மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.7.10

பிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவிருக்கும்!

 ----------------------------------------------------------------------------
பிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவிருக்கும்

  “உறவு என்றொரு சொல்லிருந்தால்
   பிரிவு என்றொரு பொருளிருக்கும்”

   என்றார் கவியரசர் கண்ணதாசன்
   அதுபோல
   “பிறப்பு என்றொரு கதையிருந்தால்
    இறப்பு என்றொரு முடிவிருக்கும்”

முடிவில்லாத கதையே இல்லை. முடிவில்லாத மனித வாழ்க்கையும் இல்லை! எல்லோருடைய வாழ்க்கையும் முடிவை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக் கிறது. படம் எத்தனை ரீல்கள்? எப்போது முடியும் என்பது மட்டும் தெரியாது. அது தெரிந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது. ஆகவே அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.

  “ஆறிலும் சாவுண்டு.
   நூறிலும் சாவுண்டு”

ஆறு ரீல்களில் முடிகிற படமும் உண்டு. நூறு ரீல்கள்வரை இழுத்தடித்துக்கொண்டு ஓடுகிற படமும் உண்டு.

பயத்திலேயே பெரிய பயம் மரண பயம்தான். அந்த பயம் இல்லாதவர்கள் ஞானிகள் மட்டுமே. அல்லது ஞானம் உள்ளவர்கள் மட்டுமே!
---------------------------------------------------------
எல்லாம் இருக்கிறவரைதான். அதாவது உன்னுடையது, என்னுடையது என்னும் உடைமைப் போராட்டம் எல்லாம்  உயிர் உள்ளவரைதான்!

பட்டம், பதவி, சொத்து, சுகம், செல்வம் எதுவும் கூட வராது.

அதைத்தான் பட்டினத்தார் நெத்தியடியாக ஒற்றைவரியில் சொல்லிவிட்டுப் போனார். “ அடேய் நீ செத்துப்போனால் உன்னுடன் நீ போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் எதுவும் வராது!” என்னும் பொருள்பட இப்படிச் சொன்னார்:

  “காதறுந்த ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே”

காதறுந்து ஒடிந்துபோய் எதற்கும் பயன்படாத ஊசிகூட உன்னுடன் வராது என்றார். அதையும் அவர் சொல்லவில்லை. அவருக்கு மகனாக
வந்துதித்த சிவபெருமான்,  எழுதிக்கொடுத்த  சிற்றோலை மூலம்
உணர்ந்து கொண்டார். அது உங்களுக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும்.
------------------------------------------------------------
ஆனால் நாம் கேட்டுக்கொள்வோமா?  மாட்டோம்!

அதையெல்லாம் சாகிற அன்றைக்குப் பார்த்துக்கொள்வோம். இப்போது போய் இரண்டு  ‘பெக்’ அடித்துக் கவலையை மறப்போம் என்று கிளம்பிவிடுகிறவர்கள் பலர் உண்டு.

 “ஒன்றாம் தேதியானால், செல்போன் பில் கட்ட வேண்டும். பணம் வேண்டாமா? ஹவுஸிங் லோன் கட்ட வேண்டும் அல்லது வீட்டு வாடகையைக் கொடுக்க வேண்டும் பணம் வேண்டாமா? அரிசி
கிலோ 44 ரூபாய் விற்கிறது, பெட்ரோல் லிட்டர் 55 ரூபாய் விற்கிறது - பணம் வேண்டாமா? சில்லறைக் கவலைகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் செல்வந்தனாக இருக்க வேண்டும். செல்வம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா?  அல்லது செல்வத்தைத் தேடி அலையாமல் அல்லது உழைக்காமல் இருக்க முடியுமா? பட்டினத்தார் சொன்னதெல்லாம் பரதேசம் போகிற காலத்திற்கு; இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கு அதெல்லாம் ஒத்துவராது.
சும்மா வாயை மூடிக்கொண்டிருங்கள்!” என்று வியாக்கியானம் பேசுபவர்களே அதிகம். அவர்களிடம் வாயைக் கொடுத்தால் மாட்டிக்கொண்டு விடுவோம்.

அடியவன் சொல்வது இதுதான்: ஒருபக்கம் வாழ்வதற்குப் பொருளைத் தேடு. இன்னொரு பக்கம் போகிற  காலத்திற்கு அருளைத் தேடு. இருளைப் போக்கு!
----------------------------------------------------------------
சரி பாடத்திற்கு வருகிறேன்.

மரணத்தின் நிலைப்பாட்டைப் பட்டினத்தடிகள் ஒரு பாட்டில் - அதுவும் நான்கே வரிகளில் மிகவும் அழகாகச் சொன்னார். பாடலைப் பாருங்கள்.

“வீடிருக்க தாயிருக்க வேண்டுமனை யாளிருக்க
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”

  “உன்னுடைய வீடு இங்கே இருக்கிறது. உன்னைப்பெற்ற தாயும், உனக்குக் கழுத்தை நீட்டிய மனைவியும் இங்கே இருக்கிறார்கள். நீ பெற்ற பட்டம், பதவி, பெருமைகள் எல்லாம் இருக்கிறது. உனக்கான அடுத்த வேளை  அறுசுவை உணவு தயாராக இருக்கிறது. உன்னுடைய அருமைப் பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள். உன் வீட்டுக் கொள்ளையில் மாடுகளும், அவை ஈன்ற கன்றுக்குட்டிகளும் இருக்கின்றன.  நீ தேடி  வைத்த  பொன், பொருள் எல்லாம் இருக்கிறன்றன. உன் உடல் இருக்கிறது. உன்னை மட்டும் காணவில்லையே - எங்கேயடா போனாய் நீ?” என்று கேட்டு உடம்பை விட்டு ஆன்மா பிரிந்துபோன நிலையை மிகவும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் அவர்.  உடம்பை விட்டு ஆன்மா நீங்கும் நிலைதான் மரணம்.

அதைச் சொல்வதுதான் எட்டாம் வீடு
----------------------------------------------------------------
வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்தவன் சொன்னான்:

ஓரெட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் பெறதா கல்வியும்
மூவெட்டில் பண்ணாத திருமணமும்
நாலெட்டில் பெறாத குழந்தையும்
ஐயெட்டில் தேடாத செல்வமும்
ஆறெட்டில் பெறாத புகழும்
ஏழெட்டில் சுற்றாத ஸ்தலமும்
எட்டெட்டில் கிடைக்காத மரணமும் வீணே!

ஆக எட்டெட்டில் - அதாவது 64 வயது வரைதான் - வாழ்க்கை அங்கீகாரம் உடையதாக, அதிகாரம் உடையதாக இருக்கும். அதற்குப் பிறகு உயிருடன் இருக்கும் வருடங்கள் எல்லாம் போனசாக வருவது.
அங்கீகரிக்கப்பட்ட காலத்தில்  எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு  விடுங்கள். ஆட்டம் பாட்டத்தை எல்லாம் முடித்துக்கொண்டு விடுங்கள்.
உயில் எழுதி வைக்க வேண்டுமென்றால் வைத்துவிடுங்கள்.

அதற்குப் பிறகு, எந்தக் கவலையும் இன்றி சிறுவர்களைப் போல, சிறுமிகளைப் போல அந்தக் கணங்களில் வாழ்ப் பழகிக்கொள்ளுங்கள். அந்தந்த நேரங்களில் வாழப் பழ்கிக்கொள்ளுங்கள்.

Try to live in a momentary world and enjoy momentary life (Momentary means lasting for only a moment. Occurring  or present at every moment)

வாரியார் சுவாமிகள் சொல்வார்::
“ஒரு ஊருக்குப் போகிறோம் என்றால்,  அங்கே பயணிப்பதற்கான இரயில் அல்லது பேருந்து சீட்டிற்கு முன் பதிவு செய்து வைக்கிறோம். வேண்டிய பணத்தை எடுத்து வைத்துக்கொள்கிறோம். அங்கே தங்குவதற்கு
விடுதிகளில் முன் பதிவு செய்து வைக்கிறோம். எத்தனை நாட்கள்  தங்க உள்ளோமோ அத்தனை நாட்களுக்குத் தேவையான உடைகளை எடுத்து வைத்துக்கொள்கிறோம்.  நம்மை  அழகு  படுத்துவதற்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்கிறோம். சூட்கேசைத் தயார்
செய்து  வைக்கிறோம். ஆனால், போனால் திரும்ப முடியாத இறுதிப்
பயணம் ஒன்று இருக்கிறது. அதற்கு எதை எடுத்து  வைத்திருக்கிறீர்கள்?”
என்று கேட்பார்.

எதையும் எடுத்துக்கொண்டு போகமுடியாது என்று அவருக்குத் தெரியும். எதை என்று அவர் கேட்பது புண்ணியக்  கணக்கில் எதை எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதாகும்!

புண்ணியக் கணக்கில் நீங்களும் உங்களுக்கு வேண்டியதை எடுத்து வையுங்கள்.
---------------------------------------------------------------------
மனிதனின் ஆயுள் காலம் நான்கு வகைப்படும்

1. குழந்தைப் பருவத்தில் மரணம். இது எட்டு வயதிற்குள் நடப்பது.
2. அற்ப ஆயுளில் மரணம் - இது எட்டில் இருந்து 32 வயதிற்குள் நடப்பது.
3. மத்திம வயதில் மரணம் - இது 32ல் இருந்து 64 வயதிற்குள் நடப்பது.
4. தீர்க்கமான ஆயுள் அல்லது பூரண ஆயுள் - 64ற்கு மேல் 100 அல்லது 120 வயது வரை வாழ்ந்து மரணிப்பது.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்! இன்றல்ல - அடுத்தடுத்த நாட்களில்.

(தொடரும்)

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி  நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
பின் குறிப்பு:  ப்ளாக்கர் சொதப்புகிறது. பின்னூட்டங்கள் பதிவிற்கு வருவதில்லை. என்னவென்று  பார்த்துக் கொண்டிருக்கிறேன். பின்னூட்டம் இட்டவர்கள் பொறுத்திருக்கவும்

வாழ்க வளமுடன்!

34 comments:

 1. அட்டகாசமான வாழ்கை பதிவு....அருமை

  ReplyDelete
 2. //அடியவன் சொல்வது இதுதான்: ஒருபக்கம் வாழ்வதற்குப் பொருளைத் தேடு. இன்னொரு பக்கம் போகிற காலத்திற்கு அருளைத் தேடு. இருளைப் போக்கு!//
  நம்மைப்போன்ற கிரஹஸ்தர்களுக்கு இராமகிருஷ்ண பரமஹம்ஸ்ர் கூறுவார்:
  "ஒரு கையால் உன் உலகக் கடமைகளைச் செய்து வா. மற்றொரு கையால்
  இறைவனைப் பற்றிக்கொள்.உன் உலகக் கடமைகள் முடிந்தவுடன் இரண்டு கைகளாலும் இறைவனைப் பற்றிக்கொள்".

  ReplyDelete
 3. கல்லறைக்கு போகும் போதும் சில்லறை வேண்டும் என்ற பாடிய
  கவிஞன் மத்தியில் . .

  ஆசைகள் இருந்தால் கோபம் வரும்
  கோபம் ஆணவத்திற்கு வழி வகுக்கும்
  ஆணவம் பொறாமையில் கொண்டு சென்று வாழ்க்கையை சீரழிக்கும் என்று சொன்னதின் பொருளில் . . .

  வாழ தெரிந்த வாழ்க்கையை
  வானளவு பெரிதாக கற்பனை செய்து கொண்டிருக்கும் இன்றைய இளைவயரின் மனநிலையில் . .

  நாளை இறந்தது விடுவோம் என இன்று வாழ வேண்டும் என்ற சொன்ன ஆங்கிலேயரின் எண்ணங்களை . .

  அன்பு வாத்தியார் அவர் பாணியில் .. .
  அருமையாக பொறுமையாக திறமையாக சொன்ன விதம் . .
  நெஞ்சு நெகிழ வைக்கிறது . .

  பட்டிணத்தார் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி ஆசான் கவியரசரை உடன் அழைத்துக் கொண்டு
  வீடு வரை உறவு வீதி வரை மனைவி
  என விளக்கிய தொடக்கத்தில் . . தொடரும் என முடிவில . .

  ReplyDelete
 4. கல்லறைக்கு போகும் போதும் சில்லறை வேண்டும் என்ற பாடிய

 5. " பிறகு உயிருடன் இருக்கும் வருடங்கள் எல்லாம் போனசாக வருவது.
  அங்கீகரிக்கப்பட்ட காலத்தில் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு விடுங்கள். ஆட்டம் பாட்டத்தை எல்லாம் முடித்துக்கொண்டு விடுங்கள்.
  உயில் எழுதி வைக்க வேண்டுமென்றால் வைத்துவிடுங்கள்.
  அதற்குப் பிறகு, எந்தக் கவலையும் இன்றி சிறுவர்களைப் போல, சிறுமிகளைப் போல அந்தக் கணங்களில் வாழ்ப் பழகிக்கொள்ளுங்கள். அந்தந்த நேரங்களில் வாழப் பழ்கிக்கொள்ளுங்கள்."
  ஆஹா, அற்புதம், அத்தனையும் உண்மை, சத்திய வாக்கு.....
  எட்டு எட்டாய் வாழ்க்கையைப் பிரித்து
  மெட்டுப் போட்டால் வாழ்வு மல்லிகை
  மொட்டாய் மலர்ந்து
  சிட்டான சந்தோசக் கவிபாடாதோ!!!
  ஆசான் நீவீர்!! என்போன்ற நாற்பதின்மருக்கு தரும் இல்லை அறிவுறுத்தும் அற்புதக் கருத்து! உளி சிறிது அது உடைக்கும் மலை பெரிது கடுகு சிறிது அதன் காரம் பெரிது, அணு இவையாவினும் சிறிது ஆனால் அதன் விளைவு மிகவும் பெரிது....
  அற்புதக் கருத்துக்களை, சொற்பதத்துடன், கற்பக மலர்களாய் என் நெஞ்சில் தூவிய ஆசானே நன்றிகள் பல நயமுடன் உரைக்கின்றேன்!!

  ReplyDelete
 6. ////rk guru said...
  அட்டகாசமான வாழ்கை பதிவு....அருமை//////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. Arumaiyana padam , mei silirthathai unarnthen , nandri ayya,...

  ReplyDelete
 9. நல்ல பாடல்களுடன் அருமையான பதிவு..நன்றி ஐயா..

  அன்புடன்
  செங்கோவி

  ReplyDelete
 10. கண்ணதாசனின் தத்துவப் பாடல்களில் இல்லாத கருத்தாழமா? அவன் வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவித்து, ருசித்து, ரசித்து, வெம்பி, வருந்தி தன்னுடைய பாடல்களில் கொடுத்திருக்கிறான். வாழ்க்கை தத்துவம் என்பது நீங்கள் கொடுத்திருக்கும் இந்தப் பகுதியில் மிக எளிமையாக அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. கர்நாடக இசையின் பெருமை அப்பாடல்கள் திரைப்படத்தில் வரும்போதுதான் பெரும்பாலான மக்களைச் சென்றடைகிறது. அதுபோன்றே நம் சித்தர்களும், சான்றோர்களும் சொன்ன தத்துவங்கள் வகுப்பறை மூலம்தான் பிரபலமடைகின்றன‌. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. காயமே இது பொய்யடா வெறும் காற்று அடைத்த பையாடா

  அன்புடன்
  கர்ண ரத்தினவேல்

  ReplyDelete
 12. Thanks for the pre conditioning camp. Moulding the students is really interesting thing from your teaching style

  ReplyDelete
 13. ப்ளாக்கர்.காம் சொதப்புகிறது. வெளியிடப்பெற்ற 6 பின்னூட்டங்கள் பதிவில் வெளியாகவில்லை. என்னவென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களை எழுதியவர்கள், பொறுத்துக்கொள்ளுங்கள்
  அன்புடன்
  வாத்தியார்

  ReplyDelete
 14. மரணம் எப்போது சம்பவிக்கும் என்று தெரியாமலே இருப்பது நல்லது. சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் (திரைப் பட வசனம்). ஜோதிடத்தில் ஆயுளை கணிப்பது (உத்தேசமாகவேனும்) என்பது சற்று கடினமானதுதான்.

  ReplyDelete
 15. ப்ளாக்கர்.காம் சொதப்புகிறது. வெளியிடப்பெற்ற 6 பின்னூட்டங்கள் பதிவில் வெளியாகவில்லை. என்னவென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களை எழுதியவர்கள், பொறுத்துக்கொள்ளுங்கள்
  அன்புடன்
  வாத்தியார்

  ReplyDelete
 16. ப்ளாக்கர்.காம் சொதப்புகிறது. வெளியிடப்பெற்ற 6 பின்னூட்டங்கள் பதிவில் வெளியாகவில்லை. என்னவென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களை எழுதியவர்கள், பொறுத்துக்கொள்ளுங்கள்
  அன்புடன்
  வாத்தியார்

  ReplyDelete
 17. ப்ளாக்கர்.காம் சொதப்புகிறது. வெளியிடப்பெற்ற 6 பின்னூட்டங்கள் பதிவில் வெளியாகவில்லை. என்னவென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். பின்னூட்டங்களை எழுதியவர்கள், பொறுத்துக்கொள்ளுங்கள்
  அன்புடன்
  வாத்தியார்

  ReplyDelete
 18. Good afternoon Dear sir,
  I donot come to Japan because I am pure veg.
  sundari.p

  ReplyDelete
 19. Good afternoon Dear brother,
  I am pure veg. I donot come to japan
  I am so much happy in our country India. That too chennai.
  Pl donot take non veg often.
  sundari.p

  ReplyDelete
 20. வணக்கம் அய்யா,

  உங்களது வார்த்தைகள் எங்களை எதற்கும் தயார் செய்கின்றன......

  இறப்பு என்பது யாராலும் தவிர்க்க முடியாதது.
  உயிரை பூட்டி வைக்கவோ,
  கட்டிவைக்கவோ யாராலும் முடியாது.....

  எனவே இறந்து போவேன் என அஞ்சுவது கிடையாது....

  ஆனால் இறைவனிடம் வேண்டுவது ஒன்று யாருக்கும் துன்பம் தொல்லை தராமல் தூக்கம் போல நேரவேண்டும் இறப்பு....

  நன்றி அய்யா.......

  ReplyDelete
 21. ஐயா வணக்கம்...!
  முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில், நான்கெட்டு வரை எனக்கு எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்துள்ளன.. தற்போது ஐந்தாம் எட்டில் உள்ளேன். ஆனால் அதற்கான சங்கதியைத்தான் இன்னும் காணவில்லை.. தங்கள் ஆசியும் ஆண்டவனின் அனுகிரகமும் இருந்தால் எட்டெட்டு வரை எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புகிறேன் (எனக்கு எட்டில் (ரிஷப) சனி)..

  நன்றியுடன் தங்கள் மாணவன்
  மா. திருவேல் முருகன், ஷிம்லா

  ReplyDelete
 22. ஐயா வணக்கம்...!

 23. ஐயா வணக்கம்...!

 24. ஐயா வணக்கம்...!

 25. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

  “காதறுந்த ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே”

  "ஒருபக்கம் வாழ்வதற்குப் பொருளைத் தேடு. இன்னொரு பக்கம் போகிற காலத்திற்கு அருளைத் தேடு. இருளைப் போக்கு",

  "புண்ணியக் கணக்கில் நீங்களும் உங்களுக்கு வேண்டியதை எடுத்து வையுங்கள்".

  போன்ற கருத்தாழம் மிக்கவைகளை வழங்கிய
  தங்களுக்கு மிக்க நன்றி.

  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்

  வ.தட்சணாமூர்த்தி

  2010-07-06

  ReplyDelete
 26. வந்த பின்னூட்டங்கள்: ப்ளாக்கர் சொதப்பியதால் தொகுத்து அளித்திருக்கிறேன்!

  1

  date 6 July 2010 09:37
  Soundarraju has left a new comment on your post
  Arumaiyana padam , mei silirthathai unarnthen , nandri ayya,...
  -------------------------------------------------------
  2

  date 6 July 2010 10:24
  SHEN has left a new comment on your post
  நல்ல பாடல்களுடன் அருமையான பதிவு..நன்றி ஐயா..
  அன்புடன்
  செங்கோவி
  -------------------------------------------------------
  3

  date 6 July 2010 10:30
  Thanjavooraan has left a new comment on your post
  கண்ணதாசனின் தத்துவப் பாடல்களில் இல்லாத கருத்தாழமா? அவன் வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும்

  அனுபவித்து, ருசித்து, ரசித்து, வெம்பி, வருந்தி தன்னுடைய பாடல்களில் கொடுத்திருக்கிறான். வாழ்க்கை தத்துவம்

  என்பது நீங்கள் கொடுத்திருக்கும் இந்தப் பகுதியில் மிக எளிமையாக அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில்

  இருக்கிறது. கர்நாடக இசையின் பெருமை அப்பாடல்கள் திரைப்படத்தில் வரும்போதுதான் பெரும்பாலான

  மக்களைச் சென்றடைகிறது. அதுபோன்றே நம் சித்தர்களும், சான்றோர்களும் சொன்ன தத்துவங்கள் வகுப்பறை

  மூலம்தான் பிரபலமடைகின்றன‌. வாழ்த்துக்கள்!
  ---------------------------------------------------------
  4

  date 6 July 2010 10:39
  Rathinavel.C has left a new comment on your post
  காயமே இது பொய்யடா வெறும் காற்று அடைத்த பையாடா
  அன்புடன்
  கர்ண ரத்தினவேல்
  --------------------------------------------------------

  ReplyDelete
 27. வந்த பின்னூட்டங்கள்: ப்ளாக்கர் சொதப்பியதால் தொகுத்து அளித்திருக்கிறேன்!

  5

  date 6 July 2010 10:56
  Ram has left a new comment on your post
  Thanks for the pre conditioning camp. Moulding the students is really interesting thing from your teaching style
  --------------------------------------------------------
  6

  date 6 July 2010 11:55
  ananth has left a new comment on your post
  மரணம் எப்போது சம்பவிக்கும் என்று தெரியாமலே இருப்பது நல்லது. சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள்

  நரகமாகிவிடும் (திரைப் பட வசனம்). ஜோதிடத்தில் ஆயுளை கணிப்பது (உத்தேசமாகவேனும்) என்பது சற்று

  கடினமானதுதான்.
  ------------------------------------------------------
  7

  date 6 July 2010 12:36
  தமிழ்மணி has left a new comment on your post
  வணக்கம் அய்யா,
  உங்களது வார்த்தைகள் எங்களை எதற்கும் தயார் செய்கின்றன......
  இறப்பு என்பது யாராலும் தவிர்க்க முடியாதது.
  உயிரை பூட்டி வைக்கவோ,கட்டிவைக்கவோ யாராலும் முடியாது.....
  எனவே இறந்து போவேன் என அஞ்சுவது கிடையாது....
  ஆனால் இறைவனிடம் வேண்டுவது ஒன்று யாருக்கும் துன்பம் தொல்லை தராமல் தூக்கம் போல நேரவேண்டும்

  இறப்பு....
  நன்றி அய்யா.......
  ----------------------------------------------------
  8

  date 6 July 2010 15:05
  M. Thiruvel Murugan has left a new comment on your post
  ஐயா வணக்கம்...!
  முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில், நான்கெட்டு வரை எனக்கு எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்துள்ளன..

  தற்போது ஐந்தாம் எட்டில் உள்ளேன். ஆனால் அதற்கான சங்கதியைத்தான் இன்னும் காணவில்லை.. தங்கள்

  ஆசியும் ஆண்டவனின் அனுகிரகமும் இருந்தால் எட்டெட்டு வரை எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புகிறேன்

  (எனக்கு எட்டில் (ரிஷப) சனி)..
  நன்றியுடன் தங்கள் மாணவன்
  மா. திருவேல் முருகன், ஷிம்லா
  --------------------------------------------------

  ReplyDelete
 28. வந்த பின்னூட்டங்கள்: ப்ளாக்கர் சொதப்பியதால் தொகுத்து அளித்திருக்கிறேன்!

  5

  date 6 July 2010 10:56
  Ram has left a new comment on your post
  Thanks for the pre conditioning camp. Moulding the students is really interesting thing from your teaching style
  --------------------------------------------------------
  6

  date 6 July 2010 11:55
  ananth has left a new comment on your post
  மரணம் எப்போது சம்பவிக்கும் என்று தெரியாமலே இருப்பது நல்லது. சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாள்

  நரகமாகிவிடும் (திரைப் பட வசனம்). ஜோதிடத்தில் ஆயுளை கணிப்பது (உத்தேசமாகவேனும்) என்பது சற்று

  கடினமானதுதான்.
  ------------------------------------------------------

  ReplyDelete
 29. 7

  date 6 July 2010 12:36
  தமிழ்மணி has left a new comment on your post
  வணக்கம் அய்யா,
  உங்களது வார்த்தைகள் எங்களை எதற்கும் தயார் செய்கின்றன......
  இறப்பு என்பது யாராலும் தவிர்க்க முடியாதது.
  உயிரை பூட்டி வைக்கவோ,கட்டிவைக்கவோ யாராலும் முடியாது.....
  எனவே இறந்து போவேன் என அஞ்சுவது கிடையாது....
  ஆனால் இறைவனிடம் வேண்டுவது ஒன்று யாருக்கும் துன்பம் தொல்லை தராமல் தூக்கம் போல நேரவேண்டும்

  இறப்பு....
  நன்றி அய்யா.......
  ----------------------------------------------------
  8

  date 6 July 2010 15:05
  M. Thiruvel Murugan has left a new comment on your post
  ஐயா வணக்கம்...!
  முன்னோட்டம் அருமை.. எட்டெட்டில், நான்கெட்டு வரை எனக்கு எல்லாம் சரியாகத்தான் நடந்து வந்துள்ளன..

  தற்போது ஐந்தாம் எட்டில் உள்ளேன். ஆனால் அதற்கான சங்கதியைத்தான் இன்னும் காணவில்லை.. தங்கள்

  ஆசியும் ஆண்டவனின் அனுகிரகமும் இருந்தால் எட்டெட்டு வரை எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புகிறேன்

  (எனக்கு எட்டில் (ரிஷப) சனி)..
  நன்றியுடன் தங்கள் மாணவன்
  மா. திருவேல் முருகன், ஷிம்லா
  --------------------------------------------------

  ReplyDelete
 30. பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
  உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
  கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
  மண்டி அவருடன் வழிநட வாதே

  - திருமந்திரம்

  ReplyDelete
 31. அடியவன் சொல்வது இதுதான்: ஒருபக்கம் வாழ்வதற்குப் பொருளைத் தேடு. இன்னொரு பக்கம் போகிற காலத்திற்கு அருளைத் தேடு. இருளைப் போக்கு!"

  இராம‌கிருஷ்ன‌ ப‌ர‌ம‌ஹ‌ம்ச‌ர் கூறுவார்:" ஒருகையால் உல‌கக் க‌டைமைகளைச் செய்துவா. ம‌ற்றொரு கையால் ஆண்ட‌வ‌ன் பாதங்க‌ளைப் ப‌ற்றிக்கொள்.உல‌கக் கடமை‌க‌ள் முடிந்த‌வுட‌ன் இரு கைக‌ள‌லும் ஆண்ட‌வ‌னின்
  திருப்பாதங்க‌ளைப் ப‌ற்றிக்கொள்".

  ReplyDelete
 32. இந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இட்ட அனைத்து ந்ல்ல உள்ளங்களுக்கும் நன்றி!
  நன்றி!
  நன்றி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com