மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.11.11

தீது அகல எதைச் செப்புவான் விஸ்வேசன்?

 நகரத்தார் விடுதியின் அருகே இருக்கும் கடை வீதி 
---------------------------------------------------------------------------------------
 தீது அகல எதைச் செப்புவான் விஸ்வேசன்?

 இந்தூர் ராணி ராஜ்மாதா தேவி அகல்யாபாய் அவர்களைத் தெரியுமா உங்களுக்கு? அதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அவர் வாழ்ந்த காலம்: 31.05.1725 முதல் 13.08.1795 வரை

இந்திய வரலாற்றில் முகலாய சக்கரவர்த்தி அக்பருக்கு எப்படி ஒரு இடம் உள்ளதோ அப்படி ஒரு இடம் இந்த ராஜ மாதாவிற்கும் அதாவது அரசிக்கும் உண்டு.

அவரைப் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டும் என்பதற்காக ஒரு சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்
http://en.wikipedia.org/wiki/Ahilyabai_Holkar



 இந்தூர் ராணி அகல்யாபாய் அரண்மனையின் எழில்மிகு தோற்றம்

-------------------------------------------------------------------------------------------
வாரணாசியைப் பற்றிய பயணக் கட்டுரையில் அவருக்கு என்ன வேலை என்கிறீர்களா?

அவர்தான் இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலை 1777ஆம் ஆண்டு கட்டினார். அவர் கை ராசி, அவரால் கட்டப்பெற்ற அக்கோவில் சுமார் 234 ஆண்டு காலம் தாக்குப் பிடித்து இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

காசியில் இருந்து இந்தூர் 960 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது (மத்தியப் பிரதேசம்). தற்போது உள்ளதுபோல பயண வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் இத்தனை தூரம் தாண்டி வந்து தனது மேற்பார்வையில், பெரும் பொருட் செலவில் கோவிலைக் கட்டியுள்ளார் என்றால் அதற்குக் காரணம் அவருடைய மன வலிமை என்பதைவிட அவருக்கு விசுவநாதரின் மேல் இருந்த பக்திதான் முழுக் காரணமாக இருந்திருக்க முடியும்!

வாரணாசிக்கு 3,000 ஆண்டு வரலாறு உள்ளது என்னும்போது, அதற்கு முன்பு இருந்த விசுவநாதர் கோவில் என்ன ஆயிற்று என்கிறீர்களா?

பல வேற்று மதத்தவர்களின் படை எடுப்பின் போது அவைகள் எல்லாம் இடித்துத் தள்ளப்பட்டன.

அதைப் பார்த்துக்கொண்டு காசி விஸ்வநாதர் சும்மா இருந்தாரா என்று வகுப்பறைக்குள் எட்டிப் பார்க்கும் அரை டிக்கெட்டுகள் கேள்வி கேட்கலாம்.

''அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது!"


என்ற சிந்தனை ஒரு கவிஞனுக்கே இருக்கும்போது, எல்லாம் வல்ல இறைவனுக்கு இருக்காதா?

அங்கே இடிப்பவர்கள் இடிக்கட்டும், அதை மீண்டும் கட்டுவதற்கு ஒருவன் வருவான் என்று இறைவன் வாளாவிருந்துவிட்டார் (ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டார்) இறைவன் நீக்கமற எல்லா இடங்களிலும் இருப்பவர். தனக்கு ஒரு கோவில் கட்டச் சொல்லி அவர் ஒருவரையும் பணித்ததில்லை. கேட்டுக்கொண்டதில்லை. கட்டுபவன் பக்தனே. இடிந்ததைப் புதுப்பிக்க வருபவனும் பக்தனே! எல்லாம் ஒரு சுழற்சி!
-------------------------------------------------------------------------------

அலங்காரத்தில் திளைக்கும் விஸ்வநாதர்!
------------------------------------------------------------------------------------------------
வாரணாசியில் விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளியுள்ளார். வெள்ளித்தகடுகள் பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது அவர் காட்சியளிக்கின்றார்.

சிவபெருமானின் அடியையும் முடியையும் காணப் பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே என்று புராணங்கள் கூறுகின்றன. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டு.

கங்கையின் மேற்குக்கரையில் காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கை நதி ஓடுகிறது. வடமுகமாக கங்கை இங்கே ஓடுவதால் உத்தரவாகினி என்று அழைக்கின்றனர்.

கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. மொத்தம் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அத்தீர்த்தக் கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது என்பது உள்ளூர்க்காரனுக்கு வேண்டுமென்றால் சாத்தியமாகலாம். இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் பயணமாகச் செல்பவர்களுக்கு சாத்தியப்படாது.

அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது நல்லது. அதற்கு பஞ்சதீர்த்த யாத்திரை என்று பெயராகும். அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. அங்கிருந்துதான் காசி ஸ்தலம் ஆரம்பமாகிறது.

அக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர்கள். அக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் அஸ்சங்கமேஸ்வரர் எனப்படுகின்றார். முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். (எப்படி மறைந்தார் என்று யாரும் கேட்டுப் பின்னூட்டம் இட வேண்டாம்)

அதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். அங்கு பிரம்மா பத்து அசுவமேத யாகங்களைச் செய்ததால்  தசாஸ்வமேத  கட்டம் எனப் பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் சூலடங்கேஸ்வரர் என்ற சிவலிங்கம் உள்ளது. இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கின்றது. இந்த கரையில் உள்ள ஆதிகேஸ்வரரை வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நீராடி விட்டுக் கரையிலுள்ள பிந்து மாதவர் மற்றும் கங்கேஸ்வரரை வணங்க வேண்டும்.

பஞ்ச தீர்த்தக்கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள மணிகர்ணிகேஸ்வரரையும், அம்பாளையும் வழிபட வேண்டும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி என்பார்கள். இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. மனித வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை நினைவு படுத்தும் இடங்கள் மூன்று. ஜெருசலம், பீகிங் ஆகியவற்றுடன் வாரணாசியும் சேர்த்துப் பேசப்படுகின்றது. அத்தனை பழமையான நகரம்.

இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள்.  காசிவிஸ்வநாதரை வழிபாடு காசி என்றால் ஒளிநகரம் என்றும் பொருள் படும்.

“திருவாரூரில் பிறந்தால் முக்தி ;
காசியில் இறந்தால் முக்தி
(சிதம்பரத்தில் வாழ்ந்தால் முக்தி ;
அண்ணாமலையை நினைத்தால் முக்தி)”

என்பார்கள்

முக்தி என்பது உலக வாழ்வை ஆன்மா நீக்கிவிட்டுச் செல்லும் நிலை. பின்பிறப்பு இல்லாத நிலை. உலகியல் துன்பங்கள் இல்லாத நிலை.

வாரணாசியில் இறந்து போவது முக்தியைத் தரும் என்று சொல்வார்கள். அங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சிவபெருமானே ஓதுவதாகச்  சொல்லப் படுகிறது. நமசிவாய மந்திரத்தையும் ஓதுவாராம். இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தச் செய்தி!

“மாதவத்தால் காசிதனில் மாண்டவர்கள் தம்செவியில்
தீதுஅகல விஸ்வேசன் செப்புவான் ஐந்தெழுத்தை
மாதவள் விசாலாட்சி மடிக்கிடத்தி வீசுவாள்
வேதனையெல்லாம் தீர்ந்து வென்றிடுவர் பின்பிறப்பை!”


என்று செட்டிநாட்டுக் கவிஞன் ஒருவன் எழுதிய பாடல் ஒன்று, காசி நகர விடுதியில் காட்சிக்கு உள்ளது.  நீங்களும் அதைக் காணக் கீழே கொடுத்துள்ளேன்.


-------------------------------------------------------------------------------------------------------
வாரணாசியில் நடைபெறும் திருவிழாக்கள்: மகா சிவராத்திரி, தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்சவம்)
கோவில்  திறந்திருக்கும் நேரம்:  காலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.
   
எச்சரிக்கை: சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் அருகில் தீவிரவாதிகளால் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதால், தற்போது கோவிலின் நுழைவாயிலும், உள்ளேயும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. (Security Check) உங்களைத் தோண்டித் துருவி விட்டுத்தான் உள்ளே அனுப்புவார்கள். ஆகவே கோவிலுக்குச் செல்பவர்கள் காமெரா, செல்போன், கத்தி போன்ற எதையும் கொண்டு செல்ல வேண்டாம். அவற்றுடன் உங்களுக்கும் சேர்த்து அனுமதி மறுக்கப்படும்!    
 
கோயில் மிகவும் சிறிய கோயில் தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம்.      
 
விஸ்வநாதர் கோயிலின் அருகிலேயே அன்னபூரணி அம்பாள் கோயில் உள்ளது. அம்பாளின் அழகே அழகு! சந்நிதானத்தில் அனைவருக்கும் ஒரு கைப்பிடி பச்சை அரிசியைப் பிரசாதமாகத் தருகிறார்கள். மறக்காமல் கேட்டு வாங்கிக் கொண்டு வாருங்கள். அன்னபூரணியின் அருளால் உங்களுக்கு எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் இருக்காது.


அன்னபூரணி தன் நாதருக்கே அரிசி தானம் வழங்கும் காட்சி!
---------------------------------------------------------------------------------------------------
அன்னபூரணி கோவிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாராம்!
    
விஸ்வநாதரை மனமுருகப் பிரார்த்தனை  செய்தால் திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் குறை நீங்கும், கல்வியில் சிறந்து விளங்கலாம்.
 
விசாலாட்சி அம்மைக்குத் தனி சன்னதி உள்ளது.

ஒருமுறை சென்று வாருங்கள். விஸ்வநாதன் - அன்னபூரணி அழகைக் கண்டு வாருங்கள். அருளைப் பெற்று வாருங்கள். வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் எல்லாம் நீங்கும்!
-----------------------------------------------------------------------------------
(இன்னும் வரும்)

அன்புடன்
வாத்தியார் 


இதுபோன்ற பழைய - எழில்மிகு கட்டங்கள் நிறைய உள்ளன!


நகரத்தார் விடுதியின் அருகே உள்ள ஒரு தெரு. 
 எப்படி இதில் வாகனத்தில் செல்ல முடியும்?

 இதுபோன்ற் அகலக் குறைவான தெருக்கள் ஏராளமாக உள்ளன!

 அகலக் குறைவான தெருக்களிலும் 
அமோகமாக நடைபெறும் வியாபாரம்


 கோவிலின் அருகிலேயே இத்தனை நெரிசல். மாநகராட்சியும், காவல்துறையும் அங்கே முழுவீச்சோடு செயல்படவில்லை!
-----------------------------------------------------------------------------------------------------




 கங்கைக் கரையில் வாத்தியார்

 மேளதாளத்துடன் வாத்தியார் சுவாமி தரிசனத்திற்குப் புறப்படும் காட்சி!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

24 comments:

  1. நிறைவான பயனுள்ள செய்திகள் படங்கள் அடங்கிய பகுதி. காசிக்குச் சென்று வந்தது போன்ற மனத்திருப்தி. அனைவருக்கும் தேவையான விவரங்கள். தொடரட்டும் தங்கள் பணி.

    ReplyDelete
  2. அரசி "அஹல்யாதேவி ஹோல்கர்" பற்றி அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஐயா. இவரைப் பற்றி நான் கேள்விப் பட்டதே இல்லை. இந்திய வரலாற்று பாடத்தில் படித்ததாகவும் நினைவில்லை. எத்தனையோ மன்னர்கள் குளங்கள் வெட்டியதையும், மரங்களை நட்டதையும் படித்ததுண்டு. எப்படி புகழ் பெற்ற இவர் பற்றி தெரியாமல் போனது என்று புரியவில்லை. விக்கி சுட்டி கொடுத்து உதவியதற்கு நன்றி.

    உங்கள் படங்கள் கட்டுரைக்கு அழகு சேர்க்கிறது. நேரில் பார்ப்பது போல் உணர்வைக் கொடுக்கிறது. அந்தக் காலத்தில் சாலைகள் அமைக்கும்பொழுது மாற்றுத் திறனாளிகளை மனதில் கொள்ளவில்லை போலும். நல்ல பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  3. இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கர் மராட்டிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய பெயர். எத்தனையோ வீர பெண்மணிகள் இருந்தாலும் அகல்யா பாயிஜி தான் என்னுடைய பேவரரிட். மராட்டிய சாம்ராஜ்யத்தை விழிப்பூட்டி முகலாயர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு எழுச்சி தந்தவர். இவர் கொடுத்த சப்போர்ட்ல் தான் மகாஜி ஷிண்டே முன் நின்று மராட்டிய சாம்ராஜ்யத்தை சூழ்ச்சிக்காரர்களின் பிடியிலிருந்து காத்தார்.சிவபெருமானின் தீவிர பக்தர். அவரை பற்றி எழுதி இன்றைய நாளை நல்நாளக்கிய ஆசிரியருக்கு மிக்க நன்றிகள்.
    காசி பயணக்கட்டுரை நாங்கள் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  4. //Ahilyabai was born on May 31, 1725 in the village of Chaundi,

    Ahilya Bai’s husband Khanderao was killed during the siege of Kumbher in 1754.

    Her last great sorrow was when her daughter became a Sati upon the death of Yashwantrao Phanse. Ahalya Bai was seventy years old when her long and splendid life .//

    சதி வழக்கத்தைப் பற்றி நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் அறைகுறையானவை என்பது மேற்கண்ட குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது.

    29 வயதில் அஹல்யா தேவி விதவை ஆகிறார். அவர் கணவனின் சிதையில் இறஙவில்லை.மேலும் விதவைக்கோலம் பூண்டு பர்தா முறையை அனுசரிக்கவில்லை. ராணியாக 70 வயது வரை வாழ்ந்து சிறப்பான பெயர் எடுக்கிறார். ஆனால் அவருடைய மகள் சதி ஆகிறாள்.
    எனவே விதவை கட்டயப்படுத்தப் பட்டு உடன் கட்டை ஏறத் தூண்டப்பட்டாள் என்ற கூற்று ஆய்வுக்கு உரியது.

    அருமையான கட்டுரை ஐயா!நன்றி!

    ReplyDelete
  5. அருமையான தகவல்கள் நிறைந்த அற்புதமானப் பதிவு... உண்மையிலே நேரிலே சென்று பார்த்தது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது... வாய்ப்புக் கிடைக்கும் போது அதாவது அப்பன் விஸ்வநாதனின் ஆணை வரும் போது அங்கு சென்று நிறைய நாட்கள் தங்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.

    புனித கங்கையில் மூழ்கி பஞ்சபூத நாயகன் விஸ்வ நாதனைத் தொழவேண்டும்.

    பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  6. பதிவிற்கு நன்றி ஐயா. காசிக்கு சென்றால் சங்கல்பம் எடுக்க வேண்டும் என்று கூறுகிறிர்கள். அதைப் பற்றி ஒரு சொல் கூறுங்கள் ஐயா..

    ReplyDelete
  7. sir, the picture of god in varanasi is so useful for us and of high quality.picture of anna purani offering food to lord siva is an excellent picture.

    (www.astrologicalscience.blogspot.com)

    ReplyDelete
  8. உலகுக்கே படியளப்பவன் பிச்சை பெறுவதை பார்க்கும் பொது கண்களில் நீர் பணிக்கிறது ! அதுவும் அவன் திருவிளையாடளே எனும்போது ஆனந்தம் குடிக்கொள்கிறது !

    என்ன அழகுப்பாருங்கள் ! அந்த முகங்களைப்பார்க்கும்போது நிலை மறக்க நேர்கிறது !
    இந்த அண்டசராசரங்களின் நாயகன் நாயகி எனும்போது சும்மாவா !!!!!! உயிரை கொடுக்கலாம் அய்யா !

    நன்றி !

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்.


    தங்களின் அனுபவ கட்டுரையை படிக்கும் பொழுது நிறைய இடம்களை வாரனாசியில் காணாமல் விட்டு விட்டமே என்ற வருத்தம் தான் வருகின்றது.

    ReplyDelete
  10. காசிக்கு எப்போது செல்ல வேளை தருவரோ தெரியவில்லை விஸ்வநாதன் ஆனால் தங்களின் கட்டுரை மூலம் அந்த உணர்வு கிடைத்தது,
    மேலும் காசி மற்றும் அங்கு செய்ய வேண்டியவை பற்றிய முக்கியமான விவரங்கள் தந்துள்ளிர்கள்,

    மற்றும் இந்தூர் ராணி ராஜ்மாதா தேவி அகல்யாபாய் பற்றியும் அவர் காசி விஸ்வநாதர் கோயிலை கட்டினார் என்ற வரலாற்று தகவலை தந்தமைக்கு,

    மிக்க நன்றி

    ReplyDelete
  11. Blogger Thanjavooraan said...
    நிறைவான பயனுள்ள செய்திகள் படங்கள் அடங்கிய பகுதி. காசிக்குச் சென்று வந்தது போன்ற மனத்திருப்தி. அனைவருக்கும் தேவையான விவரங்கள். தொடரட்டும் தங்கள் பணி.//////

    உங்களின் மேலான அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  12. /////Blogger தேமொழி said...
    அரசி "அஹல்யாதேவி ஹோல்கர்" பற்றி அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஐயா. இவரைப் பற்றி நான் கேள்விப் பட்டதே இல்லை. இந்திய வரலாற்று பாடத்தில் படித்ததாகவும் நினைவில்லை. எத்தனையோ மன்னர்கள் குளங்கள் வெட்டியதையும், மரங்களை நட்டதையும் படித்ததுண்டு. எப்படி புகழ் பெற்ற இவர் பற்றி தெரியாமல் போனது என்று புரியவில்லை. விக்கி சுட்டி கொடுத்து உதவியதற்கு நன்றி.
    உங்கள் படங்கள் கட்டுரைக்கு அழகு சேர்க்கிறது. நேரில் பார்ப்பது போல் உணர்வைக் கொடுக்கிறது. அந்தக் காலத்தில் சாலைகள் அமைக்கும்பொழுது மாற்றுத் திறனாளிகளை மனதில் கொள்ளவில்லை போலும். நல்ல பதிவிற்கு நன்றி./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. ////Blogger sriganeshh said...
    இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கர் மராட்டிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய பெயர். எத்தனையோ வீர பெண்மணிகள் இருந்தாலும் அகல்யா பாயிஜி தான் என்னுடைய பேவரரிட். மராட்டிய சாம்ராஜ்யத்தை விழிப்பூட்டி முகலாயர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு எழுச்சி தந்தவர். இவர் கொடுத்த சப்போர்ட்ல் தான் மகாஜி ஷிண்டே முன் நின்று மராட்டிய சாம்ராஜ்யத்தை சூழ்ச்சிக்காரர்களின் பிடியிலிருந்து காத்தார்.சிவபெருமானின் தீவிர பக்தர். அவரை பற்றி எழுதி இன்றைய நாளை நல்நாளக்கிய ஆசிரியருக்கு மிக்க நன்றிகள். காசி பயணக்கட்டுரை நாங்கள் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. நன்றி./////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ///Blogger kmr.krishnan said...
    //Ahilyabai was born on May 31, 1725 in the village of Chaundi,
    Ahilya Bai’s husband Khanderao was killed during the siege of Kumbher in 1754.
    Her last great sorrow was when her daughter became a Sati upon the death of Yashwantrao Phanse. Ahalya Bai was seventy years old when her long and splendid life .//
    சதி வழக்கத்தைப் பற்றி நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் அறைகுறையானவை என்பது மேற்கண்ட குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது.
    29 வயதில் அஹல்யா தேவி விதவை ஆகிறார். அவர் கணவனின் சிதையில் இறஙவில்லை.மேலும் விதவைக்கோலம் பூண்டு பர்தா முறையை அனுசரிக்கவில்லை. ராணியாக 70 வயது வரை வாழ்ந்து சிறப்பான பெயர் எடுக்கிறார். ஆனால் அவருடைய மகள் சதி ஆகிறாள்.
    எனவே விதவை கட்டயப்படுத்தப் பட்டு உடன் கட்டை ஏறத் தூண்டப்பட்டாள் என்ற கூற்று ஆய்வுக்கு உரியது.
    அருமையான கட்டுரை ஐயா!நன்றி!/////

    கொடுக்கும் சுட்டிகளையும் நீங்கள் விடுவதில்லை. தோண்டித்துருவுகிறீர்கள். உங்கள் ஆய்வுகள் தொடரட்டும். நன்றி!

    ReplyDelete
  15. /////Blogger தமிழ் விரும்பி said...
    அருமையான தகவல்கள் நிறைந்த அற்புதமானப் பதிவு... உண்மையிலே நேரிலே சென்று பார்த்தது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது... வாய்ப்புக் கிடைக்கும் போது அதாவது அப்பன் விஸ்வநாதனின் ஆணை வரும் போது அங்கு சென்று நிறைய நாட்கள் தங்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. புனித கங்கையில் மூழ்கி பஞ்சபூத நாயகன் விஸ்வ நாதனைத் தொழவேண்டும்.
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!/////

    அந்த வாய்ப்பு கூடிய விரைவில் கிடைக்க விஸ்வேசுவரன் அருள் புரிவாராக! நானும் அவரை வேண்டிக்கொள்கிறேன்!

    ReplyDelete
  16. /////Blogger Sathish K said...
    பதிவிற்கு நன்றி ஐயா. காசிக்கு சென்றால் சங்கல்பம் எடுக்க வேண்டும் என்று கூறுகிறிர்கள். அதைப் பற்றி ஒரு சொல் கூறுங்கள் ஐயா..////

    Sankalp means taking a pledge. The first part of every worship is Sankalp It is necessary to pledge before trying any ritual.

    ReplyDelete
  17. /////Blogger arul said...
    sir, the picture of god in varanasi is so useful for us and of high quality.picture of anna purani offering food to lord siva is an excellent picture. (www.astrologicalscience.blogspot.com)/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////Blogger perumal shivan said...
    உலகுக்கே படியளப்பவன் பிச்சை பெறுவதை பார்க்கும் பொது கண்களில் நீர் பணிக்கிறது ! அதுவும் அவன் திருவிளையாடளே எனும்போது ஆனந்தம் குடிக்கொள்கிறது !
    என்ன அழகு பாருங்கள் ! அந்த முகங்களைப்பார்க்கும்போது நிலை மறக்க நேர்கிறது !
    இந்த அண்டசராசரங்களின் நாயகன் நாயகி எனும்போது சும்மாவா !!!!!! உயிரை கொடுக்கலாம் அய்யா !
    நன்றி !////

    உங்கள் பெயரிலேயே பெருமாளும் இருக்கிறார். சிவனும் இருக்கிறார். டச்சிங்’காக பின்னூட்டம் போட்டுள்ளீர்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. /////Blogger kannan said...
    ஐயா வணக்கம்.
    தங்களின் அனுபவ கட்டுரையை படிக்கும் பொழுது நிறைய இடம்களை வாரனாசியில் காணாமல் விட்டு விட்டமே என்ற வருத்தம் தான் வருகின்றது./////

    இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. வாய்ப்புக்கிடைக்கும்போது மீண்டும் ஒருமுறை சென்று வந்தால் போகிறது!

    ReplyDelete
  20. /////Blogger முருகராஜன் said...
    காசிக்கு எப்போது செல்ல வேளை தருவரோ தெரியவில்லை விஸ்வநாதன் ஆனால் தங்களின் கட்டுரை மூலம் அந்த உணர்வு கிடைத்தது,
    மேலும் காசி மற்றும் அங்கு செய்ய வேண்டியவை பற்றிய முக்கியமான விவரங்கள் தந்துள்ளிர்கள்,
    மற்றும் இந்தூர் ராணி ராஜ்மாதா தேவி அகல்யாபாய் பற்றியும் அவர் காசி விஸ்வநாதர் கோயிலை கட்டினார் என்ற வரலாற்று தகவலை தந்தமைக்கு,
    மிக்க நன்றி////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  21. வணக்கம் ஐயா,
    ராணி அஹில்யாதேவி பற்றி பள்ளியில் கூட படித்ததில்லை , ஆனால் வகுப்பறைக்கு வந்து அறிந்து கொண்டேன்.மேலும் காசிநகரத்தை பற்றியும் வழிபாடுகளையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.ஐயா எங்கள் சமூகத்தில் தர்ப்பணம்,திதி போன்ற சம்பிரதாயங்கள் பல தலைமுறைகளாகவே கடைப்பிடிக்காமல் (தெரியாமல்) இருக்கிறோம்.ஆனால் இந்து மதக் கடமைகளில் முக்கியமான. இதை என் பெற்றோரிடம் பலமுறை கூறியும் நடைமுறை தெரியாததால் எங்கள் பாட்டிக்கு செய்யவில்லை. இனி தங்களுடைய இந்த‌ காசி பயணப் பதிவைக் காட்டி தவறை சுட்டிக் காட்டுவேன்.நன்றி ஐயா.

    ReplyDelete
  22. //ஒருமுறை சென்று வாருங்கள். விஸ்வநாதன் - அன்னபூரணி அழகைக் கண்டு வாருங்கள். அருளைப் பெற்று வாருங்கள்//

    பதிவு அருமை ... காசிக்கு சென்று வர முயற்சி செய்கிறேன் :)

    ReplyDelete
  23. 'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே..'

    என்று வாத்தியார் தாயாரின் இறுதிச்சடங்கு செய்ய காசிக்கு சென்றாலும் சென்றார்..

    அதன் மூலம் வரலாற்றுச் சிறப்பும் சிவஸ்தலங்களில் முக்கியத்துவமும் வாய்ந்த காசியை இளைய டிஜிட்டல் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் பணி வாத்தியாருக்கு வந்து கிடைத்தது..

    'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்று ஒரு வள்ளலைப் பற்றி சொல்வார்கள்.. அதுபோலே அம்மையார் மறைவிலும் இப்படி பலருக்கும் பயனுள்ள செய்திகளை இணையத்திலே உலாவ வழிவகுத்திருக்கிறார்..

    ஆத்மா நிச்சயம் அவர் எண்ணப்படியே சாந்தி அடைந்திருக்கும்..

    ReplyDelete
  24. அய்யா அவர்களின் காசி வருணனையை படித்தவுடன் .காசிக்கு செல்லும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. அந்த அருள்மிகு விஸ்வநாதனை தரிசிக்க என்று வேளை வருமோ .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com