோ கட்டணம் கூடுதல் தான் ஷேர் ஆட்டோவில் கட்டணம் குறைவு மொழியும் இடமும் தெரிந்தவர்களுக்கு இது தான் சிக்கனம்
,,சிறு பிள்ளைகள் கூட வாயில் போட்டு அறைக்கும் அந்த பழக்கம் புற்று நோய்க்கு இது தான் தாய் நாடு என சொல்ல வைக்கிறது
,,வெண்மையாக உள்ள பல்லைக் கண்டு நம்மை வெளியூர்க்காரன் என எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்
.. அண்மையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த லங்கா ரோடில் உள்ள சங்கட் விமோசன் அனுமான் கோவிலில் வானரங்களுக்கு பஞ்சமில்லை.. மக்கள் கூட்டம் எப்போதும்.. வியாழன் கிழமைகளில் இன்னமும் அதிகமாக இருக்கும்.
.. BHU என செல்லமாக அழைக்கும் பல்கலைகழகம் மிக மிக பெரியது இதற்கு அடுத்தது தென்னிந்தியாவில் உள்ள மைசூர் பல்கலைகழகம் என நினைக்கிறேன்.
.. இதன் அருகே உள்ள விசுவநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது.. இங்கு அதோமுக லிங்கம் உள்ளது.
.. இந்நகரில் உள்ள துர்கா மா மந்திர் எனும் துர்கை அம்மன் கோவிலில் உள்ள கதவுகளில் வீட்டு சாவியை வைத்து வணங்கி வழிபட்டால் வீட்டில் திருடுபோகாது என்றும் கல்லா பெட்டி சாவியை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை இந்த ஊர் மக்களிடம்..
.. பழைய கோவில் அருகே உள்ள பள்ளி வாசல் பற்றி ஒரு செய்தி உண்டு அதனை வகுப்பறையில் பதிவிடுவது ஆரோக்கியமாக இராது என்பதால் (அதனை மறைத்து) அமைதி கொள்கிறோம்.
.. cantontment பகுதியில் அனைத்து இரும்பு பொருட்களும் கம்பளி பொருட்களும் எதிர்பார்த்திராத விலையில் கிடைக்கும்.
..சலவைக்கல்லில் கடவுள் சிலையை வடித்துக் கொடுக்கும் கடைகள் ஏராளம் தாராளம். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீடுகட்டும் ஆயத்தில் இருப்பவர்களுக்காக இது..
,, point to point டிக்கெட் எடுப்பதற்கு பதில் circular ticket எடுத்துக் கொண்டால் செலவு இன்னமும் குறையும் அல்லது இதே செலவில் இன்னமும் சுற்றிப் பார்க்கும் இடம் அதிகம் கிடைக்கும்
.. திட்டமிட்டு route போட்டு குறைந்த நாட்களில் அதிக செலவில்லாத ரயில் பயண திட்டம் இந்த அவசர உலகில் இருப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் (LTA அல்லது குறைந்த நாள் லீவு கிடைப்பவர்களுக்காக இது),
,,கை தாராளம் உள்ளவர்கள் விமானத்திலும் செல்லலாம். விமான நிலையம் நகரத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது
ஆண்டு தோறும் ஒருவரை இலவசமாக காசிக்கு அழைத்துச் செல்லும்/அனுப்பி வைக்கும் அய்யரின் பங்கிற்கு இந்த தகவலை சொல்லிவிட்டோம்
மற்றதை வாத்தியார் தொடருவார்
மாணவர்களுள் சென்று வந்தவர் சொல்லுவார்///////
ஆகா அசத்திவிட்டீர்கள் விசுவநாதன். மேலதிகத்தகவல்களுக்கு மிக்க நன்றி. இதைப் பதிவில் இடைச் சேர்க்கை என்ற பெயரில் சேர்த்துவிட்டேன்!
Blogger sriganeshh said...
ReplyDeleteThanks for the detailed post.
will be very helpful.
sir, any info on madhwa mutt like uttradhi, raghavendra, vyasa raja mutts in kashi specially pandits who can perform these rituals based on rigveda.///////
ஆற்றங்கரையில் நீங்கள் குறிப்பிடும் வேதங்களுக்கு உரிய பண்டிதர்கள் உள்ளார்கள் நண்பரே! விசாரித்துப் பிடிக்க வேண்டும்!
/////Blogger krishnar said...
ReplyDeleteகட்டுரை படங்களுடன் நன்றாகவே உள்ளது.மேலும் பல தகவல்களுடன் தொடர காசி விசுவரின் அருள் கிடைப்பதாக.///////
நல்லது. நன்று நண்பரே!
//////Blogger Thanjavooraan said...
ReplyDeleteவாரணாசியின் மறுபக்கம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள். அதிலும் குறிப்பாக தென்னகத்திலிருந்து செல்லும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ரயில் முன்பதிவு. டெல்லியிலிருந்து காசி விஸ்வநாதர் விரைவு ரயிலில் நான், நான்கு பெரியவர்கள் இரு குழந்தைகளுக்கு முன்பதிவு செய்து ரயில் நிலையம் போனேன். அந்த பெட்டி நிறைந்து வழிந்தது. என் முன்பதிவைக் காட்டி இடம் வேண்டினேன். ஒருவரும் அசைந்துக்ககூட கொடுக்கவில்லை, என்னைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. பகல் ஒரு மணி சுமாருக்குப் புதுடில்லி நிலையத்தில் கிளம்பிய வண்டியில் குழந்தைகள் ஒண்டிக்கொண்டும், நாங்கள் நின்றுகொண்டும் பயணம் செய்தோம். இரவு எட்டு மணிக்குச் சுல்தான்பூர் எனும் நிலையத்தில் பெரும்பகுதி இறங்கினர். அப்போதும் நாங்கள் பதிவு செய்திருந்த ஆறு படுக்கைகளில் மூன்று மட்டுமே பெற முடிந்தது. டிக்கெட் பரிசோதகரிடம் சொல்லியும், அவர் வந்து கேட்டபோதும் விடாக்கண்டர்கள் எழுந்திருக்க வில்லை. மூன்று படுக்கைகளில் நாங்கள் அறுவர் பயணம் செய்து காலை ஆறு மணிக்கு வாரணாசி வந்து சேர்ந்தோம். மறக்கமுடியாத நரக வாசம் அது. ஆகையால் ஆசிரியர் குறிப்பிட்டபடி முன்பதிவு இருந்தாலும், தெற்கிலிருந்து போகும் ரயிலாவது பரவாயில்லை, வடக்கேயிருந்து பயணித்தால் கவனம் தேவை. நல்ல அறிவுரை. இதனை அனைவரும் பின்பற்றுதல் நன்று.//////
தங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கோபாலன் சார்!
/////Blogger துளசி கோபால் said...
ReplyDeleteதகவல் களஞ்சியம் தங்கள் பதிவு.
பலருக்கும் பயன்படும் வகையில் உள்ளது.
பகிர்வுக்கு நன்றி வாத்தியார் ஐயா.////
அடடே...வாங்க டீச்சர். உங்கள் வருகைக்கு நன்றி. இதற்கு முன் வெளியிட்டுள்ள 3 பதிவுகளையும் படித்தீர்களா? அவைகளும் வாரணாசி சம்பந்தப்பட்டவைகளே!
/////Blogger arumugam said...
ReplyDeleteகாசிக்கு என்று ஒரு சாபக்கட்டளை உண்டு; நகர எல்லைக்குள் பருந்து பறக்காது; பூ மணக்காது; பல்லி குறி சொல்லாது; மாடு முட்டாது;பிணம் நாறாது//////
அதில் நல்லதும் கெட்டதும் கலந்திருப்பதால் அதைச் சாபம் என்று சொல்லலாகாதே நண்பரே! இறைவனின் அருள் என்று பொதுவாகச் சொல்லலாம்
////Blogger eswari sekar said...
ReplyDeleteNERIL SOLVATHU POLL ULLATHU SIR/////
எழுத்தில் எனக்கு அது பழகிவிட்டது. நன்றி சகோதரி!
/////Blogger Govindasamy said...
ReplyDeleteஎதைச் சொன்னாலும் நெஞ்சைத் தொடச் சொல்லும் பாங்கு வாத்தியாரைத் தவிர வேறு யாருக்கு கைகூடும்.
காசி யாத்திரை உங்களுக்கு மட்டுமல்ல வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் தான். வாசிப்பின் அனுபவமே வாழ்ந்த அனுபவம் போல் இருக்கிறது.
வாழ்த்துக்கள். பழனியப்பன் தங்களுக்கு அனைத்து வளங்களையும் அளிப்பாராக./////
உங்களின் அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே!
//////Blogger CJeevanantham said...
ReplyDeleteGod given you good opportunity to see the lord shiva's Kasi viswanath.
Your writing about varanasi is Very interesting to read.
I went one time already to varanasi. Willing to go once again.
Ganga arathi in the sides of the river Ganga is very wonderful. Kindly write about ganga arathi which you have seen./////
கங்கா ஆர்த்தி நிகழ்வைப் பற்றி எழுதுகிறேன். நன்றி நண்பரே!
//////Blogger arul said...
ReplyDeletemiga miga arumayana pathivu////
நல்லது. நன்றி நண்பரே!
Ayya,
ReplyDeleteI am learning astrology and patience as well from u..You have explained so nicely...After reading today's blog, i feel i've travelled Kaasi ...
Thanks a lot..
Sincere Student,
Trichy Ravi
1.ஹனுமான் காட்டில் பாரதியின் சிலை மட்டும் அல்ல. அவர் தங்கிப் படித்த அவருடைய அத்தை (குப்பம்மாள்?)இல்லமும் உள்ளது.அங்கே இன்னும் பாரதியின் உறவினர்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள்.பாரதியின் தாயும்,என் அண்ணனின் மாமியாரின் தாயும் ஒன்றுவிட்ட சகோதரிகள்.அந்த உறவைச் சொல்லிக் கொண்டு அந்த இல்லத்திற்குச் சென்று வந்தோம்.மற்றவர்கள் சென்றாலும் அனுமதிப்பார்கள்.அங்கு இருப்பவர் காசிப் பல்கலையில் இசைத் துறையில் மிருதங்கப் பேராசிரியர்.
ReplyDelete2. வாத்தியார் சொன்ன 'ரிச்சுவல்ஸ்' பிராமணர்களுக்குப் பொருந்தாது.
நாங்கள் திருவேணி சங்கமம், காசி, கயா எல்லா இடத்திலும் பிண்டம் கொடுப்போம்.க்ஷேத்திர பிண்டம் என்று பெயர்.
3. காசியில் படகில் 5 கட்டங்களுக்குப் படகில் சென்று பிண்டம் கரைப்போம்.ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டம் செல்வதற்குள் படகிலேயே சாதம் பொங்கப்படும்.எல்லா கட்டத்திலும் எங்கள் தாயாரையும் படகில் இருந்து இறக்கி ஸ்நானம் செய்வித்தது என் வாழ்க்கையில் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.தாயாருக்காக மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும்.
4.எங்களுக்கு ரயில் பயணத்தில் பெரிய பிரச்சனை ஒன்றும் வரவில்லை. காசியிலிருந்து கயா செல்லும் போது, முகல்சராயில் இருந்து கயாசெல்லும் ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆடு மாடு எல்லாம் ரயிலில் ஏற்றப்பட்டன.சாலை வழி மிகவும் மோசம்.ஆதலால் கூடிய வரை ரயில் பயணமே நல்லது.
5.எங்களுக்கு இந்த சாங்கியங்கள் செய்விக்கும் சாஸ்திரிமாரே சிலர் ஹனுமான் காட்டில் தங்குவதற்கு வீடுகள் கட்டிப் போட்டு இருக்கிறார்கள்.சமையல் சாப்பாடு அவர்களே ஏற்பாடு செய்து தருவார்கள்.
6.தானம் தான் முக்கியம்.நமது வசதிக்கு ஏற்றார்போல செய்யலாம்.சாதாரணமாக பிராமணர்கள் குறைந்த பட்சம் 25000/ செலவு செய்ய நேரிடலாம்.நேரடியாக என்னால் இவ்வளவுதான் முடியும் என்று சொல்லி விட்டால் அதற்குத் தகுந்த ஏற்பாடுகளை சாஸ்திரிகள் செய்து கொடுப்பார்.சிலசமயம் ஒன்றுமே இல்லை என்ற ஏழைக்கும் செய்து வைப்பார். அங்கேயே யாத்திரை வந்த ஒரு 'ஸ்பான்சரை'ப் பிடித்துவிடுவார்.தானத்துக்கு வேட்டி எடுத்துப் போயிருந்தோம். 20 எண்ணிக்கை போல.அத்தனையும் எடுத்து தானம் செய்து விட்டார்.எங்கள் உபயோகத்திற்கென்று கொண்டு சென்றதுவும் தானம் ஆகிவிட்டது.எங்களுக்குக் கடையில் வாங்க வேண்டி வந்தது.
7.காசிப் புனிதநீர் திரும்பும் போது மீண்டும் அலகாபாத் சென்று எடுத்து வரவேண்டும் என்பது ஐதீகம்.கங்கை நீர் காசியில் மிகவும் மாசாக உள்ளதால்
திரிவேணி சங்கமத்தில் கங்கை பக்கலில் இருந்து நீர் எடுத்து வருவதே சாலச் சிற்ந்தது. ஆம்! கங்கைப் பக்கம் வெண்மையாகவும், யமுனைப் பக்கம் கருப்பாகவும் நீர் இருப்பதைக் கண்களால் காணலாம்.மீண்டும் சங்கமம் வர முடியாதவர்கள் போகும் போதே சங்மத்திலிருந்து நீர் சேகரித்து விடவும்.
8. நீரை சொம்பில் அடைத்து ஈயப்பத்து வைத்துத் தரும் கடைகள் உள்ளன.
திரும்பி வந்து யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் நினைக்கிறீர்களோ அவர்களுக்கெல்லாம் சீல் செய்யப்பட்ட கங்கையும்,கால பைரவரின் கருப்புக் கயிரும் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும்.அன்னபூரணி பித்தளை,வெண்கல உருவமும் வாங்கிவந்து அளிக்கலாம்.வீட்டில் பூசையில் வைத்துவிட்டு, யாராவது உறவினர் மறையும் தருவாயில் இறுதி நேரத்தில் சொம்பை உடைத்து வாயில் நீர் ஊற்ற வேண்டும் அதற்காக தாமிர சொம்பில் அடைக்கப்பட்ட கங்கை நீர் வீட்டில் எப்போதும் கைவசம் இருக்க வேண்டும்.
9தாமிரச் சொம்பில் கொண்டுவந்த கங்கையை ராமேஸ்வரத்தில் கொடுத்து
அ/மி ராமனாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும்.
10. கயாவில்தான் ஏதாவது ஓர் பொருளை விட வேண்டும்.கயாவில்தான் அக்ஷய வடம் என்ற ஆலமரம் உள்ளது. அது தான் சிரார்த்ததிற்குத் தலைநகர்.
விஷ்ணு பாதம் அங்கே உள்ளது.(சிவ பாதம் நமது திருவெண்காட்டில் உள்ளது.)கயா ஸ்ரார்தத்தில் தாயுக்காக விசேஷமாக செய்யும் பிண்ட சமர்பணத்தில் சொல்லும் மந்திரம் நமது பட்டினத்தரின் 'கனக முலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி'யை நினைவு படுத்தும்..
11, காசி கல்கத்தா 8 மணி நேரப்பயணம் தான்.தட்சிணேஸ்வரம் செல்ல விரும்புபவர்கள் அங்கிருந்தே செல்லலாம்.
(continued)
12.மூதாதையர் பெயர் கீழ்க்கண்ட வகையாக எழுதி எடுத்துச்செல்லவும்.
ReplyDeleteஅ.தந்தை, தாய்
ஆ.தந்தையின் தந்தை(தாத்தா) அவர் மனைவி (பாட்டி)
இ.தந்தையின் தந்தையின் தந்தை(கொள்ளுப்பாட்ட்டன்)அவர் மனைவி(கொள்ளுப்பாட்டி)
ஈ.உங்கள் தாயின், தகப்பன் அவர் மனைவி(தாய்வழி தாத்தா பாட்டி)
உ.உங்கள் தாயின், தகப்பனின் தகப்பன் அவர் மனைவி(தாய்வழி கொள்ளுத்தாத்தா பாட்டி)
ஊ.உங்கள் தாயின், தகப்பனின் தகப்பனின் தகப்பன் அவர் மனைவி(தாய்வழி எள்ளுப்பாட்டி)
இவர்களுக்குப் பிண்டம் இட்ட பின்னர் உங்கள் உறவினரில் இறந்தவர்கள் அனைவரது பெயரையும் நினைவு படுத்திக்கொண்டு பொதுவில் ஓர் பிண்டம் போடவும்.ஏன் இறந்த நண்பர்களைக்கூட ,சாதி, மத வித்தியாசம் இன்றி நினைத்துக் கொண்டு பிண்டம் சமர்பிக்கலாம்.உங்களின் இறந்த பணியாளருக்குக் கூடப் பிண்டம் போடலாம்.
உங்கள் இல்லத்தில் இருந்து உயிர்விட்ட பசு, நாய்,பூனை ஆகியவற்றிகுக் கூட ஒரு பிண்டம் சமர்பிக்கலாம்.
2 செப் 2011ல் இதே வகுப்பறையில் வெளியாகியுள்ள எனது 'துறவின் மகத்துவம்' என்ற கட்டுரையைப் பார்க்கவும்
இன்னும் பல உண்டு.
காசி செல்வோருக்கு மிக சிறந்த வழிகாட்டுதல் உள்ள பதிவு,
ReplyDeleteஇயலதவருக்கும் இந்த பதிவு சென்று வந்த உணர்வை தரும்!
தொடர்க தங்களது மேன்மையான சேவை!
மிக்க நன்றி!
நான்கு பதிவுகளையும் வாசித்தேன்.
ReplyDeleteதங்கள் தாயார் மறைவு பற்றியும் அப்போதுதான் தெரியவந்தது.
அன்னாரின் ஆத்மா கங்கைக்கரையில் கொடுத்த பித்ரு சம்ஸ்காரத்தினால் சாந்தி அடைந்து இருக்கும்.
முன்னேழு பின்னேழு தலைமுறைக்கும் நமக்குமே கூட (அட்வான்ஸாக) செய்து கொள்ளலாமாம். போய்வந்த சிங்கைத்தோழி சொன்னார்கள்.
இன்றைய பதிவு அருமை..
ReplyDeleteகாசியில் வாத்தியாருக்கு சாணத்தில் கால்கள் நனைந்து போனதை எடுத்துச் சொல்லியிருக்கும் விதம் மிக அருமை..
எண்ணிலடங்கா விஷயங்களை புனிதயாத்திரை செல்வோருக்கு உதவும் வண்ணம் டைட் பேக் ஆக சொல்லியுருந்தாலும் வழக்கம்போலே வாத்தியாரின் எழுத்து நடையால் கூடவே நடத்தி அழைத்துச் சென்று விடுகிறார்..
சரியாகத் திட்டமிடப்படாத நகர சந்துகள், pollution control - சவ எரிப்பு டாப்பிக், டிக்கெட் ரிசெர்வேஷன் செய்த பயணிகளின் உரிமைக்குரல், வழியிலுள்ள ரெயில்வே ஸ்டேஷன்களின் பராமரிப்பு நிலவரம் போன்றவற்றை எழுதும் இடங்களில் சமூக ஒழுங்கீனங்களைச் சொல்லாமல் சொல்லும்போதும் வாத்தியாரின் நடை ஈர்க்கிறது..
துல்லியமாக செலவுக் கணக்குகளுக்கான விவரங்களைக் கொடுத்து காசிப் பயணத்துக்கு ஆயத்தப்படுத்தும் வாத்தியாரையும்
வாத்தியாரின் மாணவர் விசு அய்யரையும் பாராட்டலாம்..
'காசிக்குச் சென்றாலும் கருமம் தீராது' என்ற சொல்லடை மனதில் எழுந்து ஏதேனும் சந்தேகக் கணைகள் யாரிடமிடுந்தும் எழுந்துவிடாவண்ணம் ஆங்காங்கே எழுத்துக்கேடயங்களை உயர்த்திப் பிடித்தவண்ணம் பக்திமார்க்கத்தை முன்னிறுத்தி இந்தியாவின் புராதன சின்னத்தை,புனிதஸ்தலத்தை,புனித யாத்திரை விஷய நம்பிக்கைகளை மேலுயர்த்திப் பிடித்து நிறுவும் வாத்தியாரின் முயற்சியை மனதாரப் பாராட்டலாம்..
வணக்கம் ஐயா,
ReplyDeleteகாசியில் தர்ப்பணம் எப்படி செய்ய வேண்டும் என்று மிக தெளிவாக விளக்கங்களை அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.அத்துடன் காசியில் "ஷாப்பிங்" செய்யும் பொருட்கள்,முறைகள் வரை சொல்லி தந்து வகுப்பறை மாணவர்கள் அனைவரையும் காசி நகரைப் பற்றி நன்றாக சுற்றிக் காட்டி விட்டீர்கள் ஐயா!
//ஆண்களைப் பார்த்தால், உங்களுக்குக் கோபம் வரலாம். பெரும்பாலோர் வாயில் புகையிலை கலந்த ஜர்தா பீடா (Jarda Paan) அல்லது Manic Chand அல்லது Pan Parag. வாயில் மோட்டார் வைத்து அரைப்பதைப்போன்று அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு வருமானம் எத்தனை ரூபாய்கள் இதற்குச் செலவழிக்கிறார்கள் என்ற கணக்கே இருக்காது போலும். நாளொன்றுக்கு பத்து டீயும், இருபது ஜர்தா பீடாவரை போடும் ஆசாமிகள் எல்லாம் சர்வ சாதாரணமாக உண்டு!//
தமிழ்நாட்டின் அருமை நமக்கெல்லாம் வேறு மாநிலங்களுக்கு சென்றால் தான் தெரியும்.
/--
ReplyDeleteThanjavooraan said...
ஒருவரும் அசைந்துகூட கொடுக்கவில்லை, என்னைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை
--/
உ.பி / பீகாரில் 90% மக்கள் பயணச்சீட்டு வாங்குவதில்லை.
அதிகம் அடம் பிடித்தால், அவர்களுக்கு மனம் இருந்தால் (பதிவு செய்யப்பட்ட உங்கள் இருக்கையிலேயே) உங்களுக்கு இடம் தானம் கொடுப்பார்கள். அதட்டினால் அடியும் விழும்.
இந்தி மொழி அறியாவிட்டால், இன்னும் திண்டாட்டம் தான்.
TTE AC பெட்டிகளுக்கு வருவதோடு சரி. நான் முடிந்தவரை முன்பதிவு செய்யும்போது upper birth கேட்டு வாங்கிக் கொள்வேன்.
அசுத்தம் கண்டு பொங்குவோர் / அதர்மம் கண்டு கொந்தளிப்போர் ஆந்திராவுக்கு வடக்கில் போகாமல் இருப்பது அவர்கள் உடலுக்கும் , மனதிற்கும் மிகவும் நல்லது.
நான் காசிக்குப் போனபோது மழைக்காலம். மாட்டுச் சாணமும், மனித சாணமும் தெருவில் ஓடும் அற்புதமான காலம்!!.
காசி எனக்கு ஒட்டாமல் போனதிற்கு அங்கு நிறைந்து கிடக்கும், அசுத்தமும், அசுத்த மனமுடைய மக்களுமே காரணம்.
///////The Chennai Metropolitan Area (CMA)//////
ReplyDeleteCMDA சென்னை மெட்ரோபாலிட்டன் டெவெலப்மென்ட் அதாரிட்டி என்று மாற்றிவிடுங்கள்.முன்னாளில் MMDA ஆக இருந்தது..
Uma S umas1234@gmail.com
ReplyDeleteto "SP.VR.SUBBIAH"
date 24 November 2011 16:27
subject comment
நிறைய உபயோகமான தகவல்களைக் கொடுத்துள்ளீர்கள், நன்றி!
தொடர் அன்னியப்படைஎடுப்புகளால் கோயில் சிதிலமடைந்ததால் திரும்பவும் அவ்வாறு நேராமல் தவிர்க்க சந்துகள் குறுகலாக அமைக்கப்பட்டதாக படித்திருக்கிறேன், சரியா என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இங்கே டெல்லியிலும் ஆண்கள் பான்பராக் போட்டுக்கொண்டு போகும் வழி, பேருந்து என்று எல்லா இடங்களிலும் துப்பி வைத்திருப்பார்கள். இந்தியர்கள் எப்போதுதான் திருந்தப்போகிறார்களோ?
S. உமா, தில்லி
//முன்னேழு பின்னேழு தலைமுறைக்கும் நமக்குமே கூட (அட்வான்ஸாக) செய்து கொள்ளலாமாம். போய்வந்த சிங்கைத்தோழி சொன்னார்கள்.//
ReplyDeleteநான் ஏற்கனவே கூறிய மூதாதையர்கள் 6+6=12 பேருக்கும் நாம் பெயர் அறிவோம். அவர்களுக்குச் செய்வோம் கர்மாக்கள். பின் வரப் போகும் தலைமுறைக்கு எவ்வாறு கர்மா இப்போதே செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.அதற்கு என்ன நடைமுறை என்றும் தெரியவில்லை. பிறந்து பெயர் வைக்காதவர்களை எவ்வாறு அழைப்பது?
ஆனால் ஒரு வழக்கம் உண்டு. தனக்குப் பின்னர் யாரும் தன்னுடைய பெயர் சொல்லி கர்மாவைச் செய்யப் போவதில்லை என்று தெரிந்த ஒருவர்(அதாவது தன்னுடைய வம்சம் தன்னுடன் முடிகிறது என்று தெரிந்த ஒருவர்), தனக்குத் தானே கர்மா,தான் இறந்ததாகப் பாவித்து,செய்து விடலாம்.அதற்கு ஆத்ம பிண்டம் என்று பெயர்.
கோத்திரத்தைப் பற்றி.கோத்திரம் என்பது ஒரே குடும்ப ரத்தம் மீண்டும் திருமண பந்தத்தில் சேர்ந்து விடக் கூடாது என்பதற்காகச் செய்த அமைப்பு.பிராமணர்கள் ரிஷிகளின் பெயரை வைத்து கோத்திரம் பிரித்துக் கொண்டார்கள்.பாரத்வாஜ கோத்திரம் என்றால் அவர்களுடைய வம்சத்தின் முதல் ஆள் பாரத்வாஜ ரிஷி.
பரத்வாஜ கோத்திரத்துக்குள்ளேயே திருமணம் செய்தால் அது அண்ணன் தங்கை திருமணம் செய்வது போல.
இந்த கோத்திர முறை எப்படியோ ஒரு வகையில் எல்லா வகுப்பாரிடமும் உள்ளது.சென்ற பதிவில் செட்டிநாட்டு 10 கோவிலைச் சார்ந்த நகரத்தார்,
ஒரே கோவிலைச் சார்ந்தவர்களூக்குள் திருமண உறவு இல்லை என்றார்.
அதுவே கோத்திரம் பார்க்கும் தத்துவம்.
தஞ்சை மாவட்டத்திலும் கள்ளர் வகுப்பாரில் தென்கொண்டார், மேற்கொண்டார் என்றெலாம் பட்டப்பெயர் உண்டு.ஒரு தென்கொண்டார் வீட்டில் இன்னொரு தென்கொண்டார் கொடுக்கல் வாங்கல் கிடையாது. இதுதான் கோத்திர அமைப்பு.
சாங்கியம் செய்யும் போது உங்கள் மூதாதையர் கோத்திரம் எப்படிச் சொன்னார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்.அதைச் சொல்லுங்கள்.
காசியும் கயாவும் நமக்கு இறப்பை நினைவு படுத்தும் க்ஷேத்திரங்கள்.
ReplyDeleteநான் எனக்கு முகம் அறிந்து பழகியவர்கள் இல்லத்தில் இறப்பு ஏற்பட்டால் அவர்களுடன் தவறாமல் மயானக்கரைக்கு சென்று திரும்புவேன். மறு நாளும் அவர்களுக்குச் சாம்பல் கரைக்க கூடப் போவேன். சுமார் 350 சாவுகள் நடத்திக் கொடுத்து இருக்கிறேன். நம்முடைய ஊரில் இருக்கும் ஒரு மயானத்தையே நம்மால் சரிவரப் பராமரிக்க முடியவில்லை. ஒரு ஊரே மயான ஊர். தினசரி நூற்றுக்கணக்கில் வந்து எரியூட்டப்படும் பிணங்கள்.அந்த ஊரின் சுத்தம் பற்றி எந்த அரசும் ஒன்றும் செய்ய முடியாது.மேலும் புதிய முறைகளில் பிணம் எரிப்பதை விரும்பாத பாரம்பரியப் பற்றுள்ள மனங்கள்.
நமது மனதில் உள்ள அழுக்குகளெல்லாம் அங்கே ஊர் முழுதும் கொட்டிக் கிடக்கிறது.நமது உடல் எரியூட்டப் படாவிட்டால் என்ன நிலையில் அழுகி அருவருப்பை ஏற்படுத்தும் என்று எண்ணிப் பார்த்து, அந்த அழிவுத் தெய்வத்தினை மட்டும் எண்ணி, அழுக்கை நம் மனதில் இருந்து அகற்றுவோம்.
"இங்கே துப்ப படாது" என்று அறிவிப்புப் பலகை மேலேயே ஒருவன் வெற்றிலை எச்சிலை துப்பினான்.கைது செய்து நீதிபதி முன்னர் நிறுத்தினர்.
ReplyDeleteநீதிபதி:"ஏன் துப்பினாய்?"
குற்றவாளி: "துப்பினால் படுமா என்று ஆராயச்சி செய்தேன்"
நீதிபதி: 'என்ன சொல்கிறாய்?'
குற்றவாளி:"துப்பினால் படாது என்று அறிவிப்புப் பலகை சொல்கிறது எனவே
துப்பினால் படுகிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யவே துப்பிப் பார்த்தேன்.அவர்களுடைய கூற்றுத் தவறு என்று முடிவு செய்தேன்.
துப்பினால் அந்தப்பலகையில் படுகிறது கனம் கோர்ட்டார் அவர்களே.!"
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
Guru Vanakkam,
ReplyDelete"manian"kku piragu oru arpudhamana payana katturai.
As I was reading, I saw all the places thru your eyes.
Thanks for the post.
Ramadu.
////kmr.krishnan said...
ReplyDelete"இங்கே துப்ப படாது" என்று அறிவிப்புப் பலகை மேலேயே ஒருவன் வெற்றிலை எச்சிலை துப்பினான்.கைது செய்து நீதிபதி முன்னர் நிறுத்தினர்.
நீதிபதி:"ஏன் துப்பினாய்?"
குற்றவாளி: "துப்பினால் படுமா என்று ஆராயச்சி செய்தேன்"
நீதிபதி: 'என்ன சொல்கிறாய்?'
குற்றவாளி:"துப்பினால் படாது என்று அறிவிப்புப் பலகை சொல்கிறது எனவே
துப்பினால் படுகிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யவே துப்பிப் பார்த்தேன்.அவர்களுடைய கூற்றுத் தவறு என்று முடிவு செய்தேன்.
துப்பினால் அந்தப்பலகையில் படுகிறது கனம் கோர்ட்டார் அவர்களே.!"
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.///////////
/////இலங்கை நீதிமன்றங்களின் சுவர்களில் துப்பப்படாது என்று எழுதப்பட்டிருக்கும். அப்போது கல்லடி வேலன் என்பவர் வெற்றிலையைசப்பி சுவரில் துப்பிக் கொண்டிருந்தார். அவரை பிடித்துச் சென்று நீதிபதி முன்னால் நிறுத்தினார்கள்.///
என்பதாக இலங்கை செய்திகளை அறியத்தரும் வலைத்தளங்களில் இருந்து அறிந்ததாக எனக்கொரு வகுப்பறை நண்பர் செய்தி அனுப்பிருந்தார்..Kallady Velan's Daughter and Grand Childrens are in Melbourne.
http://ourjaffna.com/?p=1063
http://kanapraba.blogspot.com/2007/03/blog-post_9731.html
http://www.eegarai.net/t51481-topic?theme_id=147
காசியைப் போலவே தஞ்சையும் சந்து பொந்துகள் நிறைந்தது.டெல்லிக்காரவுக அங்கேயே இருந்தவுக. அவியளுக்கு நல்லாத் தெரியுமே!
ReplyDeleteஏன் அப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் சரியான பதில் கிடைக்காது. ஒவ்வொருவர் ஒவ்வொன்றைக் கூறுவார்.
வெளியாள் திருட வந்துவிட்டு தப்பிக்காமல் இருக்க என்று ஒரு அபிப்ராயம் இது ஒன்றுதான் கொஞ்சம் 'டீசென்ட்'.மற்றதெல்லாம் 'இன்டீசனட்' என்று சொன்னால்தான் புரியுமா?
/////Blogger Ravichandran said...
ReplyDeleteAyya,
I am learning astrology and patience as well from u..You have explained so nicely...After reading today's blog, i feel i've travelled Kaasi ..
Thanks a lot..
Sincere Student,
Trichy Ravi/////
அந்த உணர்வு மேலிட வேண்டும். நான் எழுதும் நோக்கமும் அதுதான்!
///////Blogger kmr.krishnan said...
ReplyDelete1.ஹனுமான் காட்டில் பாரதியின் சிலை மட்டும் அல்ல. அவர் தங்கிப் படித்த அவருடைய அத்தை (குப்பம்மாள்?)இல்லமும் உள்ளது.அங்கே இன்னும் பாரதியின் உறவினர்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள்.பாரதியின் தாயும்,என் அண்ணனின் மாமியாரின் தாயும் ஒன்றுவிட்ட சகோதரிகள்.அந்த உறவைச் சொல்லிக் கொண்டு அந்த இல்லத்திற்குச் சென்று வந்தோம்.மற்றவர்கள் சென்றாலும் அனுமதிப்பார்கள்.அங்கு இருப்பவர் காசிப் பல்கலையில் இசைத் துறையில் மிருதங்கப் பேராசிரியர்.
2. வாத்தியார் சொன்ன 'ரிச்சுவல்ஸ்' பிராமணர்களுக்குப் பொருந்தாது.
நாங்கள் திருவேணி சங்கமம், காசி, கயா எல்லா இடத்திலும் பிண்டம் கொடுப்போம்.க்ஷேத்திர பிண்டம் என்று பெயர்.
3. காசியில் படகில் 5 கட்டங்களுக்குப் படகில் சென்று பிண்டம் கரைப்போம்.ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டம் செல்வதற்குள் படகிலேயே சாதம் பொங்கப்படும்.எல்லா கட்டத்திலும் எங்கள் தாயாரையும் படகில் இருந்து இறக்கி ஸ்நானம் செய்வித்தது என் வாழ்க்கையில் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.தாயாருக்காக மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும்.
4.எங்களுக்கு ரயில் பயணத்தில் பெரிய பிரச்சனை ஒன்றும் வரவில்லை. காசியிலிருந்து கயா செல்லும் போது, முகல்சராயில் இருந்து கயாசெல்லும் ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆடு மாடு எல்லாம் ரயிலில் ஏற்றப்பட்டன.சாலை வழி மிகவும் மோசம்.ஆதலால் கூடிய வரை ரயில் பயணமே நல்லது.
5.எங்களுக்கு இந்த சாங்கியங்கள் செய்விக்கும் சாஸ்திரிமாரே சிலர் ஹனுமான் காட்டில் தங்குவதற்கு வீடுகள் கட்டிப் போட்டு இருக்கிறார்கள்.சமையல் சாப்பாடு அவர்களே ஏற்பாடு செய்து தருவார்கள்.
6.தானம் தான் முக்கியம்.நமது வசதிக்கு ஏற்றார்போல செய்யலாம்.சாதாரணமாக பிராமணர்கள் குறைந்த பட்சம் 25000/ செலவு செய்ய நேரிடலாம்.நேரடியாக என்னால் இவ்வளவுதான் முடியும் என்று சொல்லி விட்டால் அதற்குத் தகுந்த ஏற்பாடுகளை சாஸ்திரிகள் செய்து கொடுப்பார்.சிலசமயம் ஒன்றுமே இல்லை என்ற ஏழைக்கும் செய்து வைப்பார். அங்கேயே யாத்திரை வந்த ஒரு 'ஸ்பான்சரை'ப் பிடித்துவிடுவார்.தானத்துக்கு வேட்டி எடுத்துப் போயிருந்தோம். 20 எண்ணிக்கை போல.அத்தனையும் எடுத்து தானம் செய்து விட்டார்.எங்கள் உபயோகத்திற்கென்று கொண்டு சென்றதுவும் தானம் ஆகிவிட்டது.எங்களுக்குக் கடையில் வாங்க வேண்டி வந்தது.
7.காசிப் புனிதநீர் திரும்பும் போது மீண்டும் அலகாபாத் சென்று எடுத்து வரவேண்டும் என்பது ஐதீகம்.கங்கை நீர் காசியில் மிகவும் மாசாக உள்ளதால்
திரிவேணி சங்கமத்தில் கங்கை பக்கலில் இருந்து நீர் எடுத்து வருவதே சாலச் சிற்ந்தது. ஆம்! கங்கைப் பக்கம் வெண்மையாகவும், யமுனைப் பக்கம் கருப்பாகவும் நீர் இருப்பதைக் கண்களால் காணலாம்.மீண்டும் சங்கமம் வர முடியாதவர்கள் போகும் போதே சங்மத்திலிருந்து நீர் சேகரித்து விடவும்.
8. நீரை சொம்பில் அடைத்து ஈயப்பத்து வைத்துத் தரும் கடைகள் உள்ளன.
உங்கள் இல்லத்தில் இருந்து உயிர்விட்ட பசு, நாய்,பூனை ஆகியவற்றிகுக் கூட ஒரு பிண்டம் சமர்பிக்கலாம்.
2 செப் 2011ல் இதே வகுப்பறையில் வெளியாகியுள்ள எனது 'துறவின் மகத்துவம்' என்ற கட்டுரையைப் பார்க்கவும்
இன்னும் பல உண்டு.//////
உங்களுடைய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger முருகராஜன் said...
ReplyDeleteகாசி செல்வோருக்கு மிக சிறந்த வழிகாட்டுதல் உள்ள பதிவு,
இயலாதவருக்கும் இந்த பதிவு சென்று வந்த உணர்வைத் தரும்!
தொடர்க தங்களது மேன்மையான சேவை!
மிக்க நன்றி!//////
நல்லது. நன்றி முருகராஜன்!
////Blogger துளசி கோபால் said...
ReplyDeleteநான்கு பதிவுகளையும் வாசித்தேன்.
தங்கள் தாயார் மறைவு பற்றியும் அப்போதுதான் தெரியவந்தது.
அன்னாரின் ஆத்மா கங்கைக்கரையில் கொடுத்த பித்ரு சம்ஸ்காரத்தினால் சாந்தி அடைந்து இருக்கும்.
முன்னேழு பின்னேழு தலைமுறைக்கும் நமக்குமே கூட (அட்வான்ஸாக) செய்து கொள்ளலாமாம். போய்வந்த சிங்கைத்தோழி சொன்னார்கள்./////
மற்ற பதிவுகளையும் படித்துப் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி துளசி டீச்சர்! உங்கள் வீட்டுப் பூனைக் குட்டிகள் எல்லாம் நலம்தானே?
Blogger minorwall said...
ReplyDeleteஇன்றைய பதிவு அருமை..
காசியில் வாத்தியாருக்கு சாணத்தில் கால்கள் நனைந்து போனதை எடுத்துச் சொல்லியிருக்கும் விதம் மிக அருமை..///////
அது உங்கள் கண்ணில் படும் என்று நினைத்தேன். நினைத்தது நடந்துவிட்டது மைனர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எண்ணிலடங்கா விஷயங்களை புனிதயாத்திரை செல்வோருக்கு உதவும் வண்ணம் டைட் பேக் ஆக சொல்லியுருந்தாலும் வழக்கம்போலே வாத்தியாரின் எழுத்து நடையால் கூடவே நடத்தி அழைத்துச் சென்று விடுகிறார்..
சரியாகத் திட்டமிடப்படாத நகர சந்துகள், pollution control - சவ எரிப்பு டாப்பிக், டிக்கெட் ரிசெர்வேஷன் செய்த பயணிகளின் உரிமைக்குரல், வழியிலுள்ள ரெயில்வே ஸ்டேஷன்களின் பராமரிப்பு நிலவரம் போன்றவற்றை எழுதும் இடங்களில் சமூக ஒழுங்கீனங்களைச் சொல்லாமல் சொல்லும்போதும் வாத்தியாரின் நடை ஈர்க்கிறது..
துல்லியமாக செலவுக் கணக்குகளுக்கான விவரங்களைக் கொடுத்து காசிப் பயணத்துக்கு ஆயத்தப்படுத்தும் வாத்தியாரையும்
வாத்தியாரின் மாணவர் விசு அய்யரையும் பாராட்டலாம்..
'காசிக்குச் சென்றாலும் கருமம் தீராது' என்ற சொல்லடை மனதில் எழுந்து ஏதேனும் சந்தேகக் கணைகள் யாரிடமிடுந்தும் எழுந்துவிடாவண்ணம் ஆங்காங்கே எழுத்துக்கேடயங்களை உயர்த்திப் பிடித்தவண்ணம் பக்திமார்க்கத்தை முன்னிறுத்தி இந்தியாவின் புராதன சின்னத்தை,புனிதஸ்தலத்தை,புனித யாத்திரை விஷய நம்பிக்கைகளை மேலுயர்த்திப் பிடித்து நிறுவும் வாத்தியாரின் முயற்சியை மனதாரப் பாராட்டலாம்..////////
மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி! 4 லார்ஜ் அடித்தது போல் உற்சாகமாக (?) இருக்கிறது மைனர்
//////Blogger R.Srishobana said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
காசியில் தர்ப்பணம் எப்படி செய்ய வேண்டும் என்று மிக தெளிவாக விளக்கங்களை அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.அத்துடன் காசியில் "ஷாப்பிங்" செய்யும் பொருட்கள்,முறைகள் வரை சொல்லி தந்து வகுப்பறை மாணவர்கள் அனைவரையும் காசி நகரைப் பற்றி நன்றாக சுற்றிக் காட்டி விட்டீர்கள் ஐயா!
//ஆண்களைப் பார்த்தால், உங்களுக்குக் கோபம் வரலாம். பெரும்பாலோர் வாயில் புகையிலை கலந்த ஜர்தா பீடா (Jarda Paan) அல்லது Manic Chand அல்லது Pan Parag. வாயில் மோட்டார் வைத்து அரைப்பதைப்போன்று அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு வருமானம் எத்தனை ரூபாய்கள் இதற்குச் செலவழிக்கிறார்கள் என்ற கணக்கே இருக்காது போலும். நாளொன்றுக்கு பத்து டீயும், இருபது ஜர்தா பீடாவரை போடும் ஆசாமிகள் எல்லாம் சர்வ சாதாரணமாக உண்டு!//
தமிழ்நாட்டின் அருமை நமக்கெல்லாம் வேறு மாநிலங்களுக்கு சென்றால் தான் தெரியும்./////
உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
//////Blogger Duraisamy N said...
ReplyDelete/-- Thanjavooraan said... ஒருவரும் அசைந்துகூட கொடுக்கவில்லை, என்னைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை --/
உ.பி / பீகாரில் 90% மக்கள் பயணச்சீட்டு வாங்குவதில்லை.
அதிகம் அடம் பிடித்தால், அவர்களுக்கு மனம் இருந்தால் (பதிவு செய்யப்பட்ட உங்கள் இருக்கையிலேயே) உங்களுக்கு இடம் தானம் கொடுப்பார்கள். அதட்டினால் அடியும் விழும்.
இந்தி மொழி அறியாவிட்டால், இன்னும் திண்டாட்டம் தான்.
TTE AC பெட்டிகளுக்கு வருவதோடு சரி. நான் முடிந்தவரை முன்பதிவு செய்யும்போது upper birth கேட்டு வாங்கிக் கொள்வேன்.
அசுத்தம் கண்டு பொங்குவோர் / அதர்மம் கண்டு கொந்தளிப்போர் ஆந்திராவுக்கு வடக்கில் போகாமல் இருப்பது அவர்கள் உடலுக்கும் , மனதிற்கும் மிகவும் நல்லது.
நான் காசிக்குப் போனபோது மழைக்காலம். மாட்டுச் சாணமும், மனித சாணமும் தெருவில் ஓடும் அற்புதமான காலம்!!.
காசி எனக்கு ஒட்டாமல் போனதிற்கு அங்கு நிறைந்து கிடக்கும், அசுத்தமும், அசுத்த மனமுடைய மக்களுமே காரணம்.//////
கண்ணதாசன் சொல்வார், “அசுத்தம் எங்குதான் இல்லை. மனித உடலுக்குள்ளேயே மலமும் மூத்திரமும் இருக்கிறது” என்பார். விஸ்வேசனுக்காக அதை எல்லாம் பொறுத்துக்கொள்வோம் நண்பரே!
Blogger minorwall said...
ReplyDelete///////The Chennai Metropolitan Area (CMA)//////
CMDA சென்னை மெட்ரோபாலிட்டன் டெவெலப்மென்ட் அதாரிட்டி என்று மாற்றிவிடுங்கள்.முன்னாளில் MMDA ஆக இருந்தது..///////
கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி மைனர். பதிவில் திருத்தம் செய்துவிட்டேன்!
////Blogger SP.VR. SUBBAIYA said...
ReplyDeleteUma S umas1234@gmail.com
நிறைய உபயோகமான தகவல்களைக் கொடுத்துள்ளீர்கள், நன்றி!
தொடர் அன்னியப்படைஎடுப்புகளால் கோயில் சிதிலமடைந்ததால் திரும்பவும் அவ்வாறு நேராமல் தவிர்க்க சந்துகள் குறுகலாக அமைக்கப்பட்டதாக படித்திருக்கிறேன், சரியா என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இங்கே டெல்லியிலும் ஆண்கள் பான்பராக் போட்டுக்கொண்டு போகும் வழி, பேருந்து என்று எல்லா இடங்களிலும் துப்பி வைத்திருப்பார்கள். இந்தியர்கள் எப்போதுதான் திருந்தப்போகிறார்களோ?
S. உமா, தில்லி////
பகவான் மீண்டும் ஒரு அவதாரம் எடுத்தால் சான்ஸ் உண்டு. அதுவரை திருந்த வாய்ப்பில்லை!
Blogger kmr.krishnan said...
ReplyDelete//முன்னேழு பின்னேழு தலைமுறைக்கும் நமக்குமே கூட (அட்வான்ஸாக) செய்து கொள்ளலாமாம். போய்வந்த சிங்கைத்தோழி சொன்னார்கள்.//
நான் ஏற்கனவே கூறிய மூதாதையர்கள் 6+6=12 பேருக்கும் நாம் பெயர் அறிவோம். அவர்களுக்குச் செய்வோம் கர்மாக்கள். பின் வரப் போகும் தலைமுறைக்கு எவ்வாறு கர்மா இப்போதே செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.அதற்கு என்ன நடைமுறை என்றும் தெரியவில்லை. பிறந்து பெயர் வைக்காதவர்களை எவ்வாறு அழைப்பது?
ஆனால் ஒரு வழக்கம் உண்டு. தனக்குப் பின்னர் யாரும் தன்னுடைய பெயர் சொல்லி கர்மாவைச் செய்யப் போவதில்லை என்று தெரிந்த ஒருவர்(அதாவது தன்னுடைய வம்சம் தன்னுடன் முடிகிறது என்று தெரிந்த ஒருவர்), தனக்குத் தானே கர்மா,தான் இறந்ததாகப் பாவித்து,செய்து விடலாம்.அதற்கு ஆத்ம பிண்டம் என்று பெயர்.
கோத்திரத்தைப் பற்றி.கோத்திரம் என்பது ஒரே குடும்ப ரத்தம் மீண்டும் திருமண பந்தத்தில் சேர்ந்து விடக் கூடாது என்பதற்காகச் செய்த அமைப்பு.பிராமணர்கள் ரிஷிகளின் பெயரை வைத்து கோத்திரம் பிரித்துக் கொண்டார்கள்.பாரத்வாஜ கோத்திரம் என்றால் அவர்களுடைய வம்சத்தின் முதல் ஆள் பாரத்வாஜ ரிஷி.
பரத்வாஜ கோத்திரத்துக்குள்ளேயே திருமணம் செய்தால் அது அண்ணன் தங்கை திருமணம் செய்வது போல.
இந்த கோத்திர முறை எப்படியோ ஒரு வகையில் எல்லா வகுப்பாரிடமும் உள்ளது.சென்ற பதிவில் செட்டிநாட்டு 10 கோவிலைச் சார்ந்த நகரத்தார், ஒரே கோவிலைச் சார்ந்தவர்களூக்குள் திருமண உறவு இல்லை என்றார்.
அதுவே கோத்திரம் பார்க்கும் தத்துவம்.
தஞ்சை மாவட்டத்திலும் கள்ளர் வகுப்பாரில் தென்கொண்டார், மேற்கொண்டார் என்றெலாம் பட்டப்பெயர் உண்டு.ஒரு தென்கொண்டார் வீட்டில் இன்னொரு தென்கொண்டார் கொடுக்கல் வாங்கல் கிடையாது. இதுதான் கோத்திர அமைப்பு.
சாங்கியம் செய்யும் போது உங்கள் மூதாதையர் கோத்திரம் எப்படிச் சொன்னார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள்.அதைச் சொல்லுங்கள்.//////
சிறு திருத்தம். செட்டிநாட்டுக்காரர்கள் 9 கோவில்களைச் சேர்ந்தவர்கள். 10 அல்ல!
Blogger kmr.krishnan said...
ReplyDeleteகாசியும் கயாவும் நமக்கு இறப்பை நினைவு படுத்தும் க்ஷேத்திரங்கள்.
நான் எனக்கு முகம் அறிந்து பழகியவர்கள் இல்லத்தில் இறப்பு ஏற்பட்டால் அவர்களுடன் தவறாமல் மயானக்கரைக்கு சென்று திரும்புவேன். மறு நாளும் அவர்களுக்குச் சாம்பல் கரைக்க கூடப் போவேன். சுமார் 350 சாவுகள் நடத்திக் கொடுத்து இருக்கிறேன். நம்முடைய ஊரில் இருக்கும் ஒரு மயானத்தையே நம்மால் சரிவரப் பராமரிக்க முடியவில்லை. ஒரு ஊரே மயான ஊர். தினசரி நூற்றுக்கணக்கில் வந்து எரியூட்டப்படும் பிணங்கள்.அந்த ஊரின் சுத்தம் பற்றி எந்த அரசும் ஒன்றும் செய்ய முடியாது.மேலும் புதிய முறைகளில் பிணம் எரிப்பதை விரும்பாத பாரம்பரியப் பற்றுள்ள மனங்கள்.
நமது மனதில் உள்ள அழுக்குகளெல்லாம் அங்கே ஊர் முழுதும் கொட்டிக் கிடக்கிறது.நமது உடல் எரியூட்டப் படாவிட்டால் என்ன நிலையில் அழுகி அருவருப்பை ஏற்படுத்தும் என்று எண்ணிப் பார்த்து, அந்த அழிவுத் தெய்வத்தினை மட்டும் எண்ணி, அழுக்கை நம் மனதில் இருந்து அகற்றுவோம்.//////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!
////Blogger kmr.krishnan said...
ReplyDelete"இங்கே துப்ப படாது" என்று அறிவிப்புப் பலகை மேலேயே ஒருவன் வெற்றிலை எச்சிலை துப்பினான்.கைது செய்து நீதிபதி முன்னர் நிறுத்தினர்.
நீதிபதி:"ஏன் துப்பினாய்?"
குற்றவாளி: "துப்பினால் படுமா என்று ஆராயச்சி செய்தேன்"
நீதிபதி: 'என்ன சொல்கிறாய்?'
குற்றவாளி:"துப்பினால் படாது என்று அறிவிப்புப் பலகை சொல்கிறது எனவே
துப்பினால் படுகிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யவே துப்பிப் பார்த்தேன்.அவர்களுடைய கூற்றுத் தவறு என்று முடிவு செய்தேன்.
துப்பினால் அந்தப்பலகையில் படுகிறது கனம் கோர்ட்டார் அவர்களே.!"
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது./////
துப்ப, படாது என்று பதம் பிரித்தால் அவ்வாறுதான் பொருள் வரும்! நன்றி சார்!
////Blogger RAMADU Family said...
ReplyDeleteGuru Vanakkam,
"manian"kku piragu oru arpudhamana payana katturai.
As I was reading, I saw all the places thru your eyes.
Thanks for the post.
Ramadu.////
உங்களின் இனிய பாராட்டிற்கு நன்றி நண்பரே!
//என்பதாக இலங்கை செய்திகளை அறியத்தரும் வலைத்தளங்களில் இருந்து அறிந்ததாக எனக்கொரு வகுப்பறை நண்பர் செய்தி அனுப்பிருந்தார்..//
ReplyDeleteஅது சரிதான். அது போல ஏதோ ஒரு 'சோர்ஸ்'தான். இது ஏற்கனவே 'ரவுண்'டில் இருக்கும் ஜோக்தான்.
ஹ.ஹ. ஹ என்னுடைய 'ஒரிஜினல்' என்று சொல்லுவேன் என்று நினைத்தீர்களோ?
பான்பராக், வெற்றிலை துப்பல் பற்றி ஐயா எழுதி முகம் சுளிக்க வைத்துள்ளதை நான் ஜோக்கால் சிரிப்பாக்கப் பார்க்கிறேன்.அவ்வளவுதான்.
அங்கே டோங்கா காரர்கள் நாட்டுக்கோட்டையை 'நாட்கோட் நாட்கோட்' என்று எல்லோருக்கும் கோட்டு மாட்டிவிடுவார்கள்.
ஒரு படத்தில் 'எம் மூஞ்சில ரத்தம் வந்தா தக்காளிச் சட்டினி, உனக்கு வந்தாதான் ரத்தமா...'வடிவேலு.
என்னை ஆய்வு செய்கிறேன் என்று வாத்தியார் சொன்னது பொறுக்கவில்லை,
இல்லையா!?ஹி ஹி ஹி
காசிக்கு சென்று வந்த திருப்தியும் அங்குள்ள ஈசனை மனநெகிழ்வோடு தரிசித்த நிலையையும் பெற்றேன். மிக்க நன்றி. காசியின் மறுபக்கம் என்னை பயமுருத்தினாலும் அந்த எண்ணங்களை புறந்தள்ளி விடுவேன்
ReplyDeleteஐயா.
ReplyDeleteமைத்துனர் கூறி உள்ளது தான் உண்மை. வாத்தியார் ஐயா தாங்கள் அடிக்கடி சொல்லுவீர்களே கொட்டு பட்டாலும் மோதிர விரலால் கொட்டு படவேண்டும் என்று ஆனால் இங்கு விலை மதிக்க முடியாத புண்ணிய விரலால் கொட்டு படுகின்றோம் தங்களின் காசி எனப்படும் வாரனாசியின் அனுபவ கட்டுரையை படிக்கும் பொழுது ஐயா.
இருந்தும் வாழ வைத்தான் மறைந்தும் வாழ வைத்தான் என்ற சொல் பதம் தான் ஞாபதீர்க்கு வருகின்றது ஐயா.
>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<
minorwall has left a new comment on the post "தீது அகல எதைச் செப்புவான் விஸ்வேசன்?":
'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே..'
என்று வாத்தியார் தாயாரின் இறுதிச்சடங்கு செய்ய காசிக்கு சென்றாலும் சென்றார்..
அதன் மூலம் வரலாற்றுச் சிறப்பும் சிவஸ்தலங்களில் முக்கியத்துவமும் வாய்ந்த காசியை இளைய டிஜிட்டல் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் பணி வாத்தியாருக்கு வந்து கிடைத்தது..
'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்று ஒரு வள்ளலைப் பற்றி சொல்வார்கள்.. அதுபோலே அம்மையார் மறைவிலும் இப்படி பலருக்கும் பயனுள்ள செய்திகளை இணையத்திலே உலாவ வழிவகுத்திருக்கிறார்..
ஆத்மா நிச்சயம் அவர் எண்ணப்படியே சாந்தி அடைந்திருக்கும்..
அனுமான் காட் பக்கத்தில் உள்ள சோனாபூரா என்ற இடத்தில்
ReplyDeleteதில்படேஸ்வரர் கோயில் உள்ளது
இங்குள்ள லிங்கம் (தில் ) எள் அளவு
வளர்வதாக சொல்கிறார்கள்..
இந்த லிங்கம் இன்றைய அளவில் மிக உயரமாக இருக்கிறது.
மாடியில் ஏறித்தான் வழிபாடு செய்ய வேண்டும்..
இந்த தகவலை நமது லால்குடியார் சொல்லுவார் என நினைத்தோம்..
மற்ற மாணவர்களுக்குச்
சொல்லவேண்டுமென நினைத்ததால் இதனை இங்கு பதிவிடுகிறோம்.
Appreciate for your information. Thank you very much.
ReplyDeleteநம்ம வீட்டு பூனைகள் சாமிகிட்டே போயிட்டாங்க. அவுங்க அஸ்தியைப் பாதுகாத்து வச்சு இந்தியாவுக்குக் கொண்டுவந்தோம்.
ReplyDeleteரிஷிகேஷில் கங்கையில் கரைத்தோம்.
நேரம் இருக்குமானால் இந்த சுட்டியில் பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2011/03/blog-post_03.html
///kmr.krishnan said...காசியைப் போலவே தஞ்சையும் சந்து பொந்துகள் நிறைந்தது.டெல்லிக்காரவுக அங்கேயே இருந்தவுக. அவியளுக்கு நல்லாத் தெரியுமே!
ReplyDeleteஏன் அப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் சரியான பதில் கிடைக்காது. ஒவ்வொருவர் ஒவ்வொன்றைக் கூறுவார்.///
***குறுகலான தெருக்கள் ஊர்களின் பழமைக்கு சான்று***
ஊர்கள் வாழ்விற்கு இன்றியமையாத நீர் நிலைகள் அருகில் தோன்றியது போல், ஊர்களின் பரப்பளவும் 30 அல்லது 40 நிமிட நடை தூரத்திற்குள் எந்த ஒரு முக்கியமான பகுதியையும் அடையும் அளவில் இருந்தது. இந்த அளவிற்கு மேல் தினசரி பயணத்தை நீட்ட எந்த காலத்திலும் மனிதர்கள் விரும்பியதில்லை.
முற்காலத்தில் நடக்கும் மனிதர்கள், விலங்குகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயணிக்கத் தேவையான அளவிலேயே சாலைகளின் அகலங்கள் அமைந்தன. தேர்கள், இரதங்கள் செல்லும் ராஜ, மாட வீதிகள் அந்த வாகனங்களுகேற்ப அளவுடையதாக இருந்தன. நகர வளர்ச்சியின் காரணமாக அழித்து மாற்றப் பட்ட நகரங்கள் உண்டு. அது போலின்றி காலம் காலமாக மாற்றப்படாத நகரங்களில் குறுகலான வீதிகள் அதிகம். இந்த ஊர்கள் தற்கால போக்குவரத்தில் நெரிசல்களை மேலும் அதிகப் படுத்தும்.
அதே 30 அல்லது 40 நிமிட பயணத் தொலைவை தற்கால ஊர்திகள் வேகமாக கடக்க உதவியாய் இருக்கும்பொழுது ஊர் விரிவடைந்து விடுகிறது. அந்த ஊர்திகளுக்கேற்ற சாலைகளும், அதை நிருத்தும் இடங்களையும் அமைக்க புதிதாக நிர்மாணிக்கப்படும் ஊர்களில் செய்வதுபோல் பழமையான நகரங்களை சிதைக்காமல் செய்ய முடிவதில்லை. நம் நாட்டின் பழமையை மதித்து போற்றினால் குறுகலான சாலைகளைப் பார்த்து பெருமைப் படலாம். இது நான் என் "நகர வளர்ச்சி" (Urban Development) வகுப்பில் அறிந்து கொண்டது.
***பாரத நாட்டிற்கினை பாரத நாடே***
//நகர வளர்ச்சியின் காரணமாக அழித்து மாற்றப் பட்ட நகரங்கள் உண்டு. அது போலின்றி காலம் காலமாக மாற்றப்படாத நகரங்களில் குறுகலான வீதிகள் அதிகம்.//
ReplyDeleteசூபர் தேமொழி! இது,இது பின்னூட்டம். நல்ல ஆய்வு மனப்பான்மையுடன் சொல்லியுள்ளீர்கள். நான் இப்படி இங்கே பேசினா வாத்தியர் மட்டும் தான் கேட்பார். மற்றவர்கள் 'இவருக்குத்தான் எல்லாம் தெரியும்னு காட்டிக்கிறாரு!'என்று ஒதுங்கிவிடுவர்.
http://pirapanjakkudil.blogspot.com
மேற்படி பிளாக் ரமீஸ் பிலாலி என்ற சுஃபி மார்க்க முஸ்லிம் பேராசிரியர் நடத்துகிறார்.
அதில் மெக்காவில் ஒரு மிக உயரமான மணிக்கூண்டு கட்டிவிட்டதால், பக்தர்கள் கவனம் காபாவில் இருந்து அந்தக் கட்டிடத்திற்குச் சென்று விட்டதாகவும் வருத்தப்படுகிறார்.அந்தக்கட்டுரையிலேயே காசி நகரத்தில் 10000 ஆண்டுப்பழமையை இன்னும் பார்க்கலாம் என்கிறார். எனவே புனிதத் தளங்கள் அவசரமாக மாற்றம் செய்ய வேண்டியவை அல்ல.
நமது வகுப்பறைத் தோழியரும், தோழர்களும் அவசியம் படிக்க வேண்டிய வலைபதிவு இது. அவர் அனுமதியின்றி அவருடைய செல்லப் பூனைகளுக்கு அஸ்தி கரைத்ததை இங்கே வெளியிடுவதில் மன நெகிழ்வு அடைகிறேன்
ReplyDeletehttp://thulasidhalam.blogspot.com/2011/03/blog-post_03.html
த்ரிவேணி காட் அடுத்த ஸ்டாப். இங்கே வரணும் என்பதுதான் இந்த மொத்தப் பயணத்தின் முக்கிய நிகழ்ச்சி. மனசு ஒரே பாரமாவும் துக்கமாவும் இருந்துச்சு. என் குழந்தைகள் இருவரின் அஸ்திகளை இத்தனை வருசங்களா வச்சுக் காப்பாற்றி வந்தது, கங்கையில் கரைக்கணும் என்ற ஒரே வேண்டுதலுக்காகத்தான். காசியைவிட இங்கே ஹரித்வாரில் கங்கை சுத்தமாக இருக்கு. ரிஷிகேஷிலோ இன்னும் படு சுத்தம். சாஸ்த்திர முறைப்படி சடங்கு செய்ய வேண்டாம். குழந்தைங்க நம்மிடம் காமிச்ச உண்மையான அன்புக்கு இதுவாச்சும் செய்யணுமுன்னு 'என் செல்லச்செல்வங்கள் கப்புவுக்கும் கோகிக்கும்'* முடிவு நிச்சயமானபோதே மனசுலே நினைச்சுக்கிட்டதுதான். நியூஸியில் வேற எந்தச் செல்லங்களுக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம் இவனுங்களுக்குக் கிடைக்குதேன்னு மனசுக்குள்ளே ஒரு வியப்பு. புண்ணிய ஆத்மாக்களா முற்பிறவியில் இருந்துருப்பாங்களோ என்னவோ!
(*சுப்பு,கோகி பூனைகள்)
மௌனமாப் பிரார்த்தனை செஞ்சுக்கிட்டே என் குழந்தைகளின் அஸ்தியை கங்கையில் கரைச்சேன். தாங்க முடியாத துக்கத்தாலே நெஞ்சடைச்சுக் கண்ணீர் அடங்கமாட்டேங்குது. என்ன கீதை படிச்சு என்ன பயன்? அஞ்ஞானம் விட்டு விலகுதா? 'போகட்டும்மா. பசங்களுக்கு நல்ல கதி கிடைக்கட்டும். இத்தனை வருசமா அந்த ஆத்மா எங்கே போறதுன்னு தெரியாம திகைச்சு நின்னுருக்குமே'ன்னார் கோபால்.
ஹரித்துவார் சாலையில் வண்டியைத் திருப்பி வந்துக்கிட்டு இருந்தப்ப, 'உன் அஸ்தியைக்கூட இதே இடத்துலே கொண்டுவந்து கரைச்சுடவா?'ன்னார் கோபால். 'வேணாம் அவ்வளோ புண்ணியம் செய்யலை. நம்ம வீட்டுலே இருக்கும் ரோஸ் செடிகளுக்குக் கீழே தூவி விட்டுருங்க. அதுவே போதும்'னேன்.
சொந்த ஆஸ்ரமம் தொடங்கும் எண்ணத்தை மட்டும் அப்படியே விட்டுடக்கூடாது. ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் பூனைச் சாமியாரிணி பற்றிய சேதியைத் தெரிஞ்சுக்கத்தான் போறீங்க!
உங்கள் பயண கட்டுரை மிகவும் அருமை..எழுத்தாளர்கள் சுபா எழுதும் “கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம்” உங்களை, உங்களுக்குள்ளேயே பயணப்பட வைக்கும்...http://manam.online/Konjam-Punidham-Konjam-Manidham-3
ReplyDelete